2nd Thiruvandāthi

இரண்டாம் திருவந்தாதி

2nd Thiruvandāthi
Boothathazhvar, the second among the Mudhalazhvars, composed the second Thiruvanthathi, which consists of one hundred verses. Along with Poigaiyazhvar, Boothathazhvar experienced the special qualities of the Lord. Through the Lord's grace, his intense devotion matured into a state of supreme knowledge (Parajnana). Witnessing the Lord's complete state + Read more
முதலாழ்வார்களில் இரண்டாவதாகத் திகழும் பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி நூறு பாசுரங்களை உடையது. பொய்கையாழ்வாருடன் கூடியிருந்து எம்பெருமான் குணவிசேஷங்களை அனுபவித்த இவ்வாழ்வார் எம்பெருமானின் அருளால் தனக்கு இருந்த பரபக்தியானது முதிர்ந்து பரஜ்ஞான தசையை அடைய, எம்பெருமானின் + Read more
Group: 3rd 1000
Verses: 2182 to 2281
Glorification: Para / Omnipresent State (பரத்வம்)
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

IT 1

2182 அன்பேதளியா ஆர்வமேநெய்யாக *
இன்புருகுசிந்தையிடுதிரியா * - நன்புருகி
ஞானச்சுடர்விளக்கேற்றினேன், நாரணற்கு *
ஞானத்தமிழ்புரிந்தநான். (2)
2182 ## அன்பே தகளியா * ஆர்வமே நெய் ஆக *
இன்பு உருகு சிந்தை இடு திரியா ** நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் * நாரணற்கு *
ஞானத் தமிழ் புரிந்த நான் 1
2182 ## aṉpe takal̤iyā * ārvame nĕy āka *
iṉpu uruku cintai iṭu tiriyā ** - naṉpu uruki
ñāṉac cuṭar vil̤akku eṟṟiṉeṉ * nāraṇaṟku *
ñāṉat tamizh purinta nāṉ -1

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2182. My love for him is a lamp, the oil in the lamp is my desire to worship him, and the wick is my sweet mind that melts for him. I light the shining lamp with my wisdom. I composed this Thiruvandāthi for Naranan in divine Tamil.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஞானத் தமிழ் அறிவை அளிக்கும் தமிழ் நூலை; புரிந்த நான் இயற்றிய நான்; அன்பே தகளியா பக்தியையே அகலாகவும்; ஆர்வமே நெய்யாக பர பக்தியே நெய்யாகவும்; இன்பு உருகு சிந்தை இனிமையாலே உருகும் மனம்; இடு திரியா அகலில் இடும் திரியாகவும்; நன்பு உருகி ஆத்மா உருகி; ஞானச் சுடர் விளக்கு பரஞானமாகிற சுடர் விளக்கை; நாரணற்கு நாரணற்கு; ஏற்றினேன் ஏற்றினேன்
gyānam thamizh the thamizh work which gives knowledge; purindha one who composed; nān adiyĕn (servitor); anbĕ bhakthi (devotion); thagal̤iyā as container (lamp, for ghee); ārvamĕ parabhakthi (a stage of devotion wherein one gains knowledge about emperumān); neyyāga as ghee (clarified butter); inbu urugu sindhai the mind which melts due to happiness; idu thiriyā as the wick which is placed in the container for holding ghee; nanbu āthmā (soul) which is gyānasvarūpi (the epitome of knowledge); urugi being melted; gyānam paragyāna (ability to have dharṣan (vision) of emperumān); sudar vil̤akku the radiant lamp; nāraṇaṛku for nārayaṇa; ĕṝinĕn ī lit

IT 2

2183 ஞானத்தால்நன்குணர்ந்து நாரணன்றன்நாமங்கள் *
தானத்தால்மற்றவன்பேர்சாற்றினால் * - வானத்
தணியமரர் ஆக்குவிக்குமஃதன்றே? * நங்கள்
பணியமரர்கோமான்பரிசு.
2183 ஞானத்தால் நன்கு உணர்ந்து * நாரணன் தன் நாமங்கள் *
தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் ** வானத்து
அணி அமரர் * ஆக்குவிக்கும் அஃது அன்றே * நங்கள்
பணி அமரர் கோமான் பரிசு 2
2183 ñāṉattāl naṉku uṇarntu * nāraṇaṉ taṉ nāmaṅkal̤ *
tāṉattāl maṟṟu avaṉ per cāṟṟiṉāl ** - vāṉattu
aṇi amarar * ākkuvikkum aḵtu aṉṟe * naṅkal̤
paṇi amarar komāṉ paricu -2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2183. If you stay in a good place and recite the names of Nāranan, understanding him well with your wisdom, the nature of the king of the gods is to give you the privilege of being a god among the gods in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாரணன் தன் நாரணனுடைய; நாமங்கள் தனிப் பெயர்களையும் ஸ்வரூப ரூப குணங்களைச்சொல்லும்; மற்று மேலும்; அவன் பேர் அப்பெருமானின் திருநாமங்களையும்; ஞானத்தால் ப்ரேமரூபமான அறிவாலே; நன்கு உணர்ந்து உள்ளபடி அறிந்து; தானத்தால் அன்புடன் ஆசையுடன்; சாற்றினால் அநுஸந்தித்தால்; நங்கள் பணி நமக்கு பந்துக்களாயும் எப்போதும்; அமரர் கைங்கர்ய பரர்களாயுமுள்ள நித்யஸூரிகளுக்கு; கோமான் தலைவனான பெருமானின்; பரிசு தன்மையானது; வானத்து அணி பரமபதத்திற்கு அலங்காரமான; அமரர் நித்யஸூரிகளாக; ஆக்குவிக்கும் நம்மைச் செய்துவைக்கும்; அஃது அன்றே அதுவே
nāraṇan than ṣrīman nārāyaṇan’s; nāmangal̤ distinct divine names (which refer to his svarūpa guṇam (qualities of his basic nature)); maṝu and; avan pĕr his divine names (which refer to his expansive wealth); gyānaththāl with knowledge (which is the epitome of bhakthi); nangu uṇarndhu knowing very well; dhānaththāl standing in the position (of the boundary of bhakthi); sāṝināl if meditated upon; nangal̤ paṇi amarar kŏman parisu the quality of emperumān who is the lord of nithyasūris, who are our friends and who are servitors of emperumān; vānaththu aṇi amarar ākkuvikkum ahdhenṛĕ will make us to be on a par with nithyasūris who are like decorations to paramapadham (ṣrīvaikuṇtam)

IT 3

2184 பரிசுநறுமலரால் பாற்கடலான்பாதம் *
புரிவார்புகழ்பெறுவர்போலாம் * - புரிவார்கள்
தொல்லமரர்கேள்வித் துலங்கொளிசேர்தோற்றத்து *
நல்லமரர்கோமான்நகர்.
2184 பரிசு நறு மலரால் * பாற்கடலான் பாதம் *
புரிவார் புகப்பெறுவர் போலாம் ** புரிவார்கள்
தொல் அமரர் கேள்வித் * துலங்கு ஒளி சேர் தோற்றத்து *
நல் அமரர் கோமான் நகர் 3
2184 paricu naṟu malarāl * pāṟkaṭalāṉ pātam *
purivār pukappĕṟuvar polām ** purivārkal̤
tŏl amarar kel̤vit * tulaṅku ŏl̤i cer toṟṟattu *
nal amarar komāṉ nakar -3

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2184. If devotees worship sprinkling fragrant flowers on the feet of the god resting on the milky ocean, they will enter the shining world of the ancient god of the gods where only the gods in the sky can enter.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பால் கடலான் பாற்கடல் நாதனின்; பாதம் திருவடிகளை; நறு மலரால் மணம் மிக்க மலர்களைக் கொண்டு; பரிசு புரிவார் பக்தியோடு தொழுபவர்கள்; புரிவார்கள் இந்திரன் பிரமன் முதலிய; தொல் புகழ் பெற்ற; அமரர் தேவர்களுக்கும்; கேள்வி கண்ணால் காண முடியாமல் காதால்; மாத்திரம் மட்டும் கேட்கக் கூடியதும்; துலங்கு ஒளி ஒளி பொருந்திய; சேர் தோற்றத்து தோற்றத்தையுடையதுமான; நல் அமரர் நித்யஸூரிகளின்; கோமான் நகர் நாதனுடைய நகரான பரமபதத்தை; புகப் பெறுவர் போலாம் அடையப் பெறுவர்கள்
pāṛkadalān pādham the divine feet of emperumān who is reclining in the milky ocean; naṛu malaral with fragrant flowers; parisu purivār those who worship him willingly through the means of devotion; purivārgal̤ thol amarar the ancient dhĕvas (such as brahmā et al) who are sādhanānushtāna parar (those who are trying to reach emperumān through their own efforts); kĕl̤vi that which can only be heard of (and not be seen); thulangu ol̤i sĕr thŏṝaththu with resplendent radiance; nal amarar kŏman nagar paramapadham which is the huge city of the head of nithyasūris; pugap peṛuvar pŏlām they will attain, it seems!

IT 4

2185 நகரிழைத்துநித்திலத்து நாண்மலர்கொண்டு * ஆங்கே
திகழுமணிவயிரஞ்சேர்த்து * - நிகரில்லாப்
பைங்கமலமேந்திப் பணிந்தேன்பனிமலராள் *
அங்கம்வலம்கொண்டானடி.
2185 நகர் இழைத்து நித்திலத்து * நாண் மலர் கொண்டு * ஆங்கே
திகழும் மணி வயிரம் சேர்த்து ** நிகர் இல்லாப்
பைங் கமலம் ஏந்திப் * பணிந்தேன் பனி மலராள் *
அங்கம் வலம் கொண்டான் அடி 4
2185 nakar izhaittu nittilattu * nāṇ malar kŏṇṭu * āṅke
tikazhum maṇi vayiram certtu ** - nikar illāp
paiṅ kamalam entip * paṇinteṉ paṉi malarāl̤ *
aṅkam valam kŏṇṭāṉ aṭi -4

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2185. I string garlands with jewels, pearls, diamonds and fresh flowers, carry matchless beautiful lotuses, and worship the feet of him on whose chest Lakshmi seated on a lotus on the right side of his body.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நகர் என் மனதை; இழைத்து எம்பெருமான் வாழும் நகரமாக அமைத்து; ஆங்கே நித்திலத்து அதிலே ஸ்நேஹமாகிற முத்தை; நாண் மலர் கொண்டு அன்றலர்ந்த மலராகக்கொண்டு; திகழும் மணி சங்கம் காமம் என்கிற மாணிக்கமாகவும்; வயிரம் சேர்த்து வயிரமாகவும் தாதுவுமாக வைத்து; நிகர் இல்லா ஒப்பில்லாத; பைங் கமலம் ஏந்தி பக்தியாகிற தாமரைப்பூவை ஏந்தி; பனி மலராள் திருமகளை; அங்கம் வலம் வலது பக்க; கொண்டான் மார்பில் உடைய எம்பெருமானின்; அடி பணிந்தேன் திருவடிகளை வணங்கினேன்
nagar izhaiththu making my heart as the capital for emperumān to reside; āngĕ niththilaththu nāl̤ malar koṇdu making affection (devotion), also termed as pearl, as a flower that has just blossomed that day; thigazhum maṇi vayiram sĕrththu keeping carbuncle and diamond as water lily and pollen respectively; nigar illā the incomparable; paim kamalam ĕndhi donning bhakthi as a cool lotus flower; panimalrāl̤ angam valam koṇdān emperumān who keeps ṣrīdhĕvi (ṣrī mahālakshmi), who dwells in a lotus, on his right chest; adi divine feet; paṇindhĕn ī worshipped

IT 5

2186 அடிமூன்றிலிவ்வுலகம் அன்றளந்தாய்போலும் *
அடிமூன்றிரந்துஅவனிகொண்டாய் * - படிநின்ற
நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை
யாரோதவல்லாரறிந்து?
2186 அடி மூன்றில் இவ் உலகம் * அன்று அளந்தாய் போலும் *
அடி மூன்று இரந்து அவனி கொண்டாய் ** படி நின்ற
நீர் ஓத மேனி * நெடுமாலே! * நின் அடியை
யார் ஓத வல்லார் அறிந்து? 5
2186 aṭi mūṉṟil iv ulakam * aṉṟu al̤antāy polum *
aṭi mūṉṟu irantu avaṉi kŏṇṭāy ** - paṭi niṉṟa
nīr ota meṉi * nĕṭumāle! * niṉ aṭiyai
yār ota vallār aṟintu? -5

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2186. You asked for three feet of land as a boon from Mahābali at his sacrifice and measured the world and the sky with your two feet. O Nedumal, you are colored like the ocean rolling with waves! Who is able to know the power of your feet and speak of it?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படிநின்ற பூமியிலே அவதரித்து நின்ற; நீர் ஓத மேனி கடல்வண்ணனான; நெடு மாலே! எம்பெருமானே!; அடி மூன்று மூவடி நிலத்தை மகாபலியிடம்; இரந்து யாசித்து; அவனி கொண்டாய் உலகைப் பெற்றாய்; அன்று இவ் உலகம் அன்று இவ் உலகம்; அடி மூன்றில் மூவடியாலே; அளந்தாய் போலும் அளந்தாய் போலும்; நின் அடியை இப்படிப்பட்ட உனது திருவடிகளை; அறிந்து நன்றாக அறிந்து; யார் ஓத வல்லார்? பேசவல்லவர்கள் யாவருளர்?
padi ninṛa incarnating on earth and standing on it; nīr ŏdham mĕni nedumālĕ ŏh supreme being, with the colour of ocean!; adi mūnṛu land covered by three steps; irandhu avani koṇdāy begging (from māvali) you got the worlds; anṛu during that time; ivvulagam this world; adi mūnṛil al̤andhāy pŏlum did you measure with your divine feet? ṇo.; nin adiyai your divine feet; aṛindhu knowing very well; ŏdha vallār yār who is capable of speaking? [ṭhere is none]

IT 6

2187 அறிந்தைந்துமுள்ளடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம்
செறிந்தமனத்தராய்ச்செவ்வே * - அறிந்தவன்தன்
பேரோதியேத்தும் பெருந்தவத்தோர்காண்பரே *
காரோதவண்ணன்கழல்.
2187 அறிந்து ஐந்தும் உள் அடக்கி * ஆய் மலர் கொண்டு * ஆர்வம்
செறிந்த மனத்தராய் செவ்வே ** அறிந்து அவன் தன்
பேர் ஓதி ஏத்தும் * பெருந்தவத்தோர் காண்பரே *
கார் ஓத வண்ணன் கழல் 6
2187 aṟintu aintum ul̤ aṭakki * āy malar kŏṇṭu * ārvam
cĕṟinta maṉattarāy cĕvve ** - aṟintu avaṉ taṉ
per oti ettum * pĕruntavattor kāṇpare *
kār ota vaṇṇaṉ kazhal -6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2187. If good-hearted devotees control their five senses, do much tapas with love, sprinkle fresh flowers and worship him reciting his names they will see the ankleted feet of the ocean-colored god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிந்து எம்பெருமானின்பெருமையையும் உலகச் சிறுமையையும் நன்றாக அறிந்து; ஐந்தும் பஞ்சேந்திரியங்களையும்; உள் பகவத் விஷயங்களில்; அடக்கி ஈடுபடும்படி அடக்கி; ஆய் மலர் கொண்டு சிறந்த மலர்களைக் கொண்டு; ஆர்வம் செறிந்த பக்தி நிறைந்த; மனத்தராய் மனத்தையுடையவராக; செவ்வே இறைவனே பெருமான் தான் அடிமை; அறிந்து என்பதை நன்கு உணர்ந்து; அவன் தன் பேர் அப்பெருமானது திருநாமங்களை; ஓதி ஏத்தும் இடைவிடாமல் ஓதி துதிக்கும்; பெருந் தவத்தோர் மஹாபாக்யசாலிகள்; கார் ஓத வண்ணன் கருங்கடல் வண்ணனான; கழல் எம்பெருமானின் திருவடிகளை; காண்பரே கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்
aṛindhu knowing well (the greatness of emperumān and the lowliness of worldly pursuits); aindhum the five sensory perceptions; ul̤ adakki (preventing them from engaging in other pursuits and) engaging with bhagavath vishayam (matters relating to emperumān) by anchoring firmly; āy malar koṇdu analysing and taking the appropriate flowers (apt for emperumān); ārvan seṛindha manaththaṛāy with the heart full of bhakthi (devotion); sevvĕ aṛindhu knowing well (the relationship of l̤ord; avan than pĕr the divine names of that emperumān; ŏdhi constantly reciting; ĕththum worshipping; perum thavaththŏr the great, fortunate ones; kār ŏdham vaṇṇan kazhal the divine feet of that emperumān who has the complexion of a dark sea; kāṇbar will see and enjoy

IT 7

2188 கழலெடுத்துவாய்மடித்துக் கண்சுழன்று * மாற்றார்
அழலெடுத்த சிந்தையராயஞ்ச * தழலெடுத்த
போராழியேந்தினான் பொன்மலர்ச்சேவடியை *
ஓராழிநெஞ்சே! உகந்து.
2188 கழல் எடுத்து வாய் மடித்துக் * கண் சுழன்று * மாற்றார்
அழல் எடுத்த சிந்தையராய் அஞ்ச ** தழல் எடுத்த
போர் ஆழி ஏந்தினான் * பொன் மலர்ச் சேவடியை *
ஓர் ஆழி நெஞ்சே! உகந்து 7
2188 kazhal ĕṭuttu vāy maṭittuk * kaṇ cuzhaṉṟu * māṟṟār
azhal ĕṭutta cintaiyarāy añca ** - tazhal ĕṭutta
por āzhi entiṉāṉ * pŏṉ malarc cevaṭiyai *
or āzhi nĕñce! ukantu -7

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2188. When he raised his ankleted feet and fought with his enemies Namusi and others with his heroic discus, he scared them and made their minds burn. O heart, worship happily his divine golden lotus feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி நெஞ்சே கடல் போல் ஆழ்ந்த மனமே!; கழல் திருவடியை; எடுத்து உயரத் தூக்கினவனாயும்; மாற்றார் எதிரிட்ட நமுசி முதலானவர்கள்; அழல் எடுத்த கொதிக்கும்; சிந்தையராய் மனமுடையவர்களாக; அஞ்ச அஞ்சி நடுங்கும்படி; வாய் மடித்து உதட்டைமடித்து; கண் சுழன்று கண்களைச்சுழற்றி; தழல் எடுத்த நெருப்புமிழும்; போர் ஆழி போர் செய்ய வல்ல சக்கரத்தை; ஏந்தினான் ஏந்திய எம்பெருமானின்; பொன் மலர் அழகிய மலர்போன்ற; சேவடியை திருவடிகளையே; உகந்து ஓர் விரும்பி அநுஸந்திப்பாயாக
āzhi nenjĕ ŏh mind, which is as deep as the ocean!; kazhal eduththu as one who lifted his divine feet; māṝār those enemies such as namuchi; azhal eduththa sindhaiyarāy anja shivering with their hearts burning like fire, out of fear; vāy madiththu puckering his lips; kaṇ suzhanṛu rolling his eyes (such that his enemies will collapse by the mere look); thazhal eduththa pŏr āzhi the sudharṣana chakkaram (divine disc) which is spitting fire and is battle ready; ĕndhinān emperumān who is donning; pon malar chĕ adiyĕ the divine feet which are like beautiful flower; ugandhu ŏr keep meditating, with desire.

