89

Thiruthankāl

திருத்தங்கல்

Thiruthankāl

Thiruthankālur

ஸ்ரீ அன்னநாயகீ ஸமேத ஸ்ரீ தண்கால் அப்பன் ஸ்வாமிநே நமஹ

A crane listens to the voice of its beloved with melting passion, just like my daughter, who has fallen in love with you, Lord, with tears welling in her eyes. She stands, frail and thin, like a golden flower, yearning to speak with you. She sings praises, constantly chanting your divine names, including those of Kudaṉdai Emperumāṉ, Kōvalurāṉ, Tiruttaṇkālūrāṉ,

+ Read more
ஒரு செங்கால் நாரையானது தன் காதலியின் குரலைக் கேட்பதற்கு உடலுருகிச் சிந்தித்து இருப்பது போன்று என் பெண்ணான இவள் எம்பெருமானே உன்மீது மையல் கொண்டு உன்னோடு வார்த்தையாடுவதற்காக, கண்களில் நீர் ததும்ப தன் இளங்கொங்கை பொன்னால் செய்யப்பட்ட பூவினைப் போல மெலிந்துபோக நின்று கொண்டு குடந்தையெம் + Read more
Thayar: Sri Sengamala Thāyar (Anna Nāyaki, Anandha Nāyaki, Amrudha Nāyaki, Jāmpavadhi)
Moolavar: Sri Nindra Nārāyanan
Utsavar: Thiruthankālappan
Vimaanam: Devachandra
Pushkarani: Pāpavināsa
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Virudhunagar
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 7:00 a.m. to 11:00 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Thiruthanga
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.6.2

1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)
1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
ஆராது என்று இருந்தானைக் * கண்டது-தென் அரங்கத்தே-2
1399 ## perāṉaik * kuṟuṅkuṭi ĕm pĕrumāṉai * tiruttaṇkāl
ūrāṉaik * karampaṉūr uttamaṉai ** muttu ilaṅku
kār ār tiṇ kaṭal ezhum * malai ezh iv ulaku ezh uṇṭum *
ārātu ĕṉṟu iruntāṉaik * kaṇṭatu-tĕṉ araṅkatte-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1399. In Thennarangam I saw Thirumāl, the lord of Thirupper (Koiladi), Thirukkurungudi, Thiruthangā, and the good lord of Thirukkarampanur (Uttamar Koil) who was still hungry even after he swallowed the dark seven oceans, seven mountains and seven worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரானை திருப்பேர் நகரில் இருப்பவனை; குறுங்குடி திருக்குறுங்குடி; எம்பெருமானை எம்பெருமானை; திருதண்கால் திருதண்காவில்; ஊரானை இருப்பவனை; கரம்பனூர் திருக்கரம்பனூர்; உத்தமனை உத்தமனை; முத்து முத்துக்களின்; இலங்கு ஒளியோடு கூடின; கார் ஆர் திண் திடமான கறுத்த; கடல் ஏழும் ஏழு கடல்களையும்; மலை ஏழ் இவ் ஏழு மலைகளையும்; உலகு ஏழ் ஏழு உலகங்களயும்; உண்டும் உண்டும்; ஆராது திருப்திபெறாதவனாய்; என்று இருந்தானை இருந்த பெருமானை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 10.1.2

1849 பொன்னைமாமணியை அணியார்ந்ததோர்
மின்னை * வேங்கடத்துஉச்சியில் கண்டுபோய் *
என்னையாளுடைஈசனை எம்பிரான்
தன்னை * யாம்சென்றுகாண்டும் தண்காவிலே.
1849 ## பொன்னை மா மணியை * அணி ஆர்ந்தது ஓர்
மின்னை * வேங்கடத்து உச்சியில் கண்டு போய் **
என்னை ஆளுடை ஈசனை * எம்பிரான்-
தன்னை * யாம் சென்று காண்டும்- * தண்காவிலே-2
1849 ## pŏṉṉai mā maṇiyai * aṇi ārntatu or
miṉṉai * veṅkaṭattu ucciyil kaṇṭu poy **
ĕṉṉai āl̤uṭai īcaṉai * ĕmpirāṉ-
taṉṉai * yām cĕṉṟu kāṇṭum- * taṇkāvile-2

