40

Thiru Chitra Koodam

திருச்சித்ரகூடம்

Thiru Chitra Koodam

Chidhambaram

ஸ்ரீ புண்டரீகவல்லீ ஸமேத ஸ்ரீ கோவிந்தராஜாய நமஹ

Thayar: Sri Pundareeka Valli
Moolavar: Govindarājan
Utsavar: Devādhi Devan (Pārthasārathy)
Vimaanam: Sāthveega
Pushkarani: Pundariga
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Chidhambaram
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 6:00 a.m. to 1:00 p.m. 3:30 p.m. to 8:30 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Chitrakudam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 10.1

741 அங்கணெடுமதிள்புடைசூழயோத்தியென்னும்
அணிநகரத்துலகனைத்தும்விளக்கும்சோதி *
வெங்கதிரோன்குலத்துக்கோர்விளக்காய்த்தோன்றி
விண்முழுதுமுயக்கொண்டவீரன் தன்னை *
செங்கணெடுங்கருமுகிலையிராமன் தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எங்கள்தனிமுதல்வனையெம்பெருமான்தன்னை
என்றுகொலோ? கண்குளிரக்காணும்நாளே. (2)
741 ## அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி என்னும் * அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி *
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி * விண் முழுதும் உயக் கொண்ட வீரன் தன்னை **
செங்கண் நெடுங்கரு முகிலை இராமன் தன்னைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை * என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (1)
741. ##
aNGgaNedu mathiL pudai soozh ayOdhdhi ennum *
aNi n^aharaththu ulahanaitthum viLakkum jOthi *
veNGgathirOn kulatthukkOr viLakkāyth thOnRi *
viN muzhuthum uyyakkoNda veeran thannai, *
seNGgaN neduNG karu muhilai irāman thannai *
thillai n^ahar thiru chithra koodam thannuL *
eNGgaL thani muthalvanai emberumān thannai *
enRu kolO kaN kuLira kāNum nāLE (2) 10.1

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

741. Rāma, tall, with beautiful eyes, colored like a dark cloud, our dear king, our lord, the light that illuminates the whole world, stays in beautiful Ayodhya surrounded by high walls. Born in the dynasty of the sun, he brightens that royal line, and he conquered the whole sky and is the god of Thiruchitrakudam in Thillai. When will the day come when I see him joyfully with my eyes?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கண் அழகிய இடத்தில்; நெடு மதிள் புடை சூழ் உயர்ந்த மதில்கள் சூழ்ந்த; அயோத்தி என்னும் அயோத்யா என்னும்; அணி நகரத்து அழகிய நகரத்திலே; உலகு அனைத்தும் எல்லா உலகங்களையும்; விளக்கும் விளங்கச் செய்யும்; சோதி பரஞ்சோதியான நாராயணன்; வெங் கதிரோன் குலத்துக்கு சூரிய வம்சத்துக்கு; ஓர் விளக்காய் ஒப்பற்றதொரு விளக்காக; தோன்றி அவதரித்தவனை; விண்முழுதும் விண்ணவரெல்லோரையும்; உயக்கொண்ட உய்ந்திடச்செய்த; வீரன் தன்னை வீரனை; செங்கண் சிவந்த கண்களையுடைய; நெடுங் கரு முகிலை பெரிய காளமேகம் போன்ற; இராமன் தன்னை இராமனை; தில்லை நகர் தில்லை நகரத்திலுள்ள; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்திர கூடத்தில்; எங்கள் தனி எமக்கு ஒப்பில்லாத; முதல்வனை தலைவனை; எம் பெருமான் தன்னை எங்கள் பரமனை; கண்குளிரக் கண் குளிரும்படி; காணும் நாளே தரிசிக்கும் நாள்; என்று கொலோ! என்று வருமோ!

PMT 10.2

742 வந்தெதிர்ந்ததாடகைதன்உரத்தைக்கீறி
வருகுருதிபொழிதரவன்கணையொன்றேவி *
மந்திரங்கொள்மறைமுனிவன்வேள்விகாத்து
வல்லரக்கருயிருண்டமைந்தன்காண்மின் *
செந்தளிர்வாய்மலர்நகைசேர்செழுந்தண்சோலைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அந்தணர்களொருமூவாயிரவரேத்த
அணிமணியாசனத்திருந்தவம்மான்றானே.
742 வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி * வரு குருதி பொழி தர வன்கணை ஒன்று ஏவி *
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து * வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின் **
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த * அணிமணி-ஆசனத்து இருந்த அம்மான் தானே (2)
742
vandhethirndha thātakai than uratthai keeRi *
varu kuruthi pozhi thara veNG kaNai onREvi *
manthiraNGgoL maRai munivan vELvi kātthu *
vallarakkar uyiruNda maindhan kāNmin *
senthaLir vāy malar n^ahai sEr sezhun thaN sOlai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
andhaNarhaL oru moovāyiravar Ettha *
aNimaNi āsanatthirundha ammān thānE 10.2

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

742. He saved the sacrifice of the rishi Vishwamithra, learned in all the mantras and the Vedās shot a strong arrow and split open the chest of Thadagai when she came to fight him, making her blood flow out, and he killed all the strong Rakshasās. See, our dear god stays in the Thiruchitrakudam in Thillai, surrounded with cool flourishing groves blooming with flowers with green tender leaves, as he sits on a throne studded with diamonds, praised by three thousand Andanars.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்து எதிர்ந்த எதிர்த்து வந்த; தாடகை தன் தாடகையின்; உரத்தைக் கீறி மார்பைப் பிளந்து; வரு குருதி பொழிதர ரத்தம் வெளிவந்து சொரியம்படி; வன்கணை ஒன்று ஏவி வலிய அம்பு ஒன்றை செலுத்தி; மந்திரம் கொள் மந்திரங்கள் தெரிந்த; மறை வேதங்களை அறிந்த; முனிவன் முனிவனின் விஸ்வாமித்ரன்; வேள்வி காத்து யாகத்தைப் பாதுகாத்து; வல்லரக்கர் வலிய அரக்கர்களுடைய; உயிர் உண்ட உயிரைக் கவர்ந்த; மைந்தன் மைந்தனை பெருமானை; செந்தளிர்வாய் சிவந்த தளிர்களின் நடுவே; மலர் நகை சேர் மலர்போன்ற அழகு சேர்ந்த; செழுந்தண் செழுமையான குளிர்ந்த; சோலை சோலைகளையுடைய; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள திருச்சித்ர கூடத்தில்; அந்தணர்கள் அந்தணர்கள்; ஒரு மூவாயிரவர் ஏத்த மூவாயிரம் பேர் துதிக்க; அணிமணி அழகிய ரத்தினங்களாலான; ஆசனத்து இருந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்த; அம்மான் தானே பெருமானை; காண்மின் அறியுங்கள்

PMT 10.3

743 செவ்வரிநற்கருநெடுங்கண்சீதைக்காகிச்
சினவிடையோன்சிலையிறுத்து மழுவாளேந்தி *
வெவ்வரிநற்சிலைவாங்கிவென்றிகொண்டு
வேல்வேந்தர்பகைதடிந்தவீரன்தன்னை *
தெவ்வரஞ்சநெடும்புரிசையுயர்ந்தபாங்கர்த்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எவ்வரிவெஞ்சிலைத் தடக்கையிராமன்தன்னை
இறைஞ்சுவாரிணையடியேயிறைஞ்சினேனே.
743 செவ்வரி நற்கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச் * சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி *
வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு * வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை **
தெவ்வர் அஞ்சு நெடும் புரிசை உயர்ந்த பாங்கர்த் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை * இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே. (3)
743
selvari n^aR karu n^eduNGgaN seethaikāhi *
sinavidaiyOn silai iRutthu mazhu vāL Enthi *
vevvari n^aR silai vāNGgi venRi koNdu *
vEl vEndhar pahai thatintha veeran thannai *
thevvaraNYchu nedum purisai uyarntha pāNGgar *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
evvari veNYchilai thadakkai irāman thannai *
iRaiNYchuvār iNaiyadiyE iRaiNYchinEnE 10.3

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

743. To marry Sita whose long dark lovely eyes were lined with red, the heroic Rāma who conquered kings with sharp spears, broke the bow of Shivā, the angry bull rider carrying a mazhu weapon. He stays in divine Thiruchitrakudam in Thillai surrounded by tall walls. I worship the feet of the worshipers of Rāma whose cruel bow conquers his mighty enemies.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செவ்வரி நற் சிவந்த ரேகை படர்ந்த அழகிய; கருநெடும் கருமையான நீண்ட; கண் கண்களை உடைய; சீதைக்கு ஆகி சீதையை மணம் புரிந்திட; சின கோபத்தையுடைய; விடையோன் ரிஷபவாகனபிரானின்; சிலை இறுத்து வில்லை முறித்து; மழுவாள் ஏந்தி கோடரியை ஏந்திய; பரசுராமனுடைய பரசுராமனுடைய; வெவ்வரி நற் அச்சமூட்டும் சிறந்த; சிலை வாங்கி வில்லை வாங்கி; வென்றி கொண்டு வென்றுவிட்டு; வேல் வேந்தர் வேல் ஏந்திய வேந்தர்; பகை தடிந்த பகையைத் தீர்த்த; வீரன் தன்னை வீரனை; தெவ்வர் அஞ்சு எதிரிகள் அஞ்சும்படியான; நெடும் புரிசை உயர்ந்த மதில்களையும்; உயர்ந்த திடமான; பாங்கர் பண்ணைகளையுமுடைய; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; எவ்வரி வெஞ் சிலைத் அச்சப்படுத்தும் வில்லை; தடக்கை விசாலமான கையில் வைத்துள்ள; இராமன் தன்னை இராமபிரானை; இறைஞ்சுவார் வணங்குகிறவர்களுடைய; இணையடியே அடிகளை; இறைஞ்சினேனே வணங்கினேன்

PMT 10.4

744 தொத்தலர்பூஞ்சுரிகுழல்கைகேசிசொல்லால் *
தொன்னகரந்துறந்து * துறைக்கங்கைதன்னை
பத்தியுடைக்குகன்கடத்தவனம்போய்ப்புக்குப்
பரதனுக்குபாதுகமுமரசுமீந்து *
சித்திரகூடத்திருந்தான்றன்னை இன்று *
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எத்தனையும்கண்குளிரக்காணப்பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர்நேரொவ்வார்தாமே.
744 தொத்து அலர் பூஞ் சுரிகுழல் கைகேசி சொல்லால் * தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை *
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குப் * பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து **
சித்திரகூடத்து இருந்தான் தன்னை * இன்று தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற * இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே (4)
744
thoththalar pooNY surikuzhal kaikEsi sollāl *
thonnaharam thuRandhu thuRai gaNGgai thannai *
paththiyudai guhan kadattha vanam pOy pukku *
barathanukku pādhukamum arasum eendhu *
chitthirakootatthu irundhān thannai * inRu-
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
etthanaiyum kaN kuLira kāNappeRRa *
iru n^ilatthārkku imaiyavar n^Er ovvār thāmE 10.4

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

744. As Rāma he left his kingdom, obeying the words of Kaikeyi whose curly hair was decorated with bunches of fresh flowers, went to the forest, crossed the Ganges with the help of Guhan, his dear devotee, and gave his sandals and his kingdom to Bharathan when his brother came to see him. He stays in beautiful Thiruchitrakudam in Thillai. If devotees see him happily with their two eyes, they will be equal to the gods in the sky.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொத்து அலர் கொத்தான மலர்களை; பூஞ் சுரிகுழல் சூடிய சுருண்ட கூந்தலையுடைய; கைகேசி சொல்லால் கைகேயி சொன்னதால்; தொல் பழமையான; நகரம் துறந்து நகரத்தை விட்டு; கங்கை கங்கையின்; துறைதன்னை துறையை; பத்தி உடை பக்தி மிக்க; குகன் கடத்த குகன் கடக்க உதவ; வனம் போய்ப் புக்கு காட்டிற்போய்ச் சேர்ந்து; பரதனுக்கு பாதுகமும் பரதனுக்குப் பாதுகையும்; அரசும் ஈந்து ராஜ்யத்தையும் கொடுத்து; சித்திரகூடத்து சித்ரகூடத்தில்; இருந்தான் தன்னை இருந்தவனை; இன்று இப்பொழுது; தில்லை நகர் தில்லை நகர்; திருச்சித்ரகூடம் சித்ரகூடம்; தன்னுள் என்னும் தலத்தில்; எத்தனையும் கண் முழுதுமாக கண்; குளிர குளிரும்படி; காணப் பெற்ற காணப் பெற்ற; இரு சிறந்த; நிலத்தார்க்கு பூலோகத்தினர்களுக்கு; இமையவர் தேவர்களும்; நேர் ஒவ்வார்தாமே சமம் ஆகார்

