22

Thiru Velliyankudi

திருவெள்ளியங்குடி

Thiru Velliyankudi

Therazhundur

ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ கோலவில்லிராமாய நமஹ

This sacred place has been revered across all four Yugas. In the Krita Yuga, it was known as Brahmaputhiram, in the Treta Yuga as Parasaram, in the Dvapara Yuga as Saindya Nagar, and in the Kali Yuga as Bhargava Kshetra.

It is said that worshipping the deity here grants the merit of worshipping the deities of all 108 Divya Desams, as the Lord here + Read more
நான்கு யுகங்களிலும் இந்த ஸ்தலம் வழிபடப்பட்டுள்ளது. க்ருத யுகத்தில் பிரம்மபுத்திரம் என்றும், த்ரேதா யுகத்தில் பாராசரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திய நகர் என்றும் கலியுகத்தில் பார்கவ க்ஷேத்திரம் என்றும் வழிபட்டு வருகிறது.

சுக்ரனுக்கு பார்வை வழங்கியதால், இந்த திவ்யதேச எம்பெருமானை + Read more
Thayar: Sri MaragathaValli
Moolavar: Kolavalvilli Rāman
Utsavar: Srungāra Sundaran
Vimaanam: Pushkalāvarthaga
Pushkarani: Sukra, Bramha, Indra, Parāsara Theertham
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Aagamam: Vaikānasam
Sampradayam: Vadakalai
Timings: 8:00 a.m. to 12:00 noon 5:00 p.m. to 7:00 p.m. (Please go after calling to the contact person.)
Search Keyword: Thiruvelliyangudi
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.10.1

1338 ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டொருகால்
ஆலிலைவளர்ந்தஎம்பெருமான் *
பேய்ச்சியைமுலயுண்டுஇணைமருதிறுத்துப்
பெருநிலம்அளந்தவன்கோயில் *
காய்த்தநீள்கமுகும்கதலியும்தெங்கும்
எங்குமாம்பொழில்களின்நடுவே *
வாய்த்தநீர்பாயும்மண்ணியின்தென்பால்
திருவெள்ளியங்குடியதுவே. (2)
1338 ## ஆய்ச்சியர் அழைப்ப வெண்ணெய் உண்டு ஒருகால் *
ஆல் இலை வளர்ந்த எம் பெருமான் *
பேய்ச்சியை முலை உண்டு இணை மருது இறுத்துப் *
பெரு நிலம் அளந்தவன் கோயில் ** -
காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் *
எங்கும் ஆம் பொழில்களின் நடுவே *
வாய்த்த நீர் பாயும் மண்ணியின் தென்பால் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-1
1338. ##
āychchiyar_azhaippa veNNeyuNdu_orukāl *
ālilai vaLarntha emperumāNn *
pEychchiyai mulayuNdu iNaimaruthiRuththup *
perun^ilamaLanthavaNn kOyil *
kāyththan^eeL kamugum kathaliyum thengum *
engumām pozhilgaLin naduvE *
vāyththan^eer pāyum maNNiyiNn thenpāl *
thiruveLLiyangudiyathuvE (4.10.1)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1338. Our dear lord who ate the butter that the cowherd women gave him, slept on a banyan leaf at the end of the eon, drank the milk of the devil Putanā, broke the two marudu trees, and who measured the world and the sky with his two feet at king Mahabali’s sacrifice, stays in the temple in Thiruvelliyangudi in the southern land where the Manni river flows among the groves with its abundant water and coconut, banana and tall kamugu trees grow.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சியர் அழைப்ப ஆய்ச்சியர் அழைக்கும்படி; வெண்ணெய் உண்டு வெண்ணெய் உண்டவனும்; ஒருகால் ஆலிலை பிரளயகாலத்தில் ஆலிலையில்; வளர்ந்த எம் பெருமான் இருந்தவனுமான எம்பெருமான்; பேய்ச்சியை பூதனையின்; முலை உண்டு பாலை உண்டவனும்; இணை மருது இரட்டை மருதமரங்களை; இறுத்து முறித்தவனும்; பெரு நிலம திருவிக்ரமனாய்; அளந்தவன் அளந்தவனானவன்; கோயில் இருக்கும் கோயில்; காய்த்த காய்கள் நிறைந்த; நீள் ஓங்கியிருக்கும்; கமுகும் பாக்குமரங்களும்; கதலியும் வாழைமரங்களும்; தெங்கும் தென்னை மரங்களும்; எங்கும் ஆம் எங்கும்; பொழில்களின் நடுவே சோலைகளினிடையே; வாய்த்த நீர் பாயும் போதுமான ஜலம் பாயும்; மண்ணியின் மண்ணியாற்றின்; தென்பால் தென்கரையிலுள்ள; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
Aychchiyar cowherd women; azhaippa to complain; veNNey butter; uNdu mercifully ate; oru kAl once (during deluge); Alilai on a banyan leaf; vaLarndha mercifully resting there; emperumAn my lord; pEychchiyai pUthanA-s; mulai bosom; uNdu mercifully sucked (and finished her); iNai joined; marudhu marudha trees; iRuththu broke; peru nilam vast earth; aLandhavan the eternal abode of sarvESvaran who accepted (from mahAbali) and measured; kOyil dhivyadhESam is; kAyththa having unripe fruits; nIL tall; kamugum areca trees; kadhaliyum plantain trees; thengum coconut trees; engumAm present everywhere; pozhilgaLin gardens-; naduvE in the middle; vAyndha abundant; nIr water; pAyum flowing; maNNiyil maNNi river-s; thenpAl present on the southern bank; thiruveLLiyangudi known as thiruveLLiyangudi; adhuvE is that dhivyadhESam.