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1849. He is gold and a shining diamond, the beautiful lightning that stays on the top of the Venkatam hills. He is my dear lord and he rules me. I will go see him in Thiruthangā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன்னை பொன்னைப் போன்றவனும்; மா மணியை நீலமணியைப் போன்றவனும்; அணி அழகு; ஆர்ந்தது ஓர் மிக்கதோர்; மின்னை மின்னல் போல் ஒளியுள்ளவனும்; என்னை என்னை; ஆளுடை தொண்டனாக உடைய; ஈசனை ஈசனை; எம்பிரான் தன்னை எம்பெருமானை; வேங்கடத்து திருவேங்கடத்து; உச்சியில் உச்சியில்; கண்டு யாம் கண்டு யாம்; போய் சென்று சென்று வணங்கினோம்; தண்காவிலே இன்று திருத்தண்காவிலே; காண்டும் வணங்குவோம்

TNT 2.14

2065 முளைக்கதிரைக்குறுங்குடியுள்முகிலை மூவா
மூவுலகும்கடந்துஅப்பால்முதலாய்நின்ற *
அளப்பரியஆரமுதை அரங்கம்மேய
அந்தணனை அந்தணர்தம்சிந்தையானை *
விளக்கொளியைமரதகத்தைத்திருத்தண்காவில்
வெஃகாவில்திருமாலைப்பாடக்கேட்டு *
வளர்த்ததனால்பயன்பெற்றேன்வருகவென்று
மடக்கிளியைக்கைகூப்பிவணங்கினாளே. (2)
2065 ## முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற *
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை * அந்தணர்-தம் சிந்தையானை **
விளக்கு ஒளியை மரதகத்தை திருத்தண்காவில் *
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று *
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே-14
2065 ## mul̤aik katiraik kuṟuṅkuṭiyul̤ mukilai * mūvā
mūvulakum kaṭantu appāl mutalāy niṉṟa *
al̤appu ariya ār amutai araṅkam meya
antaṇaṉai * antaṇar-tam cintaiyāṉai **
vil̤akku ŏl̤iyai maratakattai tiruttaṇkāvil *
vĕḵkāvil tirumālaip pāṭak keṭṭu *
val̤arttataṉāl payaṉpĕṟṟeṉ varuka ĕṉṟu *
maṭak kil̤iyaik kaikūppi vaṇaṅkiṉāl̤e-14

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2065. “My daughter says, ‘He is a sprouting shoot with the dark color of a cloud and he stays in Thirukkurungudi. He is the first one, without any end, who came as a dwarf, grew tall and crossed over all the three worlds at Mahābali’s sacrifice. Faultless, limitless nectar, he stays in Srirangam. and in the minds of the Vediyars. Like the brightness of a lamp and precious like an emerald, he stays in Thiruthangā and Thiruvekkā. ’ When my daughter sings the praise of Thirumāl her parrot listens and sings with her. She is happy that she taught her beautiful parrot the praise of the lord and she says ‘I taught you the praise of the lord and I am happy to hear that from you. ’

