To deliver the pious and to annihilate the miscreants, the supreme Lord Sriman Nārāyanā (emperumān), took birth amongst us in His complete incarnation as Sri Krishna and delivered Sri Bhagavad Gitā leveraging Arjunā. However considering Him as one among us, many of us didn’t take His instructions seriously. So the most compassionate emperumān entrusted His eternal associates to deliver us. His eternal associates took birth amongst us as Āzhvārs, per the instruction of emperumān. Āzhvārs leveraged the path of devotion to enlighten + Read more
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம்பெருமான் ஸாதுக்களைக் காக்கவும் துஷ்ட செயல்களை கண்டிக்கவும் ஸ்ரீக்ருஷ்ணராக அவதரித்து அர்ஜுனனை காரணமாக்கி ஸ்ரீமத் பகவத் கீதையை உபதேசித்தான். ஜீவாத்மாக்கள் எம்பெருமானை தன்னை ஒத்த மனிதனாகவே எண்ணி உபதேசங்களுக்கு இசையாமல் நிற்கவே, கருணா மூர்த்தியான பகவான் அநந்த, கருட, விஷ்வக்ஸேநர், முதலிய நித்யஸூரிகளை கொண்டு ஜீவ கோடிகளைக் கரையேற்ற திருவுள்ளம் கொண்டான்.லீலாவிபூதியில் நித்யசூரிகளை அவதரிப்பித்து ஜீவாத்மாக்களை பக்தி மார்க்கத்தில் மூட்டி உய்வடையும்படி செய்யுமாறு பகவான் நியமித்தான். அவன் நியமனத்தை தலைமேற்கொண்டு பூவுலகில் அவதரித்தவர்கள் ஆழ்வார்கள். + Read more