முதல் பாட்டில் அருளிச் செய்த விரோதி நிரசன சீலத்தையும் அத்புத சாரித்ரத்தையும் ஆஸ்ரித ஸூ லபத்தையும் வேறே புடைகளால் அனுசந்திக்கிறார் இதில் –
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக வளை மறுப்பைப் பேணான் வாங்கி யமுதம் கொண்ட பெருமான் திரு மார்வன் பாணா வண்டு முரலும் கூந்தல் ஆய்ச்சி தயிர் வெண்ணெய் நாணாது உண்டான் நாமம் சொல்லில் நமோ நாராயணமே-6-10-3-
பூணாது அனலும் தறு கண் வேழம் மறுக