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முளைக் கதிரை இளங் கதிரவனைப் போன்றவனும்; குறுங்குடியுள் திருக்குறுங்குடியில்; முகிலை மேகம் போன்றவனும்; மூவா மூவுலகும் நித்யமான அவன் மூவுலகும்; கடந்து கடந்து; அப்பால் முதலாய் அப்பால் பரமபதத்தில் முதல்வனாய்; நின்ற நிற்பவனும்; அளப்பு அளவிடமுடியாத; அரிய அரிய குணங்களையுடைய; ஆர் அமுதை அம்ருதம் போன்றவனும்; அரங்கம் மேய திருவரங்க மா நகரில் இருக்கும்; அந்தணனை பெருமானை; அந்தணர் தம் அந்தணர்களின்; சிந்தையானை சிந்தையிலிருப்பவனை; திருத்தண்காவில் திருத்தண்காவில்; விளக்கு ஒளியை விளக்கொளியாய் இருப்பவனை; மரதகத்தை மரகதப்பச்சைப் போன்றவனை; வெஃகாவில் திருவெஃகாவில்; திருமாலை திருமாலை; பாடக் கேட்டு செவியாரப் பாடக் கேட்டு; வளர்த்ததனால் வளர்த்ததனால்; பயன்பெற்றேன் பயன்பெற்றேன் என்று; மடக் கிளியை அழகிய கிளியை; கை கூப்பி கை கூப்பி; வருக; என்று வருக என்று; வணங்கினாளே வணங்கினாள்
mul̤aikkadhirai ḥe who is like a young sun; kuṛunkudiyul̤ mugilai and bright in thirukkurunkudi as a rainy cloud; mūvā mūvulagum kadandhu and ever present and beyond the three types of worlds; appāl in paramapadham; mudhalāy ninṛa being present as the leader (for both the worlds (leelā and nithya vithi),; al̤appariya who is not measurable by number (of auspicious qualities of true nature and form); ār amudhai who is like a specal nectar; arangame mĕya andhaṇanai who is the ultimate purity, present in great city of thiruvarangam; andhaṇar tham sindhaiyānai who is having ḥis abode as the mind of vaidhikas (those who live based on the words of vĕdhas),; thiruththaṇkāvil vil̤akku ol̤iyai who provides dharṣan as the deity vil̤akkol̤ip perumāl̤ in thiruththaṇkā,; maradhakaththai who is having a beautiful form like the green of gem of emerald,; vehāvil thirumālai who the sarvĕṣvaran, who is the husband of ṣrīdhĕvī, who is in reclining resting pose in thiruvekhā,; pādak kĕttu as the (parrot) sung (about ḥim), and she listened (to its pāsurams),; madak kil̤iyai looking at that beautiful parrot,; val̤arththadhanāl payan peṝĕn varuga enṛu ṣhe called it, saying  ‘ī got the fulfilment due to nurturing/raising you; come here’; kai kūppi vaṇangināl̤ and joined her hands in anjali form, and prostrated to it.

TNT 2.17

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்
பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *
செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்
சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே
தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்
தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *
நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன
நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.
2068 பொங்கு ஆர் மெல் இளங் கொங்கை பொன்னே பூப்ப *
பொரு கயல் கண் நீர் அரும்பப் போந்து நின்று *
செங் கால மடப் புறவம் பெடைக்குப் பேசும் *
சிறு குரலுக்கு உடல் உருகிச் சிந்தித்து ** ஆங்கே
தண்காலும் தண் குடந்தை நகரும் பாடித் *
தண் கோவலூர் பாடி ஆடக் கேட்டு *
நங்காய் நம் குடிக்கு இதுவோ நன்மை? என்ன *
நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே-17
2068 pŏṅku ār mĕl il̤aṅ kŏṅkai pŏṉṉe pūppa *
pŏru kayal kaṇ nīr arumpap pontu niṉṟu *
cĕṅ kāla maṭap puṟavam pĕṭaikkup pecum *
ciṟu kuralukku uṭal urukic cintittu ** āṅke
taṇkālum taṇ kuṭantai nakarum pāṭit *
taṇ kovalūr pāṭi āṭak keṭṭu *
naṅkāy nam kuṭikku ituvo naṉmai? ĕṉṉa *
naṟaiyūrum pāṭuvāl̤ navilkiṉṟāl̤e-17