PMT 10.5

745 வலிவணக்குவரைநெடுந்தோள்விராதைக்கொன்று
வண்டமிழ்மாமுனிகொடுத்தவரிவில்வாங்கி *
கலைவணக்குநோக்கரக்கிமூக்கைநீக்கிக்
கரனோடுதூடணன்றன்னுயிரைவாங்கி *
சிலைவணக்கிமான்மரியவெய்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
தலைவணக்கிக்கைகூப்பியேத்தவல்லார்
திரிதலால் தவமுடைத்துத்தரணிதானே.
745 வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று * வண் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி *
கலை வணக்கு நோக்கு அரக்கி மூக்கை நீக்கி * கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி **
சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார் * திரிதலால் தவமுடைத்துத் தரணி தானே (5)
745
vali vaNakku varai n^edundhOL virāthai konRu *
vaN thamizh māmuni koduttha vari vil vāNGgi *
kalai vaNakku nOkkarakki mookkai neekki *
karanOdu thoodaNan than uyirai vāNGgi *
silai vaNakki mānmaRiya eythān thannai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
thalai vaNakki kai kooppi Ettha vallār *
thirithalāl thavamudaitthu ith tharaNi thānE 10.5

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

745. As Rāma he killed the Rakshasā Virādan with strong mountain-like arms, received a bow from the sage Agasthya, creator of rich Tamil, cut off the nose of the beautiful Rakshasi Surpanakha, took the lives of Karan and Dushanan, and bent his bow and shot arrows to kill the Raksasa Mārisan when he came as a golden deer. He stays in Thiruchitrakudam in Thillai and this earth is fortunate that his devotees wander there bowing their heads and worshiping him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலி வணக்கு எதிரியின் வலிமையை அடக்குகிற; வரை மலை போன்ற; நெடுந்தோள் பெரிய தோளையுடைய; விராதைக் கொன்று விராத ராட்சசனை அழித்து; வண் தமிழ் மா சிறந்த தமிழ்; முனி கொடுத்த முனிவர் கொடுத்த; வரி வில் வாங்கி சிறப்பான வில்லை வாங்கி; கலை வணக்கு மான் விழியை; நோக்கு மிஞ்சிவிடும் விழியாள்; அரக்கி சூர்ப்பனகை என்ற அரக்கியின்; மூக்கை மூக்கை; நீக்கி துண்டித்தும்; கரனோடு தூடணன்தன் கரன் தூஷணர்களின்; உயிரை வாங்கி உயிரைப் பறித்தும்; சிலை வணக்கி மான் மறிய மாயமான் இறக்கும்படி; எய்தான் தன்னை வில்லை எய்தவனை; தில்லை நகர்த் தில்லை நகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; தலை வணக்கி தலை வணங்கி; கைகூப்பி கைகூப்பி; ஏத்த வல்லார் துதிக்க வல்லவர்கள்; திரிதலால் சஞ்சரிப்பதால்; தரணிதானே பூமியானது; தவமுடைத்து பாக்கியம் பெற்றது

PMT 10.6

746 தனமருவுவைதேகிபிரியலுற்றுத்
தளர்வெய்திச்சடாயுவைவைகுந்தத்தேற்றி *
வனமருவுகவியரசன்காதல்கொண்டு
வாலியைகொன்றிலங்கைநகரரக்கர்கோமான் *
சினமடங்கமாருதியால்சுடுவித்தானைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
இனிதமர்ந்தஅம்மானைஇராமன்றன்னை
ஏத்துவாரிணையடியேயேத்தினேனே.
746 தனம் மருவு வைதேகி பிரியல் உற்று * தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி *
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு * வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான் **
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை * ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே. (6)
746
thana maruvu vaidhEhi piriyaluRRu *
thaLarveythi jatāyuvai vaikunthaththu ERRi *
vanamaruvu kaviyarasan kāthal koNdu * /
vāliyai konRu ilaNGgai n^ahar arakkar kOmān *
sinamadaNGga māruthiyāl suduviththānai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
inithamarndha ammānai irāman thannai *
Etthuvār iNaiyadiyE EtthinEnE 10.6

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

746. As Rāma he was separated from Vaidehi, his lovely wife. He was sad when Jatāyu was killed by Rāvanan and sent to Vaikuntam, he became friends with the king of monkeys' Sugrivan and he killed Vali in the Kishkinda forest, relieving the suffering of Sugrivan. He made Hanuman burn Lankā ruled by Rāvanan, the king of the Rakshasās, so that Hanuman’s anger would abate. I worship the feet of the devotees of Rāma, the dear god who stays happily in Thiruchitrakudam in Thillai.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனம் மருவு செல்வம் போன்ற; வைதேகி பிரியல் உற்று சீதையைப் பிரிந்து; தளர்வு எய்தி மனம் தளர்ந்து; சடாயுவை ஜடாயுவை; வைகுந்தத்து ஏற்றி பரமபதத்திற்கு அனுப்பி; வன மருவு வனத்தில் வசிக்கிற; கவியரசன் குரங்கு அரசனின்; காதல் கொண்டு நட்பு கொண்டு; வாலியைக் கொன்று வாலியை அழித்து; இலங்கை நகர் இலங்கை நகரின்; அரக்கர்கோமான் அரசனுடைய; சினம் அடங்க சீற்றத்தை அடக்கி; மாருதியால் அனுமானால்; சுடுவித்தானை எரித்திட்டவனும்; தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; இனிது அமர்ந்த இனிதே இருக்கும்; அம்மானை ஈசனான; இராமன் தன்னை இராமனை; ஏத்துவார் துதிக்கும்; இணையடியே அடியார்களின் பாதத்தை; ஏத்தினேனே துதித்தேனே!

PMT 10.7

747 குரைகடலையடலம்பால்மறுகவெய்து
குலைகட்டிமறுகரையையதனாலேறி *
எரிநெடுவேலரக்கரொடுமிலங்கைவேந்தன்
இன்னுயிர்கொண்டவன்தம்பிக்கரசுமீந்து *
திருமகளோடினிதமர்ந்தசெல்வன்றன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
அரசமர்ந்தானடிசூடுமரசையல்லால்
அரசாகவெண்ணேன்மற்றரசுதானே.
747 குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து * குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி *
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் * இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து **
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால் * அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே (7)
747
kurai kadalai adalampāl maRuha eythu *
kulai katti maRu karaiyai athanāl ERi *
eri n^edu vEl arakkarodum ilaNGgai vEndhan *
innuyir koNdu avan thambikku arasum eendhu *
thirumahaLOdu inithamarndha selvan thannai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
arasamarndhān adi soodum arasai allāl *
arasāha eNNEn maRRarasu thānE 10.7

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

747. As Rāma he shot his arrows to calm the stormy ocean, made a bridge with the help of the monkeys and reached Lankā on the other side of the sea. He killed the Rakshasās who carried strong long spears, took the life of Rāvana the king of Lankā and gave the kingdom to Rāvana’s brother Vibhishanā, and returning to Ayodhya with his wife as lovely as Lakshmi, he was seated on his throne. I will not consider anyone my king except Rāma the god of Thiruchitrakudam in Thillai.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரை கடலை ஒலிக்கின்ற கடலை; அடல் அம்பால் அழிக்கும் அம்பினால்; மறுக எய்து கலங்கும்படி எய்து; குலை கட்டி அதனால் அணைகட்டி அந்த வழியாக; மறு கரையை ஏறி அக்கரையை அடைந்து; எரி நெடு பகைவனை எரிக்கும் நீண்ட; வேல் வேல் தாங்கிய; அரக்கரொடும் அரக்கர்களோடு; இலங்கை வேந்தன் இராவணனது; இன்னுயிர் கொண்டு இன்னுயிரைக் கவர்ந்து; அவன் தம்பிக்கு அவனுடைய தம்பிக்கு; அரசும் ஈந்து அரசாட்சியும் கொடுத்து; திருமகளோடு சீதையுடன்; இனிது அமர்ந்த இனிதாகச் சேர்ந்த; செல்வன் தன்னை செல்வம் போன்றவனை; தில்லை நகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; அரசு அமர்ந்தான் அரசாளுபவனுடைய; அடி சூடும் திருவடியைத் தலையில்; அரசை அல்லால் சூடுவதல்லாமல்; மற்று அரசு தானே வேறு ஒரு அரசாட்சியை; அரசு ஆக அரசாட்சி என; எண்ணேன் மதித்திடேன்

PMT 10.8

748 அம்பொனெடுமணிமாடஅயோத்தியெய்தி
அரசெய்திஅகத்தியன்வாய்த்தான்முன்கொன்றான்
தன் * பெருந்தொல்கதைக்கேட்டுமிதிலைச்செல்வி
உலகுய்யத்திருவயிறுவாய்த்தமக்கள் *
செம்பவளத்திரள்வாய்த்தன்சரிதைகேட்டான்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
எம்பெருமான்தன்சரிதைசெவியால்கண்ணால்
பருகுவோம் * இன்னமுதைம்மதியோமின்றே.
748 அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி * அரசு எய்தி அகத்தியன் வாய்த் தான் முன் கொன்றான் *
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி * உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் **
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் * இன்னமுதம் மதியோமின்றே (8)
748
ambonedu maNi māda ayOdhdhi eythi *
araseythi ahatthiyan vāy thānmun konRān-
than * perundhol kathaikkEttu mithilai selvi *
ulahuyya thiru vayiRu vāyttha makkaL *
sem pavaLa thiraL vāy than sarithai kEttān *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
emberumān than sarithai seviyāl kaNNāl
paruhuvOm * innamutham madhiyOm inRE 10.8

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

748. Rāma who reached Ayodhya filled with gold and beautiful diamond-studded palaces, heard his own story from the mouths, red as coral, of his two sons born to Sita, the princess of Mithila, to save the world. If we hear and drink in the story of Rāma of Thiruchitrakudam in Thillai we have no need of sweet nectar.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் பொன் நெடு அழகிய பொன்னால் ஆன; மணிமாட மணி மாடங்களுடைய; அயோத்தி அயோத்தியா நகருக்கு; எய்தி மீண்டும் வந்து; அரசு எய்தி அரசாட்சியை ஏற்று; தான் முன் தன்னால் முன்பு; கொன்றான்தன் அழிக்கப்பட்டவனின்; பெருந்தொல் கதை நீண்ட பூர்வ கதைகளை; அகத்தியன் அகஸ்திய முனிவன்; வாய்த் கேட்டு மூலம் கேட்டு; மிதிலைச் செல்வி மிதிலையின் செல்வி; உலகுய்ய உலகம் உய்ந்திட; திருவயிறு வாய்த்த பெற்ற பிள்ளைகளின்; செம் பவளத் சிவந்த பவழம்; திரள்வாய் போன்ற வாயினால்; தன் சரிதை தனது வரலாற்றை; கேட்டான் கேட்டவன்; தில்லைநகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; எம்பெருமான் சரிதை எம்பெருமானின் கதையை; செவியால் கண்ணால் காதினாற்கேட்டு கண்ணால்; பருகுவோம் அனுபவிப்போம்; இன்னமுதம் வேறு எந்த இனிய தேவாமிர்தம்; மதியோமின்றே ஒன்றையும் மதிக்க மாட்டோம்

PMT 10.9

749 செறிதவச்சம்புகன்றன்னைச்சென்றுகொன்று
செழுமறையோனுயிர்மீட்டுத் * தவத்தோனீந்த
நிறைமணிப்பூணணியுங்கொண்டுஇலவணன்தன்னைத்
தம்பியால்வானேற்றிமுனிவன்வேண்ட *
திறல்விளங்குமிலக்குமனைப்பிரிந்தான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
உறைவானை * மறவாதவுள்ளந்தன்னை
உடையோம் * மற்றுறுதுயர மடையோமின்றே.
749 செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று * செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த *
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத் * தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட **
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
உறைவானை மறவாத உள்ளந்தன்னை உடையோம் * மற்றுஉறு துயரம் அடையோம் இன்றே (9)
749
seRithava champugan thannai senRu konRu *
sezhu maRaiyOn uyir meettu thavatthOn eendha *
niRaimaNi pooNaNiyum koNdu ilavaNan thannai *
thambiyāl vānERRi munivan vENda *
thiRal viLaNGgum ilakkumanai pirindhān thannai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL-
uRaivānai * maRavātha uLLam thannai
udaiyOm * maRRuRuthuyaram adaiyOm inRE 10.9

