PT 1.8.2

யாவரும் வணங்கும் இடம் வேங்கடம்

1019 பள்ளியாவதுபாற்கடலரங்கம் இரங்கவன்பேய்முலை *
பிள்ளையாய்உயிருண்டஎந்தை பிரானவன்பெருகுமிடம் *
வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணனென்றெண்ணி * நாள்தொறும்
தெள்ளியார்வணங்கும்மலைத் திருவேங்கடம் அடைநெஞ்சமே! (2)
PT.1.8.2
1019. ##
paLLiyāvadhu pāRkadal_arangkam * irangkavanpEymulai *
piLLaiyāy_uyiruNda enNdhai * pirānavan perugumidam *
veLLiyān kariyān * maNinNiRavaNNan enReNNi *
nNādoRum theLLiyārvaNangkummalai * thiruvEngkadam adainNeNYchamE! 1.8.2

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

1019. Our lord who rests on the milky ocean in Srirangam, who drank the poisonous milk from the breasts of the devil Putanā, stays in Thiruvenkatam where his good devotees go and praise him every day saying, “He is white in the first eon. He is dark in the second eon. He is sapphire-colored in the third eon, ” and worship him on that hill. O heart, let us go there and worship him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வன் பேய் கல்நெஞ்சை யுடைய; இரங்க பூதனை கதறும்படி; முலை அவளது மார்பகத்தை; பிள்ளையாய் குழந்தையாய் இருக்கும் போதே; உயிர் அவள் பிராணனை உறிஞ்சி; உண்ட அவளை அழித்த; எந்தை பிரான் எம் பெருமான்; பள்ளி ஆவது சயனித்திருப்பது; பாற்கடல் திருப்பாற்கடலும்; அரங்கம் திருவரங்கமுமாம்; அவன் அவன்; பெருகும் இடம் வளருகிற இடமான; தெள்ளியார் தெளிந்த ஞானிகள்; வெள்ளியான் கிருதயுகத்தில் வெளுத்த நிறத்தனாயும்; கரியான் கலியுகத்தில் கறுத்த நிறத்தனாயும்; மணி நிற த்வாபரயுகத்தில் நீலமணி; வண்ணன் நிறத்தனாயும்; என்று எண்ணி என்று எண்ணி; நாள்தொறும் தினமும்; வணங்கும் வணங்கும்; மலை திருவேங்கடம் திருவேங்கடமலையை; அடை நெஞ்சமே! நெஞ்சே! நீ அடைந்திடு
val one who is having hard heart; pEy pUthanA-s; mulai bosoms; iranga to secrete milk naturally; uyir her life; uNda mercifully consumed; endhai my lord; pirAn avan sarvESvaran who is the benefactor; paLLiyAvadhu mattress (resting place, where he mercifully rests); pARkadal thirukkARkdal (kshIrAbdhi); arangam and SrIrangam;; perugum growing; idam abode is; theLLiyAr ananyaprayOjanar (those who don-t expect anything but kainkaryam); veLLiyAn one who has white complexion (in krutha yugam); kariyAn one who has black complexion (in kali yugam); maNi niRa vaNNan one who has blue jewel like complexion (in dhvApara yugam); enRu eNNi meditating (repeatedly on these forms) in this manner; nAdoRum everyday; vaNangum surrendering; malai hill; thiruvEngadam thirumalA;; nenjamE adai Oh mind! Reach there.