IT 8

2189 உகந்துன்னைவாங்கி ஒளிநிறங்கொள்கொங்கை *
அகங்குளிரஉண்ணென்றாளாவி * -உகந்து
முலையுண்பாய்போலே முனிந்துண்டாய் * நீயும்
அலைபண்பா லானமையாலன்று.
2189 உகந்து உன்னை வாங்கி * ஒளி நிறம் கொள் கொங்கை *
அகம் குளிர உண் என்றாள் ஆவி ** உகந்து
முலை உண்பாய் போலே * முனிந்து உண்டாய் * நீயும்
அலை பண்பால் ஆனமையால் அன்று 8
2189 ukantu uṉṉai vāṅki * ŏl̤i niṟam kŏl̤ kŏṅkai *
akam kul̤ira uṇ ĕṉṟāl̤ āvi ** ukantu
mulai uṇpāy pole * muṉintu uṇṭāy * nīyum
alai paṇpāl āṉamaiyāl aṉṟu -8

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2189. When Putanā took you in her lap and gave milk from her beautiful breast saying, “Drink happily, ” you pretended to drink her milk and killed her. Even though she came as a mother and gave milk to you, you killed her because she had come to kill you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உகந்து வஞ்சனையாக வந்த பூதனை; உன்னை வாங்கி உன்னை தூக்கி எடுத்து; ஒளி நிறம் கொள் அழகிய ஒளியுள்ள; கொங்கை மார்பகத்திலிருந்து; அகம் குளிர மனம் மகிழும்படி; உண் என்றாள் பாலைப் பருகு என்றாள்; ஆனமையால் ஆகையால்; அன்று நீயும் அன்று நீயும் சிறு குழந்தை; அலை பண்பால் உகந்து பொய் மகிழ்ச்சியைக் காட்டி; முலை உண்பாய் மெய்யாகவே பாலைப் பருகுவது; போலே முனிந்து போல் மிகுந்த கோபத்துடன்; ஆவி உண்டாய் உயிரை உறிஞ்சி உட்கொண்டாய்
ugandhu playacting as if she is full of affection, just like yaṣŏdhā pirātti; unnai vāngi lifting you (when you were sleeping); ol̤i niṛam kol̤ kongai beautifully radiant bosom (since it was full of milk); agam kul̤ira uṇ enṛāl̤ she said “drink” to make the infant happy in its mind; ānamaiyāl hence; anṛu during that time when she offered her bosom to you; nīyum you too, as an infant; alai paṇbāl due to your [excessive] childishness; mulai uṇbāy pŏlĕ as if you are really suckling; ugandhu (showing outwardly) your happiness (as if you have attained an impossible gift); munindhu becoming very angry (in your mind); āvi (that pūthanā”s) life; uṇdāy you swallowed (along with her milk)

IT 9

2190 அன்றதுகண்டஞ்சாத ஆய்ச்சிஉனக்கிரங்கி *
நின்றுமுலைதந்த இந்நீர்மைக்கு * அன்று
வரன்முறையால்நீயளந்த மாகடல்சூழ்ஞாலம் *
பெருமுறையாலெய்துமோபேர்த்து?
2190 அன்று அதுகண்டு அஞ்சாத * ஆய்ச்சி உனக்கு இரங்கி *
நின்று முலை தந்த இந் நீர்மைக்கு ** அன்று
வரன்முறையால் நீ அளந்த * மா கடல் சூழ் ஞாலம் *
பெரு முறையால் எய்துமோ பேர்த்து? 9
2190 aṉṟu atukaṇṭu añcāta * āycci uṉakku iraṅki *
niṉṟu mulai tanta in nīrmaikku ** aṉṟu
varaṉmuṟaiyāl nī al̤anta * mā kaṭal cūzh ñālam *
pĕru muṟaiyāl ĕytumo perttu? -9

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2190. Yashodā was not worried about giving you milk from her breasts with love even though she saw how you killed Putanā when she came and fed you milk. Is even this ocean-encircled earth that you measured equal to the love of that cowherd mother?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று பூதனையை முடித்த அன்று; அது கண்டு பூதனையின் உடலைப் பார்த்தும்; அஞ்சாத ஆய்ச்சி பயப்படாத யசோதை சமாளித்து; நின்று அந்த பூதனையின் விஷத்துக்கு மாறாக; உனக்கு இரங்கி உன்னிடம் பரிவு கொண்டு; முலை தந்த பால் கொடுத்த; இந் நீர்மைக்கு இந்த பெரும் பரிவுகுணத்துக்கு ஒப்பு உண்டோ?; அன்று முன்பு நீ உயிர்களிடத்தில் கொண்ட; முறையால் உறவு காரணமாக மகாபலியிடம்; அளந்த மா கடல் மூவடி பெற்று அளந்த கடல் சூழ்ந்த; சூழ் ஞாலம் உலகமானது உன் நீர்மை குணத்தை; பேர்த்து பெரு காட்டுகிறது ஆனால் யசோதையின்; முறையால் எய்துமோ? பரிவுக்கு உன் நீர்மை ஒப்பாகுமோ?
anṛu during that period (when you drank her milk and killed pūthanā such that she fell down like a corpse); adhu kaṇdu looking at pūthanā’s corpse after she had nursed you; anjādha not fearing whether she would die if she (yaṣŏdhā pirātti) nursed you; āychchi yaṣŏdhā pirātti; ninṛu sustaining herself; unakku irangi mulai thandha nursing you, being compassionate towards you; i nīrmaikku for this great quality; anṛu nī varan muṛailyāl al̤andha mā kadal sūzh gyālam this huge world surrounded by ocean, that you measured then because of your special relationship with it; pĕrththu perumuṛaiyāl eydhumŏ is it possible to compare [this deed of yours] to that great quality of yaṣŏdhā pirātti’s, even if analysed repeatedly?

IT 10

2191 பேர்த்தனை மாசகடம்பிள்ளையாய் * மண்ணிரந்து
காத்தனை பல்லுயிரும்காவலனே! * ஏத்திய
நாவுடையேன்பூவுடையேன் நின்னுள்ளிநின்றமையால் *
காஅடியேன்பட்டகடை.
2191 பேர்த்தனை * மா சகடம் பிள்ளையாய் * மண் இரந்து
காத்தனை * பல் உயிரும் காவலனே ** ஏத்திய
நா உடையேன் பூ உடையேன் * நின் உள்ளி நின்றமையால் *
காவடியேன் பட்ட கடை 10
2191 perttaṉai * mā cakaṭam pil̤l̤aiyāy * maṇ irantu
kāttaṉai * pal uyirum kāvalaṉe ** - ettiya
nā uṭaiyeṉ pū uṭaiyeṉ * niṉ ul̤l̤i niṉṟamaiyāl *
kāvaṭiyeṉ paṭṭa kaṭai -10

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2191. O lord, I think always of you who kicked and killed Sakatasuran when he came as a large cart and protected the world. You asked for three feet of land from Mahābali and took over the whole earth and saved its people. I worship you with my tongue, sprinkling flowers on your feet. The results of my karmā are gone.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காவலனே! அனைவரையும் காப்பவனே!; பிள்ளையாய் சிறு குழந்தையாய்; மா சகடம் பெரிய ஒரு வண்டியை; பேர்த்தனை உதைத்துத் தள்ளினவனும்; மண் பூமியை மஹாபலியிடம்; இரந்து யாசித்துப் பெற்று; பல் உயிரும் எல்லா ஆத்மாக்களையும்; காத்தனை காத்தவனும்; நின் உள்ளி உன்னை காப்பவன்; நின்றமையால் என்று எண்ணியதால்; ஏத்திய உன்னை வணங்கும்; நா நாக்கை உடையவனாய்; வுடையேன் இருக்கிறேன்; பூ வுடையேன் புஷ்பங்களையும் வைத்திருக்கிறேன்; அடியேன் உனக்கு அடியேனாயிருக்கிறேன்; பட்ட வெகுகாலமாக அடைந்துள்ள; கடை கா தாழ்வுகளை போக்கியருள வேண்டும்
kāvalanĕ ŏh, the omni-protector!; pil̤l̤aiyāy as a child; mā sagadam a huge wheel (inside which a demon had entered); pĕrththanai you kicked it such that it was destroyed completely; maṇ the world; irandhu taking alms (from mahābali); pal uyirum all the āthmās (souls); kāththanai mercifully protected; nin your (such a protector); ul̤l̤i ninṛamaiyāl since thinking of (as protector); ĕththiya nā udaiyĕn ī am having a tongue which worships you as its nature; pū udaiyĕn ī am having flowers (fit for worshiping you); adiyĕn having a great status as being your servitor; patta having suffered (attaining other deities); kadai lowliness; you have to remove

IT 11

2192 கடைநின்றமரர் கழல்தொழுது * நாளும்
இடைநின்ற இன்பத்தராவர் * -புடைநின்ற
நீரோதமேனி நெடுமாலே! * நின்னடியை
யாரோதவல்லாரவர்?
2192 கடை நின்று அமரர் கழல் தொழுது ** நாளும்
இடை நின்ற * இன்பத்தராவர் ** படை நின்ற
நீரோத மேனி * நெடுமாலே ! * நின் அடியை
யாரோத வல்லார் அவர் ? 11
2192 kaṭai niṉṟu amarar kazhal tŏzhutu ** nāl̤um
iṭai niṉṟa * iṉpattarāvar ** - paṭai niṉṟa
nīrota meṉi * nĕṭumāle ! * niṉ aṭiyai
yārota vallār avar ? -11

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2192. Many people worship the feet of other gods and enjoy life only for a short time, but they do not worship you to attain eternal Mokshā. O Nedumal with the color of the ocean rolling with waves, who can describe the might of your feet?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர் மற்ற தெய்வங்களை; கடை நின்ற பற்றி நின்று; நாளும் எப்பொழுதும் அவர்களுடைய; கழல் தொழுது திருவடிகளை தொழுது; இடை நின்ற நடுவே கிடக்கும்; இன்பத்தர் ஸ்வர்க்கம் முதலியவைகளை; ஆவர் பெறுவர்; புடை நின்ற இவ்வுலகைச் சூழ்ந்திருக்கும்; நீர் ஓத கடல் போன்ற; மேனி திருமேனியையுடைய; நெடு மாலே! பெருமானே!; நின் அடியை உன் திருவடியை; ஓத வல்லார் அநுஸந்திக்கவல்லார்; அவர் ஆர்? ஆரேனும் உண்டோ?
amarar kadai ninṛu standing at the doorstep of other deities; nāl̤um at all times; kazhal thozhudhu falling at (their) feet; idai ninṛa inbaththar āvar they will realise the pleasures lying in-between (such as heaven etc); pudai ninṛa nīr ŏdham mĕni nedumālĕ ŏh the supreme being who is having the form of ocean which is surrounding this world!; nin adiyai your divine feet; ŏdha vallār avar yār is there anyone who can think of? (there is no one)

IT 12

2193 அவரிவரென்றில்லை அரவணையான்பாதம் *
எவர்வணங்கி யேத்தாதாரெண்ணில் * -பவரும்
செழுங்கதிரோன்ஒண்மலரோன் கண்ணுதலோனன்றே? *
தொழுந்தகையார் நாளும்தொடர்ந்து.
2193 அவர் இவர் என்று இல்லை * அரவு அணையான் பாதம் *
எவர் வணங்கி ஏத்தாதார் எண்ணில் ** பவரும்
செழும் கதிரோன் ஒண் மலரோன் * கண்ணுதலோன் அன்றே? *
தொழும் தகையார் நாளும் தொடர்ந்து 12
2193 avar ivar ĕṉṟu illai * aravu aṇaiyāṉ pātam *
ĕvar vaṇaṅki ettātār ĕṇṇil ** - pavarum
cĕzhum katiroṉ ŏṇ malaroṉ * kaṇṇutaloṉ aṉṟe? *
tŏzhum takaiyār nāl̤um tŏṭarntu -12

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2193. If any of his devotes worship him will reach the feet of him resting on the snake bed. He treats everyone equally. Even the bright sun that goes around the world, Nānmuhan on a lotus and Shivā with a forehead eye worship the lord every day without ceasing.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரவு அணையான் ஆதிசேஷனில் சயனித்திருக்கும்; பாதம் பெருமானின் திருவடிகளை; வணங்கி வணங்கி; ஏத்தாதார் துதிக்காதவர்கள்; எவர் எண்ணில் யார் என்று பார்த்தால்; அவர் அவர்களில்; இவர் உயர்ந்தோர் தாழ்ந்தோர்; என்று இல்லை என்று எவருமில்லை; பவரும் செழும் ஆயிரங் கிரணங்களையுடைய; கதிரோன் சூரியனும்; ஒண் அழகிய தாமரையில்; மலரோன் பிறந்த பிரமனும்; கண்ணுதலோன் நெற்றிக்கண்களையுடைய ருத்ரனும்; நாளும் தொடர்ந்து தினமும் தொடர்ந்து; தொழும் தகையார் எம்பெருமான் இருக்குமிடம் தேடி; அன்றே சென்று வணங்குபவர்கள் அன்றோ?
eṇṇil if we analyse (who all get their sustenance from emperumān); avar ivar enṛu illai there is no distinction between one person and the other when it comes to attaining him [for getting favours]; aravu aṇaiyāṇ pādham the divine feet of emperumān who has ādhiṣĕshan as his mattress; vaṇangi worship; ĕththādhār those who do not praise; evar who? (there is none); pavarum sezhum kadhirŏn sun who has well spread out rays in thousands; oṇmalarŏn brahmā who has the beautiful lotus (growing out of emperumān’s navel) as his seat; kaṇ nudhalŏn rudhra who has an eye in his forehead; nāl̤um every day; thodarndhu thozhum thagaiyār anṛĕ aren’t they having the quality of seeking out the place where emperumān is dwelling and worshipping him?

IT 13

2194 தொடரெடுத்தமால்யானை சூழ்கயம்புக்கஞ்சி *
படரெடுத்தபைங்கமலம்கொண்டு * -அன்றுஇடரடுக்க
ஆழியான் பாதம்பணிந்தன்றே? * வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப்பண்டு.
2194 தொடர் எடுத்த மால் யானை * சூழ் கயம் புக்கு அஞ்சி *
படர் எடுத்த பைங் கமலம் கொண்டு ** அன்று இடர் அடுக்க
ஆழியான் * பாதம் பணிந்து அன்றே? * வானவர் கோன்
பாழி தான் எய்திற்று பண்டு 13
2194 tŏṭar ĕṭutta māl yāṉai * cūzh kayam pukku añci *
paṭar ĕṭutta paiṅ kamalam kŏṇṭu ** - aṉṟu iṭar aṭukka
āzhiyāṉ * pātam paṇintu aṉṟe? * vāṉavar koṉ
pāzhi tāṉ ĕytiṟṟu paṇṭu -13

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2194. When the large elephant Gajendra went to the pond to pick up a beautiful lotus flower to worship him he was caught by a crocodile, and the lord came and saved him, killing the crocodile. Wasn’t Gajendra saved and so he could reach the world of Indra, because he worshipped the feet of the lord with a discus?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொடர் எடுத்த கால் சங்கிலியை முறித்து; மால் யானை திரிகிற மத யானை கஜேந்திரன்; சூழ் கயம் புக்கு பொய்கையில் இறங்கி; படர் எடுத்த பைங் கமலம் மலர்ந்த தாமரைகளை; கொண்டு எடுத்துக் கொண்டு அவை வாடுவதற்கு முன்; ஆழியான் எம்பெருமானின்; பாதம் திருவடிகளில் ஸமர்ப்பிக்க; அஞ்சி முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சி; அன்று இடர் அதனால் பெருந்துன்பம்; அடுக்க உண்டாக; பணிந்து பணிந்து வணங்கியதனால்; அன்றே அன்றோ; தான் அந்த கஜேந்திரன்; பண்டு முற்காலத்தில்; வானவர் கோன் எம்பெருமானின்; பாழி பரமபதத்தை; எய்திற்று அடைந்தது
thodar eduththa māl yānai an elephant in exultation, breaking free from its chains and running with the chain in its trunk; sūzhkayam pukku entered an expansive pond; padar eduththa paim kamalam koṇdu taking lotus flowers which have blossomed well (in order to lay them at the divine feet of emperumān); anṛu idar adukka after getting into a deep hurdle (getting caught by a crocodile and unable to free itself from the crocodile); anji trembling with fear in its mind (whether it would be able to offer the flowers to emperumān before they wither away); āzhiyān pādham at the divine feet of emperumān who is holding in his hand the divine disc (the implement for killing the crocodile); paṇindhanṛĕ because of worshipping (after surrendering); thān that gajĕndhra āzhwān [in our sampradhāyam certain people (and other entities) are referred to as āzhwān to indicate their exalted status]; paṇdu in ancient time; vānavar kŏn pāzhi the dwelling place of the l̤ord of nithyasūris (permanent dweller of ṣrivaikuṇtam), paramapadham; eydhiṝu attained

IT 14

2195 பண்டிப்பெரும்பதியையாக்கி * பழிபாவம்
கொண்டுஇங்குவாழ்வாரைக்கூறாதே * - எண்திசையும்
பேர்த்தகரம்நான்குடையான் பேரோதிப்பேதைகாள்! *
தீர்த்தகரராமின்திரிந்து.
2195 பண்டிப் பெரும் பதியை ஆக்கி * பழி பாவம்
கொண்டு * இங்கு வாழ்வாரைக் கூறாதே ** எண் திசையும்
பேர்த்த கரம் நான்கு உடையான் * பேர் ஓதி பேதைகாள் *
தீர்த்தகரர் ஆமின் திரிந்து 14
2195 paṇṭip pĕrum patiyai ākki * pazhi pāvam
kŏṇṭu * iṅku vāzhvāraik kūṟāte ** - ĕṇ ticaiyum
pertta karam nāṉku uṭaiyāṉ * per oti petaikāl̤ *
tīrttakarar āmiṉ tirintu -14

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2195. O ignorant ones, do not praise the people of the world who perform many evil deeds increasing their karmā. Recite the names of the lord who grew to the sky and whose hands were extended in all the eight directions. Wander as sages and go to all the temples where he stays, worship him and become faultless.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேதைகாள்! அறிவற்றவர்களே!; பண்டியை வயிற்றை பெரிய ஊர்போல; பெரும் பதி கண்டதையும்; ஆக்கி போட்டு நிரப்பி; பழி பாவம் பழி பாவங்களை; கொண்டு வளர்த்துக்கொண்டு; இங்கு இவ்வுலகில்; வாழ்வாரை வாழ்பவர்களை; கூறாதே புகழ்ந்து பேசுகை தவிர்த்து; எண் திசையும் எட்டுத் திக்குக்களும்; பேர்த்த போகும்படி திருவிக்கிரமனாய் வளர்ந்த; கரம் நான்கு நான்கு தோள்களையுடைய; உடையான் பேர் பெருமானின் திரு நாமங்களை; ஓதி திரிந்து இடைவிடாது ஓதி திவ்ய தேசங்கள் சென்று; தீர்த்தகரர் ஆமின் புனிதமடையச்செய்யுங்கள்
pĕdhaigāl̤ ŏh ignorant people!; paṇdiyai stomach; perum padhi ākki filling it up [stomach] with everything as if it were a huge town; pazhi pāvam koṇdu going on accumulating sins through faulty activities carried out knowingly and unknowingly; ingu in this world; vāzhvārai those who dwell in this materialistic realm; kūṛādhĕ instead of praising them; eṇ dhisaiyum pĕrththa karam nāngu udaiyān thrivikrama’s puffed up divine shoulders which blew to smithereens the eight directions (when he measured the worlds); pĕr divine names; ŏdhi reciting continuously without expecting any gain in return; thirindhu taking a sojourn all over the world; thīrththakarar āmin purify all the lands (through your connection)

IT 15

2196 திரிந்ததுவெஞ்சமத்துத் தேர்கடவி * அன்று
பிரிந்தது சீதையை மான்பின்போய் * -புரிந்ததுவும்
கண்பள்ளிகொள்ள, அழகியதே! * நாகத்தின்
தண்பள்ளிகொள்வான்தனக்கு.
2196 திரிந்தது வெம் சமத்துத் * தேர் கடவி * அன்று
பிரிந்தது * சீதையை மான் பின் போய் ** புரிந்ததுவும்
கண் பள்ளிகொள்ள * அழகியதே * நாகத்தின்
தண் பள்ளி கொள்வான் தனக்கு 15
2196 tirintatu vĕm camattut * ter kaṭavi * aṉṟu
pirintatu * cītaiyai māṉ piṉ poy ** - purintatuvum
kaṇ pal̤l̤ikŏl̤l̤a * azhakiyate * nākattiṉ
taṇ pal̤l̤i kŏl̤vāṉ taṉakku -15

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2196. Are these the things the lord enjoys— driving the chariot in the terrible battle for Arjunā, -chasing Marisan to catch him when he came as a golden deer, losing Sita when she was kidnapped by Rāvana and resting on the beautiful snake bed Adisesha on the ocean?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெம் சமத்து கொடிய பாரத யுத்தத்திலே; தேர் கடவி திரிந்தது தேரை நடத்தித் திரிந்ததும்; அன்று மான் அன்று மாரீசமானின்; பின் போய் பின்னே போய்; சீதையை பிரிந்தது சீதையை பிரிந்து துன்புற்றதும்; கண் பள்ளி கொள்ள பூமியில் பள்ளி கொள்ள; புரிந்ததுவும் விரும்பியதும்; நாகத்தின் தண் குளிர்ந்த ஆதிசேஷன் மேல்; பள்ளி கொள்வான் பள்ளி கொண்டிருக்க வேண்டிய; தனக்கு பெருமானுக்கு இவை அனைத்தும்; அழகியதே ஏற்றவை தானோ?
vem samaththu in the deadly (bhāratha) war (when he incarnated as krishṇa); thĕr kadavi (as pārthasārathy, the charioteer) conducting the chariot, fore and back; thirindhadhu wandered; anṛu when incarnated as ṣrī rāma; mān pin pŏy went behind the demon mārīchan who came as a deceptive deer; sīthaiyai pirindhadhu suffered after being separated from pirātti (sīthā pirātti, mahālakshmi); kaṇ on the ground; pal̤l̤i kol̤l̤a to sleep; purindhadhuvum desired; nāgaththin thaṇ pal̤l̤i kol̤vān thanakku for emperumān who is reclining on the cool mattress of ādhiṣĕshan; azhagiyadhĕ are these apt?