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

749. Rāma is adorned with a jewel-studded ornament given by an Andanan who knew the Vedās because he saved his son. His brother Laksmana killed the Rakshasā Ilavanan and Rāma granted him Mokshā. He was separated from his brother Laksmana by the curse of the sage Durvasa. If our hearts never forget the lord of Thiruchitrakudam in Thillai, we will not have any trouble in our lives.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செறி தவ மிக்க தவ வலிவையுடைய; சம்புகன் தன்னை சம்புகனை; சென்று தேடிச் சென்று; கொன்று அவனைக் கொன்று; செழு மறையோன் சிறந்த அந்தண குமாரனின்; உயிர் மீட்டு உயிரை மீட்டுக் கொடுத்து; தவத்தோன் ஈந்த தவ முனிவன் கொடுத்த; நிறை மணிப்பூண் ரத்ன ஹாரத்தையும்; அணியும் கொண்டு அணிந்து கொண்டு; இலவணன்தன்னை லவணாசுரனை; தம்பியால் தம்பியின் மூலம்; வான் ஏற்றி மேலுலகத்திற்கு அனுப்பி; முனிவன் வேண்ட துர்வாச முனியின் சாபத்தால்; திறல் விளங்கும் பராக்கிரமம் பெற்ற; இலக்குமனை லக்ஷ்மணனை; பிரிந்தான் தன்னை துறந்தவனை; தில்லை நகர்த் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; உறைவானை உறையும் பிரானை; மறவாத உள்ளம் தன்னை மறவாத மனத்தை; உடையோம் உடைய நாம்; மற்று உறுதுயரம் இனி துயரமே; அடையோம் அன்றே அடையமாட்டோம்

PMT 10.10

750 அன்றுசராசரங்களைவைகுந்தத்தேற்றி
அடலரவப்பகையேறியசுரர் தம்மை
வென்று * இலங்குமணிநெடுந்தோள்நான்கும்தோன்ற
விண்முழுதுமெதிர்வரத்தன்தாமம்மேவி *
சென்றினிதுவீற்றிருந்தவம்மான்தன்னைத்
தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள் *
என்றும்நின்றானவனிவனென்றேத்தி நாளும்
இன்றைஞ்சுமினோஎப்பொழுதும்தொண்டீர்! நீரே. (2)
750 ## அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி * அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை
வென்று * இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற * விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி **
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத் * தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் *
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி * நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே (10)
750. ##
anRu charā charaNGgaLai vaikunthaththu ERRi *
adalarava pahai yERi asurar thammai-
venRu, * ilaNGgu maNi n^edundhOL nān kum thOnRa *
viN muzhuthum ethirvara than_thāmam mEvi *
senRinithu veeRRirundha ammān thannai *
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
enRum n^inRān avanivan enRu Etthi * nāLum-
iRaiNYchuminO eppozhuthum thondeer neerE 10.10

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

750. When the dear lord adorned with garlands returned from the forest, the gods in the sky welcomed him. By the grace of him who fought with the strong Asuras and conquered them all people and creatures in the world go to Vaikuntam. He stays always in Thiruchitrakudam in Thillai. O devotees of Rāma, praise him saying, “avan ivan!” and worship him always.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று அன்று சராசரங்களான; சராசரங்களை எல்லா உயிர்களையும்; வைகுந்தத்து ஏற்றி பரமபதத்துக்குப் அனுப்பி; அடல் அரவப் வலிமையுடைய பாம்புகளின்; பகையேறி பகையான கருடன் மேல் ஏறி; அசுரர் தம்மை வென்று அசுரர்களை ஜயித்து; இலங்கு மணி வீரம் மிக்க; நெடுந்தோள் அழகிய நீண்ட தன் கைகள்; நான்கும் தோன்ற நான்கும் விளங்க; விண் முழுதும் மேல் உலகத்தினர் யாவரும்; எதிர்வர எதிரில் வர; தன் தாமம் மேவி தமது இடமான வைகுந்தம்; சென்று இனிது போய் இனிதாக; வீற்றிருந்த வீற்றிருந்த; அம்மான் தன்னை இராமபிரானை; தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; என்றும் நின்றான் அவன் என்றும் இருக்கும் அவன்; இவனென்று ஏத்தி இப்பிரானே என துதித்து; தொண்டீர்! நீரே அடியவர்களே நீங்கள்; எப்பொழுதும் நாளும் தினந்தோறும் எப்போதும்; இறைஞ்சுமினோ வணங்கிடுவீரே

PMT 10.11

751 தில்லைநகர்த்திருச்சித்ரகூடந்தன்னுள்
திறல்விளங்குமாருதியோடமர்ந்தான்தன்னை *
எல்லையில்சீர்த்தயரதன்றன்மகனாய்த்தோன்றிற்று
அதுமுதலாத் தன்னுலகம்புக்கதீறா *
கொல்லியலும்படைத்தானைக்கொற்றவொள்வாள்
கோழியர்கோன்குடைக்குலசேகரஞ்சொற்செய்த *
நல்லியலின்தமிழ்மாலைபத்தும்வல்லார்
நலந்திகழ்நாரணனடிக்கீழ்நண்ணுவாரே (2)
751 ## தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் * திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை *
எல்லை இல் சீர்த் தயரதன் தன் மகனாய்த் தோன்றிற்று அது முதலாத் * தன் உலகம் புக்கது ஈறா **
கொல் இயலும் படைத்தானைக் கொற்ற ஒள்வாள் * கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற்செய்த *
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார் * நலந்திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே (11)
751. ##
thillai n^ahar thiruchchithra koodam thannuL *
thiRal viLaNGgu māruthiyOtu amarndhān thannai *
ellaiyil seer dhayarathan than mahanāy thOnRiRRu-
athumuthalā * thannulaham pukka theeRā *
kolliyalum pataitthānai koRRa voLvāL *
kOzhiyar kOn kudai kulasEkaran soR seytha *
nalliyal in thamizh mālai patthum vallār *
nalam thihazh n^āraNan adikkeezh naNNuvārE (2) 10.11

Ragam

கல்யாணி

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

751. Kulasekharan, the king of Uraiyur, who rules under a royal umbrella and carries a victorious shining sword composed a garland of ten Tamil pāsurams describing the endless fame of Rāma, sitting in Thillai Thiruchitrakudam the son of Dasharatha and the friend of Hanumān. If devotees know and recite these ten sweet Tamil pāsurams they will approach the feet of Nāranan who shines with goodness.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தில்லை நகர் தில்லைநகர்; திருச்சித்ரகூடந் தன்னுள் திருச்சித்ரகூடத்தில்; திறல் விளங்கு பலம் பெற்ற; மாருதியோடு அனுமானுடனே; அமர்ந்தான் தன்னை இருப்பவனைக் குறித்து; எல்லையில் எல்லையற்ற; சீர்த் தயரதன் தன் சீர்மை பெற்ற தசரதனின்; மகனாய்த் தோன்றிற்று மகனாய்ப் பிறந்த; அது முதலாக அந்தச் செயல் முதலாக; தன் உலகம் தனது உலகத்திற்கு; புக்கது ஈறா சென்றது வரை; கொல் இயலும் கொல்லும் திறனை; படைத்தானை படைத்தவனை; ஒள்வாள் வெற்றி வாளை உடைய; கோழியர் கோன் உறையூர் கோமான்; குடைக் வெண் கொற்றக்குடை உடைய; குலசேகரன் குலசேகராழ்வார்; சொல் செய்த அருளிச்செய்த; நல் இயல் சிறந்த; இன் தமிழ் மாலை இனியதமிழ்ப் பாசுரங்கள்; பத்தும் பத்தையும் கற்று; வல்லார் அனுசந்திப்பவர்கள்; நலன் திகழ் நலம் தரும்; நாரணன் நாராயணனின்; அடிக்கீழ் பாதங்களை; நண்ணுவாரே அடைவார்களே!

PT 3.2.1

1158 ஊன்வாடஉண்ணாதுஉயிர்க்காவலிட்டு
உடலிற்பிரியாப்புலனைந்தும்நொந்து *
தாம்வாடவாடத்தவம்செய்யவேண்டா
தமதாஇமையோருலகாளகிற்பீர்!
கானாடமஞ்ஞைக்கணமாட மாடே
கயலாடுகானீர்ப்பழனம்புடைபோய் *
தேனாடமாடக்கொடியாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே. (2)
1158 ## ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு *
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து *
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா- *
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் **
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே *
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய் *
தேன் ஆட மாடக் கொடி ஆடு * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-1 **
1158. ##
oonvāda uNNādhu uyirkāvalittu * udaliRpiriyāp pulanainNdhumnNonNdhu *
thāmvādavādath thavamseyya vENdā * thamadhā imaiyOr ulagāLagiRpeer *
kānāda maNYNYaik kaNamādamādE * kayalādukāneerp pazhanam pudaipOy *
thEnādamādak kodiyādu * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. (2) 3.2.1

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1158. O devotees, if you want to rule the world of the gods, you do not have to starve and suffer and do tapas and all of your five senses do not have to be restrained. Just go to Thillai Chitrakudam where peacocks dance, fish frolic in the water of the springs, bees drink honey and flags flutter on the tops of palaces.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊன் வாட உடல் வற்றி உலரும்படி; உண்ணாது உண்ணாது; உயிர் காவல் இட்டு பிராணனைக் காப்பாற்றி; உடலில் பிரியா சரீரத்தை விட்டுப் போகாத; புலன் ஐந்தும் நொந்து ஐந்து புலன்களும் நொந்து; தாம் தாங்கள் மேன்மேலும்; வாட வாட வாட்டமடையும்படி; தவம் செய்ய வேண்டா தவம் செய்ய வேண்டாம்; கான் ஆட சோலை அசைய; மஞ்ஞைக் கணம் ஆட மயில்களின் கூட்டங்கள் ஆடவும்; மாடே அதனாலே வண்டுகளானவை; கயல் ஆடு கால் நீர் நீர்நிலங்களினருகே போய்; பழனம் புடைபோய் மதுவின் மயக்கத்தில்; தேன் ஆட வண்டுகள் மேலே பறக்கவும்; மாட கொடி மாடங்களிலுள்ள கொடிகள்; ஆடு அசையவும்; தமதா பரமபதத்தை தங்களதாக; இமையோர் உலகு ஆளவேண்டி யிருக்கும்; ஆளகிற்பீர்! தேவர்களே!; தில்லை திருச்சித்ரகூடம் தில்லை திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
imaiyOr ulagu paramapadham; thamadhA as yours; ALgiRpIr Oh you who are desiring to rule!; Un flesh; vAda to wither; uNNAdhu avoiding eating etc; uyir prANa (vital air) (with the help of water, air etc, to not leave); kAval ittu imprisoning it; udalil piriyA not leaving the body; aindhu pulanum five senses; nondhu torture; thAm them; vAda vAda to suffer further; thavam seyya vENdA no need to perform penance;; kAn forest; Ada to sway; manjaik kaNam pride of peacocks; Ada dance; mAdE near by; kayal kayal fish; Adu roaming; nIr water flowing; kAl having canals; pazhanam pudai pOy going near the water bodies; thEn beetles; Ada rise to fly (by that wind); mAdam on the mansions; kodi flags; Adu swaying; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.2

1159 காயோடுநீடுகனியுண்டு, வீசு
கடுங்கால்நுகர்ந்து, நெடுங்காலம் * ஐந்து
தீயொடுநின்றுதவம்செய்யவேண்டா
திருமார்பனைச்சிந்தையுள்வைத்துமென்பீர் *
வாயோதுவேதம்மலிகின்றதொல்சீர்
மறையாளர்நாளும்முறையால்வளர்த்த *
தீயோங்கவோங்கப்புகழோங்கு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1159 காயோடு நீடு கனி உண்டு * வீசு
கடுங் கால் நுகர்ந்து நெடுங் காலம் * ஐந்து
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா *
-திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் **
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல்சீர் *
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த *
தீ ஓங்க ஓங்கப் புகழ் ஓங்கு * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-2 **
1159
kāyOdu nNeedu kaniyuNdu veesu * kadungkāl nNugarnNdhu nNedungkālam *
ainNdhu theeyodu nNinRu thavaNYcheyya vENdā * thirumārbanaic chinNdhaiyuL vaitthumenbeer *
vāyOdhuvEdham maliginRa tholseer * maRaiyāLar nNāLum muRaiyāl vaLarttha *
theeyOngkavOngkap pugazhOngku * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.2