PT 4.10.2

1339 ஆநிரைமேய்த்துஅன்றுஅலைகடலடைத்திட்டு
அரக்கர்தம்சிரங்களையுருட்டி *
கார்நிறைமேகம்கலந்ததோருருவக்
கண்ணனார்கருதியகோயில் *
பூநிரைச்செருந்திபுன்னைமுத்தரும்பிப்
பொதும்பிடைவரிவண்டுமிண்டி *
தேனிரைத்துண்டுஅங்குஇன்னிசைமுரலும்
திருவெள்ளியங்குடியதுவே.
1339 ஆநிரை மேய்த்து அன்று அலை கடல் அடைத்திட்டு *
அரக்கர்-தம் சிரங்களை உருட்டி *
கார் நிறை மேகம் கலந்தது ஓர் உருவக் *
கண்ணனார் கருதிய கோயில் ** -
பூ நிரைச் செருந்தி புன்னை முத்து அரும்பி *
பொதும்பிடை வரி வண்டு மிண்டி *
தேன் இரைத்து உண்டு அங்கு இன் இசை முரலும் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-2
1339
ān^irai mEyththu aNnRu alaikadaladaiththittu *
arakkar tham chirangaLaiyurutti *
kārn^iRai mEgam kalanthathOr_uruvak *
kaNNanār karuthiya kOyil *
poon^eeraich cherunthi punnaimuththarumbi *
pothumpidai varivaNdumiNdi *
thEniraiththuNdu aNGku_innisaimuralum *
thiruveLLiyangudiyathuvE (4.10.2)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1339. Our dear lord, the cloud-colored Kannan who grazed the cows, churned the milky ocean for the gods, and fought with the Rākshasas and made their heads roll on the ground stays in the temple in Thiruvelliyangudi where blossoming cherundi and budding punnai plants bloom in the groves and lined bees swarm, drinking honey and singing sweet music.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு ஒரு சமயம்; ஆ நிரை பசுக்களை; மேய்த்து மேய்த்தவனும்; அலை கடல் அலை கடலிலே; அடைத்திட்டு அணைகட்டி; அரக்கர் தம் ராக்ஷஸர்களின்; சிரங்களை தலைகளை; உருட்டி சிதைத்தவனும்; கார் நிறை கார்காலத்து; மேகம் கலந்தது மேகத்தை ஒத்த; ஓர் உருவ ஓர் உருவத்தையுடையவனுமான; கண்ணனார் கண்ணன்; கருதிய கோயில் இருக்கும் கோயில்; பூ நிரை கொத்துக் கொத்தாய்; செருந்தி பூத்திருக்கும் செருந்தி மரங்களும்; புன்னை புன்னை மரங்களின்; முத்து முத்துப் போன்ற; அரும்பி பொதும்பிடை மொக்குகளின் நடுவில்; வரி வண்டு ரேகைகளையுடைய வண்டுகள்; மிண்டி நெருங்கியிருந்து; தேன் இரைத்து தேனை ரீங்கரித்துக் கொண்டே; உண்டு உண்ணும்; அங்கு அவைகளின் மதுரமான; இன்னிசை முரலும் இன்னிசை முழங்கும்; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
Anirai herds of cows; mEyththu being the one who protected; anRu during SrI rAmAvathAram; alai tides striking; kadal ocean; adaiththittu building bridge; arakkar tham strong rAkshasas-; sirangaLai heads; urutti one who severed; kAr in rainy season; nirai dense; mEgam kalandhu matching a cloud; Or unique; uruvam who is having a form; kaNNanAr krishNa; karudhiya desirously living; kOyil dhivyadhESam is; nirai in bunches; pU flowering; serundhi serundhi trees- (a type of sedge); arumbi sprouting (and growing further); muththu having pearls; punnai punnai trees- (mast-wood); podhumbu holes; idai in the middle; vari having stripes (beautiful); vaNdu beetles; miNdi being closely together; thEn honey; iraiththu making noise; uNdu consumed; angu there itself; in sweetly; isai song; muralum humming; thiruveLLiyangudi adhuvE it is thiruveLLiyangudi