IT 16

2197 தனக்கடிமைபட்டது தானறியானேலும் *
மனத்தடைய வைப்பதாம்மாலை * - வனத்திடரை
ஏரியாம்வண்ணம் இயற்றுமிதுவல்லால் *
மாரியார்பெய்கிற்பாற்மற்று?
2197 தனக்கு அடிமை பட்டது * தான் அறியானேலும் *
மனத்து அடைய வைப்பது ஆம் மாலை ** வனத் திடரை
ஏரி ஆம் வண்ணம் * இயற்றும் இது அல்லால் *
மாரி யார் பெய்கிற்பார் மற்று ? 16
2197 taṉakku aṭimai paṭṭatu * tāṉ aṟiyāṉelum *
maṉattu aṭaiya vaippatu ām mālai ** - vaṉat tiṭarai
eri ām vaṇṇam * iyaṟṟum itu allāl *
māri yār pĕykiṟpār maṟṟu ? -16

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2197. When he enters someone’s heart and a devotee locks him in it, the lord may not know that he is imprisoned in the devotee’s heart. If someone does not dig out a pond on a mound in a forest and save the rain water, there will be no water to flow and nourish the fields. Lock him in your heart.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தனக்கு சேதனனான தனக்கு; அடிமை பட்டது அடிமை பட்டதை; தான் தான்; அறியானேலும் அறியாமலிருந்தாலும்; மனத்து எம்பெருமான் தானாகவே; அடைய வந்து சேரும்போது; மாலை அப்பெருமானை இடம் கொடுத்து; வைப்பதாம் வைத்துக் கொள்வது நன்று; வனத் திடரை காட்டிலுள்ள மேட்டு நிலத்தை; ஏரி ஆம் வண்ணம் இயற்றும் ஏரி ஆக்க; இது அல்லால் முடியுமே தவிர; மற்று மாரி மழையை; பெய்கிற்பார் யார்? பெய்விக்க யாரால் முடியும்?
thanakku for himself (who is a chĕthana, sentient entity); adimai being a servitor; pattadhu that it is being apt; thān aṛiyān ĕlum even if he is not able to know; manaththu in the mind; adaiya as soon as he reaches; mālai that emperumān; vaippadhu to keep him, by providing place; ām is apt; vanam thidarai the high ground on which the forest has sprung up; ĕri ām vaṇṇam iyaṝum idhu allāl other than the activity of digging a lake in that area so that rain water will not flow elsewhere but into that lake; maṝu other than; māri rain; peygiṛpār to make it fall; yār who is there? (isn’t rainfall due to emperumān’s sankalpam (vow))

IT 17

2198 மற்றாரியலாவர்? வானவர்கோன்மாமலரோன் *
சுற்றும்வணங்கும்தொழிலானை * - ஒற்றைப்
பிறையிருந்த செஞ்சடையான்பின்சென்று * மாலைக்
குறையிரந்து தான்முடித்தான்கொண்டு.
2198 மற்று ஆர் இயல் ஆவர் * வானவர் கோன் மா மலரோன் *
சுற்றும் வணங்கும் தொழிலானை ** ஒற்றைப்
பிறை இருந்த * செஞ்சடையான் பின் சென்று * மாலைக்
குறை இரந்து தான் முடித்தான் கொண்டு 17
2198 maṟṟu ār iyal āvar * vāṉavar koṉ mā malaroṉ *
cuṟṟum vaṇaṅkum tŏzhilāṉai ** - ŏṟṟaip
piṟai irunta * cĕñcaṭaiyāṉ piṉ cĕṉṟu * mālaik
kuṟai irantu tāṉ muṭittāṉ kŏṇṭu -17

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2198. Indra, the king of the gods, and Nānmuhan on a lotus worshiped him and asked him to help them when they were in trouble. Like them, Shivā with thick matted hair adorned with the crescent moon went to Thirumāl, asked for his aid and received his grace when the skull of Nānmuhan was stuck to his hand. Who but our lord could have helped them all?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் தேவர்கட்குத் தலைவனான; கோன் இந்திரனும்; மா மலரோன் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமனும்; சுற்றும் வணங்கும் பக்கங்களில் சூழ்ந்து நின்று; தொழிலானை மாலை வணங்கத்தக்க திருமாலை; கொண்டு மனதில் கொண்டு வணங்கினர்; ஒற்றைப் பிறை இருந்த ஒற்றைப் பிறைச் சந்திரனை; செஞ்சடையான் சடைமுடியில் தரித்த சிவன்; பின் சென்று இரந்து பின் பக்கம் சென்று வணங்கி; குறை தான் தன் குறைகளை; முடித்தான் தீர்த்துக்கொண்டான்; இயல் ஆவர் ஆதலால் நம்மைக் காக்க; மற்று அந்த எம்பெருமானைத் தவிர; ஆர் வேறு யாருளர்?
vānavar kŏn indhra, the head of all celestial entities; mā malarŏn brahmā, who dwells on the lotus flower, shooting out of emperumān’s navel; suṝum vaṇangum thozhilānai one who has activities such that he is surrounded on the sides and worshipped [by the above-mentioned entities]; mālai emperumān; koṇdu keeping (in the heart); oṝai piṛai irundha senjadaiyān rudhra who is having reddish matted hair and who dons moon with single kalā (phase of the moon); pin senṛu following [emperumān]; irandhu begging him; kuṛai his shortcoming (of brahmahaththi dhŏsham, the fault of removing one of brahmā’s heads); thān mudiththān he completed his task; iyal āvār apt to be attained; maṝu ār who else is there, apart from sarvĕṣvaran (supreme being)?

IT 18

2199 கொண்டதுலகம் குறளுருவாய், கோளரியாய் *
ஒண்திறலோன்மார்வத்துகிர்வைத்தது * - உண்டதுவும்
தான்கடந்தவேழுலகே தாமரைக்கண்மாலொருநாள் *
வான்கடந்தான்செய்தவழக்கு.
2199 கொண்டது உலகம் * குறள் உருவாய் கோளரியாய் *
ஒண் திறலோன் மார்வத்து உகிர் வைத்தது ** உண்டதுவும்
தான் கடந்த ஏழ் உலகே * தாமரைக்கண் மால் ஒரு நாள் *
வான் கடந்தான் செய்த வழக்கு 18
2199 kŏṇṭatu ulakam * kuṟal̤ uruvāy kol̤ariyāy *
ŏṇ tiṟaloṉ mārvattu ukir vaittatu ** - uṇṭatuvum
tāṉ kaṭanta ezh ulake * tāmaraikkaṇ māl ŏru nāl̤ *
vāṉ kaṭantāṉ cĕyta vazhakku -18

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2199. Thirumāl took the form of a dwarf went to Mahābali’s sacrifice, grew tall and measured the earth and the sky, he took the form of a man-lion split open the chest of Hiranyan with his claws, and he swallowed all the seven worlds in the eon. Did Thirumāl with beautiful eyes do these things to save the world?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறள் வாமனனாய் மாவலியிடம்; உருவாய் சென்று யாசித்து; உலகம் உலகங்களை; கொண்டது பெற்றதும்; கோள் மிடுக்கையுடைய; அரியாய் நரசிம்மனாய்; ஒண் பலசாலியான; திறலோன் இரணியனின்; மார்வத்து மார்பிலே; உகிர் தனது நகங்களை அழுத்தி; வைத்தது கிழித்து அழித்ததும்; ஒருநாள் ஒருகாலத்தில்; தான் கடந்த தான் அளந்த; ஏழ் உலகே ஏழு உலகங்களையும்; உண்டதுவும் உண்டதும்; வான் ஆகாசத்தைக் காட்டிலும்; கடந்தான் பெருமை படைத்த செயல்களையுடைய; தாமரைக் கண் செந்தாமரைக் கண்ணனான; மால் பெருமானின் செயல்கள்; செய்த வழக்கு நியாயமான செயல்களே
kuṛal̤ uruvāy in the form of vāmana (dwarf); koṇdadhu seiśed; kŏl̤ ariyāy became narasimha with strength; oṇ thiṛalŏn mārvaththu on the chest of the might iraṇiyan (hiraṇyakashyap); ugir vaiththadhu pressed his fingernails and tore him, killing him; oru nāl̤ at one point of time; thān kadandha that which he measured; ĕzh ulagĕ all the worlds; uṇdadhuvum keeping in his divine stomach (so that deluge will not swallow it); vān kadandhān having the greatness that even if one were to measure the sky, he cannot be measured; thāmaraikkaṇ having eyes like reddish lotus; māl emperumān; seydha mercifully carried out; vazhakku honest activities

IT 19

2200 வழக்கன்றுகண்டாய் வலிசகடஞ்செற்றாய் *
வழக்கென்றுநீமதிக்கவேண்டா * - குழக்கன்று
தீவிளவின்காய்க்கெறிந்த தீமைதிருமாலே! *
பார்விளங்கச்செய்தாய்பழி.
2200 வழக்கு அன்று கண்டாய் * வலி சகடம் செற்றாய் *
வழக்கு என்று நீ மதிக்க வேண்டா ** குழக் கன்று
தீ விளவின் காய்க்கு எறிந்த * தீமை திருமாலே! *
பார் விளங்கச் செய்தாய் பழி 19
2200 vazhakku aṉṟu kaṇṭāy * vali cakaṭam cĕṟṟāy *
vazhakku ĕṉṟu nī matikka veṇṭā ** - kuzhak kaṉṟu
tī vil̤aviṉ kāykku ĕṟinta * tīmai tirumāle! *
pār vil̤aṅkac cĕytāy pazhi -19

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2200. When Sakatasuran came as a cart, you kicked it and killed him, but that is not all you did. You also threw the calf on the vilam tree and killed the two Asurans. The world may blame you for breaking a cart or throwing a small calf, but you only did these things to protect the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலே! நீ கண்ணனாயிருந்தபோது நீ; வலி சகடம் வலிதான சகடத்தை; செற்றாய் உதைத்தாய்; கண்டாய் இது உனக்கு; வழக்கு அன்று தகுந்தது அன்று; வழக்கு என்று நீ இது நமக்கு தகுதியானது தான்; மதிக்க வேண்டா என்று நினைக்காதே; குழக் கன்று அஸுரனாக வந்த இளங்கன்றை; தீ விளவின் விளங்காயை; காய்க்கு உகுக்கும் பொருட்டு வீசினாய்; எறிந்த தீமை இப்படி தீமைகளை; பார் விளங்க பலர் காண; பழி செய்தாய் தவறு செய்தாயே
thirumālĕ you; vali sagadam the powerful wheel; seṝāy kicked it aside and broke it; vazhakkanṛu kaṇdāy this is not appropriate for you, please see; vazhakku enṛu nī madhikka vĕṇdā you should not think that this is appropriate for you; kuzha kanṛu a young calf (who is actually a demon); thī vil̤avin kāykku eṛindha [which you] threw to destroy another demon who had taken the form of a wood apple; thīmai this mischievous act; pār vil̤anga to shine brightly on this earth; pazhi seydhāy you acted wrongly

IT 20

2201 பழிபாவங்கையகற்றிப் பல்காலும்நின்னை *
வழிவாழ்வார் வாழ்வராம்மாதோ * - வழுவின்றி
நாரணன்தன்நாமங்கள் நன்குணர்ந்துநன்கேத்தும் *
காரணங்கள்தாமுடையார்தாம்.
2201 பழி பாவம் கையகற்றிப் * பல் காலும் நின்னை *
வழிவாழ்வார் வாழ்வராம் மாதோ ** வழு இன்றி
நாரணன் தன் நாமங்கள் * நன்கு உணர்ந்து நன்கு ஏத்தும் *
காரணங்கள் தாம் உடையார் தாம் 20
2201 pazhi pāvam kaiyakaṟṟip * pal kālum niṉṉai *
vazhivāzhvār vāzhvarām māto ** - vazhu iṉṟi
nāraṇaṉ taṉ nāmaṅkal̤ * naṉku uṇarntu naṉku ettum *
kāraṇaṅkal̤ tām uṭaiyār tām -20

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2201. If your devotees do not sin or do bad deeds, and only praise you because they recite your name Narayanā without mistake and understand your power, worshiping only you, they will live happily.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பழி பாவம் பழியையும் பாவத்தையும்; கை அகற்றி போக்கி; பல் காலும் எப்பொழுதும்; நின்னை உன்னிடத்தில்; வழி நெறி தவறாமல்; வாழ்வார் வாழ்பவர்களும்; நாரணன் தன் நாராயணனான உன்; நாமங்கள் திரு நாமங்களை; நன்கு உணர்ந்து நன்கு உணர்ந்து; வழு இன்றி பிழையின்றி; நன்கு ஏத்தும் துதிப்பதற்கேற்ற; காரணங்கள்தாம் காரணங்களை; உடையார் தாம் உடையவர்களும்; வாழ்வராம் நன்றாக வாழ்வார்கள்; மாதோ இது என்ன ஆச்சர்யம்
pazhi blame; disrepute; pāvam bad deeds carried out knowingly; kaiyagaṝi removing; palgālum always; ninnai you; vazhi vāzhvār those who attain you through the ways ordained in ṣāsthram (sacred text); nāraṇan than nārāyaṇa, your; nāmangal̤ divine names; nangu uṇarndhu knowing well; nangu ĕththum kāraṇangal̤ thām udaiyār thām those who have the means to worship you well; vāzhavarām they will live with happiness; mādhŏ is this any surprise!

IT 21

2202 தாமுளரே தம்முள்ளமுள்ளுளதே * தாமரையின்
பூவுளதே ஏத்தும்பொழுதுண்டே * - வாமன்
திருமருவு தாள்மருவுசென்னியரே * செவ்வே
அருநரகஞ்சேர்வதரிது.
2202 தாம் உளரே * தம் உள்ளம் உள் உளதே * தாமரையின்
பூ உளதே * ஏத்தும் பொழுது உண்டே ** வாமன்
திரு மருவு * தாள் மருவு சென்னியரே * செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது 21
2202 tām ul̤are * tam ul̤l̤am ul̤ ul̤ate * tāmaraiyiṉ
pū ul̤ate * ettum pŏzhutu uṇṭe ** - vāmaṉ
tiru maruvu * tāl̤ maruvu cĕṉṉiyare * cĕvve
aru narakam cervatu aritu -21

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2202. Our lord, the beloved of Lakshmi, abides in the hearts of those devotees who always think of him and worship him. They have the good fortune of bowing to the feet of the lord who took the form of a dwarf and they will never go to cruel hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாம் கடவுளை வணங்க; உளரே சேதனர்கள் உள்ளனரே; தம் உள்ளம் தங்களுடைய மனம்; உள் உளதே தமக்குள்ளே இருக்கின்றதே; தாமரையின் பூ மலரிட்டு துதிக்க தாமரைப்பூ; உளதே உள்ளதே; ஏத்தும் அவனைப் புகழ்ந்து வணங்க; பொழுது காலம்; உண்டே ஏராளமாக உள்ளதே; திரு மருவு தாள் தலையில் காலை வைத்த; வாமன் வாமந மூர்த்தியின் திருவடிகளை; மருவு வணங்க; சென்னியரே தலையையுடையவர்களாக இருக்கின்றார்களே; செவ்வே அரு நரகம் நேராக கொடிய நரகத்தை; சேர்வது அரிது? அடைவதானது அரிதன்றோ?
thām ul̤arĕ chĕthanas are already there (in order to worship emperumān with their physical bodies and senses); tham ul̤l̤am ul̤ ul̤adhĕ (to think about emperumān) their minds are within themselves (without the need for having to search outside); thāmariyin pū ul̤adhĕ lotus flower (in order to offer to the divine feet of emperumān) is available in plenty (in all water bodies); ĕththum pozhudhu uṇdĕ the time required to praise emperumān is available in abundance; vāman sarvĕṣvaran (supreme being) vāmana mūrththi (who kept his divine feet on the heads of all); thirumaruvu thāl̤ beautiful divine feet; maruvu apt to be bowed to, in obeisance; senniyarĕ people with heads are available; sevvĕ directly; arunaragam the cruel hell; sĕrvadhu to reach; aridhu very difficult task to carry out

IT 22

2203 அரியதெளிதாகும் ஆற்றலால்மாற்றி *
பெருகமுயல்வாரைப் பெற்றால் * - கரியதோர்
வெண்கோட்டுமால்யானை வென்றுமுடித்தன்றே *
தண்கோட்டுமாமலரால்தாழ்ந்து.
2203 அரியது எளிது ஆகும் * ஆற்றலால் மாற்றி *
பெருக முயல்வாரைப் பெற்றால் ** கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை * வென்று முடித்தன்றே *
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து 22
2203 ariyatu ĕl̤itu ākum * āṟṟalāl māṟṟi *
pĕruka muyalvāraip pĕṟṟāl ** - kariyatu or
vĕṇ koṭṭu māl yāṉai * vĕṉṟu muṭittaṉṟe *
taṇ koṭṭu mā malarāl tāzhntu-22

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2203. Didn’t the dark Gajendra, the large elephant with white tusks, worship him with beautiful flowers and get what he wanted? If someone wants to achieve something, it will be easy for him if he truly tries like Gajendra.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆற்றலால் தன்னுடைய சக்தியினால்; மாற்றி சேதனனின் தடைகளை விலக்கி; பெருக முயல் வாரை பெரு முயற்சி செய்து; பெற்றால் சேதனன் எம்பெருமானை அடையப்பெற்றால்; அரியது செய்வதற்கு அருமையான செயலும்; எளிதாகும் எளிதாகும் எங்கே கண்டோமென்னில்; வென்றி முதலையை கொன்று; முடித்து அதை அழித்து; தண் குளிர்ந்த பொய்கை; கோட்டு கரையிலே; மா மலரால் சிறந்த தாமரை மலரால்; தாழ்ந்து வணங்கி அடிமை; அன்றே செய்யப்பெற்றதனால் அன்றோ; வெண் வெண்மையான; கோட்டு தந்தங்களையுடைய; கரியது கருத்த கஜேந்திரன் என்னும்; ஓர் யானை யானை வணங்க முடிந்தது
āṝalāl with his power; māṝi removing the hurdle (of chĕthana’s efforts); peruga muyalvārai the supreme entity, emperumān, who is taking all the efforts; peṝāl if we are able to attain [him]; ariyadhu mŏksham [ṣrīvaikuṇtam] which is very difficult to attain; el̤idhu āgum will become easy; veṇ kŏdu having white tusks; māl huge; kariyadhu ŏr yānai black complexioned, unique, gajĕndhrāzhwān [name of the elephant]; venṛi mudiththu victorious (over crocodile) and destroying; thaṇ cool; kŏdu on the bank of the pond; great; malarāl with lotus flower; thāzhndhu anṛĕ did it not bow down and carry out service [to emperumān]?