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1159. O devotees, if you want to reach him who embraces Lakshmi on his chest, you do not have to eat vegetables and fruits or perform tapas by standing for long periods of time and undergo the five types of sacrifices with fire. Just go to the famous Thillai Chitrakudam and worship him where good Maraiyālars recite the Vedās always and make sacrifices with fire that rises high, and just keep the lord in your heart.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு மார்பனை திருமகள் மார்பிலிருக்கும் பெருமானை; சிந்தையுள் சிந்தையுள் வைக்க; வைத்தும் என்பீர்! விரும்புபவர்களே!; காயோடு காய்களையும்; நீடு கனி உண்டு உலர்ந்த பழங்களையும் உண்டு; வீசு கடுங் உஷ்ணமான; கால் நுகர்ந்து காற்றையும் நுகர்ந்து; நெடுங் காலம் நெடுநாள் வரையில்; ஐந்து தீயோடு பஞ்சாக்நி மத்தியில்; நின்று நின்றுகொண்டு; தவம் செய்ய வேண்டா தவம் செய்ய வேண்டாம்; வாய் ஓது வேதம் வாயாலே ஓதப்படும் வேதங்களை; மலிகின்ற தொல் சீர் குறைவின்றி இயற்கையாக; மறையாளர் நாளும் வைதிகர்கள் நாள்தோறும் ஓதவும்; முறையால் வளர்த்த கிரமமாக அநுஷ்டித்த; தீ ஓங்க ஓங்க அக்நிகார்யங்கள் வளர வளர; புகழ் ஓங்கு அதனாலே கீர்த்தி வளரப் பெற்ற; தில்லை திருச்சித்ரகூடம் தில்லை திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
thirumArvanai one who is the lord of SrI mahAlakshmi; sindhaiyuL in the heart; vaiththum enbIr you who reveal the desire to keep!; kAyOdu with unripened fruits; nIdu kani fruits which have dried for many days; uNdu eat; vIsu blowing; kadum kAl harsh wind; nugarndhu consumed; nedum kAlam many days; aindhu thIyOdu ninRu standing amidst five fires; thavam seyya vENdA no need to perform penance;; vAy with mouth; Odhu recited; vEdham vEdham; malginRa remaining fully; thol natural; sIr having wealth; maRaiyALar brAhmaNas; nALum everyday; muRaiyAl in the proper manner; vaLarththa practiced; thI fire; Onga Onga as it rises (by that); Ongu rising above; pugazh having greatness; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.3

1160 வெம்பும்சினத்துப்புனக்கேழலொன்றாய்
விரிநீர்முதுவெள்ளம்உள்புக்கழுந்த *
வம்புண்பொழில்சூழுலகன்றெடுத்தான்
அடிப்போதுஅணைவான்விருப்போடுஇருப்பீர்! *
பைம்பொன்னும்முத்தும்மணியும்கொணர்ந்து
படைமன்னவன்பல்லவர்க்கோன்பணிந்த *
செம்பொன்மணிமாடங்கள்சூழ்ந்ததில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1160 வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்று ஆய் *
விரி நீர் முது வெள்ளம் உள்புக்கு அழுந்த *
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் *
அடிப்போது அணைவான் விருப்போடு இருப்பீர் **
பைம் பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து *
படை மன்னவன் பல்லவர்க் - கோன் பணிந்த *
செம் பொன் மணி மாடங்கள் சூழ்ந்த * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-3 **
1160
vembum sinatthup punakkEzhal_onRāy * virinNeer mudhuveLLam uLbukkazhunNdha *
vambuN pozhilsoozh ulaganRedutthān * adippOdhu_aNaivān viruppOdu_iruppeer *
paimbonnum mutthum maNiyum koNarnNdhu * padaimannavan pallavarkOnpaNinNdha *
sembon maNimādaNGgaLsoozhnNdha * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.3

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1160. O devotees, if you want to see the lord who went through the ocean to the underground world as a boar and rescued the earth goddess stolen by an Asuran, just go to Thillai Chitrakudam, the sacred temple surrounded with jeweled palaces covered with pure gold where the Pallava king with a large army brought gold, pearls and jewels and worshiped him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வம்பு உண் உணவுக்கு விஷயமான; பொழில் சூழ் சோலைகளால் சூழ்ந்த பூமியானது; விரி நீர் முது பரந்த கடல்; வெள்ளம் வெள்ளத்தில்; உள்புக்கு புகுந்து; அழுந்த அன்று மூழ்கிப் போக அப்போது; வெம்பும் சினத்துப் மிக்க கோபத்தை யுடைய; புன கேழல் ஒன்று ஆய் காட்டு வராகம் ஒன்றாய்; உலகு எடுத்தான் பூமியை எடுத்த பெருமானின்; அடிப்போது பாதங்களை; அணைவான் பற்ற வேண்டு என்று; விருப்போடு இருப்பீர்! விரும்பும் அன்பர்களே!; பைம் பொன்னும் முத்தும் அழகிய பொன்னும் முத்தும்; மணியும் மாணிக்கம்; கொணர்ந்து கொண்டு வந்து ஸமர்ப்பித்து; படை மன்னவன் தனது பரிவாரங்களோடு கூட; பல்லவர் கோன் பணிந்த பல்லவ மன்னன் பணிந்த; செம் பொன் மணி செம் பொன் மணி; மாடங்கள் சூழ்ந்த மாடங்களால் சூழ்ந்த; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
vambu fresh; uN having food items; pozhil garden; sUzh surrounded; ulagu earth; viri vast; mudhu nIr veLLam uL pukku entering the great ocean; azhundha as it drowned; anRu at that time; vembum sinam having great anger; punam living in the forest; onRu matchless; kEzhalAy being mahAvarAham (great pig/wild-boar); eduththAn one who dug in and lifted it; adippOdhu divine lotus feet; aNaivAn to reach; viruppOdu with desire; iruppIr Oh you who are living!; pai beautiful; ponnum golden flowers; muththam pearls; maNiyum gems; koNarndhu bringing; padai along with the army; mannavan king; pallavarkOn pallava king; paNindha surrendered; sembon with beautiful gold; maNi made with gems; mAdangaL by mansions; sUzhndha surrendered; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.4

1161 அருமாநிலம்அன்றுஅளப்பான்குறளாய்
அவுணன்பெருவேள்வியில்சென்றிரந்த *
பெருமான்திருநாமம்பிதற்றி நுந்தம்
பிறவித்துயர்நீங்குதுமென்னகிற்பீர்! *
கருமாகடலுள்கிடந்தான்உவந்து
கவைநாஅரவினணைப்பள்ளியின்மேல் *
திருமால்திருமங்கையொடாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1161 அரு மா நிலம் அன்று அளப்பான் குறள் ஆய் *
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த *
பெருமான் திருநாமம் பிதற்றி * நும்-தம்
பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் **
கரு மா கடலுள் கிடந்தான் உவந்து *
கவை நா அரவின்-அணைப் பள்ளியின்மேல் *
திருமால் திருமங்கையொடு ஆடு * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-4 **
1161
arumānNilam anRu_aLappān kuRaLāy * avuNan peruvELviyil senRiranNdha *
perumān thirunNāmam pidhaRRi * nNunNdham piRaviththuyar nNeengkudhum ennakiRpeer *
karumākadaluL kidanNdhāNn uvanNdhu * kavainNā_araviNnaNaip paLLiyinmEl *
thirumāl thirumaNnkaiyodādu * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.4

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1161. O devotees, you say that your sorrow-filled births will go away if you recite the divine names of the lord who went as a dwarf and asked for three feet of land at the sacrifice of Mahābali and measured the world and the sky with his two feet. If you want to reach him, just go to Thillai Chitrakudam where Thirumāl with divine Lakshmi rests happily on Adisesha on the dark ocean and worship him, and you will not be born again.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று இந்திரன் ராஜ்யத்தை இழந்த அன்று; அரு மா நிலம் அளக்க அரிதான பூமியை; அளப்பான் அளப்பதற்காக; குறள் ஆய் வாமந ரூபம் கொண்டு; அவுணன் பெரு அசுரனான மகாபலியின்; வேள்வியில் யாகசாலையில்; சென்று இரந்த சென்று யாசித்த; பெருமான் திருநாமம் பெருமானின் திருநாமம்; பிதற்றி நும் தம் வாயராச் சொல்லி; பிறவித் துயர் பிறவித் துயர்; நீங்குதும் நீக்கிக் கொள்ள; என்னகிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; கரு மா கடலுள் கருத்தப் பெரிய பாற்கடலிலே; கவை நா இரண்டு நாவையுடைய; அரவின் அணை ஆதிசேஷன் மேல்; பள்ளியின் மேல் சயனித்திருக்கும் பெருமான்; கிடந்தான் உவந்து உவந்து கிடந்த; திருமால் திருமால்; திருமங்கையொடு ஆடு திருமகளுடனிருக்கும்; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
anRu When indhra lost his kingdom; aru immeasurable; mAnilam the great earth; aLappAn to measure; kuRaLAy in vAmana form; avuNan mahAbali, the demon-s; peru vELviyil in the great yAgam; senRu irandha went and begged; perumAn sarvESvaran-s; thirunAmam divine name; pidhaRRi reciting incoherently; nundham your; piRavith thuyar the sorrow of birth; nIngudhum let us eliminate; ennagiRpIr Oh you who say in this manner!; karumA dark and vast; kadaluL in thiruppARkadal (kshIrAbdhi, milk ocean); kavainA having two tongues; aravin aNaip paLLiyin mEl on the bed which is thiruvananthAzhwAn (AdhiSEshan); uvandhu joyfully; kidandhAn one who mercifully reclined; thirumAl SrIya:pathi; thirumangaiyOdu with periya pirAttiyAr; Adu eternally residing; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.5

1162 கோமங்கவங்கக்கடல்வையம்உய்யக்
குலமன்னரங்கம்மழுவில்துணிய *
தாம்அங்கமருள்படைதொட்ட வென்றித்
தவமாமுனியைத்தமக்காக்ககிற்பீர்! *
பூமங்கைதங்கிப்புலமங்கைமன்னிப்
புகழ்மங்கைஎங்கும்திகழ * புகழ்சேர்
சேமம்கொள்பைம்பூம்பொழில்சூழ்ந்த தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1162 கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக் *
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய *
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித் *
தவ மா முனியைத் தமக்கு ஆக்ககிற்பீர் **
பூ-மங்கை தங்கிப் புல-மங்கை மன்னிப் *
புகழ்-மங்கை எங்கும் திகழ * புகழ் சேர்
சேமம் கொள் பைம் பூம் பொழில் சூழ்ந்த * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-5 **
1162
kOmangka vangkakkadal vaiyam_uyyak * kulamannarangkam mazhuvil thuNiya *
thām_anku amaruL padaithotta venRith * thavamāmuniyaith thamakkākkakiRpeer *
boomangkai thangkip pulamangkai mannip * pugazhmangkai engkum thigazhap *
pugazhsEr sEmangkoL paimboom bozhilsoozhnNdha * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.5

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1162. O devotees, if you want to reach the lord who came as the sage ParasuRāman carrying an axe and fought with many kings to save this world encircled by the seas, just go to famous Thillai Chitrakudam surrounded with blooming groves where he stays with the earth goddess and Lakshmi as the goddess of fame shines everywhere.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோ மங்க க்ஷத்ரியர்கள் அழியவும்; வங்கக் கடல் கடலால் சூழப்பட்ட; வையம் உய்ய உலகதிலுள்ளோர் உய்யவும்; குல மன்னர் அங்கம் குல மன்னர்களின் சரீரம்; மழுவில் துணிய மழுவாலே அழியவும்; தாம் அங்கு தாமே அப்போது; அமருள் போர்க்களத்திலே புகுந்து; படை தொட்ட ஆயுதம் எடுத்த; வென்றி வெற்றி வீரனும்; தவ மா தபஸ்வியுமான; முனியை பரசுராமனாக அவதரித்த; தமக்கு பெருமானை பற்ற; ஆக்ககிற்பீர்! விரும்பும் அன்பர்களே!; புல மங்கை மன்னி ஸ்ரீதேவி வலப்புறமும்; பூ மங்கை தங்கி பூதேவி இடப்புறமும்; புகழ் மங்கை புகழ் மங்கை; எங்கும் எங்கும் வியாபித்து விளங்க; திகழ புகழ் சேர் புகழோடு கூடிய; சேமம் கொள் அரணையுமுடைய; பைம் பூம் பரந்து பூத்த; பொழில் சூழ்ந்த சோலைகளால் சூழ்ந்த; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
kO kings; manga to be destroyed; vangam boats (filled); kadal surrounded by ocean; vaiyam those residents of earth; uyya to be liberated; kula mannar kings-; angam body; mazhu by the axe; thuNiya to sever; thAm himself; angu occurred at that time; amaruL entering the battle; padai thotta took up arms; venRi one who has victory; thavam went to perform penance subsequently; mAmuniyai SrI paraSurAmAzhwAn, the great sage; AkkagiRpIr you who desire to own him!; pU mangai periya pirAttiyAr; thangi residing (on his divine chest); pula mangai SrI bhUmip pirAtti; manni remaining firmly (on his left side) (due to that); pugazh fame; mangai woman; engum everywhere; thigazha shining radiantly; pugazh sEr having fame; sEmam koL having protection; paim pUm pozhil sUzhndha surrounded by vast, blossomed garden; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.6

