PT 1.4.7

அன்பர்கட்கு எதையும் தருவான் நாரணன்

984 வெந்திறல்களிறும்வேலைவாயமுதும்
விண்ணொடுவிண்ணவர்க்கரசும் *
இந்திரற்கருளியெமக்குமீந்தருளும்
எந்தைஎம்மடிகள்எம்பெருமான் *
அந்தரத்தமரரடியிணைவணங்க
ஆயிரமுகத்தினாலருளி *
மந்தரத்திழிந்தகங்கையின்கரைமேல்
வதரியாச்சிராமத்துள்ளானே.
PT.1.4.7
984 vĕm tiṟal kal̤iṟum velaivāy amutum * viṇṇŏṭu viṇṇavarkku aracum *
intiraṟku arul̤i ĕmakkum īntarul̤um * ĕntai ĕm aṭikal̤ ĕm pĕrumāṉ **
antarattu amarar aṭi-iṇai vaṇaṅka * āyiram mukattiṉāl arul̤i *
mantarattu izhinta kaṅkaiyiṉ karaimel * vatari āccirāmattu ul̤l̤āṉe-7 **

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

984. He gave Indra his fierce elephant Airavata, the nectar from the milky ocean, and rulership over the heavens. To us too, He gave Himself. He is our Lord, our Father, and even the gods bow at His feet. It was His will that sent Ganga flowing from Mount Mandara, splitting into a thousand streams. Now, He resides at Badarikāśramam, on the banks of that sacred Ganga.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் திறல் மிடுக்கையுடைய; களிறும் ஐராவதமென்ற யானையையும்; வேலை வாய் திருப்பாற்கடலிலுண்டான; அமுதும் அம்ருதத்தையும்; விண்ணொடு ஸ்வர்க்கலோகத்தையும்; விண்ணவர்க்கு தேவர்களுக்கும்; அரசும் அரசனாயிருக்கும்; இந்திரற்கு அருளி இந்திரனுக்கும் கொடுத்து; எமக்கும் ஈந்து நமக்கும்; அருளும் தன்னையே கொடுத்து; எந்தை என் தந்தையான; எம் அடிகள் எம்பெருமான்; அந்தரத்து தேவலோகத்திலுள்ள; அமரர் தேவர்களெல்லோரும்; அடி இணை எம்பெருமானுடைய; வணங்க திருவடிகளை வணங்க; ஆயிரம் முகத்தினால் கங்கையை ஆயிரமுகமாக; அருளி பிரவஹிக்கும்படி நியமித்தருள; மந்தரத்து இழிந்த மந்தர மலையிலிருந்து பெருகின; கங்கையின் கரை மேல் கங்கையின் கரை மேல்; வதரி ஆச்சிரமத்து பதரிகாச்ரமத்திலே; உள்ளானே உள்ளான்
vem thiṛal having great strength; kal̤iṛum the elephant named airāvatham; vĕlai vāy came out of thiruppāṛkadal (milk ocean); amudham amrutham (nectar); viṇṇodu with svargam (heaven); viṇṇavarkku arasum being the king of dhĕvathās; indhiraṛku for indhra; arul̤i bestowed; emakkum for us (who are ananyaprayŏjanar (without any expectations)); īndha arul̤um one who gives (himself); endhai being my father; em adigal̤ being our lord; emperumān being my master; andharaththu in svargam; amarar dhĕvathās; adi iṇai divine feet; vaṇanga to worship; āyiram mugaththināl arul̤i as mercifully desired by the divine heart of sarvĕṣvaran to flow in thousand tributaries; mandharaththu from manthara mountain; izhindha fell down; gangaiyin karai mĕl on the banks of gangā; vadhariyāchchirāmaththul̤l̤ānĕ is residing in ṣrī badharīkāṣramam