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2068. “My daughter’s round soft breasts have changed their color to gold and are pale. Her fish eyes are filled with tears. She melts when she hears the voice of the lovely red-legged dove calling softly for its mate. Praising Thiruthangā, flourishing Thirukkudandai and Thirukkovalur where he stays, she sings and dances. When I asked my daughter, ‘Dear girl, do you think what you’re doing is good for our family?’ she only praises Thirunaraiyur and sings. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொங்கு ஆர் வளர்ந்த அழகிய; மெல் இளம் கொங்கை இளம் ஸ்தனங்கள்; பொன்னே பூப்ப பசலை படர்ந்து; பொரு சண்டையிடும்; கயல் கண் கயல் மீன்களின் கண்கள் போன்ற; நீர் அரும்ப கண்களிலிருந்து நீர் அரும்பி; போந்து நின்று வழிந்து வந்து நின்றது; செங் கால சிவந்த கால்களையுடைய; மடப் புறவம் இளம்புறாக்கள்; பெடைக்குப் பெடைகளோடு; பேசும் சிறு குரலுக்கு பேசுவதைக் கேட்டு; உடல் உருகி உடல் உருகி; சிந்தித்து ஆங்கே சிந்திக்கிறாள் அங்கே; தண்காலும் திருத்தண்கா; தண் குடந்தை திருக்குடந்தை; தண் கோவலூர் திருக்கோவலூர் ஆகிய; நகரும் பாடி நகரங்களில் வாயார; பாடி ஆடக் கேட்டு பாடி ஆடக் கேட்டு; நங்காய்! பெண்ணே; இதுவோ நன்மை? நீ இப்படி பாடுவதும் ஆடுவதும்; நம் குடிக்கு என்ன நம் குடிக்கு இது தகுமோ? என்றால்; நறையூரும் திரு நறையூரைப் பற்றியும்; பாடுவாள் பாட; நவில்கின்றாளே ஆரம்பிக்கிகிறாள்
pongu ār mel il̤a kongai Bosom that is growing, delicate, and young; ponnĕ pūppa losing colour,; poru kayal kaṇ two eyes that are like two fish fighting; neer arumba sprouting tears,; pŏndhu ninṛu in the state of coming away separated from mother,; udal urugi body melting; sem kāla madam puṛavam pedaikkup pĕsum siṛu kuralukku upon hearing the intellect-less doves having red legs, talking with their wives in low voice,; chindhiththu thinking (about ḥim talking in personal ways?),; āngĕ at that moment,; pādi (she started to) sing and; āda dance,; pādi by singing to her mouth’s content, about; thaṇkālum thiruththaṇkāl,; thaṇ kudandhai nagarum and the place of thirukkudandhai,; thaṇ kŏvalūr (and about) the comforting thikkŏvalūr too;; kĕttu ās ī heard that,; enna and as ī said; ‘nangāy ‘ŏh girl!; nam kudikku for our clan; idhu nanmaiyŏ’ enna is it good (to call out openly loudly)’,; pāduvāl̤ navilginṛāl̤ĕ she started for singing about; naṛaiyūrum thirunaṛaiyūr too.

IT 70

2251 தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் *
தமருள்ளும்தண்பொருப்புவேலை * - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே *
ஏவல்லவெந்தைக்கிடம்.
2251 தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** - தமர் உள்ளும்
மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
ஏ வல்ல எந்தைக்கு இடம் -70
2251 tamar ul̤l̤am tañcai * talai araṅkam taṇkāl *
tamar ul̤l̤um taṇ pŏruppu velai ** - tamar ul̤l̤um
māmallai koval * matil̤ kuṭantai ĕṉpare *
e valla ĕntaikku iṭam -70