1163 நெய்வாயழலம்புதுரந்து முந்நீர்
துணியப்பணிகொண்டுஅணியார்ந்து * இலங்கு
மையார்மணிவண்ணனைஎண்ணி நுந்தம்
மனத்தேஇருத்தும்படிவாழவல்லீர்! *
அவ்வாய்இளமங்கையர் பேசவும்தான்
அருமாமறையந்தணர்சிந்தைபுக *
செவ்வாய்க்கிளிநான்மறைபாடு தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1163 நெய் வாய் அழல் அம்பு துரந்து * முந்நீர்
துணியப் பணிகொண்டு அணி ஆர்ந்து * இலங்கு
மை ஆர் மணிவண்ணனை எண்ணி * நும்-தம்
மனத்தே இருத்தும்படி வாழவல்லீர் **
அவ் வாய் இள மங்கையர் பேசவும் * தான்
அரு மா மறை அந்தணர் சிந்தை புக *
செவ் வாய்க் கிளி நான்மறை பாடு * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-6 **
1163
nNeyvāy azhalambu thuranNdhu * munNnNeer thuNiyap paNikoNdu aNiyārnNdhu *
ilangkumaiyār maNivaNNanai eNNi * nNunNdham manatthE irutthumbadi vāzha valleer *
avvAy iLamaNGgaiyar pEsavunNdhān * arumāmaRai anNdhaNarsinNdhaipuga *
sevvāykkiLi nānmaRaipādu * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.6

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1163. O devotees, if you want to live thinking only of the dark-colored lord shining like a jewel, who as Rāma shot his sharp arrows at the ocean and built a bridge to go to Lankā, just go to beautiful Thillai Chitrakudam where Vediyars recite the Vedās that they know so well and young girls listen to their recitation and sing after them while parrots hear the girls and chant with them.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெய் வாய் கூரிய அக்நி போன்ற ஒளியுள்ள; அழல் அம்பு அம்பை பிரயோகித்து; துரந்து முந்நீர் கடலை வற்றசெய்து; துணியப் பணி கொண்டு அணை கட்டின; அணி ஆர்ந்து இலங்கு ஆபரணங்கள் நிறைந்த; மை ஆர் மணி வண்ணனை கருத்த நிறமுடையவனை; எண்ணி நும் தம் உங்கள் மனதில் நினைத்து; மனத்தே இருத்தும்படி அந்த பெருமானைப் பற்ற; வாழவல்லீர்! விரும்பும் அன்பர்களே!; அவ் வாய் அந்த இடத்தில்; இள மங்கையர் சிறு பெண்கள்; பேசவும் தான் தங்கள் தந்தையர் வேதம் ஓதக் கேட்டு; அரு மா அருமையான பெரிய; மறை வேத வாக்கியங்களை சொல்ல; செவ்வாய்க் அதைக் கேட்டு சிவந்த; கிளி வாயையுடைய கிளிகள்; அந்தணர் சிந்தை புக அந்தணர் சிந்தையில் புகும்படி; நான்மறை பாடு நான்கு வேதங்களையும் பாடுகிற; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
ney sharp; vAy mouth; azhal having fire like radiance; ambu arrow; thurandhu shot; munnIr thuNiya making the ocean become dry; paNi koNdu one who built the bridge (on that ocean); aNi by ornaments; Arndhu being complete; ilangum shining; mai Ar very dark; maNivaNNanai one who has beautiful form which resembles that of a precious stone; eNNi meditate upon; nundham your; manaththE in the heart; iruththum padi to have him reside eternally; vAzha valleer oh you who desire to live!; avvAy there; iLa mangaiyar young girls (as they have heard the recitals of their fathers); aru mA maRai the great vEdham, the meaning of which is very difficult to understand; pEsavum as they recite (along with them); sevvAyk kiLi parrots which have reddish mouth; andhaNar sindhai puga to enter the hearts of brAhmaNas; nAlmaRai the four vEdhams; pAdu singing; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.7

1164 மௌவல்குழலாய்ச்சிமென்தோள்நயந்து
மகரம்சுழலச்சுழல்நீர்பயந்த *
தெய்வத்திருமாமலர்மங்கைதங்கு
திருமார்பனைச்சிந்தையுள்வைத்துமென்பீர்! *
கௌவைக்களிற்றின்மருப்பும் பொருப்பில்
கமழ்சந்தும்உந்திநிவாவலங்கொள் *
தெய்வப்புனல்சூழ்ந்து அழகாய தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1164 மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து *
மகரம் சுழலச் சுழல் நீர் பயந்த *
தெய்வத் திரு மா மலர் மங்கை தங்கு *
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் **
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் *
கமழ் சந்தும் உந்தி நிவா வலம் கொள் *
தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-7 **
1164
mowval kuzhalāycchi men_thOL nNayanNdhu * magaram suzhalach chuzhalnNeer_payanNdha *
dheyvaththirumāmalar mangkaithangku * thirumārbanaic chinNdhaiyuL vaitthumenbeer *
kowvaik kaLiRRin maruppum poruppil * kamazhsanNdhum_unNdhi nNivāvalangkoL *
dheyvap punalsoozhnNdhu azhagāya * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.7

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1164. If you want to keep in your heart the lord who loved the soft arms of Nappinnai, the cowherd girl adorned with jasmine flowers on her hair, and the divine Lakshmi, born from the milky ocean rolling with waves, whom he keeps on his divine chest, just go to sacred Thillai Chitrakudam surrounded by the divine river Vellāru that carries elephants’ tusks and sandalwood from the hills while the moon circles around that lovely place.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மௌவல் முல்லைப்பூவை; குழல் ஆய்ச்சி அணிந்துள்ள நப்பின்னையின்; மென் தோள் மென்மையான தோள்களை; நயந்து அணைத்தவனும்; மகரம் சுழல மீன்கள் சுழலும்; சுழல் நீர் பயந்த சுழல் நீர் தோன்றிய கடலில்; தெய்வத் திரு மா பிறந்த திருமகள்; மலர் மங்கை தங்கி இருக்குமிடமான; திருமார்பனைச் சிந்தையுள் எம்பெருமானைப் பற்ற; வைத்தும் என்பீர்! விரும்பும் அன்பர்களே!; கௌவைக் களிற்றின் பிளிறுகிற யானையின்; மருப்பும் கொம்புகளையும்; பொருப்பில் கமழ் மலையிலுள்ள மணங்கமழும்; சந்தும் உந்தி சந்தன மரங்களையும் தள்ளிக்கொண்டு; நிவா வலம் கொள் ’நிவா’ என்கிற வெள்ளாற்றின்; தெய்வப் புனல் சூழ்ந்து அழகு ஆய புனித ஜலம் சூழ்ந்த; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
mauval jasmine flower; kuzhal having in divine hair; Aychchi nappinnaip pirAtti-s; mel tender; thOL with divine shoulder; nayandhu embraced; magaram fish etc; suzhala to rorate; suzhal comes swirling; nIr payandha given birth by the ocean; dheyvam beautiful; thirumA mAlar mangai periya pirAttiyAr; thangu residing; thirumArvanai having divine chest; sindhaiyuL in the heart; vaiththum enbIr oh you who are desiring to place! (due to fighting with the lion); kauvai screaming; kaLiRRin elephant-s; maruppum tusks; poruppil in the mountain; kamazh spreading good fragrance; sandhum sandalwood; undhi pushing and coming; nivA veLLARu, the river; valam koL going around in circle; dheyvam beautiful; punal sUzhndhu surrounded by water; azhagAya attractive; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.8

1165 மாவாயினங்கம்மதியாதுகீறி
மழைமாமுதுகுன்றுஎடுத்து * ஆயர்தங்கள்
கோவாய்நிரைமேய்த்துஉலகுண்டமாயன்
குரைமாகழல்கூடும் குறிப்புடையீர்! *
மூவாயிரநான்மறையாளர் நாளும்
முறையால்வணங்க, அணங்காயசோதி *
தேவாதிதேவன்திகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1165 மா வாயின் அங்கம் மதியாது கீறி *
மழை மா முது குன்று எடுத்து * ஆயர்-தங்கள்
கோ ஆய் நிரை மேய்த்து உலகு உண்ட மாயன் *
குரை மா கழல் கூடும் குறிப்பு உடையீர் **
மூவாயிரம் நான்மறையாளர் * நாளும்
முறையால் வணங்க அணங்கு ஆய சோதி *
தேவாதிதேவன் திகழ்கின்ற * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-8 **
1165
māvāyiNnangkam madhiyādhu keeRi * mazhaimāmudhu kunRedutthu *
āyar_thangkaL KOvāy niraimEyththu ulaguNdamāyan * kuraimākazhalkoodum kuRippudaiyeer *
moovāyiram nNānmaRaiyāLar * nNāLum muRaiyāl vaNangka aNangkāyasOdhi *
dhEvādhi dhEvan thigazhginRa * thillaith thirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.8

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1165. O devotees, if you want to reach the ornamented feet with sounding anklets of the Māyan who grazed the cows and carried Govardhanā mountain as an umbrella to rescue the cows when they suffered in a terrible storm, just go to flourishing Thillai Chitrakudam where the god of gods, the divine light, stays, worshiped by three thousand Vediyars, the learned of the Vedās.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா வாயின் குதிரை கேசியின் வாயையும்; அங்கம் அங்கங்களையும்; மதியாது ஒரு பொருட்டாக மதிக்காமல்; கீறி பிளந்தவனும்; மழை மா முது மழை காக்க பெரிய பழைய; குன்று கோவர்த்தன மலையை; எடுத்து குடையாக எடுத்து; ஆயர் தங்கள் இடையர்கட்குத்; கோ ஆய் தலைவனாய்; நிரை மேய்த்து பசுக்களை மேய்த்தவனும்; உலகு உண்ட பிரளய காலத்தில் உலகம் உண்ட; மாயன் மாயவனும்; குரை மா ஆபரண ஒலியோடு கூடின; கழல் கூடும் எம்பெருமானின் திருவடிகளை; குறிப்பு உடையீர்! அடைய விரும்பும் அன்பர்களே!; மூவாயிரம் மூவாயிரம்; நான்மறையாளர் வேதம் ஓதுபவர்கள்; நாளும் முறையால் நாள்தோறும் முறைபடி; வணங்க வணங்கும்; அணங்கு ஆய சோதி அப்ராக்ருத தேஜஸ்ஸையுடைய; தேவாதிதேவன் திகழ்கின்ற தேவாதிதேவனாகத் திகழும்; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
mAvin kESi, the horse, its; vAy mouth; angam body; madhiyAdhu not considering to be worthy; kIRi tore and threw down (rain poured by indhra); mazhai for the hail storm; mA huge; mudhu ancient; kunRu the mountain named gOvardhanam; eduththu lifted up as umbrella; Ayar thangaL kOvAy as the king of cowherds; nirai herd of cows; mEyththu tended (during praLayam); ulagu the world; uNda one who placed in his divine stomach; mAyan amazing person-s; kurai resounding due to the ornaments; mA great; kazhal divine feet; kUdum to reach; kuRippudaiyIr oh you who are having the thoughts!; mUvAyiram three thousand; nAnmaRaiyALar brAhmaNas; nALum daily; muRaiyAl matching their true nature; vaNanga as they worship; aNangAya divine; sOdhi radiant; dhEvAdhi dhEvan sarvESvaran; thigazhginRa shining; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.9

1166 செருநீலவேற்கண்மடவார்திறத்துச்
சினத்தோடுநின்றுமனத்தால்வளர்க்கும் *
அருநீலபாவம்அகலப் புகழ்சேர்
அமரர்க்கும்எய்தாத அண்டத்துஇருப்பீர்! *
பெருநீர்நிவாவுந்திமுத்தங்கொணர்ந்து
எங்கும்வித்தும்வயலுள்கயல்பாய்ந்துஉகள *
திருநீலம்நின்றுதிகழ்கின்ற தில்லைத்
திருச்சித்ரகூடம்சென்றுசேர்மின்களே.
1166 செரு நீல வேல் கண் மடவார்திறத்துச் *
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் *
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் *
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் **
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து * எங்கும்
வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள *
திரு நீலம் நின்று திகழ்கின்ற * தில்லைத்
திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே-9 **
1166
serunNIlavEl kaNmadavār thiRatthuch * chinatthOdunNinRu manatthāl vaLarkkum *
arunNeelapāvam agalap pugazhsEr * amararkkum eydhādha aNdatthu iruppeer *
perunNeernNivāvunNdhi mutthumkoNarnNdhu * engkum vitthum vayaluL kayalpāynNdhu_ugaLa *
thirunNeelamnNinRu thigazhginRa * thillaiththirucchithrakoodam senRusErmiNngaLE. 3.2.9