IT 23

2204 தாழ்ந்துவரங்கொண்டு தக்கவகைகளால் *
வாழ்ந்துகழிவாரை வாழ்விக்கும் * - தாழ்ந்த
விளங்கனிக்குக் கன்றெறிந்துவேற்றுருவாய் * ஞாலம்
அளந்தடிக்கீழ்க்கொண்டவவன்.
2204 தாழ்ந்து வரம் கொண்டு * தக்க வகைகளால் *
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் ** தாழ்ந்த
விளங் கனிக்குக் * கன்று எறிந்து வேற்று உருவாய் * ஞாலம்
அளந்து அடிக்கீழ்க் கொண்ட அவன் 23
2204 tāzhntu varam kŏṇṭu * takka vakaikal̤āl *
vāzhntu kazhivārai vāzhvikkum ** - tāzhnta
vil̤aṅ kaṉikkuk * kaṉṟu ĕṟintu veṟṟu uruvāy * ñālam
al̤antu aṭikkīzhk kŏṇṭa avaṉ -23

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2204. The lord who threw the calf onto the vilam tree and killed the two Asurans, went to Mahābali's sacrifice in the form of a dwarf, grew tall and measured the world and the sky with his two feet. If devotees worship him and live following good paths, he will give them a good life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாழ்ந்த பழத்தின் கனத்தால் தாழ்ந்திருந்த; விளம் கனிக்கு விளாம் பழத்தை உதிர்ப்பதற்காக; கன்று கன்றை; எறிந்து வீசி எறிந்தவனாயும்; வேற்று வேறு; உருவாய் உருவமாய் வாமன மூர்த்தியாய்; ஞாலம் உலகம்; அளந்து அளந்து அனைத்தையும்; அடிக் கீழ் தன் திருவடியின் கீழ்; கொண்ட அடங்கும்படி கொண்டுள்ள; அவன் அந்தப் பெருமான்; தாழ்ந்து தனது திருவடிகளிலே வணங்கி; வரம் தனது திருவருளை; கொண்டு பெற்று; தக்க தங்கள் நிலைமைக்கு; வகைகளால் ஏற்ற விதத்தில்; வாழ்ந்து செல்வமோ கைவல்யமோ; கழிவாரை பெற்று சுகம் விரும்பும் அவர்களை; வாழ்விக்கும் தானே வாழ்விப்பான்
thāzhndha (due to the weight of its fruits, the branches of the wood apple tree remained) lowered; kanikku for plucking the fruits; kanṛu eṛindhu throwing a calf (as a throwing stick); vĕṛu uru āy inapt form of a mendicant as vāmana (for one who has long hands due to the habit of always giving to others); gyālam the earth; al̤andhu measuring; adi kīzh under his divine feet; koṇda had under his control; avan that emperumān; thāzhndhu worshipping at his divine feet; varam koṇdu attaining his divine feet; thakka vagaigal̤āl appropriate manner (to their states); vāzhndhu obtaining wealth or kaivalyam (āthmā enjoying itself) or bhagavath prāpthi (attaining emperumān himself); kazhivārai those entities who wish to increase their comforts more and more; vāzhvikkum emperumān will grant them

IT 24

2205 அவன்கண்டாய்நன்னெஞ்சே!ஆரருளும்கேடும் *
அவன்கண்டாய் ஐம்புலனாய்நின்றான் * - அவன்கண்டாய்
காற்றுத்தீநீர்வான் கருவரைமண்காரோதச் *
சீற்றத்தீயாவானும்சென்று.
2205 அவன் கண்டாய் நல் நெஞ்சே * ஆர் அருளும் கேடும் *
அவன் கண்டாய் ஐம்புலனாய் நின்றான் ** அவன் கண்டாய்
காற்று தீ நீர் வான் * கரு வரை மண் கார் ஓதச் *
சீற்றத் தீ ஆவானும் சென்று 24
2205 avaṉ kaṇṭāy nal nĕñce * ār arul̤um keṭum *
avaṉ kaṇṭāy aimpulaṉāy niṉṟāṉ ** - avaṉ kaṇṭāy
kāṟṟu tī nīr vāṉ * karu varai maṇ kār otac *
cīṟṟat tī āvāṉum cĕṉṟu -24

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

2205. O good heart, he is happiness and sorrow in life. He is the five senses and he is the wind, fire, water, sky, the dark mountains, the ocean with waves and burning fire. He is everything.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; ஆர் அருள் செய்து மோக்ஷம்; அருளும் தருபவன் அவனே; கேடும் ஸம்ஸாரத்தில் வரக்கூடிய துன்பம்; அவன் கண்டாய் தீர்ப்பவனும் அவனே; ஐம்புலனாய் பஞ்சேந்திரியங்கள்; காற்று தீ நீர் வான் காற்று தீ நீர் வான்; மண் மண் ஆகியவற்றால் ஆன உடலுமாய்; நின்றான் நிற்பவனும்; அவன் கண்டாய் அவனே ஆனான்; கரு வரை கருத்த மலைகளும் அவனே; சென்று இந்த உலகை அழிக்க நினைத்து; கார் ஓத கறுத்த கடலை; சீற்றம் சீறிச் சுடவல்ல; தீ ஆவானும் வடவாக்னியும்; அவன் கண்டாய் அந்த எம்பெருமானேயாம்
nal nenjĕ ŏh (my) good heart!; ār arul̤um mŏksham (ṣrīvaikuṇtam) which results due to complete mercy; kĕdum samsāram (materialistic realm) which results due to aversion; avan kaṇdāy it is that emperumān himself, see for yourself; aimpulan the five senses; kāṝu, thī, nīr, vān, maṇ āy ninṛan avan kaṇdāy it is the sarvĕṣvaran (supreme being) himself who is existing as the body composed of the five elements; karu varai the dark mountains; (avan kaṇdāy) it is he; senṛu contemplating (to bring to an end this universe); kār ŏdham sīṝam thī āvānum the creator of the fire which will burn the ocean with a rage; avan kaṇdāy it is that emperumān only

IT 25

2206 சென்றதிலங்கைமேல் செவ்வேதன்சீற்றத்தால் *
கொன்றதிராவணனைக்கூறுங்கால் * - நின்றதுவும்
வேயோங்குதண்சாரல் வேங்கடமே * விண்ணவர்தம்
வாயோங்குதொல்புகழான்வந்து.
2206 சென்றது இலங்கைமேல் * செவ்வே தன் சீற்றத்தால் *
கொன்றது இராவணனை கூறுங்கால் ** நின்றதுவும்
வேய் ஓங்கு தண் சாரல் * வேங்கடமே * விண்ணவர் தம்
வாய் ஓங்கு தொல் புகழான் வந்து 25
2206 cĕṉṟatu ilaṅkaimel * cĕvve taṉ cīṟṟattāl *
kŏṉṟatu irāvaṇaṉai kūṟuṅkāl ** - niṉṟatuvum
vey oṅku taṇ cāral * veṅkaṭame * viṇṇavar tam
vāy oṅku tŏl pukazhāṉ vantu -25

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2206. He, famed since ancient times, the creator of the Vedās, praised by the gods in the sky, went to Lankā angrily, fought with the Raksasas and killed their king Rāvana. He has come to stay in the Thiruvenkatam hills where bamboo plants grow on the cool slopes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணவர் தேவர்களின்; தம்வாய் வாயினால் துதிக்கத்தக்க; ஓங்கு உயர்ந்த; தொல் புகழ் பெற்ற; புகழான் குணங்களையுடைய எம்பெருமான்; செவ்வே நேராக; சென்றது சீறிச்சென்றது; இலங்கை மேல் இலங்கையின் மேல்; தன் சீற்றத்தால் தன் கோபத்தால்; கொன்றது கொன்றது; இராவணனை இராவணனை; கூறுங்கால் சொல்லுமிடத்து; வந்து அனைவரும் வாழ வேண்டும் என்று வந்து; நின்றதுவும் நின்ற இடமும்; வேய் ஓங்கு மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள; தண் சாரல் குளிர்ந்த சாரல்களையுடைய; வேங்கடமே திருவேங்கடமே
viṇṇavar tham vāy apt to be praised by the mouth of nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); ŏngu thol pugazhān emperumān with great, long established qualities; sevvĕ directly; senṛadhu went with a rage; ilangai mĕl on lankā; than sīṝaththāl with his anger; konṛadhu destroyed; irāvaṇanai it was rāvaṇa; kūṛungāl when mentioned; vandhu ninṛadhuvum the place where he stood (so that all chĕthanas (sentient entities) would get uplifted at all times); vĕy ŏngu thaṇ sāral vĕngadamĕ at thiruvĕngadamalai with cool, mountainous sides and tall bamboo shoots.

IT 26

2207 வந்தித்தவனை வழிநின்றவைம்பூதம் *
ஐந்துமகத்தடக்கி ஆர்வமாய் * - உந்திப்
படியமரர்வேலையான் பண்டமரர்க்கீந்த *
படியமரர்வாழும்பதி.
2207 வந்தித்து அவனை * வழி நின்ற ஐம்பூதம் *
ஐந்தும் அகத்து அடக்கி ஆர்வமாய் ** உந்திப்
படி அமரர் வேலையான் * பண்டு அமரர்க்கு ஈந்த *
படி அமரர் வாழும் பதி 26
2207 vantittu avaṉai * vazhi niṉṟa aimpūtam *
aintum akattu aṭakki ārvamāy ** - untip
paṭi amarar velaiyāṉ * paṇṭu amararkku īnta *
paṭi amarar vāzhum pati -26

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2207. He rests on Adishesa on the ocean, and in the Venkatam hills where his devotees who have controlled their five senses, their feelings and their minds come and worship him. He gave the hills to the gods so that they can come, live there and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
படி அமரர் ஸ்ரீவைஷ்ணவர்கள்; வாழும் பதி வாழும் இடம் திருமலை; வழி நின்ற குறுக்கே வழியில் நிற்கும்; ஐம்பூதம் பஞ்சபூதங்களையும்; ஐந்தும் பஞ்சேந்திரியங்களையும்; அகத்து வெளியில் போகவிடாமல் உள்ளே; அடக்கி அடக்கி; அவனை எம்பெருமானை; வந்தித்து வணங்கி; ஆர்வமாய் பக்தியுடையவர்களாய்; உந்திப் படி முட்டி மோதி வந்து வணங்கும்; அமரர் தேவர்களுக்காக; வேலையான் பாற்கடலிலுள்ள பெருமான்; பண்டு அமரர்க்கு முன்பு நித்யஸுரிகளுக்கு; ஈந்த கொடுத்த பரிசாகும் திருமலை
padi amarar ṣrīvaishṇavas; vāzhum living permanently; padhi the holy place of thirumalai [thiruvĕngadam]; vazhi ninṛa standing as a hurdle (to attain emperumān); aimbhūtham aindhum the five elements and the five sensory perceptions; agaththadakki controlling well inside so that they do not wander out; avanai that emperumān; vandhiththu worshipping; ārvam āy as epitome of affection; undhi pushing and falling over one another; padi coming and worshipping; amarar for dhĕvas [celestial entities]; vĕlaiyān emperumān who is in thiruppāṛkadal (milky ocean); paṇdu amararkku īndha the place which he gave to the ancient dhĕvas, nithyasūris.

IT 27

2208 பதியமைந்துநாடிப் பருத்தெழுந்தசிந்தை *
மதியுரிஞ்சிவான்முகடுநோக்கி - கதிமிகுத்துஅம்
கோல்தேடியோடும் கொழுந்ததேபோன்றதே *
மால்தேடியோடும்மனம்.
2208 பதி அமைந்து நாடிப் * பருத்து எழுந்த சிந்தை *
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி ** கதி மிகுத்து அம்
கோல் தேடி ஓடும் * கொழுந்ததே போன்றதே *
மால் தேடி ஓடும் மனம் 27
2208 pati amaintu nāṭip * paruttu ĕzhunta cintai *
mati uriñci vāṉ mukaṭu nokki ** - kati mikuttu am
kol teṭi oṭum * kŏzhuntate poṉṟate *
māl teṭi oṭum maṉam -27

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2208. My mind searches for Thirumāl CHECK the god of Thiruvenkatam hills, like a vine climbing on the wall that grows towards the sky looking for a stick to support it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பதி திருப்பதியில்; அமைந்து பொருந்தி நின்று; நாடி ஆராய்ந்து; பருத்து எழுந்த சிந்தை ஆசையுடன் மேல் நோக்கி வளர்ந்து; மதி சந்திரமண்டலத்தையும்; உரிஞ்சி கடந்து; வான் முகடு அண்டத்தையும்; நோக்கி பார்த்து; மால் பரமபத நாதனை; தேடி தேடிக்கொண்டு; கதி மிகுத்து விரைவாக; ஓடும் மனம் செல்லும் என் மனம்; அம் கோல் அழகிய கோல்; தேடி ஓடும் தேடி ஓடும்; கொழுந்ததே கொழுந்தை கொடியை; போன்றதே போன்றதே என் உள்ளம்
padhi in the pious place of thirumalai; amaindhu standing aptly; nādi analysing; paruththu ezhundha sindhai having mind which grows in a rousing manner; madhi urinji going past the world of moon; vān mugadu nŏkki going (beyond) past the wall of the universe; māl thĕdi going in search of paramapadhanādhan (lord of ṣrīvaikuṇtam); gadhi miguththu ŏdum going very rapidly; manam my mind; am kŏl thĕdi ŏdum going in search of a beautiful supporting pole; kozhundhu adhu pŏnṛadhu it resembled a creeper

IT 28

2209 மனத்துள்ளான்வேங்கடத்தான் மாகடலான் * மற்றும்
நினைப்பரிய நீளரங்கத்துள்ளான் * - எனைப்பலரும்
தேவாதிதேவ னெனப்படுவான் * முன்னொருநாள்
மாவாய்பிளந்தமகன்.
2209 மனத்து உள்ளான் வேங்கடத்தான் * மா கடலான் * மற்றும்
நினைப்பு அரிய * நீள் அரங்கத்து உள்ளான் ** எனைப் பலரும்
தேவாதி தேவன் * எனப்படுவான் * முன் ஒரு நாள்
மா வாய் பிளந்த மகன் 28
2209 maṉattu ul̤l̤āṉ veṅkaṭattāṉ * mā kaṭalāṉ * maṟṟum
niṉaippu ariya * nīl̤ araṅkattu ul̤l̤āṉ ** ĕṉaip palarum
tevāti tevaṉ * ĕṉappaṭuvāṉ * muṉ ŏru nāl̤
mā vāy pil̤anta makaṉ -28

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2209. The ocean-colored lord, rests on milky ocean stays in Thiruvenkatam and in Thiruvarangam, a place that is hard to conceive. He split the mouth of Kesi when he came as a horse and he is praised by all as the god of the gods, abiding in the hearts of all.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எனைப் பலரும் கணக்கற்ற வைதிகர்களால்; தேவாதி தேவன் தேவாதி தேவன்; எனப்படுவான் என்று சொல்லப்படுபவனும்; மா கடலான் பாற் கடலிலே சயனித்திருப்பவனும்; முன் ஒரு நாள் முன்பு ஒரு நாள்; மாவாய் குதிரையாக வந்த அசுரன் கேசியின்; பிளந்த வாயைப் பிளந்தவனும்; மகன் சிறுபிள்ளையானவனும்; மற்றும் மேலும்; வேங்கடத்தான் திருமலையிலிருப்பவனும்; நினைப்பு நினைப்பதற்கு; அரிய அரியவனும்; நீள் அரங்கத்து திருவரங்கத்தில்; உள்ளான் உள்ளவனுமான; மனத்து பெருமான் என் மனத்திலும்; உள்ளான் உள்ளான்
enai palarum countless vaidhika purushas (those who follow vĕdham, the sacred text) and vĕdha purusha (vĕdham itself); thus by all entities; dhĕvādhi dhĕvan enap paduvān he is famously called as the lord of all dhĕvas (celestial entities); mā kadalān one who is reclining on the expansive thiruppāṛkadal (milky ocean); mun oru nāl̤ once upon a time (when he incarnated as ṣrī krishṇa); mā vāy pil̤andha one who tore the mouth of a demon who came in the form of a horse, kĕṣi; magan a small child; maṝum more than that; vĕngadhaththān one who, as simplicity personified, stands in thirumalai; ninaippariya nīl̤ arangathu ul̤l̤ān one who is reclining in the temple which is sweet beyond anyone’s thoughts; manaththu ul̤l̤ān he is permanently residing in my mind.

IT 29

2210 மகனாகக்கொண்டெடுத்தாள் மாண்பாயகொங்கை *
அகனாரவுண்பனென்றுண்டு * - மகனைத்தாய்
தேறாதவண்ணம் திருத்தினாய் * தென்னிலங்கை
நீறாகவெய்தழித்தாய்! நீ.
2210 மகனாகக் கொண்டு எடுத்தாள் * மாண்பு ஆய கொங்கை *
அகன் ஆர உண்பன் என்று உண்டு ** மகனைத் தாய்
தேறாத வண்ணம் * திருத்தினாய் * தென் இலங்கை
நீறு ஆக எய்து அழித்தாய்! நீ 29
2210 makaṉākak kŏṇṭu ĕṭuttāl̤ * māṇpu āya kŏṅkai *
akaṉ āra uṇpaṉ ĕṉṟu uṇṭu ** - makaṉait tāy
teṟāta vaṇṇam * tiruttiṉāy * tĕṉ ilaṅkai
nīṟu āka ĕytu azhittāy! nī -29

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2210. You shot your arrows and destroyed southern Lankā. You killed Putanā when she came as a mother to give you milk from her breasts. Yet even though your mother Yashodā saw all these heroic deeds she was not afraid to give you her milk.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் இலங்கை தென் இலங்கை; நீறாக சாம்பலாகும்படி; எய்து அம்புகளை எய்து; அழித்தாய் நீ! அழித்தாய் நீ!; மகனாக உன்னைப் புத்திரன்; கொண்டு என்று; மாண்பு ஆய கொங்கை பாலைக் கொடுக்க; எடுத்தாள் எடுத்தாள் பூதனை; அகன் ஆர வயிறார; உண்பன் உண்ணப் போகிறேன்; என்று என்று பாலோடு அவள் உயிரையும்; உண்டு உண்டு அவளை முடித்தாய்; மகனை மகனான உன் விஷயத்தில்; தாய் தாயான யசோதை; தேறாத வண்ணம் நம்பிக்கையற்றிருக்கும்படி; திருத்தினாய் செய்துவிட்டாய்
thennilangai the beautiful lankā; nīṛu āga to be converted into ashes; eydhu shooting arrows; azhiththāy ŏh one who destroyed; you; magan āga koṇdu eduththāl̤ (in order to suckle you with affection) the one who took a form to make you as her child, such pūthanā’s; māṇbu āya kongai beautiful bosom; agan āra uṇban enṛu uṇdu saying that you would drink to your stomach’s content, thus drinking (her life along with her milk); maganai in your matter, as her child; thāy yaṣŏdhā, your mother; thĕṛādha vaṇṇam to be without trust; thiruththināy you carried out

IT 30

2211 நீயன்றுலகளந்தாய் நீண்டதிருமாலே! *
நீயன்றுலகிடந்தாயென்பரால் * நீயன்று
காரோதம்முன்கடைந்து பின்னடைத்தாய்மாகடலை *
பேரோதமேனிப்பிரான்!
2211 நீ அன்று உலகு அளந்தாய் * நீண்ட திருமாலே! *
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் ** நீ அன்று
கார் ஓதம் முன் கடைந்து * பின் அடைத்தாய் மா கடலை *
பேர் ஓத மேனிப் பிரான்! 30
2211 nī aṉṟu ulaku al̤antāy * nīṇṭa tirumāle! *
nī aṉṟu ulaku iṭantāy ĕṉparāl ** nī aṉṟu
kār otam muṉ kaṭaintu * piṉ aṭaittāy mā kaṭalai *
per ota meṉip pirāṉ! -30

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2211. People say, “O ocean-colored Thirumāl! You measured the world at Mahābali’s sacrifice, became a boar and split open the earth to bring the earth goddess up from the underworld, churned the wide milky ocean, took nectar and gave it to the gods, and made a bridge on the ocean and went to Lankā to fight the Raksasas. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் ஓத பெரிய கடல் போன்ற; மேனி திருமேனியையுடைய; பிரான்! பெருமானே!; நீண்ட எண்ணுதற்கு அரிய பெருமையுடைய; திருமாலே! திருமாலே!; நீ அன்று உலகு நீ அன்று உலகங்களை; அளந்தாய் திருவிக்கிரமனாக அளந்தாய்; நீ வராகமாக வந்து நீ; அன்று உலகு அன்று உலகை; இடந்தாய் அண்டபித்திலிருந்து குத்தி எடுத்தாய்; நீ அன்று நீ அன்று; கார் ஓதம் கருங்கடலை; முன் கடைந்து கடைந்து அம்ருதம் எடுத்தாய்; மா கடலை பெருங்கடலில்; பின் அடைத்தாய் அணைகட்டினாய்; என்பரால் என்று இவ்வாறு ரிஷிகள் கூறுவர்
pĕrŏdham mĕnip pirān ŏh benefactor who has the divine form like a huge ocean!; nīṇda thirumālĕ ŏh thirumāl, who has fame beyond one’s thoughts!; you, who are like these; anṛu once upon a time; ulagu all the worlds; al̤andhāy measured (as thrivikrama); nī anṛu you, at another point of time; ulagu the earth; idandhāy (as the great varāha) dug out the earth (from the walls of the universe); nī anṛu you, at another point of time; kār ŏdham mun kadaindhu churned the dark ocean initially; mā kadalai a huge ocean (like that); pin later (during rāmāvathāram); adaiththāy built a bridge and blocked; enbar so say (the great sages); āl these are also some of the amaśing activities

IT 31

2212 பிரானென்றுநாளும் பெரும்புலரியென்றும் *
குராநற்செழும்போதுகொண்டு * - வராகத்
தணியுருவன் பாதம்பணியுமவர்கண்டீர் *
மணியுருவம்காண்பார்மகிழ்ந்து.
2212 பிரான் என்றும் நாளும் * பெரும் புலரி என்றும் *
குரா நல் செழும் போது கொண்டு ** வராகத்து
அணி உருவன் * பாதம் பணியும் அவர் கண்டீர் *
மணி உருவம் காண்பார் மகிழ்ந்து 31
2212 pirāṉ ĕṉṟum nāl̤um * pĕrum pulari ĕṉṟum *
kurā nal cĕzhum potu kŏṇṭu ** - varākattu
aṇi uruvaṉ * pātam paṇiyum avar kaṇṭīr *
maṇi uruvam kāṇpār makizhntu -31