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2251. The places of our heroic lord, skilled in shooting arrows and conquering his enemies, are Thanjai Māmani koil, which is the hearts of his devotees, divine Srirangam and Thiruthangā, the cool milky ocean, Thirukkadalmallai praised by devotees, Thirukkovalur and Thirukkudandai surrounded with walls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தமர் உள்ளம் பக்தர்களுடைய மனம்; தஞ்சை தஞ்சை மா மணிக்கோயில்; தலை அரங்கம் சிறந்த திருவரங்கம்; தண் கால் திருத்தண்கால்; தமர் அடியார்கள்; உள்ளும் நினைத்துருகும்; தண் பொருப்பு குளிர்ந்த திருமலை; வேலை திருப்பாற்கடல்; தமர் உள்ளும் பக்தர்கள் சிந்திக்கும்; மாமல்லை திருக்கடல்மல்லை; கோவல் திருக்கோவலூர்; மதிள் மதிள்களோடு கூடிய; குடந்தை திருக்குடந்தை ஆகியவை; ஏ வல்ல அம்பு எய்வதில் வல்லவரான; எந்தைக்கு எம்பெருமான் இருக்கும்; இடம் என்பரே இடம் என்பர்
thamar ul̤l̤am devotees’ heart; thanjai thanjai māmaṇik kŏyil [a divine abode in thanjāvūr]; thalai arangam (among all divine places) most special thiruvarangam; thaṇkāl thiruththaṇkāl [a divine abode near present day sivakāsi]; thamar ul̤l̤um what the followers have thought of (as everything for them); thaṇ poruppu the cool thirumalai (thiruvĕngadam); vĕlai thiruppāṛkadal (milky ocean); thamar ul̤l̤um places meditated upon by followers; māmallai thirukkadal mallai [mahābalipuram]; kŏval thirukkŏvalūr; madhil̤ kudandhai kudandhai [kumbakŏṇam] with divine fortified walls; ĕ valla endhaikku idam enbar [his followers] will say are the residences for chakravarthy thirumagan (ṣrī rāma) who is an expert at shooting arrows.

STM 34

2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)
2706 ## கார் ஆர் திருமேனி காணும் அளவும் போய் *
சீர் ஆர் திருவேங்கடமே திருக்கோவலூரே * மதிள் கச்சி
ஊரகமே பேரகமே *
பேரா மருது இறுத்தான் வெள்றையே வெஃகாவே *
பேர் ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் *
ஆராமம் சூழ்ந்த அரங்கம் * கணமங்கை-34
2706 ## kār ār tirumeṉi kāṇum al̤avum poy *
cīr ār tiruveṅkaṭame tirukkovalūre * matil̤ kacci
ūrakame perakame *
perā marutu iṟuttāṉ vĕl̤ṟaiye vĕḵkāve *
per āli taṇkāl naṟaiyūr tiruppuliyūr *
ārāmam cūzhnta araṅkam * kaṇamaṅkai-34

Simple Translation

2706. “I have decided to go to temples to see the dark one. I will go to beautiful Thiruvenkatam, Thirukkovalur, strong-walled Kachi, Thiruvuragam, Thirupperagam (Koiladi), Vellarai, temple of the god who walked through the large marudam trees and destroyed the Asurans, Thiruvekka, Thiruvāli, Thiruthangāl, Thirunaraiyur surrounded with water, Thirupuliyur, Srirangam surrounded with groves, Thirukkannamangai, beautiful jewel-like Thirukkannanur, Thiruvinnagaram, famous Thirukkannapuram, Thiruthancherai, Thiruvazhundur, Thirukkudandai, Thirukkadigai, Thirukkadalmallai, Thiruvidaventhai, Thiruneermalai, the famous Thirumālirunjolai, Thirumogur, Thiruvadari (Badrinath) praised by all, northern Madhura and all other places of the god without missing any. I prattle on saying the thousand names of the famous, lotus-eyed god adorned with thulasi garlands dripping with honey who broke the tusk of the elephant and saved Gajendra from the crocodile, Even if the villagers say nasty things about me I will surely continue to write letters, made of palm leaves. 34 - 40