PT 4.10.3

1340 கடுவிடமுடையகாளியன்தடத்தைக்
கலக்கிமுன் அலக்கழித்து * அவன்தன்
படமிறப்பாய்ந்துபல்மணிசிந்தப்
பல்நடம்பயின்றவன்கோயில் *
படவரவல்குல்பாவைநல்லார்கள்
பயிற்றியநாடகத்தொலிபோய் *
அடைபுடைதழுவி அண்டம்நின்றதிரும்
திருவெள்ளியங்குடியதுவே.
1340 கடு விடம் உடைய காளியன் தடத்தைக் *
கலக்கி முன் அலக்கழித்து * அவன்-தன்
படம் இறப் பாய்ந்து பல் மணி சிந்தப்
பல் நடம் பயின்றவன் கோயில் ** -
பட அரவு அல்குல் பாவை நல்லார்கள் *
பயிற்றிய நாடகத்து ஒலி போய் *
அடை புடை தழுவி அண்டம் நின்று அதிரும் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-3
1340
kaduvidamudaiya kāLiyaNn thadaththaik *
kalakkimuNn alakkazhiththu *
avaNnthan padamiRappāynthu palmaNisinthap
paln^adam payinRavaNn kOyil *
padavaravalkul pāvain^allārgaL *
payiRRiya nādakath tholipOy *
adaipudai thazhuvi andamn^iNnRathirum *
thiruveLLiyangudiyathuvE (4.10.3)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1340. Our lord who entered the pond and danced on the head of the poisonous snake Kaliyan stirring up the water and afflicting him and making many diamonds spill out from his head stays in the temple in Thiruvelliyangudi where the sound of music for a play acted by stately women spreads everywhere, reaching the sky and roaring like thunder.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் கடு முன்பு ஒரு சமயம்; விடம் உடைய கொடிய விஷத்தையுடைய; காளியன் காளியநாகம் இருந்த; தடத்தை கலக்கி மடுவை கலக்கி; அலக்கழித்து அது வருந்தும்படிபண்ணி; அவன் தன் அக்காளியனின்; படம் இற படங்கள் முறியும்படியாக; பாய்ந்து பாய்ந்து; பல் மணி படத்திலுள்ள; சிந்த மணிகளெல்லாம் சிந்தும்படியாக; பல் நடம் பலவகை; பயின்றவன் நடனம் பயின்ற கண்ணன்; கோயில் இருக்கும் கோயில்; பட அரவு படமெடுத்த பாம்பின்; அல்குல் இடையை ஒத்த; பாவை நல்லார்கள் அழகிய நல்ல பெண்கள்; பயிற்றிய பயிலும்; நாடகத்து நாடகத்தினுடைய; ஒலி போய் ஒலி உயரப் போய்; அடை புடை தழுவி ஆகாசத்தில் சென்று; அண்டம் நின்று அண்டம்; அதிரும் அதிரும்படி நின்ற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
mun In the past; kadu cruel; vidam udaiya having poison; kALiyan kALiyan-s; thadaththai pond; kalakki agitated it to become slushy; alakkazhiththu tormented him; avan than his; padam hood; iRa to break; pAyndhu jumped; palmaNi many gems (which were on his head); sindha to scatter; pal nadam many types of dances; payinRavan krishNa who danced, where he is residing; kOyil dhivyadhESam is; padam having vast hood; aravu like a snake; algul thigh region; nallAr distinguished; pAvaigaL ladies; payiRRiya practicing; nAdagaththu oli the sound of the drama; pOy rising high; adai pudai day and night; thazhuvi being together; aNdam on the sky; ninRu remaining firm; adhirum sounding tumultuously; thiruveLLiyangudi adhuvE the dhivyadhESam named thiruveLLiyangudi.