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-2

Simple Translation

2212. If the devotees go every day in the morning taking fresh flowers and worship the feet of the beautiful lord who took the form of a beautiful boar to bring back the earth goddess from the underworld, they will see the lord’s shining form and be happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிரான் உபகாரங்கள் செய்பவன் என்று பிரானை; பெரும் புலரி இன்றே நல்ல நாள்; என்றும் என்று கொண்டாடிக்கொண்டு; நாளும் நாள்தோறும்; நல் செழும் நல்ல மணம் மிக்க; குரா போது குரா மலர்களை; கொண்டு கொண்டு; வராகத்து வராக; அணி உருவன் பெருமானின்; பாதம் திருவடிகளை; பணியும் அவர் கண்டீர் வணங்குபவர்களே; மணி திவ்யமங்கள; உருவம் விக்ரஹத்தை; மகிழ்ந்து மகிழ்ந்து வணங்கி; காண்பார் ஆனந்தம் அடைவர்கள்
piṛan enṛum ŏh one who carried out great benefits!; peru pulari today is the dawn of happiness; nāl̤um every day; nal fragrant; sezhu beautiful; kurā pŏdhu koṇdu with kurā flowers (a type of flower from forest trees); varāgaththu aṇi uruvan pādham divine feet of emperumān in the form of beautiful wild boar; paṇiyum avar kaṇdir only those who worship; maṇi uruvam the sweet, auspicious form (of that emperumān); magizhndhu kānbar will worship with happiness

IT 32

2213 மகிழ்ந்ததுசிந்தை திருமாலே! * மற்றும்
மகிழ்ந்தது உன்பாதமேபோற்றி * - மகிழ்ந்தது
அழலாழிசங்க மவைபாடியாடும் *
தொழிலாகம் சூழ்ந்துதுணிந்து.
2213 மகிழ்ந்தது சிந்தை * திருமாலே * மற்றும்
மகிழ்ந்தது * உன் பாதமே போற்றி ** மகிழ்ந்தது
அழல் ஆழி சங்கம் * அவை பாடி ஆடும் *
தொழில் ஆகம் சூழ்ந்து துணிந்து 32
2213 makizhntatu cintai * tirumāle * maṟṟum
makizhntatu * uṉ pātame poṟṟi ** - makizhntatu
azhal āzhi caṅkam * avai pāṭi āṭum *
tŏzhil ākam cūzhntu tuṇintu -32

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2213. O Thirumāl, my heart is happy seeing you and worshiping your feet. I am happy to sing and dance, and your conch and fiery discus are happy seeing me when I worship you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலே! லக்ஷ்மீபதியே!; சிந்தை என் மனது; சூழ்ந்து உன்னை சிந்தித்து; துணிந்து உறுதி கொண்டு; மகிழ்ந்தது மகிழ்ந்தது; மற்றும் மேலும் வாக்கும்; உன் பாதமே உன் திருவடிகளை; போற்றி துதித்து; மகிழ்ந்தது மகிழ்ந்தது; ஆகம் என் சரீரம்; அழல் எதிரிகளின் மீது நெருப்பைக் கக்கும்; ஆழி சங்கம் சக்கரத்தையும் சங்கையும்; அவை மற்றுமுள்ள ஆயுதங்களையும்; பாடி ஆடும் கொண்டாடிப் பாடி ஆடும்; தொழில் மகிழ்ந்தது செயலிலே மகிழ்ந்தது
thirumālĕ ŏh the consort of mahālakshmi!; sindhai my heart; sūzhndhu engaged; thuṇindhu with firmness; magizhndhadhu became happy; maṝum my faculty of speech, after my heart; un pādhamĕ pŏṝi worshipping only your divine feet; magizhndhadhu became happy; āgam my body; azhal one that spits fire on enemies; āzhi the divine chakkara (disc); sangam ṣrī pānchajanyam (conch); avai and other divine weapons; pādi ādum singing and dancing; thozhil in the activity; magizhndhadhu became happy

IT 33

2214 துணிந்ததுசிந்தை துழாயலங்கல் * அங்கம்
அணிந்தவன்பேர் உள்ளத்துப்பல்கால் * - பணிந்ததுவும்
வேய்பிறங்குசாரல் விறல்வேங்கடவனையே *
வாய்திறங்கள்சொல்லும்வகை.
2214 துணிந்தது சிந்தை * துழாய் அலங்கல் * அங்கம்
அணிந்தவன் பேர் * உள்ளத்துப் பல்கால் ** பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் * விறல் வேங்கடவனையே *
வாய் திறங்கள் சொல்லும் வகை 33
2214 tuṇintatu cintai * tuzhāy alaṅkal * aṅkam
aṇintavaṉ per * ul̤l̤attup palkāl ** - paṇintatuvum
vey piṟaṅku cāral * viṟal veṅkaṭavaṉaiye *
vāy tiṟaṅkal̤ cŏllum vakai -33

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2214. When I bow to the feet of the lord adorned with many thulasi garlands, my heart feels happy. I praise the heroic one with my tongue the god of the Thiruvenkatam hills where bamboo grows on the slopes.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்தை என் மனம்; துழாய் அலங்கல் துளசி மாலை; அணிந்தவன் அணிந்தவன்; பேர் திருநாமங்களை; பல்கால் பலமுறை; உள்ளத்து நினைப்பதில்; துணிந்தது உறுதி பூண்டது; அங்கம் எனது உடலும் எப்போதும்; பணிந்ததுவும் அவனையே வணங்குகிறது; வாய் சொல்லும் என் வாக்கும்; வேய் மூங்கில் மிகுந்த; பிறங்கு மலைகளையுடைய; சாரல் விறல் திருமலையிலிருக்கும்; வேங்கடவனையே பெருமானுடைய; திறங்கள் தன்மைகளைத் துதிக்கும்; வகை துணிந்தது வகையில் துணிந்தது
sindhai my mind; thuzhāy alangal (angam) aṇindhavan pĕr the divine names of emperumān who is donning the thul̤asi garland on his divine form; palgāl many times; ul̤l̤aththu in thinking; thuṇindhadhu had firm, deep faith; angam my body too; palgāl always; paṇindhadhu worships; vĕy piṛangu sāral having foothills with plenty of bamboo; viral vĕngadavanaiyĕ only emperumān who is residing in thirumalai and is strong; vāy mouth [speech] too; thiṛangal̤ (emperumān’s) qualities; sollum vagai in the way it says; thuṇindhadhu became confident

IT 34

2215 வகையாலவனி இரந்தளந்தாய்பாதம் *
புகையால்நறுமலரால்முன்னே * - மிகவாய்ந்த
அன்பாக்கியேத்தி அடிமைப்பட்டேன்உனக்கு *
என்பாக்கியத்தாலினி.
2215 வகையால் அவனி * இரந்து அளந்தாய் பாதம் *
புகையால் நறு மலரால் முன்னே ** மிக வாய்ந்த
அன்பு ஆக்கி ஏத்தி * அடிமைப்பட்டேன் உனக்கு *
என் பாக்கியத்தால் இனி 34
2215 vakaiyāl avaṉi * irantu al̤antāy pātam *
pukaiyāl naṟu malarāl muṉṉe ** - mika vāynta
aṉpu ākki etti * aṭimaippaṭṭeṉ uṉakku *
ĕṉ pākkiyattāl iṉi -34

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2215. As a dwarf you asked for three feet of land from Mahābali and when he gave it, you measured the world and the sky with your feet. I worshiped you lovingly with fragrant smoke and fresh flowers and became your slave. This is my good fortune.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்னே முன்பொரு காலத்தில்; வகையால் சூழ்ச்சி செய்து; அவனி இரந்து உலகை யாசித்து; அளந்தாய் அளந்து கொண்ட; பாதம் உன் திருவடிகளை; புகையால் தூப தீபங்களாலும்; நறு நல்ல மணம்மிக்க; மலரால் மலர்களாலும்; மிக வாய்ந்த மிகுந்த; அன்பு ஆக்கி அன்போடு; ஏத்தி இனி இனி எப்போதும் துதிக்கும்; என் பாக்கியத்தால் பாக்கியத்தால்; உனக்கு உனக்கு; அடிமைப்பட்டேன் அடிமைப்பட்டேன்
munnĕ in earlier time; vagaiyāl through a strategy; avani earth; irandhu (from mahābali) taking as alms; al̤andhāy measured with your; pādham divine feet; pugaiyāl̤ with smoke; naṛu malarāl with good, fragrant flowers; miga vāyndha anbu ākki as one with lot of affection; ĕththi praising; ini henceforth; en bākkiyaththāl the fortune through the special mercy that you showered on me; unakku adimai pattĕn ī became your servitor

IT 35

2216 இனிதென்பர்காமம் அதனிலுமாற்ற *
இனிதென்பர் தண்ணீருமெந்தாய்! * - இனிதென்று
காமநீர்வேளாது நின்பெருமைவேட்பரேல் *
சேமநீராகும்சிறிது.
2216 இனிது என்பர் காமம் * அதனிலும் ஆற்ற *
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் ** இனிது என்று
காமம் நீர் வேளாது * நின் பெருமை வேட்பரேல் *
சேம நீர் ஆகும் சிறிது 35
2216 iṉitu ĕṉpar kāmam * ataṉilum āṟṟa *
iṉitu ĕṉpar taṇṇīrum ĕntāy ** - iṉitu ĕṉṟu
kāmam nīr vel̤ātu * niṉ pĕrumai veṭparel *
cema nīr ākum ciṟitu -35

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 2-62, 63, 9-31

Simple Translation

2216. People say passion is sweet but water is sweeter. O father, if people do not want passion or water and only listen to your heroism that will be the water that protects them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எந்தாய்! என் ஸ்வாமியே!; காமம் பாமரர்கள் சப்தாதி விஷயங்களை; இனிது என்பர் போக்யமானது என்பர்; தண்ணீரும் தண்ணீர்; அதனிலும் சப்தாதி விஷயங்களைக் காட்டிலும்; ஆற்ற இனிது என்பர் போக்யமானது என்பர்; காமம் கீழான காமத்தையும்; நீர் தண்ணீரையும்; இனிது என்று போக்யம் என்று அதில்; வேளாது ஈடுபடாமல்; நின் பெருமை உன் பெருமையில்; சிறிது சிறிதேனும்; வேட்பரேல் ஈடுபடுவார்களேயாகில்; சேம நீர் ஆகும் உலகம் உய்வு பெறும்
endhāy ŏh my l̤ord!; kāmam lowly pursuits such as ṣabdham etc (five sensory perceptions such as sound etc); inidhu enbar will consider as fit to be enjoyed; thaṇṇīr adhanilum āṝa inidhu enbar will say that water is sweeter than those pursuits such as ṣabdham etc; kāmam nīr the lowly pursuits and water, mentioned above; inidhu enṛu vĕl̤ādhu without desiring them as being enjoyable; nin perumai siṛidhu vĕtpar ĕl if they desire even a little bit, you as being enjoyable; sĕmam nīr āgum (in all situations) will have the characteristic of protecting [them]

IT 36

2217 சிறியார்பெருமை சிறிதின்கணெய்தும் *
அறியாரும் தாமறியாராவர் * - அறியாமை
மண்கொண்டுமண்ணுண்டு மண்ணுமிழ்ந்தமாயனென்று *
எண்கொண்டுஎன்னெஞ்சே! இரு.
2217 சிறியார் பெருமை * சிறிதின் கண் எய்தும் *
அறியாரும் தாம் அறியார் ஆவர் ** அறியாமை
மண் கொண்டு மண் உண்டு * மண் உமிழ்ந்த மாயன் என்று *
எண் கொண்டு என் நெஞ்சே ! இரு 36
2217 ciṟiyār pĕrumai * ciṟitiṉ kaṇ ĕytum *
aṟiyārum tām aṟiyār āvar ** - aṟiyāmai
maṇ kŏṇṭu maṇ uṇṭu * maṇ umizhnta māyaṉ ĕṉṟu *
ĕṇ kŏṇṭu ĕṉ nĕñce ! iru -36

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2217. Mean people can achieve fame only by doing mean deeds. They know nothing. O my heart, worship our Māyan who swallowed the earth and spat it out and be calm.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறியார் அற்பமான எண்ணமுடையவர்களின்; பெருமை திமிரான மேன்மை; சிறிதின் கண் மேன்மேலும் தாழ்விலேயே; எய்தும் கொண்டு சேர்க்கும்; அறியாரும் அவிவேகிகள் தங்களை சர்வஜ்ஞரென்று; தாம் நினைத்தால் தாங்கள் மேன்மேலும்; அறியார் ஆவர் அறியாதவர்களாகவே ஆவர்; என் நெஞ்சே! என் மனமே!; அறியாமை அறியாமல் செய்த இந்த செயல்களை; மண் கொண்டு மகாபலியிடத்தில் பூமியைப் பெற்றவனும்; மண் பிரளய காலத்தில் பூமியை; உண்டு வயிற்றில் வைத்துக் காத்தவனும்; மண் பிறகு அந்த பூமியை; உமிழ்ந்த ஸ்ருஷ்ட்டித்தவனுமான; மாயன் என்று மாயன் எம்பெருமான் என்று; எண் கொண்டு இடைவிடாது நினைத்து; இரு இருந்தால் பயமற்று இருப்பாய்
siṛiyār (without any greatness in them, by nature) lowly samsāris (dwellers of this materialistic realm; perumai greatness (coming out of ego thinking that there is none their equal ); siṛidhin kaṇ eydhum will take them towards lowliness only (repeatedly); aṛiyārum people who cannot discriminate between good and bad (though they think that they are omniscient); thām aṛiyār āvār they will become more and more ignorant; en nenjĕ ŏh my heart!; aṛiyāmai unknown to others; maṇ koṇdu obtaining earth (from mahābali); maṇ uṇdu (during deluge) keeping that earth inside his divine stomach; maṇ umizhndha (later) spitting out that earth; māyan enṛu emperumān who is an amaśing entity; eṇ koṇdu thinking constantly; iru be without fear (that for us who have attained him, there is no shortcoming)

IT 37

2218 இருந்தண்கமலத் திருமலரினுள்ளே *
திருந்துதிசைமுகனைத்தந்தாய்! * - பொருந்தியநின்
பாதங்களேத்திப் பணியாவேல் * பல்பிறப்பும்
ஏதங்களெல்லாம்எமக்கு.
2218 இரும் தண் கமலத்து * இரு மலரின் உள்ளே *
திருந்து திசைமுகனைத் தந்தாய் ** பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் * பணியாவேல் * பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு 37
2218 irum taṇ kamalattu * iru malariṉ ul̤l̤e *
tiruntu ticaimukaṉait tantāy ** - pŏruntiya niṉ
pātaṅkal̤ ettip * paṇiyāvel * pal piṟappum
etaṅkal̤ ĕllām ĕmakku -37

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2218. You created the four-headed god, the creator of the Vedās who stays on a beautiful lotus on your navel. If we do not praise your divine feet and bow to you we will have only trouble in all our births.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரும் தண் பெரிய குளிர்ந்த; கமலத்து நாபிக்கமலத்தின்; இரு மலரின் பெருமை பொருந்திய; உள்ளே பூவில்; திருந்து திறமையுடைய; திசை முகனை நான்முகனை; தந்தாய்! தந்து அருளினாய்; பொருந்திய ஸர்வலோக சரண்யனான; நின் பாதங்கள் உன்னுடைய திருவடிகளை; ஏத்தி வாயாரத் துதித்து; பணியாவேல் வணங்கித் தொழாவிடில்; எமக்கு என்னுடைய; பல் பிறப்பும் எல்லாம் பிறவிகளெல்லாம்; ஏதங்கள் பயனற்றதாகும்
īru large; thaṇ cool; kamalaththu the navel which is like lotus flower; iru malarin ul̤l̤ĕ inside the great flower; thirundhu capable; ninthisaimuganai nānmugan (brahmā); thandhāy ŏh emperumān, the benefactor, gave us!; porundhiya fitting with all; nin your; pādhangal̤ divine feet; ĕththi praising handsomely; paṇiyā ĕl if not utilised in worshipping with bowed head; emakku for us; pal piṛappum ellām the various births that we take; ĕdhangal̤ totally useless

IT 38

2219 எமக்கென்றிருநிதியம் ஏமாந்திராதே *
தமக்கென்றுஞ்சார்வமறிந்து * - நமக்கென்றும்
மாதவனேயென்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்
ஓதுவதே நாவினாலோத்து.
2219 எமக்கு என்று இரு நிதியம் * ஏமாந்து இராதே *
தமக்கு என்றும் சார்வம் அறிந்து ** நமக்கு என்றும்
மாதவனே என்னும் * மனம் படைத்து * மற்று அவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து 38
2219 ĕmakku ĕṉṟu iru nitiyam * emāntu irāte *
tamakku ĕṉṟum cārvam aṟintu ** - namakku ĕṉṟum
mātavaṉe ĕṉṉum * maṉam paṭaittu * maṟṟu avaṉ per
otuvate nāviṉāl ottu -38

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2219. Do not think you have much wealth and depend on it to make your life without trouble. You should think Mādhavan is yours and keep him in your heart. Reciting his names with your tongue is just like reciting the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரு நிதியம் பெருஞ்செல்வத்தை; எமக்கு தங்களுடையதாக; என்று நினைத்து; ஏமாந்து இருமாப்பு; இராதே கொண்டிராமல்; தமக்கு தங்களுக்கு; என்றும் எப்போதும்; சார்வம் ரக்ஷகமாயிருக்கக் கூடிய; அறிந்து உபாயத்தை அறிந்து; நமக்கு என்றும் நமக்கு என்றும்; மாதவனே என்னும் எம்பெருமானே எல்லாம்; மனம் படைத்து என்ற மனம் படைத்தவராக; மற்று அவன் பேர் அவன் திருநாமத்தையே; ஓதுவதே இடைவிடாது வேதம் போல் ஓதுவதே; நாவினால் நாவிற்கு; ஓத்து ஓதுவதற்கு விஷயமாக உணரவேண்டும்
irunidhiyam great wealth; emakku enṛu thinking that it is for oneself; ĕmāndhu irādhĕ instead of feeling arrogant; thamakku enṛum sārvam aṛindhu knowing the entity which will always protect us; namakku enṛum mādhavanĕ ennum manam padaiththu having the heart with conviction that “it is only emperumān who is everything for us at all times”; maṝu on top of that; avan pĕr his divine names; ŏdhuvadhĕ to recite with tune; nāvināl ŏththu apt for our tongue to recite like vĕdham.

IT 39

2220 ஓத்தின்பொருள்முடிவுமித்தனையே * உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமின்ஏழைகாள்! * -ஓத்ததனை
வல்லீரேல் நன்று. அதனைமாட்டீரேல் * மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின்சுருக்கு.
2220 ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே * உத்தமன் பேர்
ஏத்தும் * திறம் அறிமின் ஏழைகாள் ** ஓத்து அதனை
வல்லீரேல் * நன்று அதனை மாட்டீரேல் * மாதவன் பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு 39
2220 ottiṉ pŏrul̤ muṭivum ittaṉaiye * uttamaṉ per
ettum * tiṟam aṟimiṉ ezhaikāl̤ ** - ottu ataṉai
vallīrel * naṉṟu ataṉai māṭṭīrel * mātavaṉ per
cŏlluvate ottiṉ curukku -39

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2220. O ignorant people, know how to praise the names of the good lord. That is what the Vedās say. If you follow what you have learned from the sastras that is good. If you cannot do that, just say the names of Mādhavan— that is really the meaning of the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உத்தமன் புருஷோத்தமனான எம்பெருமானின்; பேர் திருநாமங்களைக் கொண்டு; ஏத்தும் திறம் துதிக்கும் செயலாகிற; இத்தனையே இதுவே; ஓத்தின் பொருள் வேதார்த்தங்களின்; முடிவும் ஸாரமாகும்; ஓத்து அதனை வேதப் பொருளை; வல்லீரேல் அறிவீர்களானால்; அறிமின் அறிந்து கொள்ளுங்கள்; ஏழைகாள்! அறிவிற் குறைந்தவர்களாகில்; நன்று அதனை அது செய்ய; மாட்டீரேல் சக்தியற்றவர்களாகில்; மாதவன் திருமாலின்; பேர் திருநாமங்களை; சொல்லுவதே உச்சரிப்பதே; ஓத்தின் சுருக்கு வேதங்களின் சுருக்கம்; அறிமின் இதையாவது அறியுங்கள்
uththaman pĕr with the divine names of emperumān, who is the most supreme among all entities; ĕththum thiṛam the activity of praising; iththanaiyĕ just this much; ŏththin porul̤ mudivum is the essence of meaning of vĕdhams; ŏththu adhanai valleerĕl if you are capable of knowing the meaning of vĕdham; aṛimin do know; ĕzhaigāl̤ ŏh people, impoverished by ignorance!; nanṛu adhanai māttirĕl if you do not have the capability to know that meaning; mādhavan pĕr solluvadhĕ reciting the divine names of ṣrīman nārāyaṇan is; ŏththin surukku the gist of vĕdham; aṛimin know, at least, this.

