STM 13

தசாவதாரம் எடுத்தவனே இவளுக்கு இந்நோயைத் தந்தவன்

2685 - ஆழிநீர்
ஆரால்கடைந்திடப்பட்டது? * - அவன்காண்மின்
ஊராநிரைமேய்த்து உலகெல்லாமுண்டுமிழ்ந்தும் *
ஆராததன்மையனாய் ஆங்கொருநாளாய்ப்பாடி *
சீரார்கலயல்குல் சீரடிசெந்துவர்வாய் *
வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு *
ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய் *
சீரார்தயிர்கடைந்து வெண்ணெய்திரண்டதனை *
வேரார்நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு *
நாராருறியேற்றி நன்கமையவைத்ததனை *
போரார்வேற்கண்மடவாள் போந்தனையும்பொய்யுறக்கம் *
ஓராதவன்போல் உறங்கியறிவுற்று *
தாரார்தடந்தோள்கள் உள்ளளவும்கைநீட்டி *
ஆராதவெண்ணெய்விழுங்கி *
2685 āzhi nīr
ārāl kaṭaintiṭappaṭṭatu * avaṉ kāṇmiṉ
ūr ā nirai meyttu ulaku ĕllām uṇṭu umizhntum *
ārāta taṉmaiyaṉāy āṅku ŏrunāl̤ āyppāṭi *
cīr ār kalai alkul cīr aṭi cĕntuvar vāy *
vār ār vaṉamulaiyāl̤ mattu ārap paṟṟikkŏṇṭu *
er ār iṭai nova ĕttaṉaiyor potum āy *
cīr ār tayir kaṭaintu vĕṇṇĕy tiraṇṭataṉai *
ver ār nutal maṭavāl̤ veṟu or kalattu iṭṭu *
nār ār uṟi eṟṟi naṉku amaiya vaittataṉai *
por ār vel kaṇ maṭavāl̤ pontaṉaiyum pŏy uṟakkam *
orātavaṉ pol uṟaṅki aṟivu uṟṟu *
tār ār taṭam tol̤kal̤ ul̤ al̤avum kai nīṭṭi *
ārāta vĕṇṇĕy vizhuṅki * -13

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2685. “‘He churned the milky ocean to get nectar for the gods, he grazed the cows, and he swallowed all the worlds, kept them in his stomach and spat them out. But that was not enough for him. One day in cowherd village of Gokulam lovely-waisted Yashodā, with beautiful feet, amred coral mouth and round breasts tied with a band spent a long time churning good yogurt with a churning stick. Sweating as her beautiful waist hurt, she took the butter and carefully put it in a pot on the uri hanging on a rope. He pretended as if he were sleeping until Yashodā with a shining forehead had left. Then he raised up his long arms as high as possible took gobs of butter and swallowed it. 13

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழிநீர் கடல் நீர்; ஆரால் கடைந்திடப்பட்டது கடையப்பட்டதோ; அவன் காண்மின் அவன் யார் என்று தெரியுமா?; ஊர் ஆனிரை ஊரிலுள்ள பசுக்களையெல்லாம்; மேய்த்து மேய்த்தும்; உலகு எல்லாம் உலகங்களை எல்லாம்; உண்டு பிரளயத்தில் உண்டு; உமிழ்ந்தும் பின்பு ஸ்ருஷ்டித்தும்; ஆராத இவ்வளவு செய்தும்; தன்மயனாய் திருப்தி அடையாமல்; ஆங்கு ஒரு நாள் அங்கு ஒரு நாள்; ஆய்ப்பாடி ஆய்ப்பாடியில்; சீர் ஆர் கலை அல்குல் அழகிய சேலை அணிந்த; சீர் அடி அழகிய கால்களும்; செந்துவர் வாய் சிவந்த வாயையுடைய; வார் ஆர் வன முலையாள் கச்சணிந்த யசோதை; மத்து ஆரப் பற்றிக்கொண்டு மத்தை அழுந்தப் பிடித்து; ஏர் ஆர் இடை நோவ அழகிய இடுப்பு நோவ; எத்தனையோர் போதும் ஆய் வெகு காலம்; சீர் ஆர் தயிர் கடைந்து சிறந்த தயிரைக் கடைந்து; வெண்ணெய் அதனை திரண்டு திரண்ட வெண்ணையை; வேர் ஆர் வியர்த்த; நுதல் மடவாள் நெற்றியையுடைய யசோதை; வேறு ஓர் கலத்து இட்டு வேறொரு பாத்திரத்திலே இட்டு; நன்கு அமைய வைத்து அதனை நன்கு அமைய வைத்து; நார் ஆர் உறி ஏற்றி நாராலான உறியின் மேலேற்றி; போர் ஆர் வேல் கூறிய வேல் போன்ற; கண்மடவாள் கண்களையுடைய யசோதை; போந்தனையும் வெளியில் போகிறவரைக்கும்; பொய் உறக்கம் பொய்த் தூக்கம்; ஓராதவன் போல் ஒன்றும் அறியாதவன் போல்; உறங்கி தூங்கி; அறிவு அவள் போனவுடனே; உற்று கண் விழித்தெழுந்து போய்; தார் ஆர் மாலையணிந்த; தடம் தோள்கள் பெரிய திருந்தோள்களை; உள் அளவும் கை நீட்டீ தாழின் அடிவரையில் புகவிட்டு; ஆராத எவ்வளவு உண்டாலும் திருப்தியடையாதவனாக; வெண்ணெய் விழுங்கி வெண்ணெயை விழுங்கி
āzhi nīr ocean; ārāl kadaindhidappattadhu was agitated by whosoever; avan kāṇmin the distinguished person who carried out all those activities; ūr ā nirai mĕyththu graśing all the herds of cattle in that place; ulagu ellām uṇdu umizhndhum swallowing the worlds (during the time of deluge) and spitting them out (during the time of creation); āngu ārādha thanmaiyan āy being dissatisfied, having to be in paramapadham; oru nāl̤ on one fine day; āyppadi in thiruvāyppādi (ṣrī gŏkulam); sīr ār kalai algul sīr adi sem thuvar vāy one having a waist draped with a beautiful sari, having beautiful legs, having deep reddish mouth; vār ār vana mulaiyāl̤ yaṣŏdhā, who has beautiful bosoms, draped in corset; maththu āra paṝikkoṇdu holding on to the churning-staff firmly; ĕrār idai nŏva such that the beautiful waist gets hurt; eththanai ŏr pŏdhum āy for a very long time; sīr ār thayir kadaindhu churning the great curd; vĕr ār nudhal madavāl̤ that yaṣŏdhā, who was perspiring from her forehead (due to the effort of churning); vĕṛu ŏr kalaththu ittu keeping it in another vessel; nār uṛi ĕṝi keeping [the butter obtained after churning curd] on a pot suspended by a network of ropes (such that even a finger cannot enter it); nangu amaiya vaiththadhanai kept in the most protected way; pŏr ār vĕl kaṇ madavāl̤ that yaṣŏdhā who has (sharp) eyes which are like a warring spear; pŏm thanaiyum until she went out; ŏrādhavan pŏl poy uṛakkam uṛangi feigning sleep as if he knew nothing; aṛivu uṝu waking up (soon after she left); thār ār thada thŏl̤gal̤ ul̤ al̤avum kai nītti getting the divine huge shoulders, which are adorned with a garland, to go right down to the bottom of the pot; ārādha veṇṇey vizhungi eating butter, which does not satiate him (however much he eats)