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1166. O devotees, if you want to remove the karmā that you have collected because of your passion for women with dark eyes that are like spears for fighting, and want to reach the famous world that is above even the world of the gods, just go to shining Thillai Chitrakudam where kayal fish frolic in the seeded fields, beautiful neelam flowers bloom everywhere and the Vellāru river flows with abundant water and brings pearls.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செரு நீல நீல நிறமுள்ள; வேல் கண் வேல் போன்ற கண்களையுடைய; மடவார் திறத்து பெண்களை அடைய முடியாமல் தடுக்கும்; சினத்தோடு நின்று எதிரியை மிகுந்த கோபத்தொடு; மனத்தால் மனதில்; வளர்க்கும் வளரும்; அரு நீல இடையூராயிருக்கும்; பாவம் அகல பாபங்கள் போகும்படி; புகழ் புகழை அடைய; சேர் விரும்பும் அன்பர்களே!; அமரர்க்கும் தேவர்களுக்கும்; எய்தாத துர்லபமான பரமபதத்தை; அண்டத்து அடைய விரும்பும்; இருப்பீர்! அன்பர்களே!; பெரு நீர் மிக்க நீரையுடைய; நிவா உந்தி ‘நிவா’ என்னும் வெள்ளாறு; முத்தம் முத்துக்களைக்; கொண்ர்ந்து எங்கும் கொண்டுவந்து தள்ளி; வித்தும் வயலுள் விதைக்கும் வயல்களிலெல்லாம்; கயல் பாய்ந்து உகள கயல் மீன்கள் குதித்து துள்ளவும்; திரு நீலம் அழகிய நெய்தல்மலர்கள் எங்கும்; நின்று திகழ்கின்ற நிறைந்து திகழும்; தில்லைத் திருச்சித்ரகூடம் தில்லைத் திருச்சித்ரகூடம்; சென்று சேர்மின்களே சென்று சேருங்கள்
seru tool for war; vEl sharp like spear; neelam cool like neydhal flower; kaN having beautiful eyes; madavAr thiRaththu towards women who have humility (towards those who stop the enjoyment of such women); sinaththOdu with anger; ninRu remained; manaththAl desire in heart; vaLarkkum increasing; aru unable to eliminate; neelam lowly; pAvam sin; agala to go; pugazh sEr having fame; amararkkum for brahmA et al; eydhAdha difficult to reach; aNdaththu in paramapadham; iruppIr oh you who desire to remain!; peru nIr Having abundant water; nivA river named veLLARu; muththam koNarndhu bringing pearls; undhi pushed; viththum planting; vayal uL engum in every fertile field; kayal kayal fish; pAyndhu ugaLa as they jump; thiruneelam beautiful neydhal flower; ninRu spreading everywhere; thigazhginRa shining; thillaith thiruchchiththirakUdam thillaith thiruchchiththirakUdam; senRu sErmingaL go and reach.

PT 3.2.10

1167 சீரார்பொழில்சூழ்ந்துஅழகாய தில்லைத்
திருசித்ரகூடத்துறைசெங்கண்மாலுக்கு *
ஆராதஉள்ளத்தவர்கேட்டுஉவப்ப
அலைநீருலகுக்கு அருளேபுரியும் *
காரார்புயற்கைக்கலிகன்றி குன்றாவொலிமாலை
ஒரொன்பதோடுஒன்றும்வல்லார் *
பாராருலகம்அளந்தானடிக்கீழ்ப்
பலகாலம்நிற்கும்படிவாழ்வர்தாமே. (2)
1167 ## சீர் ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய * தில்லைத்
திருச்சித்ரகூடத்து உறை செங் கண் மாலுக்கு *
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப *
அலை நீர் உலகுக்கு அருளே புரியும் **
கார் ஆர் புயல் கைக் கலிகன்றி * குன்றா ஒலி மாலை
ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் *
பார் ஆர் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப் *
பல காலம் நிற்கும்படி வாழ்வர்-தாமே-10 **
1167. ##
seerār pozhilsoozhnNddhu azhagāya * thillaiththiruchithrakoodaththu uRaisengkaNmālukku *
ārādha uLLaththavarkEttu uvappa * alainNeerulagukku aruLE puriyum *
kārārpuyaRkaik kaliganRi * kunRāolimālai OronbadhOdu_onRum vallār *
pārār_ulagam aLanNdhāNn_adikkeezhp * palagālam nNiRkumbadi vāzhvardhāmE. (2) 3.2.10

Ragam

சங்கராபரண

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

1167. Kaliyan, the generous poet who gives like rain composed a garland of ten Tamil pāsurams on Thirumāl so the people of the world may hear them and be happy. If devotees learn and recite these ten musical pāsurams on the lord of beautiful Thillai Thiruchitrakudam surrounded with lovely groves and the sea rolling with waves, they will go to the spiritual world and stay under the feet of him who measured the world and the sky in two steps, and they will live for many ages.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் ஆர் பொழில் சூழ்ந்து சிறந்த சோலைகளால் சூழ்ந்த; அழகாய தில்லை அழகிய தில்லை; திருச்சித்ரகூடத்து உறை திருச்சித்திர கூடத்திலிருக்கும்; செங் கண் மாலுக்கு பெருமானைக் குறித்து; ஆராத பகவதநுபவத்தில்; உள்ளத்தவர் திருப்தி பெறாத அன்பர்கள்; கேட்டு உவப்ப கேட்டு ஆனந்திக்க; அலை நீர் அலைகளுள்ள கடலால் சூழ்ந்த; உலகுக்கு இவ்வுலகத்திலுள்ளார்க்கு; அருளே புரியும் அருளே புரியும்; கார் ஆர் புயல் கை காளமேகம்போல் உதாரரான; கலிகன்றி திருமங்கையாழ்வார் அருளிச்செய்த; குன்றா ஒலி மாலை குறையாத ஓசையையுடைய; ஓர் ஒன்பதோடு ஒன்றும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் பார் ஓதவல்லவர்கள் பூமியையும்; ஆர் உலகம் அனைத்துலகங்களையும்; அளந்தான் அளந்தவன்; அடிக்கீழ் பல காலம் திருவடிகளில் பல காலம்; நிற்கும்படி வாழ்வர் தாமே பணி புரியும் பாக்யம் பெறுவர்
sIr Ar having abundant beauty; pozhil sUzhndhu surrounded by garden; azhagAya having beauty; thillaith thiruchchiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uRai eternally residing; sengaN mAlukku on sarvESvaran who has beautiful reddish eyes; ArAdha not being satisfied with enjoying bhagavAn; uLLaththavar SrIvaishNavas who have love; kEttu to hear; uvappa and become happy; alai nIr being surrounded by ocean which throws up the waves; ulagukku for the residents of earth; aruLE mercy only; puriyum having the nature of granting; kAr Ar very huge; puyal like cloud; kai generous; kali kanRi thirumangai AzhwAr; kunRA not having any shortcoming; oli mercifully recited to have [pleasing] sound; mAlai having garland of words; Or onbadhOdu onRum the ten pAsurams; vallAr those who can learn with the meanings; pAr Ar ulagam earth, heaven etc; aLandhAn one who measured, his; adik kIzh at his divine feet; pala kAlam forever; niRkumbadi vAzhvar will attain a rich life where one can serve

PT 3.3.1

1168 வாடமருதிடை போகிமல்லரைக்கொன்று ஒக்கலித்திட்டு *
ஆடல்நன்மாவுடைத்து ஆயராநிரைக்குஅன்றுஇடர்தீர்ப்பான் *
கூடியமாமழைகாத்த கூத்தனெனவருகின்றான் *
சேடுயர்பூம்பொழில்தில்லைச் சித்திரகூடத்துள்ளானே. (2)
1168 ## வாட மருது இடை போகி * மல்லரைக் கொன்று ஒக்கலித்திட்டு *
ஆடல் நல் மா உடைத்து * ஆயர் ஆ-நிரைக்கு அன்று இடர் தீர்ப்பான் **
கூடிய மா மழை காத்த * கூத்தன் என வருகின்றான்- *
சேடு உயர் பூம் பொழில் தில்லைச் * சித்திரகூடத்து உள்ளானே-1 **
1168. ##
vāda marudhidaipOgi * mallaraikkonRu okkaliththittu *
ādalnNanmāvudaiththu * āyar ānNiraikku anRidar theerppān *
koodiya māmazhai kāttha * kootthaNn_ena varuginRān *
sEduyar poombozhil thillaich * chitthirakoodatthuLLānE. (2) 3.3.1

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1168. The lord danced on a pot, went between two marudam trees and killed the Asurans, wrestled with the Mallars sent by Kamsan and killed them, killed Kesi when he came in the form of a horse, and grazed the cows and protected them and the cowherds from a terrible storm using Govardhanā mountain as an umbrella. The god of Thillai Chitrakudam surrounded with high blooming groves comes on the street with victory.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாட மருது வாடிய இரட்டை மருதமரங்களின்; இடை போகி நடுவே போனவனும்; மல்லரைக் கொன்று மல்லர்களைக் கொன்றவனும்; ஒக்கலித்திட்டு ஆடிக்கொண்டு வந்த; ஆடல் நல் மா கேசி என்ற குதிரையை; உடைத்து கொன்றவனும்; ஆயர் இடையர்கட்கும்; ஆ நிரைக்கு பசுக்கூட்டங்களுக்கும்; அன்று இடர் நேர்ந்த துன்பத்தை; தீர்ப்பான் தீர்ப்பதற்காக; கூடிய மா மழை வந்த பெருமழையைத் தடுத்து; காத்த காத்தவனுமான; கூத்தன் என கூத்தாடும் மாயவனாய்; வருகின்றான் வருகின்ற அவன்; சேடு உயர் அழகிய; பூம் பொழில் பூஞ்சோலைகளையுடைய; தில்லைச் சித்திரகூடத்து தில்லைச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
marudhidai in between two marudha trees; vAda as they were in a withered state; pOgi crawled and went; mallarai the group of wrestlers such as chANUra, mushtika et al; konRu killed; okkaliththittu practising the art of walking; Adal coming with a dance; nal beautiful; mA kESi who assumed the form of a horse; udaiththu killed; anRu when indhra caused rainfall; Ayar cowherds-; Aniraikku occurred for the cattle; idar sorrow; thIrppAn to eliminate; kUdiya gathered; mA mazhai great hailstorm (by lifting the mountain); kAththa protected; kUththan ena to have everyone say -he has actions which steal the heart-; varuginRAn one who is coming; sEdu tender; uyar tall; pUm pozhil having beautiful gardens; thillaich chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.2

1169 பேய்மகள்கொங்கைநஞ்சுண்ட பிள்ளைபரிசுஇது வென்றால் *
மாநிலமாமகள்மாதர்கேள்வன்இவனென்றும் * வண்டுண்
பூமகள்நாயகன்என்றும் புலங்கெழுகோவியர்பாடி *
தேமலர்தூவவருவான் சித்திரகூடத்துள்ளானே.
1169 பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட * பிள்ளை பரிசு இது என்றால் *
மா நில மா மகள் * மாதர் கேள்வன் இவன் என்றும் ** வண்டு உண்
பூ-மகள் நாயகன் என்றும் * புலன் கெழு கோவியர் பாடி *
தே மலர் தூவ வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-2 **
1169
pEymagaL kongkainNaNYchuNda * piLLaiparisu idhuvenRāl *
mānNilamāmagaL * mādharkELvaNn ivanenRum *
vaNduNboomagaL nāyagaNnenRum * pulangkezhu kOviyar pādi *
thEmalar thoova varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.2

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1169. Kannan, the lord of Thillai Chitrakudam who drank the poisonous milk of the devil Putanā and killed her, comes on the street with victory as the cowherd women sprinkle flowers that drip honey on him and say, “He is the husband of the lovely earth goddess and of Lakshmi seated on a lotus swarming with honey-drinking bees. ” He stays in Thillai Chitrakudam.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேய் மகள் பேய்ச்சியான பூதனையின்; கொங்கை நஞ்சு விஷப்பாலை உண்ட; உண்ட ஆச்சர்யம் தான் என்ன; என்றால் என்று கேட்டால்; இது பிள்ளை இது இச் சிறுபிள்ளையின்; பரிசு செயல் என்று சொல்லி; இவன் இக் கண்ணபிரான்; மா நில மாமகள் பூமாதேவியின்; மாதர் கேள்வன் என்றும் நாதன் என்றும்; வண்டு உண் வண்டுகள் மதுவுண்கிற தாமரையில் பிறந்த; பூ மகள் நாயகன் என்றும் திருமகளின் பதி என்றும்; புலன் கெழு கண்டார் நெஞ்சை கவரும் அழகிய; கோவியர் இடைப் பெண்கள்; பாடி தே துதித்தும் வணங்கியும்; மலர் தூவ அன்றலர்ந்த மலர் தூவ; வருவான் அதைப் பெற்றுகொள்ள வரும் கண்ணன்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
pEy magaL pUthanA, who is a demon; kongai on bosom; nanju poison; uNda mercifully consumed; idhu this amazing act; piLLai parisu enRAl hearing that it is the nature of this child; ivan this krishNa (is not a young child); mA 50 crore yOjanA vast; nila mA magaL mAdhar for SrI bhUmip pirAtti who has earth as her body; kELvan enRu as dear husband; vaNdu beetles; uN entering to drink the honey; pU magaL periya pirAttiyAr who is having lotus flower as birth place; nAyagan enRum as the lord; pulan kezhu having form which attracts the heart of those who saw; kOviyar cowherd girls; pAdi praising and singing; thEn malar fresh flower; thUva as they serve; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.3

