PMT 2.8

தொண்டர்களிடமே என் மனம் மயங்கியது

665 மாலையுற்றகடல்கிடந்தவன் வண்டுகிண்டுநறுந்துழாய் *
மாலையுற்றவரைப்பெருந்திருமார்வனை மலர்க்கண்ணனை *
மாலையுற்றெழுந்தாடிப்பாடித் திரிந்தரங்கனெம்மானுக்கே *
மாலையுற்றிடும்தொண்டர்வாழ்வுக்கு மாலையுற்றதென்நெஞ்சமே.
665 mālai uṟṟa kaṭal kiṭantavaṉ * vaṇṭu kiṇṭu naṟuntuzhāy *
mālai uṟṟa varaip pĕrun tiru mārvaṉai * malark kaṇṇaṉai **
mālai uṟṟu ĕzhuntu āṭippāṭit * tirintu araṅkaṉ ĕmmāṉukke *
mālai uṟṟiṭum tŏṇṭar vāzhvukku * mālai uṟṟatu ĕṉ nĕñcame (8)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

665. He rests on the milky ocean and wears a fragrant thulasi garland swarming with bees and dripping with honey, on His divine mountain-like broad chest. He has lovely flower-like eyes. My heart falls in love with those devotees who are fascinated by Him and wander, sing, dance and worship Rangan, our dear lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலை உற்ற கடல் அலைவீசும் பாற்கடலில்; கிடந்தவன் சயனித்திருப்பனும்; வண்டு கிண்டு வண்டு துளைக்கும்; நறுந்துழாய் திருத்துழாய்; மாலை உற்ற மாலையை அணிந்த; வரை பெரும் மலை போல் விசாலமான; திரு மார்பினை மார்பையுடையவனும்; மலர்க் மலர் போன்ற; கண்ணனை கண்ணனிடம்; மாலை உற்று எழுந்து அன்புற்று எழுந்து; ஆடிப் பாடித் திரிந்து ஆடிப் பாடித் திரிந்து; அரங்கன் எம்மானுக்கே அரங்கன் விஷயத்திலே; மாலை உற்றிடும் பித்தேறித் திரிகின்ற; தொண்டர் வாழ்வுக்கு அடியார்களின் வாழ்வுக்கே; என் நெஞ்சமே என் மனம்; மாலை உற்றது மயங்கியுள்ளது