PT 4.10.4

1341 கறவைமுன்காத்துக்கஞ்சனைக்காய்ந்த
காளமேகத்திருவுருவன் *
பறவைமுன்னுயர்த்துப்பாற்கடல்துயின்ற
பரமனார்பள்ளிகொள்கோயில் *
துறைதுறைதோறும்பொன்மணிசிதறும்
தொகுதிரைமண்ணியின்தென்பால் *
செறிமணிமாடக்கொடிகதிரணவும்
திருவெள்ளியங்குடியதுவே.
1341 கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த *
காளமேகத் திரு உருவன் *
பறவை முன் உயர்த்து பாற்கடல் துயின்ற *
பரமனார் பள்ளிகொள் கோயில் ** -
துறைதுறைதோறும் பொன் மணி சிதறும் *
தொகு திரை மண்ணியின் தென்பால் *
செறி மணி மாடக் கொடி கதிர் அணவும் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-4
1341
kaRavaimuNnkāththuk kaNYchanaikkāyththa *
kāLamEgaththiruvuruvaNn *
paRavaimuNnNnuyarththu pāRkadal thuyinRa *
paramaNnār paLLikoL kOyil *
thuRaithuRai thORum poNnmaNi chithaRum *
thoguthirai maNNiyiNn theNnpāl *
cheRimaNimādak kodikathiraNavum *
thiruveLLiyangudiyathuvE (4.10.4)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1341. Our dark cloud-colored lord with an eagle banner who protected the cows, fought with Kamsan and sleeps on the milky ocean stays in the temple in Thiruvelliyangudi on the southern bank of the Mannai river whose waves deposit gold and diamonds on the shores, a place filled with diamond-studded palaces and forts where flags fly.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பு ஒரு சமயம்; கறவை காத்து பசுக்களை காத்து; கஞ்சனைக் கம்ஸனை; காய்ந்த முடித்தவனும்; காளமேகத் காளமேகம் போன்ற; திரு உருவன் உருவமுடையவனும்; பறவை முன் கருடனைக் கொடியாக; உயர்த்து உடையவனும்; பாற்கடல் பாற்கடலில்; துயின்ற பரமன் ஆர் துயின்ற பெருமான்; பள்ளி கொள் பள்ளி கொள்ளும்; கோயில் கோயில்; துறை துறை எல்லாத்; தோறும் பொன் துறைகளிலும் பொன்னும்; மணி சிதறும் மணியும் சிதறி ஓடும்; தொகு திரை திரண்ட அலைகளை யுடைய; மண்ணியின் மண்ணியாற்றின்; தென்பால் தென்கரையில்; செறி நெருங்கி இழைக்கப்பட்ட; மணி மாணிக்கங்களை யுடைய; மாட மாளிகைகளிலுள்ள; கொடி த்வஜங்கள்; கதிர் ஸூர்ய மண்டலத்தை; அணவும் அளாவியிருக்கும்; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
kaRavai cows; mun during krishNAvathAram; kAththu protected; kanjanai on kamsan; kAyndha mercifully showed his anger; kALamEgam dark cloud like; thiru beautiful; uruvan having complexion; mun in the past; paRavai garudAzhwAr; uyarththu hoisting as flag; pARkadal in thiruppARkadal (milk ocean); thuyinRa mercifully rested; paramanAr sarvESvaran who is greater than all; kOyil dhivyadhESam is; thuRai thuRai thORum on all ghats; pon gold; maNi precious gems; sidhaRum abundantly scattering; thogu coming together; thirai having tides; maNNiyin thenpAl on the southern bank of maNNi river; seRi densely embossed; maNi having precious gems; mAdam hoisted on the houses; kodi flags; kadhir orbit of sun; aNavum touching; thiruveLLiyangudi adhuvE is the dhivyadhESam named thiruveLLiyangudi

PT 4.10.5

1342 பாரினையுண்டுபாரினையுமிழ்ந்து
பாரதம்கையெறிந்து * ஒருகால்
தேரினையூர்ந்துதேரினைத்துரந்த
செங்கண்மால்சென்றுறைகோயில் *
ஏர்நிரைவயலுள்வாளைகள்மறுகி
எமக்கிடமன்றுஇதென்றெண்ணி *
சீர்மலிபொய்கைசென்றணைகின்ற
திருவெள்ளியங்குடியதுவே.
1342 பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து *
பாரதம் கையெறிந்து * ஒருகால்
தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த *
செங் கண் மால் சென்று உறை கோயில் ** -
ஏர் நிரை வயலுள் வாளைகள் மறுகி *
எமக்கு இடம் அன்று இது என்று எண்ணி *
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற * -
திருவெள்ளியங்குடி-அதுவே-5
1342
pāriNnaiyuNdu pāriNnaiyumizhnthu *
pāratham kaiyeRinthu *
orukāl thErinaiyoornthu thErinaiththurantha *
chengaNmāl senRuRaikOyil *
Ern^iraivayaLuL vāLaigaLmaRuki *
'emakkidamaNnRu_ithu' eNnReNNi *
cheermalipoygai senRaNaikinRa *
thiruveLLiyangudiyathuvE (4.10.5)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1342. The lovely-eyed Thirumāl who swallowed the whole earth and spat it out and fought in the Bhārathā war and drove the chariot for Arjunā stays in the temple in Thiruvelliyangudi where vālai fish living in the fields, frightened when farmers plow the land, decide, “This is not the place for us!” and move to other beautiful ponds.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாரினை உலகத்தை; உண்டு உண்டவனும்; பாரினை அந்த உலகங்களை; உமிழ்ந்து உமிழ்ந்து காத்தவனும்; ஒருகால் ஒரு சமயம்; பாரதம் பாரதப் போரில்; கையெறிந்து சேனைகளை அணி வகுத்து; தேரினை ஊர்ந்து தேரை ஓட்டினவனும்; தேரினை எதிரிகளினுடைய தேர்களை; துரந்த துரத்தினவனுமான; செங்கண் தாமரைப் போன்ற கண்களையுடைய; மால் திருமால்; சென்று சென்று; உறை கோயில் உறையும் கோயில்; ஏர் நிரை உழுகிற ஏர்களின்; வயலுள் வயல்களிலிருந்து; வாளைகள் வாளை மீன்கள்; மறுகி பயந்து; எமக்கு இந்த வயல் நாம்; இடம் அன்று வஸிக்கத் தக்கதன்று; இது என்று எண்ணி என்று நினைத்து; சீர் மலி அழகுமிக்க; பொய்கை தடாகங்களிலே; சென்று அணைகின்ற சென்று அணைகின்ற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
pArinai earth; uNdu (during deluge) mercifully consumed; pArinai earth; umizhndhu (during creation) spat out; oru kAl during krishNAvathAram; bAradham in mahAbhAratha war; kai eRindhu organised the army in various groups; thErinai arjuna-s chariot; Urndhu conducted; thErinai chariots of bhIshma et al; thurandha chased to drive them away; sem kaN having reddish eyes (due to motherly forbearance); mAl sarvESvaran who is mad about his devotees; senRu came; uRai and eternally residing; kOyil dhivyadhESam is; Er ploughs which are used for farming; nirai having rows; vayal uL present in the fertile fields; vALaigaL vALai fish; maRugi fears; idhu this fertile field; emakku for us to reside; idam anRu not the apt place; enRu eNNi thinking this way; sIr by beauty; mali abundant; poygai ponds; senRu went; aNaiginRa and reached; thiruveLLiyangudi adhuvE it is thiruveLLiyangudi.