1170 பண்டுஇவன்வெண்ணெயுண்டானென்று ஆய்ச்சியர்கூடி இழிப்ப *
எண்திசையோரும்வணங்க இணைமருதூடுநடந்திட்டு *
அண்டரும்வானத்தவரும் ஆயிரநாமங்களோடு *
திண்திறல்பாடவருவான் சித்திரகூடத்துள்ளானே.
1170 பண்டு இவன் வெண்ணெய் உண்டான் என்று * ஆய்ச்சியர் கூடி இழிப்ப *
எண் திசையோரும் வணங்க * இணை மருது ஊடு நடந்திட்டு **
அண்டரும் வானத்தவரும் * ஆயிரம் நாமங்களோடு *
திண் திறல் பாட வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-3 **
1170
paNdu_ivan veNNeyuNdānenRu * āycchiyar koodi_izhippa *
eNdisaiyOrumvaNangka * iNaimarudhoodu nNadanNdhittu *
aNdarum vānaththavarum * āyira nNāmangkaLOdu *
thiNdhiRal pāda varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.3

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1170. The lord walked between two Marudam trees and killed the wrestlers as all the people in the eight directions bowed to him while the gods in the sky and people praised his heroism and strength reciting his thousand names. The god of Thillai Chitrakudam comes on the street with victory as the cowherd women scold him saying, “He stole and ate our butter. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண்டு இவன் முன்பொருகாலத்தில் இவன்; வெண்ணெய் வெண்ணெயை; உண்டான் திருடித் தின்றான்; என்று ஆய்ச்சியர் என்று ஆய்ச்சியர்; கூடி இழிப்ப திரண்டு பழிக்க; எண் திசையோரும் எட்டு திசையோரும்; வணங்க வணங்கும்படியாக; இணை மருது இரட்டை மருதமரத்தினிடையே; ஊடு நடந்திட்டு நடை பயின்றவனாயும்; அண்டரும் நித்யசூரிகளும்; வானத்தவரும் தேவர்களும்; ஆயிரம் நாமங்களோடு ஆயிரம் நாமங்களோடு; திண் திறல் திடமான ஆண் பிள்ளைத் தனத்தை; பாட பாடும்படி; வருவான் வரும் அவன்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
ivan This young child; veNNey uNdAn enRu that he stole the butter and mercifully ate it; Aychchiyar cowherd girls; kUdi gathered; izhippa blamed; eN thisaiyORum those who are in eight directions; vaNanga to worship; iNai marudhUdu in between two marudha trees which stood together; nadandhittu crawled; aNdarum nithyasUris; vAnaththavarum brahmA et al; Ayira nAmangaLOdu reciting the thousand names (his); thiN strong; thiRal masculinity; paNdu long ago; pAda to sing; varuvAn one who came; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.4

1171 வளைக்கைநெடுங்கண்மடவார் ஆய்ச்சியர்அஞ்சிஅழைப்ப *
தளைத்தவிழ்தாமரைப்பொய்கைத் தண்தடம்புக்கு அண்டர்காண *
முளைத்தஎயிற்றழல்நாகத்து உச்சியில்நின்றுஅதுவாட *
திலைத்தமர்செய்துவருவான் சித்திரகூடத்துள்ளானே.
1171 வளைக் கை நெடுங்கண் மடவார் * ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப *
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் * தண் தடம் புக்கு அண்டர் காண **
முளைத்த எயிற்று அழல் நாகத்து * உச்சியில் நின்று அது வாட *
திளைத்து அமர் செய்து வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-4 **
1171
vaLaikkai nNedungkaN madavār * āycchiyar aNYchi_azhaippa *
thaLaitthavizh thāmaraip poygaith * thaNthadambukku aNdar kāNa *
muLaittha eyiRRazhal nNāgaththu * ucchiyil nNinRu adhu vāda *
thilaitthamar seydhu varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.4

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1171. When Kannan plunged into a cool pond blooming with lotuses fought and danced on the head of the sharp-toothed snake Kālingan, the gods in the sky, astonished, looked on and the long-eyed cowherd women ornamented with bangles were frightened to see him and called the other cowherd women to come. He, the god of Thillai Chitrakudam, comes on the street with victory.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வளைக் கை வளையல்களணிந்த கைகளையும்; நெடுங் கண் நீண்ட கண்களையுமுடைய; மடவார் ஆய்ச்சியர் மடப்பத்தையுடைய இடைப்பெண்கள்; அஞ்சி அழைப்ப பயந்து அழைக்க; அண்டர் இடையர்கள்; தளைத்து அவிழ் மலர்ந்த; தாமரை தாமரைப் பூக்களையுடைய; பொய்கை பொய்கையின்; தண் தடம் குளிர்ந்த கரையிலே; புக்கு காண சென்று பார்க்க; முளைத்த முளைத்த; எயிற்று பற்களையுடையதும்; அழல் விஷாக்நியை உமிழ்வதுமான; நாகத்து காளியநாகத்தின்; உச்சியில் தலையின் உச்சியில்; நின்று நின்று கொண்டு; அது வாட அந்த நாகம் இளைக்கும்படி; திளைத்து நர்த்தனஞ் செய்து; அமர் செய்து இப்படி அட்டகாசமாக; வருவான் வரும் பெருமான்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
vaLai decorated with bangles; kai hands; nedu wide; kaN eyes; madavAr having humility; Aychchiyar cowherd girls; anji feared; azhaippa called; thaLai avizh blossoming; thAmaraip poygai lotus pond-s; thaN cool; thadam on the shore; pukku went; aNdar cowherds; kANa to be seen; muLaiththa eyiRu grown fangs; azhal having poisonous fire; nAgaththu uchchiyil on top of the snake, kALiya-s hood; ninRu stood firmly; adhu vAda to torment it; thiLaiththu joyfully danced; amar seydhu engaged in battle; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.5

1172 பருவக்கருமுகிலொத்து முத்துடைமாகடலொத்து *
அருவித்திரள்திகழ்கின்ற ஆயிரம்பொன்மலையொத்து *
உருவக்கருங்குழலாய்ச்சிதிறத்து இனமால்விடைசெற்று *
தெருவில்திளைத்துவருவான் சித்திரகூடத்துள்ளானே.
1172 பருவக் கரு முகில் ஒத்து * முத்து உடை மா கடல் ஒத்து *
அருவித் திரள் திகழ்கின்ற * ஆயிரம் பொன்மலை ஒத்து **
உருவக் கருங் குழல் ஆய்ச்சிதிறத்து * இன மால் விடை செற்று *
தெருவில் திளைத்து வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-5 **
1172
paruvak karumugilotthu * muththudaimā kadalotthu *
aruvith thiraL thigazhginRa * āyiram ponmalaiyotthu *
uruvakkarungkuzal āycchi thiRatthu * inamāl vidaiseRRu *
theruvil thiLaitthu varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.5

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1172. Kannan, dark as a rain-giving cloud, wears on his chest a thousand garlands, gold ornaments and pearls that shine like a waterfall. The lord who conquered seven bulls to marry dark-haired Nappinnai, the daughter of a cowherd, comes with victory on the street of Thillai Chitrakudam.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பருவக் கரு கார்காலத்து; முகில் ஒத்து மேகம் போன்றவளும் (நிறம்); முத்து உடை முத்துக்களையுடைய; மா கடல் ஒத்து பெருங்கடல் போன்றவளும் குணம்; அருவித் திரள் அருவிகளின் கூட்டங்களால்; திகழ்கின்ற விளங்கும்; ஆயிரம் பொன் மலை ஆயிரம் பொன் மலை; ஒத்து போன்றவளும் (வடிவம்); உருவக் கருங் அழகிய கருத்த; குழல் கூந்தலையுடைய; ஆய்ச்சி திறத்து நப்பின்னைப் பிராட்டிக்காக; இன மால் ஒன்றாகத் திரண்ட; விடை பெரிய ரிஷபங்களை; செற்று தெருவில் அழித்து வீதியிலே; திளைத்து விளையாடிக் கொண்டு; வருவான் வரும் கண்ணன்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
paruvam present in the rainy season; karu mugil oththu like a dark cloud; muththu udai having pearls; mA vast; kadal oththu like an ocean; aruvith thiraL by the group of waterfalls; thigazhginRa shining; Ayiram pon malai oththu like countless gem-like mountains; uruvam having beautiful form; karu black; kuzhal having divine hair; Aychchi thiRaththu for nappinnaip pirAtti; inam gathered together; mAl vidai huge bulls; seRRu killed; theruvil on the street; thiLaiththu (joyfully) played; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.6

1173 எய்யச்சிதைந்துஇலங்கைமலங்க வருமழை காப்பான் *
உய்யப்பருவரைதாங்கி ஆநிரைகாத்தானென்றுஏத்தி *
வையத்தெவரும்வணங்க அணங்கெழுமாமலைபோலே *
தெய்வப்புள்ஏறிவருவான் சித்திரகூடத்துள்ளானே. (2)
1173 ## எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க * வரு மழை காப்பான் *
உய்யப் பரு வரை தாங்கி * ஆநிரை காத்தான் என்று ஏத்தி **
வையத்து எவரும் வணங்க * அணங்கு எழு மா மலை போல *
தெய்வப் புள் ஏறி வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-6 **
1173. ##
eyyach chidhainNdhadhu ilangkai malangka * varumazhai kāppān *
uyyap paruvarai thāngki * ānNirai kātthān enRu_Etthi *
vaiyaththevarum vaNangka * aNangkezhumā malaipOlE *
dheyvappuL ERi varuvān * chitthirakoodatthuLLānE. (2) 3.3.6

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1173. Victorious Kannan, the god of Thillai Chitrakudam, comes on the street riding the divine Garudā that looks like a beautiful mountain as all the people of the world bow to him, praise him and say, “He destroyed Lankā shooting arrows at the Rākshasas. He saved the cows and the cowherds carrying Govardhanā mountain as an umbrella. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எய்யச் அம்பினால் அடித்தபோது; இலங்கை சிதைந்தது இலங்கை அழிந்தது; மலங்க பசுக்களின் கூட்டம் கலங்கும்படி; வரு மழை வந்த மழையை; காப்பான் தடுத்து அவைகள்; உய்யப் பரு உய்ய பெரிய கோவர்த்தன; வரை தாங்கி மலையை தூக்கி; ஆ நிரை காத்தான் பசுக்களைக் காத்தான்; என்று ஏத்தி என்று சொல்லி; வையத்து எவரும் பூமியிலுள்ளாரெல்லாரும்; வணங்க தொழும் படியாக; அணங்கு எழு மா அழகிய பெரிய தெய்வீக; மலை போல மலையே வருவது போல; தெய்வப் புள் ஏறி கருடன் மீது ஏறி; வருவான் வரும் பெருமான்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
eyya when shot by arrow; ilangai lankA; sidhaindhadhu was destroyed;; Anirai herd of cows; malanga to torment; varum mazhai the rain which came; kAppAn to eliminate; uyya to liberate (them); paru varai huge mountain; thAngi lifted; kAththAn enRu that he protected (them); vaiyaththu on earth; evarum all noble people; Eththi praised; vaNanga to worship; aNangu ezhu possessed by god; mA huge; malaipOlE like a mountain; dheyvam beautiful; puL on periya thiruvadi (garudAzhwAr); ERi riding; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.7

1174 ஆவர்இவைசெய்தறிவார்? அஞ்சனமாமலைபோலே *
மேவுசினத்துஅடல்வேழம் வீழமுனிந்து * அழகாய
காவிமலர்நெடுங்கண்ணார் கைதொழவீதிவருவான் *
தேவர்வணங்குதண்தில்லைச் சித்திரகூடத்துள்ளானே.
1174 ஆவர் இவை செய்து அறிவார்? * அஞ்சன மா மலை போல *
மேவு சினத்து அடல் வேழம் * வீழ முனிந்து * அழகு ஆய
காவி மலர் நெடுங் கண்ணார் * கை தொழ வீதி வருவான்-
தேவர் வணங்கு தண் தில்லைச் * சித்திரகூடத்து உள்ளானே-7 **
1174
āvar ivai seydhaRivār? * aNYchanamā malai pOlE *
mEvusinatthu adal vEzham * veezha muninNdhu *
azhagāya kāvimalar nNeduNGkaNNār * kaithozha veedhi varuvān *
dhEvar vaNangku thaN thillaich * chitthirakoodatthuLLānE. 3.3.7