IT 40

2221 சுருக்காகவாங்கிச் சுலாவினின்று * ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின்கண்டீர்! * - திருப்பொலிந்த
ஆகத்தான் பாதமறிந்தும் அறியாத *
போகத்தாலில்லைபொருள்.
2221 சுருக்காக வாங்கி * சுலாவி நின்று * ஐயார்
நெருக்கா முன் * நீர் நினைமின் கண்டீர் ** திருப் பொலிந்த
ஆகத்தான் * பாதம் அறிந்தும் அறியாத *
போகத்தால் இல்லை பொருள் 40
2221 curukkāka vāṅki * culāvi niṉṟu * aiyār
nĕrukkā muṉ * nīr niṉaimiṉ kaṇṭīr ** - tirup pŏlinta
ākattāṉ * pātam aṟintum aṟiyāta *
pokattāl illai pŏrul̤ -40

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2221. Before Yama comes and throws his rope and catches you, think of the names of the lord. You know that real happiness is to worship the feet of the lord with Lakshmi on his chest. There is no other thing could bring you happiness except to know the lord and worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுலாவி நின்று உடம்பு முழுவதும் சூழ்ந்து; சுருக்காக வாங்கி சரீரத்தைச் சுருங்கச் செய்து; ஐயார் கோழையானது உடலை; நெருக்கா துன்புறுத்துவதற்கு; முன் முன்பே; திருப் பொலிந்த திருமகளுடன் விளங்கும்; ஆகத்தான் மார்புடைய பெருமானின்; பாதம் திருவடிகளை; நீர் நினைமின் நீங்கள் சிந்தியுங்கள்; அறிந்தும் பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்; அறியாத அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல; போகத்தால் சப்தாதி விஷயங்களை அநுபவிப்பதால்; பொருள் இல்லை ஒரு பயனும் இல்லை; கண்டீர் கண்டுகொள்ளுங்கள்
aiyār phlegm (a mucous material); surukkāga vāngi contracting the body; sulāvi ninṛu surrounding the body fully [spreading to all parts of the body]; nerukkā mun before it starts troubling; thirup polindha āgaththān pādham the divine feet of emperumān who is decorated with ṣrī mahālakshmi on his chest; nīr ninaimin kaṇdīr please think of [his divine feet]; aṛindhum even if you are conversant with matters relating to emperumān; aṛiyādha those which will make you ignorant; bŏgaththāl enjoying worldly pursuits starting with ṣabdham (the five sensory perceptions); porul̤ illai there is no purpose

IT 41

2222 பொருளாலமருலகம் புக்கியலலாகாது *
அருளாலறமருளுமன்றே? * - அருளாலே
மாமறையோர்க்கீந்த மணிவண்ணன்பாதமே *
நீமறவேல்நெஞ்சே! நினை.
2222 பொருளால் அமர் உலகம் * புக்கு இயலல் ஆகாது *
அருளால் அறம் அருளும் அன்றே ? ** அருளாலே
மா மறையோர்க்கு ஈந்த * மணிவண்ணன் பாதமே *
நீ மறவேல் நெஞ்சே! நினை 41
2222 pŏrul̤āl amar ulakam * pukku iyalal ākātu *
arul̤āl aṟam arul̤um aṉṟe ? ** - arul̤āle
mā maṟaiyorkku īnta * maṇivaṇṇaṉ pātame *
nī maṟavel nĕñce! niṉai -41

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2222. No one can enter the world of the gods just by wealth. The only way to attain Mokshā is by his grace. O heart, don't forget his sapphire-colored feet that give Mokshā to divine sages. Always meditate on his names.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமர் உலகம் சுவர்க்கலோகத்தை; பொருளால் தனத்தால்; புக்கு போய்ச்சேர; இயலல் ஆகாது முயல்வது முடியாது; அருளால் எம்பெருமான் அருளால்; அறம் புண்யத்தின் பயனால்; அன்றே தன் கிருபையால்; அருளும் அருளுவானாம்; அருளாலே கிருபையால் பரம வைதிகர்களுக்கு; ஈந்த தன்னையே அளித்த; மணி மணி வண்ணனான; வண்ணன் எம்பெருமான்; பாதமே திருவடிகளையே; நெஞ்சே! மனமே!; நீ மறவேல் நீ மறக்காமல்; நினை தியானிப்பாயாக
amarulagam the world of dhĕvas [heaven]; porul̤āl with wealth; pukku iyal āgādhu is not proper to enter; arul̤āl with mercy; aṛam through the fruits of puṇya (good deeds); arul̤um anṛĕ will grant with his mercy; arul̤ālĕ through his mercy; mā maṛaiyuŏrkku for the parama vaidhikas (those who stand by vĕdhas, the sacred texts); īndha one who offered himself; maṇivaṇṇan pādhamĕ the divine feet of emperumān who has blue complexion; nenjĕ ŏh my heart!; nī maṛavĕl do not forget; ninai keep meditating

IT 42

2223 நினைப்பன்திருமாலை நீண்டதோள்காண *
நினைப்பார் பிறப்பொன்றும்நேரார் * - மனைப்பால்
பிறந்தார்பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் *
துறந்தார்தொழுதாரத்தோள்.
2223 நினைப்பன் திருமாலை * நீண்ட தோள் காண *
நினைப்பார் பிறப்பு ஒன்றும் நேரார் ** மனைப்பால்
பிறந்தார் பிறந்து எய்தும் * பேரின்பம் எல்லாம் *
துறந்தார் தொழுதார் அத் தோள் 42
2223 niṉaippaṉ tirumālai * nīṇṭa tol̤ kāṇa *
niṉaippār piṟappu ŏṉṟum nerār ** - maṉaippāl
piṟantār piṟantu ĕytum * periṉpam ĕllām *
tuṟantār tŏzhutār at tol̤ -42

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2223. I think of Thirumāl always. If devotees worship and meditate on the wide arms of the lord, they will not have any future births. Just by worshiping him the sages get all the happiness that those receive who were born to enjoy family life in this world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலை எம்பெருமானின்; நீண்டதோள் சிறந்த திருத்தோள்களை; காண கண்டு; நினைப்பன் அநுபவிக்க நினைக்கின்றேன்; நினைப்பார் இப்படி நினைப்பவர்கள்; பிறப்பு ஒன்றும் எவ்வித பிறப்பையும்; நேரார் அடையமாட்டார்கள்; அத் தோள் அத் தோள்களை; தொழுதார் தொழுபவர்கள்; மனைப்பால் ஸம்ஸாரத்தில்; பிறந்தார் பிறந்தவர்களானலும்; பிறந்து பிறந்ததினால் அடையக்கூடிய; எய்தும் பேரின்பம் சிற்றின்பங்களை; எல்லாம் துறந்தார் எல்லாம் வெறுப்பவராவர்
thirumālai the consort of ṣrī mahālakshmi; nīṇda thŏl̤ kāṇa ninaippan to enjoy (his) divine shoulders, ī think of him; ninaippār those who think (like this); piṛappu onṛum any type of birth [in any of the classes of dhĕvas, humans, animals and plants]; nĕrār will not attain; ath thŏl̤ those divine shoulders; thozhuvār those who worship; manaippāl pirāndhār piṛandhu eydhum inbam ellām the small [worldly] pleasures which those who attain since they are born in samsāram (materialistic realm); thuṛandhār they detest [them]

IT 43

2224 தோளிரண்டெட்டேழும்மூன்றும் முடியனைத்தும் *
தாளிரண்டும்வீழச் சரந்துரந்தான் * - தாளிரண்டும்
ஆர்தொழுவார் பாதமவைதொழுவதன்றே? * என்
சீர்கெழுதோள் செய்யும்சிறப்பு.
2224 தோள் இரண்டு எட்டு ஏழும் * மூன்றும் முடி அனைத்தும் *
தாள் இரண்டும் வீழச் * சரம் துரந்தான் ** தாள் இரண்டும்
ஆர் தொழுவார் பாதம் * அவை தொழுவது அன்றே ? * என்
சீர் கெழு தோள் செய்யும் சிறப்பு 43
2224 tol̤ iraṇṭu ĕṭṭu ezhum * mūṉṟum muṭi aṉaittum *
tāl̤ iraṇṭum vīzhac * caram turantāṉ ** - tāl̤ iraṇṭum
ār tŏzhuvār pātam * avai tŏzhuvatu aṉṟe ? * ĕṉ
cīr kĕzhu tol̤ cĕyyum ciṟappu -43

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2224. He shot his arrows and cut off all the twenty arms, ten heads and two feet of Rāvana and killed him. The only good use of my arms is to worship the feet of the devotees who worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எட்டும் இரண்டும் ஏழும் மூன்றும் இருபது; தோள் தோள்களும்; முடி அனைத்தும் எல்லாத் தலைகளும்; தாள் இரண்டும் இரண்டு கால்களும்; வீழ விழும்படி; சரம் துரந்தான் அம்பு எய்த பெருமானின்; தாள் இரண்டும் இரண்டு திருவடிகளையும்; ஆர் தொழுவார் தொழுகிறவர்கள் எவரோ; பாதம் அவை அவர்களது திருவடிகளை; தொழுவது அன்றே தொழுவது அன்றோ; என் சீர் கெழு எனது நன்மை மிக்க; தோள் தோள்கள்; செய்யும் சிறப்பு எனக்குச்செய்யும் உதவி
thŏl̤ iraṇdu ettu ĕzhum mūnṛum twenty shoulders; mudi anaiththum all the heads (which sprouted); thāl̤ iraṇdum the two legs; vīzha to be destroyed; saram thurandhān emperumān who shot arrows; thāl̤ iraṇdum two divine feet; thozhuvār ār whoever worships (their); pādham avai divine feet; thozhuvadhu anṛĕ isn’t worshipping them; en sīrkezhu thŏl̤ seyyum siṛappu the help provided by my beneficial shoulders (to me)

IT 44

2225 சிறந்தார்க்கெழுதுணையாம் செங்கண்மால்நாமம் *
மறந்தாரைமானிடமாவையேன் * அறம்தாங்கும்
மாதவனே! என்னும் மனம்படைத்து * மற்றவன்பேர்
ஓதுவதே நாவினாலுள்ளு.
2225 சிறந்தார்க்கு எழு துணையாம் * செங்கண் மால் நாமம் *
மறந்தாரை மானிடமா வையேன் ** அறம் தாங்கும்
மாதவனே! என்னும் * மனம் படைத்து * மற்று அவன்பேர்
ஓதுவதே நாவினால் உள்ளு 44
2225 ciṟantārkku ĕzhu tuṇaiyām * cĕṅkaṇ māl nāmam *
maṟantārai māṉiṭamā vaiyeṉ ** aṟam tāṅkum
mātavaṉe! ĕṉṉum * maṉam paṭaittu * maṟṟu avaṉper
otuvate nāviṉāl ul̤l̤u -44

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-24

Simple Translation

2225. For good devotees, the names of beautiful-eyed Thirumāl are a true help. I will not consider those who forget him as human beings. Keep in your mind the name Mādhavan, the god of dharma, and recite his names— that is the only good thing that you should do.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறந்தார்க்கு மனமே! வைணவ அடியார்களுக்கு; எழு துணையாம் உய்வதற்குத் துணை எம்பெருமான்; செங்கண் செந்தாமரை; மால் கண்ணனான; நாமம் பெருமானின் திருநாமத்தை; மறந்தாரை மறப்பவர்களை; மானிடம் ஆ மானிடப்பிறவியில் பிறந்தவர்களாக; வையேன் நினைக்கமாட்டேன்; அறம் தாங்கும் தர்மத்தை நிலை நிறுத்தும்; மாதவனே! மாதவனே!; என்னும் என்று அழைக்கும்; மனம் படைத்து மனம் படைத்து; மற்று அவன் மேலும் அவன்; பேர் திருநாமத்தை; நாவினால் நாவினால்; ஓதுவதே சொல்லுவதையே; உள்ளு உரியது என்று கற்று கொள்
siṛandhārkku the great ṣrīvaishṇavas (followers of emperumān); sem kaṇ māl emperumān’s, who is having reddish eyes; nāmam divine names; maṛandhārai those who forget; mānidam ā [considered as having been] born in the species of humans; vaiyĕn ī will not keep in my heart; aṛam thāngum mādhavanĕ ennum manam padaiththu having the heart which says “ŏh mādhava who establishes rightesouness!”; maṝu and; avan pĕr his divine names; nāvināl ŏdhuvadhĕ reciting with tongue; ul̤l̤u keep meditating (that it is apt for us)

IT 45

2226 உளதென்றிறுமாவார் உண்டில்லையென்று *
தளர்தலதனருகும்சாரார் * - அளவரிய
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் *
பாதத்தான் பாதம்பயின்று.
2226 உளது என்று இறுமாவார் * உண்டு இல்லை என்று *
தளர்தல் அதன் அருகும் சாரார் ** அளவு அரிய
வேதத்தான் வேங்கடத்தான் * விண்ணோர் முடி தோயும் *
பாதத்தான் பாதம் பயின்று 45
2226 ul̤atu ĕṉṟu iṟumāvār * uṇṭu illai ĕṉṟu *
tal̤artal ataṉ arukum cārār ** - al̤avu ariya
vetattāṉ veṅkaṭattāṉ * viṇṇor muṭi toyum *
pātattāṉ pātam payiṉṟu -45

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2226. The lord of Thiruvenkatam worshiped by the gods in the sky is himself the Vedās whose meanings are endless. If devotees worship his feet they will have no pride whether they are rich or poor.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அளவு அரிய அளவிட முடியாதபடி; வேதத்தான் வேதங்களினால் சொல்லப்படுபவனும்; வேங்கடத்தான் திருமலையில் நிற்பவனும்; விண்ணோர் நித்யஸூரிகள்; முடி தோயும் முடிகளால் வணங்கப் பெற்ற; பாதத்தான் திருவடிகளையுடைய; பாதம் பயின்று திருவடிகளிலே ஈடுபட்டிருப்பவர்கள்; உளது தமக்குச் செல்வமுள்ளது என்று; இறுமாவார் செருக்குக் கொள்ள மாட்டார்கள்; உண்டு செல்வம் நேற்று இருந்து; இல்லை என்று இன்று அழிந்த போயிற்றென்று; தளர்தல் அதன் தளர்ச்சியும்; அருகும் சாரார் அடையமாட்டார்கள்
al̤avu ariya vĕdhaththān one who is mentioned by the boundless vĕdhas; vĕngadaththān one who is dwelling in thiruvĕngadam [thirumalai hills]; viṇṇŏr mudi thŏyum pādhaththān emperumān whose divine feet are worshipped by (the crowns of) nithyasūris; pādham in his divine feet; payinṛu those who are familiar with; ul̤adhu enṛu iṛumāvār will not feel proud that they have (wealth); uṇdu illai enṛu (wealth was) there yesterday and got destroyed today, saying so; thal̤ardhal adhan arugum sārār they will not go anywhere near the characteristic of being slack

IT 46

2227 பயின்றதுஅரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே *
மணிதிகழும்வண்தடக்கைமால்.
2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** பயின்றது
அணி திகழும் சோலை * அணி நீர் மலையே *
மணி திகழும் வண் தடக்கை மால் 46
2227 payiṉṟatu araṅkam tirukkoṭṭi * pal nāl̤
payiṉṟatuvum * veṅkaṭame palnāl̤ ** - payiṉṟatu
aṇi tikazhum colai * aṇi nīr malaiye *
maṇi tikazhum vaṇ taṭakkai māl -46

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2227. The generous sapphire-colored lord stays in Srirangam, Thirukkottiyur and in his favorite place, Thiruvenkatam. He is lord of beautiful Thirumālirunjolai and Thiruneermalai flourishing with abundant water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி நீலமணிபோல்; திகழும் விளங்குமவனும்; வண் உதாரமான; தடக்கை கைகளை உடைய; மால் எம்பெருமான்; பயின்றது இருக்குமிடம்; அரங்கம் திருவரங்கமும்; திருக்கோட்டி திருக்கோட்டியூருமாம்; பல் நாள் அநாதிகாலம்; பயின்றதுவும் நித்யவாஸம் செய்யுமிடமும்; வேங்கடமே திருமலையாம்; அணி திகழும் அழகாகத் திகழும்; சோலை சோலைகளையுடைய; அணி நீர் மலையே திருநீர்மலையாம்
maṇi thigazhum shining like a blue gem; vaṇ thadakkai being magnanimous, having rounded divine hands; māl emperumān; payinṛadhu residing permanently; arangam thirukkŏtti at thiruvarangam and at thirukkŏttiyūr; pal nāl̤ for a very long time; payinṛadhuvum also residing permanently; vĕngadamĕ at thirumalai; pal nāl̤ payinṛadhuvum living permanently for a very long time; aṇi thigazhum sŏlai having beautiful gardens; aṇi being a jewel-piece for the world; nīrmalai at thirunīrmalai

IT 47

2228 மாலையரியுருவன் பாதமலரணிந்து *
காலைதொழுதெழுமின் கைகோலி * - ஞாலம்
அளந்திடந்துஉண்டுமிழ்ந்த அண்ணலை மற்றல்லால் *
உளங்கிடந்தவாற்றாலுணர்ந்து.
2228 மாலை அரி உருவன் * பாதமலர் அணிந்து *
காலை தொழுது எழுமின் கைகோலி ** ஞாலம்
அளந்து இடந்து உண்டு உமிழ்ந்த * அண்ணலை மற்று அல்லால் *
உளம் கிடந்த ஆற்றால் உணர்ந்து 47
2228 mālai ari uruvaṉ * pātamalar aṇintu *
kālai tŏzhutu ĕzhumiṉ kaikoli ** - ñālam
al̤antu iṭantu uṇṭu umizhnta * aṇṇalai maṟṟu allāl *
ul̤am kiṭanta āṟṟāl uṇarntu -47

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2228. Folding your hands with devotion in your heart, worship him in the morning when you get up and sprinkle flowers on the feet of him - who took the form of a man-lion and fought with Hiranyan, measured the world at Mahābali’s sacrifice, swallowed the world and spat it out and split open the earth to bring the earth goddess from the underworld.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஞாலம் பூமி முழுவதையும்; அளந்து திருவிக்கிரமனாய் அளந்தும்; இடந்து வராகமாக குத்தி எடுத்தும்; உண்டு பிரளயகாலத்தில் உண்டும் காத்தும்; உமிழ்ந்த பின் வெளிப்படுத்தியும் இப்படி; அண்ணலை எல்லாம் செய்த எம்பெருமானை; மற்றுஅல்லால் இவைகளைத்தவிர; உளம் கிடந்த இவ்வாறு காப்பது; ஆற்றால் மட்டும் அன்றி அவர்கள் மனதில்; உணர்ந்து உணர்ந்து அனுபவித்து; அரி உருவன் நரசிம்மனாய்த் தோன்றிய; பாத மலர் பெருமானின் திருவடிகளை; மாலை அணிந்து மாலைகளால் அலங்கரித்து; காலை சிற்றஞ் சிறுகாலையில்; கை கோலி கைகூப்பி வணங்கி; தொழுது எழுமின் தொழுது எழுங்கள்
gyālam the entire world; al̤andhu (playfully) measured; idandhu (as varāha) dug out; uṇdu (during deluge) kept inside the stomach; umizhndha later spat it out; aṇṇalai emperumān, my supreme swāmy; maṝu al̤l̤āl apart from the protective activities mentioned earlier; ul̤l̤am kidandha āṝāl in different ways residing inside the hearts of followers (melting their hearts); uṇarndhu meditating; ari uruvan that emperumān who incarnated as narasinga mūrthy; pādha malar in the divine lotus feet; mālai aṇindhu decorating with garlands; kālai in the early hours of the morning; kai kŏli thozhudhu worshipping with folded hands; ezhumin uplift yourselves

IT 48

2229 உணர்ந்தாய்மறைநான்கும் ஓதினாய்நீதி *
மணந்தாய்மலர்மகள்தோள்மாலே! * - மணந்தாய்போய்
வேயிருஞ்சாரல் வியலிருஞாலம்சூழ் *
மாயிருஞ்சோலைமலை.
2229 உணர்ந்தாய் மறை நான்கும் * ஓதினாய் நீதி *
மணந்தாய் மலர் மகள் தோள் மாலே ** மணந்தாய் போய்
வேய் இரும் சாரல் * வியல் இரு ஞாலம் சூழ் *
மா இரும் சோலை மலை 48
2229 uṇarntāy maṟai nāṉkum * otiṉāy nīti *
maṇantāy malar makal̤ tol̤ māle ** - maṇantāy poy
vey irum cāral * viyal iru ñālam cūzh *
mā irum colai malai -48

