PT 11.7.1

எம்பெருமானைக் காணாதார் கண் கண்ணல்ல

2012 நீள்நாகம்சுற்றி நெடுவரைநட்டு * ஆழ்கடலைப்
பேணான்கடைந்து அமுதம்கொண்டுஉகந்தபெம்மானை *
பூணாரமார்வனைப் புள்ளூரும்பொன்மலையை *
காணாதார்கண்என்றும் கண்ணல்லகண்டாமே. (2)
2012 ## nīl̤ nākam cuṟṟi * nĕṭu varai naṭṭu * āzh kaṭalaip
peṇāṉ kaṭaintu * amutam kŏṇṭu ukanta pĕmmāṉai **
pūṇ āra mārvaṉaip * pul̤ ūrum pŏṉ malaiyai- *
kāṇātār kaṇ ĕṉṟum * kaṇ alla kaṇṭāme

Ragam

Varāḷi / வராளி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2012. The dear lord whose chest is adorned with jewels shines like a golden hill and rides on the bird Garudā. He used Mandara mountain as a churning stick and the snake Vāsuki as a rope, churned the milky ocean, took the nectar from it and gave it to the gods. If devotees have not seen him, their eyes are not truly eyes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீள் நீண்ட வாஸுகி; நாகம் நாகத்தை; சுற்றி சுற்றி; நெடு பெரிய மந்தர; வரை மலையை; நட்டு மத்தாக நாட்டி; ஆழ் கடலை ஆழமான கடலை; பேணான் நம் படுக்கை என்றும் பாராமல்; கடைந்து கடைந்து; அமுதம் அம்ருதத்தை; கொண்டு தேவர்களுக்குக் கொடுத்து; உகந்த பெம்மானை உகந்த பெருமானை; பூண் ஆர ஆபரணங்கள் அணிந்த; மார்வனை மார்பையுடையவனும்; புள் ஊரும் கருடன் மீது செல்பவனும்; பொன் பொன்; மலையை மலை போன்றவனுமான; காணாதார் பெருமானை வணங்காதவர்களின்; கண் என்றும் கண்கள் ஒரு நாளும்; கண் அல்ல கண்களே அல்ல; கண்டாமே இதை நாம் நன்கு அறிவோம்