PT 4.10.6

1343 காற்றிடைப்பூளைகரந்தனஅரந்தையுறக்
கடலரக்கர்தம்சேனை *
கூற்றிடைச்செல்லக்கொடுங்கணைதுரந்த
கோலவில்லிஇராமன்தன்கோயில் *
ஊற்றிடைநின்றவாழையின்கனிகள்
ஊழ்த்துவீழ்ந்தனஉண்டுமண்டி *
சேற்றிடைக்கயல்களுகள்திகழ்வயல்சூழ்
திருவெள்ளியங்குடியதுவே.
1343 காற்றிடைப் பூளை கரந்தென அரந்தை உறக் *
கடல் அரக்கர்-தம் சேனை *
கூற்றிடைச் செல்ல கொடுங் கணை துரந்த *
கோல வில் இராமன்-தன் கோயில் ** -
ஊற்றிடை நின்ற வாழையின் கனிகள் *
ஊழ்த்து வீழ்ந்தன உண்டு மண்டி *
சேற்றிடைக் கயல்கள் உகள் திகழ் வயல் சூழ் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-6
1343
kāRRidaippooLai karantheNna_aranthaiuRak *
kadalarakkar thamchEnai *
kooRRidaich chellak kodungaNai thurantha *
kOla villi rāman_than kOyil *
ooRRidai niNnRa vāzhaiyiNn kaNnikaL *
oozhththuveezhn^thaNna uNdu maNdi *
chERRidaik kayalkaLuL thigazhvayalchoozh *
thiruveLLiyangudiyathuvE (4.10.6)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1343. Our god Rāma who shot cruel arrows from his beautiful bow at the army of the Rakshasās of Lankā surrounded with oceans and destroyed them, making their army fly away like cotton in the wind stays in the temple in Thiruvelliyangudi surrounded with flourishing fields where kayal fish that live in the wet mud glitter after eating ripe banana fruits that have fallen from the trees.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காற்றிடை பெருங்காற்றிலே; பூளை பூளைப் பூவானது; கரந்து என உருமாய்ந்து அழிவது போல்; கடல் கடல் போன்ற; அரக்கர் தம் சேனை அரக்கர் சேனையானது; அரந்தை உற துன்பமடையும்படியும்; கூற்றிடை யமனிடம்; செல்ல செல்லும்படியும்; கொடுங்கணை கொடிய அம்புகளைப்; துரந்த பிரயோகித்த; கோல வில்லி அழகிய வில்லையுடைய; இராமன் இராமன்; தன் கோயில் இருக்கும் கோயில்; ஊற்றிடை நீரூற்று உள்ள; நின்ற நிலங்களிலே இருக்கும்; வாழையின் கனிகள் வாழைப் பழங்கள்; ஊழ்த்து இற்று உதிர்ந்த; வீழ்ந்தன பழங்களை; மண்டி போட்டியிட்டுக்; உண்டு கொண்டு உண்டு; கயல்கள் கயல் மீன்கள்; சேற்றிடை சேற்று நிலங்களிலே; உகள் துள்ளி விளையாடும்; திகழ் வயல் சூழ் செழித்த வயல்களால் சூழ்ந்த; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
kARRidai in great wind; pULai a tender flower; karandhana just as it will be destroyed; kadal like ocean; arakkar tham rAkshasas-; sEnai army; arandhai uRa to suffer; kURRidai yama-s place; sella to reach; kodu cruel; kaNai arrows; thurandha shot; kOla beautiful; villi having bow; rAman than chakravarthith thirumagan-s; kOyil dhivyadhESam is; URRidai in the land where there are water-springs; ninRa sprouted; vAzhaiyin plantain trees-; Uzhththu (well ripened and) separated; vIzhndhana and fell down; kanigaL fruits; maNdi eagerly; uNdu ate; kayalgaL kayal fish; sERRidai in the muddy areas; ugaL jumping; thigazh shining; vayal by fertile fields; sUzh surrounded; thiruveLLiyangudi adhuvE it is thiruveLLiyangudi