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2229. O Thirumāl, you taught the sages all the four Vedās and the sastras that teach morals. Embracing Lakshmi on a lotus on your chest, you stay happily on the beautiful Thirumālirunjolai surrounded with beautiful large groves on its slopes where bamboos grow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே எம்பெருமானே!; மறை நான்கும் நான்கு வேதங்களையும்; உணர்ந்தாய் பிரளயம் தோறும் வெளியிடுகின்றாய்; நீதி ஸ்ம்ருதி முதலிய நூல்களையும்; ஓதினாய் ரிஷிகள் மூலமாக அருளிச்செய்கின்றாய்; மலர் மகள் தோள் திருமகளின் தோளோடு; மணந்தாய் கூடி வாழ்கின்றாய்; வேய் இருஞ் மூங்கில்கள் நிறைந்த; சாரல் மலைப் பிரதேசங்களையுடைய; வியல் அற்புதமானதும்; இரு ஞாலம் சூழ் மக்களால் வலம் செய்யப்படுவதுமான; மா இருஞ் சோலை திருமாலிருஞ்சோலை; மலை போய் மலையிலே வந்து; மணந்தாய் மனமுவந்து வாழ்கின்றாய்
mālĕ ŏh one who has lot of affection! [towards his followers]; maṛai nāngum the four vĕdhams (sacred texts); uṇarndhāy (during every deluge) kept in your mind and let them out; nīdhi texts such as smruthis which explain the concepts in vĕdhams [similar to an auxiliary text]; ŏdhināy you mercifully gave through sages such as manu et al.; malar magal̤ periya pirātti, who was born in a flower; thŏl̤ with her divine shoulders; maṇandhāy you are together, always; vĕy irum sāral having foothills abounding with bamboo shoots; viyal wondrous; iru gyālam sūzh circum-ambulated by people in this expansive world; māyirum sŏlai malai pŏy coming to thirumālirum sŏlai [a divine abode near present day madhurai]; maṇandhāy are residing with happiness in your divine mind

IT 49

2230 மலையேழும் மாநிலங்களேழுமதிர *
குலைசூழ் குரைகடல்களேழும் * - முலைசூழ்ந்த
நஞ்சுரத்துப்பெண்ணை நவின்றுண்டநாவனென்று *
அஞ்சாதுஎன்னெஞ்சே! அழை.
2230 மலை ஏழும் * மா நிலங்கள் ஏழும் அதிர *
குலை சூழ் குரை கடல்கள் ஏழும் ** முலை சூழ்ந்த
நஞ்சு உரத்துப் பெண்ணை * நவின்று உண்ட நாவன் என்று *
அஞ்சாது என்நெஞ்சே அழை 49
2230 malai ezhum * mā nilaṅkal̤ ezhum atira *
kulai cūzh kurai kaṭalkal̤ ezhum ** - mulai cūzhnta
nañcu urattup pĕṇṇai * naviṉṟu uṇṭa nāvaṉ ĕṉṟu *
añcātu ĕṉnĕñce azhai -49

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2230. O my heart! Praise him and call to him without fear, saying, “You drank the poisonous milk from the breasts of Putanā as the seven mountains, seven worlds and the seven sounding oceans were all shaken. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் மனமே!; மலை ஏழும் ஏழு மலைகள்; மா நிலங்கள் ஏழும் ஏழு த்வீபங்கள்; குலை சூழ் குரை கரைகளாலே சூழப்பட்டு ஒலிக்கும்; கடல்கள் ஏழும் ஏழு கடல்கள்; அதிர அனைத்தும் அதிரும்படியாக; நஞ்சு உரத்து விஷமுடைய; முலை சூழ்ந்த மார்பகங்களோடு கூடின; பெண்ணை பூதனையிடம் பாலுண்ணும்போது; நவின்று இடையிடையே மழலைச் சொற்கள் சொல்லி; உண்ட உண்டு அவளை முடித்த; நாவன் என்று நாவையுடையவனே! என்று; அஞ்சாது பயப்படாமல்; அழை வாய்விட்டு கூப்பிடு
en nenjĕ ŏh my heart!; m alai ĕzhum the seven kulaparvathams (major mountains); mā nilangal̤ ĕzhum the seven dhvīpams (islands) such as jambhūdhvīpam etc; kulai sūzh kurai kadalgal̤ ĕzhum the seven oceans which are surrounded by shores and which raise continuous noise; adhira to vibrate; mulai sūzhndha nanju uraththup peṇṇai the cruel demonic person pūthanā, who had poison all over her bosom; navinṛu speaking (gibberish words even as he was drinking her milk); uṇda one who drank; nāvan ŏh one who has the divine tongue!; anjādhu without any fear; azhai call out

IT 50

2231 அழைப்பன்திருமாலை ஆங்கவர்கள்சொன்ன *
பிழைப்பில் பெரும்பெயரேபேசி * - இழைப்பரிய
ஆயவனே! யாதவனே! என்று அவனையார்முகப்பும் *
மாயவனே! என்றுமதித்து.
2231 அழைப்பன் திருமாலை * ஆங்கு அவர்கள் சொன்ன *
பிழைப்பு இல் பெரும் பெயரே பேசி ** இழைப்பு அரிய
ஆயவனே! யாதவனே ! * என்றவனை யார் முகப்பும் *
மாயவனே ! என்று மதித்து 50
2231 azhaippaṉ tirumālai * āṅku avarkal̤ cŏṉṉa *
pizhaippu il pĕrum pĕyare peci ** - izhaippu ariya
āyavaṉe! yātavaṉe ! * ĕṉṟavaṉai yār mukappum *
māyavaṉe ! ĕṉṟu matittu -50

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2231. I will call Thirumāl with his faultless names saying, “You are the cowherd adorned with precious ornaments, the Yādavan, the Māyavan, loved by all. ” In front of everyone I am calling Mādhavan with love in the same way all the cowherds call him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இழைப்பு அரிய நினைப்பதற்கு அரிய; ஆயவனே! ஆயர்ச் சிறுவனே! என்றும்; யாதவனே! யதுகுல திலகனே!; என்று என்றும்; மாயவனே! மாயவனே!; என்று மதித்து என்றும் அநுஸந்தித்து; ஆங்கு திருவாய்ப்பாடியில்; அவர்கள் உள்ளவர்கள்; சொன்ன சொல்லியழைத்த; பிழைப்பில் பெரும் குற்றமற்ற சிறந்த; பெயரே பேசி திருநாமங்களையே பேசி; யார் முகப்பும் எல்லாரெதிரிலும்; திருமாலை திருமாலாகிய; அவனை அப்பெருமானை; அழைப்பன் அழைப்பேன்
izhaippu ariya difficult to think of; āyavanĕ ŏh one born as a cowherd boy!; yādhavanĕ ŏh one who came in the clan of yadhu (as vasudhĕvar’s son); enṛu saying so; māyavanĕ enṛu saying, ŏh one who has amaśing qualities!; madhiththu meditating; āngu avargal̤ sonna those in thiruvāyppādi (gŏkulam) who called out to emperumān; pizhaippu il perum peyarĕ pĕsi reciting the great names which engage the person (reciting them) and destroying them; yār mugappum in front of everyone; thirumālai avanai that emperumān thirumāl̤; azhaippan ī will call

IT 51

2232 மதிக்கண்டாய் நெஞ்சே! மணிவண்ணன்பாதம் *
மதிக்கண்டாய் மற்றவன்பேர்தன்னை * - மதிக்கண்டாய்
பேராழிநின்று பெயர்ந்துகடல்கடைந்த *
நீராழிவண்ணன்நிறம்.
2232 மதிக் கண்டாய் நெஞ்சே ! * மணிவண்ணன் பாதம் *
மதிக் கண்டாய் மற்று அவன் பேர் தன்னை ** மதிக் கண்டாய்
பேர் ஆழிநின்று * பெயர்ந்து கடல் கடைந்த
நீர் ஆழி வண்ணன் நிறம் 51
2232 matik kaṇṭāy nĕñce ! * maṇivaṇṇaṉ pātam *
matik kaṇṭāy maṟṟu avaṉ per taṉṉai ** - matik kaṇṭāy
per āzhiniṉṟu * pĕyarntu kaṭal kaṭainta
nīr āzhi vaṇṇaṉ niṟam -51

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2232. O heart, Think of the feet of the lord who has the sapphire color of the ocean and recite his wonderful names. Worship the feet of him who churned the milky ocean and gave nectar to the gods

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; மணி வண்ணன் எம்பெருமானின்; பாதம் திருவடிகளை; மதிக் கண்டாய் தியானிப்பாய்; மற்று அவன் மேலும் அவன்; பேர் தன்னை திருநாமங்களை; மதிக் கண்டாய் தியானிப்பாய்; பேர் ஆழி நின்று திருப்பாற் கடலில் நின்றும்; பெயர்ந்து எழுந்து தேவர்களுக்கு அமுதம் கொடுக்க; கடல் கடைந்த அக்கடலைக் கடைந்த; நீர் ஆழி கடல் போன்ற; வண்ணன் வண்ணனான அப்பெருமானின்; நிறம் திருமேனி நிறத்தை; மதிக் கண்டாய் தியானிப்பாய்
nenjĕ ŏh heart!; maṇivaṇṇan pādham the divine feet of emperumān who has bluish complexion; madhi kaṇdāy think about them; maṝu also; avan pĕr thannai his divine names; madhi kaṇdāy think of them; pĕr āzhi ninṛu peyarndhu awakening from his sleep in thiruppāṛkadal (milky ocean); kadal kadaindha one who churned the ocean (to offer nectar to dhĕvas); nīr āzhi vaṇṇan niṛam the complexion of emperumān which is like the colour of ocean; madhi kaṇdāy meditate on it.

IT 52

2233 நிறங்கரியன் செய்யநெடுமலராள்மார்வன் *
அறம்பெரியனாரதறிவார்? * - மறம்புரிந்த
வாளரக்கன்போல்வானை வானவர்கோன்தானத்து *
நீளிருக்கைக்குய்த்தான்நெறி.
2233 நிறம் கரியன் * செய்ய நெடு மலராள் மார்வன் *
அறம் பெரியன் ஆர் அது அறிவார் ? ** மறம் புரிந்த
வாள் அரக்கன் போல்வானை * வானவர் கோன் தானத்து *
நீள் இருக்கைக்கு உய்த்தான் நெறி 52
2233 niṟam kariyaṉ * cĕyya nĕṭu malarāl̤ mārvaṉ *
aṟam pĕriyaṉ ār atu aṟivār ? ** - maṟam purinta
vāl̤ arakkaṉ polvāṉai * vāṉavar koṉ tāṉattu *
nīl̤ irukkaikku uyttāṉ nĕṟi -52

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2233. The dark-colored one with Lakshmi on a beautiful lotus on his chest is the lord of dharma. He sent Mahabali, like king Rāvana who fought valiantly with his sword, to the underworld of Indra, the king of the gods in the sky. Who knows how he gives his grace?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிறம் கரியன் கருத்த நிறமுடையவனும்; செய்ய நெடு சிவந்த நிறமுடைய; மலராள் திருமகளை; மார்வன் மார்பிலுடையவனும்; அறம் அருளிலே; பெரியன் மிகப் பெரியவனும்; மறம் புரிந்த பகை பாராட்டின; வாள் வாளைக் கையிலுடைய; அரக்கன் போல் அரக்கன் போன்ற மகாபலியை; வானவர் தேவேந்திரனுடைய; வானை ஸ்வர்க்கம் போன்ற; கோன் தானத்து நெறி பாதாள லோகத்தில்; நீள் இருக்கைக்கு நீண்டகாலம் வாழும்படியாக; உய்த்தான் செய்த அப்பெருமானின்; அது அவ்வருள் வகையை; அறிவார் ஆர்? யார் அறியவல்லர்?
niṛam kariyan (like dark clouds which have filled up water) the dark coloured; seyya nedu malrāl̤ mārvan emperumān who has periya pirātti, who is reddish in complexion and who resides in an expansive lotus, on his chest; aṛam periyan he is very generous in his mercy; maṛam purindha one who was inimical; vāl̤ arakkan pŏlvānai mahābali, who was like the warrior demon rāvaṇa; vānavar kŏn thānaththu in svargam, the land of dhĕvĕndhra (the l̤ord of celestial entities); nīl̤ irukkaikku enabling him to live for a long time; neṛi in pāthāl̤a lŏkam (nether world); uyththān emperumān who sent him there; adhu his mercy; ār aṛivār who is capable to estimate?

IT 53

2234 நெறியார்குழற்கற்றை முன்னின்றுபின்தாழ்ந்து *
அறியாதிளங்கிரியென்றெண்ணி * - பிறியாது
பூங்கொடிக்கள்வைகும் பொருபுனல்குன்றென்றும் *
வேங்கடமே யாம்விரும்பும்வெற்பு.
2234 நெறியார் குழல் கற்றை * முன்நின்று பின் தாழ்ந்து *
அறியாது இளங் கிரி என்று எண்ணி ** பிரியாது
பூங்கொடிக்கள் வைகும் * பொரு புனல் குன்று என்னும் *
வேங்கடமே யாம் விரும்பும் வெற்பு 53
2234 nĕṟiyār kuzhal kaṟṟai * muṉniṉṟu piṉ tāzhntu *
aṟiyātu il̤aṅ kiri ĕṉṟu ĕṇṇi ** - piriyātu
pūṅkŏṭikkal̤ vaikum * pŏru puṉal kuṉṟu ĕṉṉum *
veṅkaṭame yām virumpum vĕṟpu -53

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2234. I would go and worship the lord in Thiruvenkatam hills where the blooming creepers think that the thick hair of women falling low on their backs are small hills and cling on to it to grow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெறியார் திருமலை தியானத்தில் மூழ்கி; அறியாது இருப்பவர்கள் என்பதை அறியாமல்; குழல் கற்றை அவர்களுடைய கூந்தல்; முன் நின்று முன்னும் பின்னும்; பின் தொங்கி; தாழ்ந்து கொண்டிருப்பதை; இளம் கிரி ஒரு சிறிய மலை; என்று எண்ணி என்று எண்ணி; பூங் கொடிகள் பூங் கொடிகள்; பிரியாது அவ்விடம் விட்டு நீங்காமல்; வைகும் அங்கேயே படரும்; பொரு அலை வீசும்; புனல் அருவிகள் உள்ள; குன்று என்னும் குன்று என்னும்; வேங்கடமே பிரசித்தமான திரு வேங்கடமே; யாம் விரும்பும் நாம் விரும்பும்; வெற்பு திருமலையாகும்
neṛiyār aṛiyādhu not knowing that they [are chĕthanas who] are deeply integrated with the path at thirumalai hills; kuzhal kaṝai mun ninṛu pin thāzhndhu sprouting from the hair on the front side of their heads and growing on their back side; il̤am giri enṛu eṇṇi thinking that they are small hills; pūm kodikkal̤ creepers with flowers; piriyādhu without leaving that place; vaigum residing permanently; poru punal kunṛu ennum being known famously as thirumalai, with abundant streams; vĕngadamĕ only thiruvĕngadam; yām virumbum the one that ī desire; veṛpu divine hills

IT 54

2235 வெற்பென்றிருஞ்சோலை வேங்கடமென்றிவ்விரண்டும் *
நிற்பென்று நீமதிக்கும்நீர்மைபோல் * - நிற்பென்று
உளங்கோயில் உள்ளம்வைத்துள்ளினேன் * வெள்ளத்
திளங்கோயில் கைவிடேலென்று.
2235 வெற்பு என்று இரும் சோலை * வேங்கடம் என்று இவ் இரண்டும் *
நிற்பு என்று நீ மதிக்கும் நீர்மை போல் ** நிற்பு என்று
உளம் கோயில் * உள்ளம் வைத்து உள்ளினேன் * வெள்ளத்து
இளங் கோயில் கைவிடேல் என்று 54
2235 vĕṟpu ĕṉṟu irum colai * veṅkaṭam ĕṉṟu iv iraṇṭum *
niṟpu ĕṉṟu nī matikkum nīrmai pol ** - niṟpu ĕṉṟu
ul̤am koyil * ul̤l̤am vaittu ul̤l̤iṉeṉ * vĕl̤l̤attu
il̤aṅ koyil kaiviṭel ĕṉṟu -54

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2235. O lord, you wish to stay in the Venkatam and Thirumālirunjolai hills surrounded with thick groves. Like those hills, I make my heart your temple, worship you and say, Do not leave my heart, for it is your young temple and it is like the milky ocean for you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெற்பு என்று மலை என்ற; இரும் சோலை திருமாலிருஞ் சோலை; வேங்கடம் என்று திரு வேங்கடம் என்று; இவ் இரண்டும் இவ் இரண்டும்; நிற்பு என்று நாம் உகந்து வாழுமிடமென்று; நீ மதிக்கும் நீர்மை போல் நீ நினைப்பது போல்; உளம் என் ஹ்ருதயமாகிற; கோயில் கோயிலும்; நிற்பு என்று நாம் உகந்து வாழுமிடமென்று; உள்ளம் வைத்து நீ நினைப்பதை அறிந்து; வெள்ளத்து திருப்பாற்கடலாகிற; இளங் கோயில் இளங் கோயிலை; கை விடேல் என்று கை விடவேண்டாம் என்று; உள்ளினேன் பிரார்த்திக்கிறேன்
veṛpu enṛa widely known as thirumalai; irum sŏlai thirumāl̤ irum sŏlai; vĕngadam thiruvĕngadam hills; enṛa ivviraṇdum thus these two hills; niṛpu enṛu the place that we desire to reside in; nī madhikkum nīrmail pŏl just as you have desired in your divine mind; ul̤am kŏyil (my) heart, another temple; niṛpu enṛu a place that we desire to reside in; ul̤l̤am vaiththu knowing that you are thinking of, in your divine mind; vel̤l̤aththu il̤am kŏyil thiruppāṛkadal (milky ocean) which is like a bālalayam [temporary structure to accommodate emperumān); kai vidĕl enṛu please do not give up, saying so; ul̤l̤inĕn ī pray.