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1174. Kannan, the heroic god of rich Thillai Chitrakudam where gods come and bow to him comes on the street looking like a mountain of kohl as the cowherd women with beautiful long eyes like kāvi flowers fold their hands in worship, praise him and say, “Who could do this heroic deed except him? Angry at the strong elephant Kuvalayābeedam, he killed it. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா அஞ்சன பெரிய கரிய; மலை போல மலை போன்றதும்; மேவு சினத்து மிகுந்த கோபமும்; அடல் வேழம் மிடுக்குமுடைய யானையை; வீழ விழும் படி; முனிந்து சீறியருளி மாய்த்தது; ஆவர் இவை இந்த அருந்தொழிலை; செய்து செய்தது; அறிவார்? யார் எனில் வேறு யாருமில்லை அந்த பெருமான்; அழகு ஆய காவி மலர் அழகிய நீலோத்பல மலர் போன்ற; நெடுங் கண்ணார் நீண்ட கண்களையுடைய பெண்கள்; கை தொழ கைகூப்பித் தொழும்படி; வீதி வருவான் வீதியில் வரும் அவன்; தேவர் வணங்கு நித்யஸூரிகளும் வந்து; தண் தில்லை வணங்கும் அவன் தில்லை; சித்திரகூடத்து உள்ளானே திருச்சித்திரகூடத்தில் உள்ளான்
ivai these huge tasks; seydhaRivAr Ar Who did? None. (When asked -What are those?-); mA huge; anjana malai pOlE like a dark mountain; mEvu well placed; sinam having anger; adal having strength; vEzham to knock down elephant named kuvalayApIdam; munindhu mercifully showed anger; azhagAya having beauty; kAvi malar dark like neelOthpalam [blue lily] flower; nedu wide; kaNNAr ladies who have eyes; kai thozha to worship; vIdhi on the divine street; varuvAn one who mercifully walks; dhEvar vaNangu where the dhEvathAs come and worship; thaN invigorating; thillaich chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.8

1175 பொங்கி அமரிலொருகால் பொன்பெயரோனைவெருவ *
அங்கவனாகம்அளைந்திட்டு ஆயிரந்தோள்எழுந்தாட *
பைங்கணிரண்டுஎரிகான்ற நீண்டஎயிற்றொடுபேழ்வாய் *
சிங்கவுருவில்வருவான் சித்திரகூடத்துள்ளானே.
1175 பொங்கி அமரில் ஒருகால் * பொன்பெயரோனை வெருவ *
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு * ஆயிரம் தோள் எழுந்து ஆட **
பைங் கண் இரண்டு எரி கான்ற * நீண்ட எயிற்றொடு பேழ் வாய் *
சிங்க உருவின் வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-8
1175
pongki amaril orukāl * ponpeyarOnai veruva *
angku avanāgam aLainNdhittu * āyiranNdhOL ezhunNdhāda *
paingkaN iraNdu erikānRa * nNeeNda eyiRRodu pEzhvāy *
singkavuruvin varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.8

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1175. The god of Thillai Chitrakudam who took the form of a man-lion dancing with a thousand arms, two fire-like eyes long sharp teeth and a gaping mouth, and went, fought with Hiranyan, terrifying him, and splitting open his chest comes victoriously on the street.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒருகால் முன்பொரு காலத்தில்; பொங்கி அமரில் போர்க்களத்தில் சீறி எழுந்து; பொன்பெயரோனை இரணியன்; வெருவ பயப்படும்படியாக; அங்கு அவன் அங்கேயே அவன்; ஆகம் அளைந்திட்டு உடம்பை பிளந்து; ஆயிரம் தோள் தன் ஆயிரம்; எழுந்து ஆட தோள்களும் எழுந்து ஆட; எரி கான்ற நெருப்பை உமிழ்கின்ற; பைங்கண் இரண்டு இரண்டு கண்களையும்; நீண்ட எயிற்றொடு நீண்ட கோரப் பற்களையும்; பேழ்வாய் சிங்க உருவின் வாயையுமுடைய நரஸிம்மமாய்; வருவான் வரும் அவன்; சித்திரகூடத்து உள்ளானே திருச்சித்திரகூடத்தில் உள்ளான்
oru kAl when hiraNya showed his anger on prahlAdhan; amaril in battle; pon peyarOnai hiraNya; veruva to frighten him; pongi rose (showed his anger); angu there; avan Agam his body; aLaindhittu tore; Ayiram thOL ezhundhu Ada danced, revealing his thousand divine shoulders; eri kAnRa spitting fire; pai greenish; iraNdu kaN two eyes; nINda sharp; eyiRu teeth; pEzh huge; vAy having mouth; singa uruvil being in the form of narasimha; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.9

1176 கருமுகில்போல்வதுஒர்மேனி கையனஆழியும்சங்கும் *
பெருவிறல்வானவர்சூழ ஏழுலகும்தொழுதேத்த *
ஒருமகள்ஆயர்மடந்தை ஒருத்திநிலமகள் * மற்றைத்
திருமகளோடும்வருவான் சித்திரகூடத்துள்ளானே.
1176 கரு முகில் போல்வது ஓர் மேனி * கையன ஆழியும் சங்கும் *
பெரு விறல் வானவர் சூழ * ஏழ் உலகும் தொழுது ஏத்த **
ஒரு மகள் ஆயர் மடந்தை * ஒருத்தி நிலமகள் * மற்றைத்
திருமகளோடும் வருவான் * சித்திரகூடத்து உள்ளானே-9 **
1176
karumugil pOlvadhu OrmEni * kaiyana āzhiyum sangkum *
peruviRal vānavar soozha * Ezhulagum thozhudhEttha *
orumagaL āyarmadanNdhai * orutthi nNilamagaL *
maRRaith thirumagaLOdum varuvān * chitthirakoodatthuLLānE. 3.3.9

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1176. The god of Thillai Chitrakudam colored like a dark cloud comes on the street victorious, holding a discus and a conch in his hands as the heroic gods of the sky surround him and all the seven worlds worship and praise him while Nappinnai, the daughter of cowherds, the earth goddess and beautiful Lakshmi accompany him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு முகில் போல்வது காளமேகம் போன்ற; ஓர் மேனி சரீரமும்; கையன ஆழியும் சங்கும் கைகளில் சங்கு- சக்கரமும்; பெரு விறல் மிக்க சக்தியையுடையவனை; வானவர் சூழ தேவர்கள் சூழ்ந்து வணங்கி நிற்கவும்; ஏழ் உலகும் ஏழ் உலகத்தவர்களும்; தொழுது ஏத்த வணங்கித் துதிக்கவும்; ஒரு மகள் ஒரு மகள்; ஆயர் மடந்தை நப்பின்னையோடும்; ஒருத்தி நிலமகள் ஒருத்தி பூமாதேவியோடும்; மற்றை திருமகளோடும் மேலும் திருமகளோடும்; வருவான் வரும் அவன்; சித்திரகூடத்து திருச்சித்திரகூடத்தில்; உள்ளானே உள்ளான்
karu mugilpOlvadhu being dark like a dark cloud; Or unique; mEni having beautiful form; Azhiyum thiruvAzhiyAzhwAn (divine sudharSana chakra); sangum SrI pAnchajanyAzhwAn (divine Sanka); kaiyana having divine hands; peru viRal very strong; vAnavar dhEvathAs; sUzha to surround and worship; Ezh ulagum residents of seven worlds; thozhudhu worship; Eththa to praise; oru magaL Ayar madandhai with the unique nappinnaip pirAtti; oruththi nila magaL with the other unique SrI bhUmip pirAtti; maRRai thirumagaLOdum with SrI periya pirAttiyAr too; varuvAn one who comes; chiththirakUdaththu in thillaith thiruchchiththirakUdam; uLLAn is eternally residing.

PT 3.3.10

1177 தேனமர்பூம்பொழில் தில்லைச்சித்திரகூடம்அமர்ந்த *
வானவர்தங்கள்பிரானை மங்கையர்கோன் * மருவார்
ஊனமர்வேல்கலிகன்றி ஒண்தமிழ்ஒன்பதோடொன்றும் *
தானிவைகற்றுவல்லார்மேல் சாராதீவினைதானே. (2)
1177 ## தேன் அமர் பூம் பொழில் தில்லைச் * சித்திரகூடம் அமர்ந்த *
வானவர்-தங்கள் பிரானை * மங்கையர்-கோன்மருவார் **
ஊன் அமர் வேல் கலிகன்றி * ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்றும் *
தான் இவை கற்று வல்லார்மேல் * சாரா தீவினை-தானே-10 **
1177. ##
thEnamar poombozhil thillaich * chitthirakoodam amarnNdha *
vānavar thangkaL pirānai * mangkaiyarkOn maruvārdham *
oonamarvEl kaliganRi * oN_thamizh onbadhOdu onRum *
thānivai kaRRuvallārmEl * sārā theevinai thānE. (2) 3.3.10

Ragam

மோஹன

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

1177. Kaliyan, the chief of Thirumangai who carries a spear and fought with his enemies composed ten beautiful Tamil pāsurams on the god of Thillai Chitrakudam filled with blooming groves dripping with honey. If devotees recite these ten Tamil poems they will not experience the results of their bad karmā.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் அமர் வண்டுகள் அமரும்; பூம் பொழில் அழகிய சோலைகளையுடைய; தில்லைச் சித்திரகூடம் தில்லைச் சித்திரகூடத்தில்; அமர்ந்த இருக்கும்; வானவர் தங்கள் பிரானை தேவாதிதேவனைக் குறித்து; மங்கையர் கோன் திருமங்கை அரசனும்; மருவார் தம் ஊன் எதிரிகளை மாய்க்கும்; அமர் வேல் வேற்படையையுடையவனுமான; கலிகன்றி திருமங்கையாழ்வார் அருளிச் செய்த; ஒண்தமிழ் அழகிய தமிழாலான; ஒன்பதோடு ஒன்றும் இப்பத்துப் பாசுரங்களையும்; தான் இவை கற்று கற்று அனுஸந்திக்கும்; வல்லார்மேல் வல்லார்மேல்; சாரா தீவினை தானே பாவங்கள் சாராதே
thEn beetles; amar swarmed; pU beautiful; pozhil having garden; thillaich chithirakUdam in thillaith thiruchchiththirakUdam; amarndha eternally residing; vAnavar thangaL pirAnai on the lord of indefatigable nithyasUris; mangaiyar kOn being the king of the residents of thirumangai region; maruvAr enemies-; Un on bodies; amar to pierce firmly; vEl being an expert in using spear; kali kanRi mercifully spoken by AzhwAr; oN thamizh composed in beautiful thamizh language; ivai onbadhonRu these ten pAsurams; kaRRu learn with meanings; vallAr mEl those who can recite; thI vinai [results of the] sins; sArA will not come close.

PTM 17.65

2777 அள்ளல்வாய் அன்னமிரைதேர் அழுந்தூரெழுஞ்சுடரை *
தெந்தில்லைச் சித்திரகூடத்துஎன் செல்வனை * -
2777 அள்ளல்வாய் அன்னம் இரை தேர் அழுந்தூர் எழும் சுடரை *
தென் தில்லைச் சித்திரகூடத்து என் செல்வனை * 67
aLLalvāy-annam iraithEr azhunthoor ezhumsudarai, *
then_thillaic sitthira koodatthu en selvanai, * (67)

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2777. the shining god of Thiruvazhundur where swans look for food in the wet mud. He, my dear lord, stays in south Thillai Chitrakudam, (67)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அள்ளல் வாய் சேற்று நிலங்களில்; அன்னம் இரை அன்னப் பறவை இரை தேடும்; தேர் அழுந்தூர் தேர் அழுந்தூரில்; எழும் சுடரை இருக்கும் ஜோதியை; தென் தில்லை தென் திசையிலுள்ள; சித்திரகூடத்து தில்லைத் திருச்சித்திரக்கூடத்தில்; என் செல்வனை இருக்கும் என் செல்வனை
aLLal vAy in marshy places; irai thEr azhundhUr at thiruvazhundhUr, to seek prey; ezhum sudarai as an effulgent lamp; then thillaich chiththirakUdaththu en selvanai the wealthy entity (who has taken residence) at thillai chiththira kUtam, which is in the southern direction