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் ஆர் திருமேனி காளமேகத் திருவுருவை; காணும் அளவும் கண்டு களிக்கும் வரையில்; போய் ஊர் ஊராகப் போய்; சீர் ஆர் சீர்மைமிக்க; திருவேங்கடமே திருவேங்கடமலை; திருக்கோவல் ஊரே திருக்கோவலூர் என்ற நகரமே; மதிள் கச்சி மதிள் சூழ்ந்த காஞ்சியிலுள்ள; ஊரகமே பேரகமே ஊரகம் மற்றும் திருப்பேரகம்; பேரா சலியாமற் கிடந்த; மருது மருத மரங்களை; இறுத்தான் முறித்த பெருமாள்; வெள்ளறையே இருக்கும் திருவெள்ளறை; வெஃகாவே திருவெஃகா; பேர் ஆலி பெயர் பெற்ற திருவாலி; தண் கால் திருத்தண்கால்; நறையூர் திருநரையூர்; திருப்புலியூர் குட்டநாட்டுத் திருப்புலியூர்; ஆராமம் சூழ்ந்த அழகிய தோட்டங்கள் சூழ்ந்த; அரங்கம் திருவரங்கம்; கணமங்கை திருக்கண்ணமங்கை
nān avanai ī will, his [emperumān’s]; kār ār thirumĕni kāṇum al̤avum pŏy going from place to place [one divine abode to another] until ī see his divine form which is like a dark cloud; sīr ār thiruvĕngadamĕ thirukkŏvalūrĕ the eminent thiruvĕngadam and thirukkŏvalūr; madhil̤ kachchi ūragamĕ ūragam, which is within the fortified kānchi; pĕragamĕ the sannidhi in appakkudaththān, thiruppĕr; pĕrā maṛudhu iṛuththān vel̤l̤aṛaiyĕ thiruvel̤l̤aṛai where kaṇṇa, who broke through the two marudha trees which were erect, has taken residence; vehkāvĕ thiruvehkā; pĕrāli thaṇkāl naṛaiyūr thiruppuliyūr ṭhe famous divine abode of thiruvāli nagar, thiruththaṇkāl, thirunaṛaiyūr, kutta nāttu thiruppuliyūr; ārāmam sūzhndha arangam kaṇamangai thiruvarangam, which is surrounded by beautiful gardens, thirukkaṇṇamangai

PTM 17.63

2775 வானவர்தம் சென்னிமணிச்சுடரைத் தண்கால் திறல்வலியை *
தன்னைப்பிறரறியாத் தத்துவத்தைமுத்தினை *
அன்னத்தைமீனை அரியைஅருமறையை *
முன்னிவ்வுலகுண்டமூர்த்தியை * -
2775 வானவர் தம் சென்னி மணிச் சுடரைத் தண்கால் திறல் வலியை *
தன்னைப் பிறர் அறியாத் தத்துவத்தை முத்தினை *
அன்னத்தை மீனை அரியை அரு மறையை *
முன் இவ் உலகு உண்ட மூர்த்தியை * 65
2775 vāṉavar tam cĕṉṉi maṇic cuṭarait taṇkāl tiṟal valiyai *
taṉṉaip piṟar aṟiyāt tattuvattai muttiṉai *
aṉṉattai mīṉai ariyai aru maṟaiyai *
muṉ iv ulaku uṇṭa mūrttiyai * 65

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2775. He is the strong god of Thiruthangāl, the essence known by no one, a pearl. He took the form of a swan, fish, man-lion and he is the divine Vedās whose meaning no one knows. He swallowed all the worlds in ancient times. (65)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தம் நித்யசூரிகளுடைய; சென்னி மணி திருமுடிச் சுட்டியாக; சுடரை விளங்குபவனை; தண் கால் திருத்தண்காலில் இருக்கும்; திறல் வலியை மஹா பலசாலியை; தன்னை பிறர் அறியாத தன்னை பிறர் அறியாத; தத்துவத்தை தத்துவத்தை; முத்தினை முத்தைப் போன்றவனை; அன்னத்தை மீனை அன்னமாய் மீனாய்; அரியை நரசிம்மனாக அவதரித்த; அருமறையை வேதப் பொருளானவனை; முன் இவ் உலகு உண்ட மூன்று உலகங்களையும் உண்ட; மூர்த்தியை மூர்த்தியை
vānavar tham senni maṇi sudarai one who is radiant as the prime jewel for nithyasūris; thaṇkāl thiṛalvaliyai the hugely powerful entity who has taken residence at thiruththaṇkāl; thannai piṛar aṛiyā thaththuvaththai one whose nature cannot be known by others (who are not under the shadow of his divine mercy); muththinai one who is like a pearl; annaththai one who incarnated as a swan; mīnai one who incarnated as a fish; ariyai one who incarnated as hayagrīva (horse face, human body); arumaṛaiyai one who has the vĕdhas (sacred texts) as his form; mun i ulagu uṇda mūrththiyai in an earlier time, as the lord, keeping all these worlds in his divine stomach and looking after them