PT 4.10.7

1344 ஓள்ளியகருமம்செய்வனென்றுணர்ந்த
மாவலிவேள்வியில்புக்கு *
தெள்ளியகுறளாய்மூவடிகொண்டு
திக்குறவளர்ந்தவன்கோயில் *
அள்ளியம்பொழில்வாய்இருந்துவாழ்குயில்கள்
அரியரியென்றவையழைப்ப *
வெள்ளியார்வணங்கவிரைந்தருள்செய்வான்
திருவெள்ளியங்குடியதுவே.
1344 ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த *
மாவலி வேள்வியில் புக்கு *
தெள்ளிய குறள் ஆய் மூவடி கொண்டு *
திக்கு உற வளர்ந்தவன் கோயில் * -
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் *
அரி அரி என்று அவை அழைப்ப *
வெள்ளியார் வணங்க விரைந்து அருள்செய்வான் * -
திருவெள்ளியங்குடி-அதுவே-7
1344
oLLiyakarumam seyvanenRu_uNarntha *
māvali vELviyil pukku *
theLLiya kuRaLāy moovadikoNdu *
thikkuRavaLarnthavan kOyil *
aLLiyam pozhilvāy irunthuvāzhkuyilkaL *
ariyari yenRavai azhaippa *
veLLiyār vaNanga viraintharuLseyvāNn *
thiruVeLLiyangudiyathuvE (4.10.7)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1344. Our god took the form of a dwarf, went to the sacrifice of the Asuran king Mahabali who thought he could do anything he wanted, asked for three feet of land, grew tall in all directions and measured the earth and the sky. He stays in the temple in Thiruvelliyangudi where cuckoo birds living in beautiful alli groves call to the god Velliyār, exclaiming, “Hari, Hari!” and he hurries to them and gives them his grace.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓள்ளிய கருமம் சிறந்த அழகிய கருமமான; செய்வன் தானம் செய்வேன்; என்று உணர்ந்த என்று உணர்ந்த; மாவலி மகாபலியின்; வேள்வியில் வேள்வியில்; தெள்ளிய தெளிவுள்ள; குறளாய் வாமன மூர்த்தியாய்; புக்கு புகுந்து; மூவடி மூவடி நிலத்தை; கொண்டு தானமாகப் பெற்று; திக்கு எல்லாத் திசைகளிலும்; உற வியாபிக்கும்படி; வளர்ந்தவன் வளர்ந்தவன்; கோயில் இருக்குமிடம் கோயில்; அள்ளி அம் தாதுகளையுடைய அழகிய; பொழில் வாய் சோலைகளிலே; இருந்து வாழ் இருந்துகொண்டு வாழும்; குயில்கள் குயில்கள்; அரி அரி அரி அரி; என்று அவை அழைப்ப என்று அவை கூவ; வெள்ளியார் சாத்விகர்கள் வந்து; வணங்க வணங்க; விரைந்து அவனுக்கு விரைந்து; அருள் செய்வான் அருள்செய்த; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
oLLiya beautiful; karumam the deed of offering oneself fully; seyvan let me do; enRu uNarndha thought as; mAvali mahAbali-s; vELviyil in the yAgam; theLLiya having clarity (firm belief); kuRaLAy being vAmanan; pukku entered; mUvadi three steps of land (from that mahAbali); koNdu accepted as charity; thikku uRa to reach in all directions; vaLarndhavan one who grew in his divine form; kOyil dhivyadhESam is; aLLi having buds; am beautiful; pozhilvAy in the gardens; irundhu residing; vAzh remaining joyful; avai kuyilgaL those cuckoos; ari ari enRu as -hari: hari:-; azhaippa to remain calling out; veLLiyAr those who have sathva nature; vaNanga as they worship; viraindhu very quickly; aruL seyvAn sarvESvaran who is showing his mercy to them, his; thiruveLLiyangudi adhuvE it is thiruveLLiyangudi

