TVT 74

தலைவனது தார்மணம் கொண்டு வரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்து பாங்கிக்கு உரைத்தல்

2551 தளர்ந்தும்முறிந்தும் வருதிரைப்பாயல் * திருநெடுங்கண்
வளர்ந்துமறிவுற்றும் வையம்விழுங்கியும் * மால்வரையைக்
கிளர்ந்துமறிதரக்கீண்டெடுத்தான் முடிசூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந்தென்றல் * அந்தோ! வந்துலாகின்றதே.
2551 tal̤arntum muṟintum * varu tiraip pāyal * tiru nĕṭuṅ kaṇ
val̤arntum aṟivuṟṟum * vaiyam vizhuṅkiyum ** māl varaiyaik
kil̤arntu maṟitara kīṇṭu ĕṭuttāṉ muṭi cūṭu tuzhāy *
al̤aintu uṇ ciṟu pacun tĕṉṟal * anto vantu ulākiṉṟate -74

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2551. She says, “He knows everything in the world, and he rests on his snake bed on the milky ocean rolling with waves that come and go. He swallowed all the worlds at the end of the eon. and he carried Govardhanā mountain to protect the cows and the cowherds. The fresh breeze that blows through his thulasi garland comes and blows on me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தளர்ந்தும் கொந்தளித்தும்; முறிந்தும் பின் அடங்குவதுமான; வரு திரை அலைகளையுடைய; பாயல் பாற்கடலில்; திரு நெடுங் கண் அழகிய விசாலமான கண்களை; வளர்ந்தும் மூடிக்கொண்டும் உறங்கியும்; அறிவுற்றும் உறங்காமலும் இருக்கும் பெருமான்; வையம் விழுங்கியும் உலகம் உண்டும்; மால் வரையை பெரிய கோவர்த்தன மலையை; கிளர்ந்து மறிதர கீழ் மேலாக; கீண்டு எடுத்தான் கிளப்பி எடுத்தவனுடைய; முடி சூடு துழாய் முடியிலிருக்கும் துளசியை; அளைந்து உண் தொட்டு அளைந்த; சிறு பசுந் தென்றல் இளம் தென்றல் காற்றானது; அந்தோ வந்து என் மீது வீசி; உலாகின்றதே! என்னை மகிழவைக்கிறது
thal̤arndhum crumbling down; muṛindhum breaking down; varu coming; thirai having waves; pāyil in the mat of milky ocean [thiruppāṛkadal]; thiru due to beauty; nedum without limit; kaṇ divine eyes; val̤arndhum closing; aṛivu thinking of protecting the worlds; uṝum engaged in; vaiyam worlds; vizhungiyum (during deluge) eating them; māl huge; varaiyai gŏvardhanam; kīṇdu (from the earth) uprooting; kil̤arndhu raising; maṛidhara upside down; eduththān one who lifted, his; mudi in the divine crown; sūdu donned; thuzhāy in divine thul̤asi; al̤aindhu pervading; uṇ having stayed with it; pasum without contact with any other entity; siṛu thenṛal gentle breeśe; vandhu reaching; ulāginṛadhu is blowing