PT 4.10.8

1345 முடியுடைஅமரர்க்குஇடர்செயும்
அசுரர்தம்பெருமானை * அன்றுஅரியாய்
மடியிடைவைத்துமார்வைமுன்கீண்ட
மாயனார்மன்னியகோயில் *
படியிடைமாடத்தடியிடைத்தூணில்
பதித்தபன்மணிகளினொளியால் *
விடிபகலிரவென்றறிவரிதாய
திருவெள்ளியங்குடியதுவே.
1345 முடி உடை அமரர்க்கு இடர் செய்யும் * அசுரர்-
தம் பெருமானை * அன்று அரி ஆய்
மடியிடை வைத்து மார்வம் முன் கீண்ட *
மாயனார் மன்னிய கோயில் ** -
படியிடை மாடத்து அடியிடைத் தூணில் *
பதித்த பல் மணிகளின் ஒளியால் *
விடி பகல் இரவு என்று அறிவு-அரிது ஆய * -
திருவெள்ளியங்குடி-அதுவே-8
1345
mudiyudaiyamararkku idar_cheyyum *
asurar_tham perumāNnai *
aNnRu ariyāy madiyidaivaiththu mārvaimuNnkeeNda *
māyaNnārmanniya kOyil *
padiyidaimādaththu adiyidaith thooNil *
pathiththa paNn_ maNikaLin oLiyāl *
vidipakal iraveNnRu aRivarithāya *
thiruveLLiyangudiyathuvE (4.10.8)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1345. Our lord Māyan who took the form of a lion and split open the chest of Hiranyan, the king of the Asurans when he vexed the gods, the kings of the sky, stays in the temple in Thiruvelliyangudi where the jewels studding the pillars of the palaces shine so bright it is hard to know whether it is day or night.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முடி உடை கிரீடம் அணிந்த; அமரர்க்கு தேவர்களுக்கு; இடர் துன்பங்களை; செய்யும் விளைவித்துக் கொண்டிருந்த; அசுரர் தம் அசுரர்களின்; பெருமானை தலைவனான இரணியனை; அன்று பிரகலாதன் நலிவுபட்ட அன்று; அரியாய் நரசிம்மனாய்; மடி இடை வைத்து மடியில் வைத்து; மார்வம் முன் மார்பை; கீண்ட கிழித்து அழித்தவனுமான; மாயனார் மாயன்; மன்னிய கோயில் இருக்கும் கோயில்; படியிடை பூமியிலுள்ள; மாடத்து மாடங்களில்; அடியிடைத் தூணில் நாட்டிய தூண்களில்; பதித்த பல் பதித்த பலவித; மணிகளின் ரத்தினங்களின்; ஒளியால் ஒளியால்; விடி விடியற்காலமென்றும்; பகல் பகற்காலமென்றும்; இரவு என்று இராக்காலமென்றும்; அறிவு அரிது ஆய அறிய முடியாமலிருக்கிற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
mudiyudai being crowned (and thus prideful); amararkku for dhEvathAs; idar sorrow; seyyum causing; asurar tham for asuras; perumAnai hiraNya, who is the king; anRu when prahlAdhan was tortured; ariyAy being narasimha; mun previously; madiyidai on the lap; vaiththu kept; mArvai his chest; kINda tore apart; mAyanAr amazing sarvESvaran; manniya remaining fixed; kOyil dhivyadhESam is; padiyidai on earth; mAdaththu in mansions; adiyidai placed; thUNil pillars; padhiththa embossed; pal many types of; maNigaLin gems-; oLiyAl lustre; vidi as early morning; pagal as day; iravu enRu as night; aRivu aridhAya being difficult to know; thiruveLLiyangudi adhuvE it is thiruveLLiyangudi

PT 4.10.9

1346 குடிகுடியாகக்கூடிநின்றுஅமரர்
குணங்களேபிதற்றிநின்றேத்த *
அடியவர்க்குஅருளிஅரவணைத்துயின்ற
ஆழியான்அமர்ந்துறைகோயில் *
கடியுடைக்கமலம் அடியிடைமலரக்
கரும்பொடுபெருஞ்செந்நெல்அசைய *
வடிவுடைஅன்னம் பெடையொடும்சேரும்
வயல்வெள்ளியங்குடியதுவே.
1346 குடி குடி ஆகக் கூடி நின்று அமரர் *
குணங்களே பிதற்றி நின்று ஏத்த *
அடியவர்க்கு அருளி அரவு-அணைத் துயின்ற *
ஆழியான் அமர்ந்து உறை கோயில் ** -
கடி உடைக் கமலம் அடியிடை மலரக் *
கரும்பொடு பெருஞ் செந்நெல் அசைய *
வடிவு உடை அன்னம் பெடையொடும் சேரும் *
வயல்-வெள்ளியங்குடி-அதுவே-9
1346
kudikudiyākak koodin^inRu_amarar *
kuNangaLE pithaRRi n^inREththa *
adiyavarkku_aruLi aRāvanaith thuyinRa *
āzhiyān_amarnthuRai kOyil *
kadiyudaik kamalam adiyidaimalarak *
karumbodu perunchen_nel_asaiya *
vadivudaiannam pedaiyodum sErum *
vayalveLLiyangudiyathuvE (4.10.9)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1346. Our lord who rests on a snake bed and gives his grace to his devotees as the gods in the sky join together, chattering about his good nature and praising him stays in the temple in Thiruvelliyangudi where fragrant lotuses bloom and sugarcane and abundant good paddy plants sway in the wind while beautiful male swans play with their mates.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர் பிரமன் முதலிய தேவர்கள்; குடி குடி ஆக குடும்பம் குடும்பமாகச்; கூடி நின்று சேர்ந்திருந்து; குணங்களே கல்யாண குணங்களை; பிதற்றி சொல்லிக் கொண்டு; நின்று ஏத்த வணங்கி துதிக்கும்; அடியவர்க்கு அடியார்களுக்கு; அருளி அருள் செய்து; அரவு அணைத் ஆதி சேஷன் மீது; துயின்ற துயின்ற; ஆழியான் அமர்ந்து சக்கரத்தையுடையவன்; உறை கோயில் இருக்கும் கோயில்; கடி உடை மணம் மிக்க; கமலம் தாமரைப் பூக்கள்; அடி இடை அடி நிலங்ககைளிலே; மலர மலரும்; கரும்பொடு பெரும் கரும்புகளும் பெருத்த; செந்நெல் செந்நெற் கதிர்களும்; அசைய அசைந்து; வடி உடை அழகிய வடிவையுடைய; அன்னம் அன்னப் பறவைகள்; பெடையொடும் சேரும் பெடையோடு சேரும்; வயல் வயல்களையுடைய; வெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
amarar dhEvathAs such as brahmA et al; kudi kudiyAga along with wife, children; kUdi ninRu remaining together; guNangaLE (his) auspicious qualities only; pidhaRRi ninRu reciting; Eththa as they praise; adiyavarkku for those servitors; aruLi showering his grace; aravaNai on ananthaSayanam (AdhiSEsha); thuyinRa mercifully resting; AzhiyAn sarvESvaran who is holding the divine chakra; amarndhu remaining fixed; uRai eternally residing; kOyil dhivyadhESam is; kadiyudai having fragrance; kamalam lotus flower; adiyidai at the bottom of the sugarcane and paddy crops; malara as they blossom (due to that); karumbodu along with sugarcane; perum huge; sennel reddish paddy crops; asaiya as they sway; vadivudai having beautiful form; annam swan; pedaiyodum along with its female spouse; sErum living in that lotus flower; vayal having fertile fields; veLLiyangudi adhuvE is thiruveLLiyangudi

PT 4.10.10

1347 பண்டுமுன்ஏனமாகி அன்றுஒருகால் *
பாரிடந்துஎயிற்றினில்கொண்டு *
தெண்திரைவருடப்பாற்கடல்துயின்ற
திருவெள்ளியங்குடியானை *
வண்டறைசோலைமங்கையர்தலைவன்
மானவேல்கலியன்வாயொலிகள் *
கொண்டிவைபாடும் தவமுடையார்கள்
ஆள்வர்இக்குரைகடலுலகே. (2)
1347 ## பண்டு முன் ஏனம் ஆகி அன்று ஒருகால் *
பார் இடந்து எயிற்றினில் கொண்டு *
தெண் திரை வருடப் பாற்கடல் துயின்ற *
திருவெள்ளியங்குடியானை **
வண்டு அறை சோலை மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
கொண்டு இவை பாடும் தவம் உடையார்கள் *
ஆள்வர்-இக் குரை கடல் உலகே-10
1347. ##
paNdumuNn_ENnamāki aNnRu_orukāl *
pāridan^thu eyiRRiNnil koNdu *
then_thiraivarudap pāRkadalthuyiNnRa *
thiruVeLLiyangudiyāNnai *
vaNdaRaichOlai mangaiyar thalaivaNn *
māNnavEl kaliyan vāyoligaL *
koNdivaipādum thavamudaiyārgaL *
āLvar ikkuraikadal ulagE (4.10.10)

Ragam

மோஹன

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1347. Kaliyan with a strong spear, the chief of Thirumangai where bees swarm in the groves, composed ten Tamil pāsurams praising the god of Thiruvelliyangudi who took the form of a boar in ancient times, split open the earth and brought the earth goddess up from the underworld, and rests on the milky ocean as clear waves stroke his feet. If fortunate devotees sing these pāsurams, dancing and praising him, they will rule this world surrounded with the roaring oceans.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு முன் பூமி அழிவதற்கு முன்; ஏனம் ஆகி வராகமாக அவதரித்து; அன்று ஒருகால் முன்பொருசமயம்; பார் இடந்து பூமியைக் குத்தியெடுத்து; எயிற்றினில் தன் கொம்பின் மேல்; கொண்டு வைத்துக் காத்தவனும்; தெண் திரை தெளிந்த அலைகள்; வருட கால்களை வருட; பாற்கடல் துயின்ற பாற்கடலில் துயின்ற; வண்டு அறை வண்டுகள் முரலும்; சோலை சோலையுடையவனும்; மான வேல் வேற்படையையுடையவருமான; மங்கையர் திருமங்கைத்; தலைவன் தலைவனான; கலியன் திருமங்கை ஆழ்வார்; வாய் ஒலிகள் அருளிச்செய்த; கொண்டு இவை இப்பத்துப் பாசுரங்களையும்; பாடும் பணிவுடன் பாடும்; தவம் உடையார்கள் பாக்கியமுடைய பக்தர்கள்; இக் குரை கடல் சப்திக்கின்ற கடலால் சூழந்த; ஆள்வர் உலகே உலகத்தை ஆள்வர்கள்
paNdu In the beginning of varAha kalpam; mun before the earth got destroyed; Enam Agi being mahAvarAham (great wild-boar); anRu orugAl when the ocean of deluge formed (with the divine heart of -I could not help before-); pAr earth; idandhu dug out; eyiRRinil on the tusk; koNdu held; theL pure; thirai waves; varuda to caress (his divine feet); pARkadal in thiruppARkadal; thuyinRa mercifully rested; thiruveLLiyangudiyAnai on sarvESvaran who is mercifully present in the dhivyadhESam named thiruveLLiyangudi; vaNdu beetles; aRai humming; sOlai having gardens; mangaiyar for the residents of thirumangai region; thalaivan being the controller; mAnam which can cause attachment towards vaishNavas; vEl having the weapon, spear; kaliyan AzhwAr-s; vAy oligaL divine words; ivai these ten pAsurams; koNdu with loving care; pAdum learning/practicing; thavamudaiyAr fortunate ones; kurai resounding; kadal surrounded by ocean; ivvulagu this world; ALvar will get to rule over