IT 55

2236 என்றும்மறந்தறியேன் ஏழ்பிறப்புமெப்பொழுதும் *
நின்றுநினைப்பொழியாநீர்மையால் * - வென்றி
அடலாழிகொண்ட அறிவனே! * இன்பக்
கடலாழி நீயருளிக்காண்.
2236 என்றும் மறந்தறியேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
நின்று நினைப்பு ஒழியா நீர்மையால் ** வென்றி
அடல் ஆழி கொண்ட * அறிவனே! * இன்பக்
கடல் ஆழி நீ அருளிக் காண் 55
2236 ĕṉṟum maṟantaṟiyeṉ * ezh piṟappum ĕppŏzhutum *
niṉṟu niṉaippu ŏzhiyā nīrmaiyāl ** - vĕṉṟi
aṭal āzhi kŏṇṭa * aṟivaṉe! * iṉpak
kaṭal āzhi nī arul̤ik kāṇ -55

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2236. You are wise and carry a heroic discus. In all my seven births I have never forgotten you— and I have been mindful of you. Give me your grace so I may plunge into the ocean of joy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வென்றி வெற்றி பெரும்; அடல் ஆழி கொண்ட சக்கரத்தைக் கையிலுடைய; அறிவனே அறிவாளியான பெருமானே!; நீ இப்படி இருக்கும் நீ; ஏழ் பிறப்பும் எல்லா ஜன்மங்களிலும்; எப்பொழுதும் எல்லா நிலைகளிலும்; நின்று என்னைப் பற்றின; நினைப்பு நினைவு; ஒழியா நீர்மையால் தப்பாமலிருந்ததனால்; என்றும் உன்னை ஒருநாளும்; மறந்தறியேன் மறவாதவனானேன்; இன்பக் கடல் ஆழி இன்பக் கடலான ஆனந்தத்தையும்; அருளிக் காண் எனக்கு அருள வேணும்
venṛi being always victorious; adal being in combat (with enemies); āzhi chakkaram (disc); koṇda having in the hand; aṛivanĕ ŏh the omniscient!; you, who are like this; ĕzh piṛappum in all births; eppozhudhum in all states; ninṛu ninaiipu ozhiyā nīrmaiyāl never forgetting to hold me in your thoughts; enṛum maṛandhaṛiyĕn ī never forgot you; inbam kadal āzhi the huge ocean of happiness; arul̤ik kāṇ you should bestow on me

IT 56

2237 காணக்கழிகாதல் கைமிக்குக்காட்டினால் *
நாணப்படுமென்றால்நாணுமே? - பேணிக்
கருமாலைப் பொன்மேனிகாட்டாமுன்காட்டும் *
திருமாலை நங்கள்திரு.
2237 காணக் கழி காதல் * கைமிக்குக் காட்டினால் *
நாணப்படும் என்றால் நாணுமே? ** பேணிக்
கரு மாலைப் * பொன் மேனி காட்டாமுன் காட்டும் *
திருமாலை நங்கள் திரு 56
2237 kāṇak kazhi kātal * kaimikkuk kāṭṭiṉāl *
nāṇappaṭum ĕṉṟāl nāṇume? ** - peṇik
karu mālaip * pŏṉ meṉi kāṭṭāmuṉ kāṭṭum *
tirumālai naṅkal̤ tiru -56

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2237. If one gazes at the grass growing on the shore of the ocean and tells it to be shy, will it become shy? (Lakshmi, the goddess of wealth, shows her golden body before our Thirumāl shows his dark body to us. ) OR Lakshmi shows the dark body of Thirumāl to us before Thirumāl shows his body to us.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலை எம்பெருமானை; காணக் கழி வணங்க வேண்டும் என்று; காதல் மிகுந்த விருப்பம்; கை மிக்கு மேல்மேலும்; காட்டினால் அதிகரித்தால்; நாணப்படும் ஆறியிருக்கவேண்டும்; என்றால் என்றால்; நாணுமே? ஆறியிருக்க முடியுமோ?; கரு மாலை கருத்த திருமாலை; பொன் அவனது அழகிய; மேனி திருமேனி தானே; காட்டா முன் காட்டிக்கொடுப்பதற்கு முன்னே; நங்கள் திரு நம் திருமகளான மஹாலக்ஷ்மி; பேணி நமக்கு விரும்பி; காட்டும் காட்டிக் கொடுப்பள்
thirumālai kāṇak kazhi kādhal the deep desire to worship emperumān; kai mikku kāttināl if it starts increasing greatly; nāṇap padum enṛāl if one should stay quietly; nāṇumĕ is it possible to stay quiet?; karumālai that emperumān who is of dark complexion; pon mĕni mun kāttā before his beautiful divine [physical] form identifies him; nangal̤ thiru pirātti (ṣrī mahālakshmi) who is our purushakāra bhūthai (one who is of recommendatory nature); pĕṇi with desire; kāttum will identify

IT 57

2238 திருமங்கைநின்றருளும்தெய்வம் நாவாழ்த்தும் *
கருமம் கடைப்பிடிமின்கண்டீர் * - உரிமையால்
ஏத்தினோம்பாதம் இருந்தடக்கையெந்தைபேர் *
நால்திசையும்கேட்டீரே? நாம்.
2238 திருமங்கை நின்றருளும் * தெய்வம் நா வாழ்த்தும் *
கருமம் கடைப்பிடிமின் கண்டீர் ** உரிமையால்
ஏத்தினோம் பாதம் * இருந் தடக்கை எந்தை பேர் *
நால் திசையும் கேட்டீரே? நாம் 57
2238 tirumaṅkai niṉṟarul̤um * tĕyvam nā vāzhttum *
karumam kaṭaippiṭimiṉ kaṇṭīr ** - urimaiyāl
ettiṉom pātam * irun taṭakkai ĕntai per *
nāl ticaiyum keṭṭīre? nām -57

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2238. Praise him with your tongue who embraces Lakshmi on his chest and gives his grace to all. Have you heard? Devotees from all the directions praise the name of our lord and worship his feet, because it is our right to praise him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமங்கை நின்று திருமகள் வாஸம் பண்ணும்; அருளும் தெய்வம் எம்பெருமானை; நா வாழ்த்தும் நாவினாலே வாழத்துகையாகிற; கருமம் காரியத்தை; கடைப் பிடிமின் உறுதியாக; கண்டீர் பற்றுங்கள்; நாம் நாமோவென்றால்; இருந் தடக்கை மிக நீண்ட திருக்கைகளையுடைய; எந்தை எம்பெருமானின்; பாதம் திருவடிகளை அவன்; பேர் திருநாமங்களைக் கொண்டு; உரிமையால் உரிமையோடு; ஏத்தினோம் துதிப்பவர்களாயிருக்கிறோம்; நால் திசையும் நான்கு திசைகளிலுமுள்ளவர்களும்; கேட்டீரே? கேட்டீர்களோ?
thirumangai periya pirāttiyār (ṣrī mahālakshmi); ninṛu arul̤um dheyvam emperumān, in whose chest she stays permanently; nā vāzhththum karumam the deed of praising with tongue; kadaippidimin kaṇdīr hold on, surely; nām we; irum thadakkai endhai emperumān who has two long divine hands; padham [his] divine feet; pĕr with his divine names; urimaiyāl as per our nature; ĕththinŏm praised; nāl dhisaiyum those in the four directions; kĕttīrĕ did you listen?

IT 58

2239 நாம்பெற்றநன்மையும் நாமங்கைநன்னெஞ்சத்து *
ஓம்பியிருந்துஎம்மையோதுவித்து * - வேம்பின்
பொருள்நீர்மையாயினும் பொன்னாழிபாடென்று *
அருள்நீர்மைதந்தஅருள்.
2239 நாம் பெற்ற நன்மையும் * நா மங்கை நல் நெஞ்சத்து *
ஓம்பி இருந்து எம்மை ஓதுவித்து ** வேம்பின்
பொருள் நீர்மை ஆயினும் * பொன் ஆழி பாடு என்று *
அருள் நீர்மை தந்த அருள் 58
2239 nām pĕṟṟa naṉmaiyum * nā maṅkai nal nĕñcattu *
ompi iruntu ĕmmai otuvittu ** - vempiṉ
pŏrul̤ nīrmai āyiṉum * pŏṉ āzhi pāṭu ĕṉṟu *
arul̤ nīrmai tanta arul̤ -58

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2239. Because of my good karmā, Saraswathi stays in my good heart and has taught me what to do. She gives her grace and tells me, “Just as margosa, even though it is bitter, gives good health, the golden discus which the lord carries to fight his enemies is only to only protect the world and the gods. Praise his golden discus!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேம்பின் எம்பெருமானைப் பாடுவது வேம்பைப் போல்; பொருள் நீர்மை கசப்பாக; ஆயினும் தோன்றினாலும்; பொன் ஆழி அழகிய திருவாழியை உடையவனை; பாடு என்று பாடக்கடவாய் என்று; நா மங்கை ஸரஸ்வதியானவள்; நல் நெஞ்சத்து நமது நல்ல நெஞ்சிலே; ஓம்பி இருந்து ஆதரித்து இருந்து; எம்மை நமக்கு; ஓது வித்து பகவத்விஷயத்தைச் சொல்லிக்கொடுத்து; நாம் பெற்ற நன்மையும் நாம் பெற்ற நன்மையும்; அருள் நீர்மை அருளையே இயல்வாகவுடைய திருமால்; தந்த அருள் அருளிய கிருபையால் வந்தது என்கிறாள்
vĕmbu porulin nīrmai āyinum (praising emperumān) even if it appears like bitterness, the quality of nīm leaves; pon āzhi one who has the beautiful divine disc; pādu enṛu let you sing; nā mangai saraswathi [the deity for gyānam, knowledge]; nal nenjaththu in (our) good heart; ŏmbi irundhu supporting; emmai to us; ŏdhuviththu teaching us about emperumān’s matters; nām peṝa nanmaiyum our benefit of singing poems; arul̤ nīrmai thandha arul̤ came out of the grace of emperumān who has grace as his nature

IT 59

2240 அருள்புரிந்தசிந்தை அடியார்மேல்வைத்து *
பொருள்தெரிந்துகாண்குற்றவப்போது * - இருள்திரிந்து
நோக்கினேன்நோக்கி நினைந்தேனதொண்கமலம் *
ஓக்கினேனென்னையுமங்கோர்ந்து.
2240 அருள் புரிந்த சிந்தை * அடியார்மேல் வைத்து *
பொருள் தெரிந்து காண்குற்ற அப்போது ** இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி * நினைந்தேன் அது ஒண் கமலம் *
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து 59
2240 arul̤ purinta cintai * aṭiyārmel vaittu *
pŏrul̤ tĕrintu kāṇkuṟṟa appotu ** - irul̤ tirintu
nokkiṉeṉ nokki * niṉainteṉ atu ŏṇ kamalam *
okkiṉeṉ ĕṉṉaiyum aṅku orntu -59

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-10

Simple Translation

2240. I worship his devotees with my good heart and no longer do wrong. My evil thoughts have gone away and I think only of his beautiful lotus feet, meditate on him and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருள் புரிந்த அருளோடு கூடின; சிந்தை திருவுள்ளத்தை; அடியார் அடியவராகிய; மேல் வைத்து எங்கள் மேலே வைத்து; பொருள் பொருளல்லாத எங்களை; தெரிந்து ஒரு பொருளாக நினைத்து; காண்குற்ற கடாக்ஷித்தருளுகிற; அப்போது காலத்திலே; இருள் திரிந்து அஜ்ஞான இருள் நீங்கப் பெற்று; நோக்கினேன் ஸ்வரூபத்தை ஆராய்ந்தேன்; நோக்கி ஆராய்ந்து; ஒண்கமலம் அழகிய தாமரை; அது மலர்களைப் போன்ற திருவடிகளை; நினைந்தேன் வணங்கினேன் இத்திருவடிகள் தவிர; ஓர்ந்து நமக்கு வேறு புகலில்லையென்று நிரூபித்து; என்னையும் ஆத்மாவையும்; அங்கு அத்திருவடிகளிலேயே; ஓக்கினேன் ஸமர்ப்பித்தேன்
arul̤ purindha sindhai the divine mind focussed on mercy; adiyār mĕl vaiththu keeping on us, his followers; porul̤ therindhu considering us as entities when we weren’t; kāṇguṝa appŏdhu during that time when he showered his grace on us; irul̤ thirundhu getting rid of the darkness of ignorance; nŏkkinĕn ī analysed the nature of jīvāthmā and paramāthmā; nŏkki after analysing; oṇ kamalam adhu those divine feet [of emperumān] which are like beautiful lotus flowers; ninaindhĕn meditated on them (as the goal to be attained); ŏrndhu analysing (that there is no refuge for me other than these divine feet); ennaiyum the āthmā; angu at those divine feet; ŏkkinĕn ī offered

IT 60

2241 ஓருருவனல்லை ஒளியுருவம்நின்னுருவம் *
ஈருருவனென்பர் இருநிலத்தோர் * ஓருருவம்
ஆதியாம்வண்ணம் அறிந்தாரவர்கண்டீர் *
நீதியால் மண்காப்பார்நின்று.
2241 ஓர் உருவன் அல்லை * ஒளி உருவம் நின் உருவம் *
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் ** ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் * அறிந்தார் அவர் கண்டீர் *
நீதியால் மண் காப்பார் நின்று 60
2241 or uruvaṉ allai * ŏl̤i uruvam niṉ uruvam *
īr uruvaṉ ĕṉpar iru nilattor ** - or uruvam
ātiyām vaṇṇam * aṟintār avar kaṇṭīr *
nītiyāl maṇ kāppār niṉṟu -60

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2241. You do not have only one form. A shining form is yours, and the vast world says you have two forms. See, if devotees know your ancient form they will rule the world with justice.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் உருவன் எம்பெருமானே நீ ஸ்வதந்திரமாக இருப்பவன்; அல்லை மட்டும் அல்ல; ஒளி உருவம் ஒளி பெற்றிருக்கிற ஸ்வரூபம்; நின் உருவம் உன் வடிவம்; இரு நிலத்தோர் இந்த பரந்த உலகத்திலுள்ளோர்; ஈர் பரத்வமாகிற; உருவன் என்பர் பெரிய வடிவம் என்பர்; ஓர் உருவம் ஒப்பற்ற வடிவமே; ஆதியாம் எல்லார்க்கும் உஜ்ஜீவிப்பதற்கு காரணமாக; வண்ணம் இருக்கும் என்பதை; அறிந்தார் தெரிந்து; அவர் கண்டீர் கொள்ளுமவர்களே; நீதியால் நின்று நியாயப்படி நிலைத்து நின்று; மண் உலகத்தை; காப்பார் ரக்ஷிக்க வல்லவர் என்கிறார்
ŏr uruvan allai (ŏh emperumān!) you are not the one with unique divine form; ol̤i uruvam the radiant form (with which you are subservient to your followers); nin uruvam is your form; irunilaththŏr those who are on this earth; īr uruvan enbar say that you have a huge form (of being the supreme lord); ŏr uruvam the incomparable form (of being subservient to followers); ādhi ām vaṇṇam being the cause for the salvation of all; aṛindhār avar kaṇdīr only those who know (this); nīdhiyāl in the fair way; ninṛu standing firmly; maṇ kāppār have the ability to protect this world

IT 61

2242 நின்றதோர்பாதம் நிலம்புடைப்ப * நீண்டதோள்
சென்றளந்ததென்பர் திசையெல்லாம் * - அன்று
கருமாணியாய் இரந்தகள்வனே! * உன்னைப்
பிரமாணித்தார் பெற்றபேறு!
2242 நின்றது ஓர் பாதம் * நிலம் புதைப்ப * நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் ** அன்று
கரு மாணியாய் * இரந்த கள்வனே! * உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு! 61
2242 niṉṟatu or pātam * nilam putaippa * nīṇṭa tol̤
cĕṉṟu al̤antatu ĕṉpar ticai ĕllām ** - aṉṟu
karu māṇiyāy * iranta kal̤vaṉe! * uṉṉaip
piramāṇittār pĕṟṟa peṟu! -61

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2242. People say that as a thief you took the form of a bachelor dwarf, went to king Mahābali and asked for three feet of land. You measured the world with one of your feet and raised the other foot and touched the sky, as your arms extended to all directions. How fortunate they are who described you like this!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு காலத்தில்; கரு கருத்த; மாணியாய் பிரம்மசாரியாய்ச் சென்று; இரந்த யாசித்த; கள்வனே வஞ்சகமான பெருமானே!; நின்றது பூமியை அளப்பதாக நின்ற; ஓர் பாதம் ஒரு திருவடியானது; நிலம் பூமண்டலத்தை; புதைப்ப ஆக்ரமித்துக் கொள்ள; நீண்ட தோள் மற்றோரடியில் நீண்ட தோள்; திசை எல்லாம் திக்குக்களெல்லாவற்றிலும்; சென்று வியாபித்து; அளந்தது மேலுலகத்தையும் அளந்தது; என்பர் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்; உன்னை இது உன்னை; பிரமாணித்தார் நம்பினவர்கள் எல்லாரும்; பெற்ற பேறு பெற்ற பெரும் பேறாகும்
anṛu long ago; karumāṇi āy as a bachelor with black complexion; irandha asking for alms (from mahābali for 3 steps of earth); kal̤vanĕ ŏh cunning emperumān!; ninṛadhu ŏr pādham one divine foot which stood (to measure the earth); nilam the entire earth; pudhaippa hiding it; nīṇda thŏl̤ the huge divine shoulder which grew; dhisai ellām senṛu permeating through all directions; al̤andhadhu enbar (knowledgeable people) say that it measured (the upper worlds); unnai piramāṇiththār peṝa pĕṛu is the great benefit that all those who believed you, got

IT 62

2243 பேறொன்றுமுன்னறியேன் பெற்றறியேன்பேதைமையால் *
மாறென்றுசொல்லிவணங்கினேன் * -ஏறின்
பெருத்தெருத்தம்கோடொசியப் பெண்நசையின்பின்போய் *
எருத்திறுத்தநல்லாயரேறு.
2243 பேறு ஒன்றும் முன் அறியேன் * பெற்று அறியேன் பேதைமையால் *
மாறு என்று சொல்லி வணங்கினேன் ** ஏறின்
பெருத்தெருத்தம் கோடு ஒசிய * பெண் நசையின் பின் போய் *
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு 62
2243 peṟu ŏṉṟum muṉ aṟiyeṉ * pĕṟṟu aṟiyeṉ petaimaiyāl *
māṟu ĕṉṟu cŏlli vaṇaṅkiṉeṉ ** - eṟiṉ
pĕruttĕruttam koṭu ŏciya * pĕṇ nacaiyiṉ piṉ poy *
ĕruttu iṟutta nal āyar eṟu -62

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2243. I did not have the fortune of worshiping you, and I did not receive your grace because I was not wise. I only praised and worshiped you saying things which are not true. O, bull of the cowherds! You broke the horns of the seven bulls and conquered them to marry Nappinnai.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெண் நசையின் நப்பின்னையின் மேல்; பின் போய் உண்டான காதலுக்கு வசப்பட்டு; ஏறின் எருதுகளின்; பெருத்த எருத்தம் பெருத்த முசுப்புகளும்; கோடு கொம்புகளும்; ஒசிய ஒடியும்படியாக; எருத்து இருந்த கழுத்தை முறித்த; நல் ஆயர் நல்ல ஆயர்; ஏறு சிறுவன் கண்ணன்; மாறு நமது பாபங்களுக்கெல்லாம் எதிரியாக; என்று இருப்பவன் என்று; சொல்லி நினைத்து; வணங்கினேன் வணங்கினேன்; ஒன்றும் இப்படிப்பட்ட ஒப்பற்ற; பேறு பேறு உள்ளதை; முன் இதற்குமுன்; அறியேன் சிறிதும்அறியாதவனாயிருந்தேன்; பேதைமையால் அப்படி அறியாதிருந்ததனால்; பெற்று அறியேன் அதனைப் பெறாமலும் இழந்தேன்
peṇ nasaiyin pin pŏy possessed by the desire in the matter relating to nappinnaip pirātti; ĕṛin (the seven) bulls’; peruththa eruththam the huge necks; kŏdu and horns; osiya such that they are broken; eruththu the necks (of those bulls); iṛuththa broke; nal āyar ĕṛu krishṇa, the head of the great cowherds; māṛu being the enemy (of our sins); enṛu solli thinking this way; vaṇanginĕn attained him; mun before this; pĕṛu onṛum aṛiyĕn ī had not known of such an incomparable purushārtham (end benefit); pĕdhaimaiyāl due to ignorance; peṝu aṛiyĕn (until now) ī had not attained it and thus lost

IT 63

2244 ஏறேழும் வென்றுஅடர்த்தவெந்தை * எரியுருவத்து
ஏறேறி பட்டவிடுசாபம் * - பாறேறி
யுண்டதலைவாய்நிறையக் கோட்டங்கை யொண்குருதி *
கண்டபொருள்சொல்லின்கதை.
2244 ஏறு ஏழும் * வென்று அடர்த்த எந்தை * எரி உருவத்து
ஏறு ஏறி * பட்ட இடுசாபம் ** பாறு ஏறி
உண்ட தலை வாய் நிறையக் * கோட்டு அம் கை ஒண் குருதி *
கண்ட பொருள் சொல்லின் கதை 63
2244 eṟu ezhum * vĕṉṟu aṭartta ĕntai * ĕri uruvattu
eṟu eṟi * paṭṭa iṭucāpam ** - pāṟu eṟi
uṇṭa talai vāy niṟaiyak * koṭṭu am kai ŏṇ kuruti *
kaṇṭa pŏrul̤ cŏlliṉ katai -63

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2244. If I were to describe how our father conquered the seven bulls to marry Nappinnai and how he poured his blood into Nānmuhan’s skull that was stuck to Shivā’s hands and made it fall, they would be long stories.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறு ஏழும் எருதுகளேழையும்; வென்று அடர்த்த வென்று அழித்தவனும்; எந்தை எம்பெருமான்; எரி உருவத்து நெருப்பு உருவம் கொண்ட; ஏறு எருது வாஹனனுமான; ஏறிப் பட்ட சிவன் அநுபவித்த; விடு பிரமனால் கொடுக்கப்பட்ட; சாபம் சாபத்தினால்; பாறு ஏறி பருந்துகள் ஏறி; உண்ட தலை உண்ட மண்டைஓட்டின்; வாய் நிறைய வாய் நிறம்பும்படியாக; கோட்டு அம் கை குவிந்த அழகிய கையாலே; ஒண் குருதி தன் ரத்தத்தை அளித்த உடன்; கண்ட பொருள் கபாலம் கழன்று விழக் கண்டதை; சொல்லின் சொல்லத்தொடங்கினால்; கதை பெரியதொரு பாரதக் கதையாக முடியும்
ĕṛu ĕzhum the seven bulls; venṛu being victorious over them; adarththa destroyed; endhai kaṇṇapirān (krishṇa), my swāmy (lord); eri uruvaththu ĕṛu ĕṛi patta suffered by rudhra who has a fiery form and who has bull as his vehicle; vidu sābam curse given by brahmā; pāṛu ĕṛi uṇda thalai vāy niṛaiya to fill up the mouth of the skull which eagles eat as food; kŏdu hand which is like a bud; am kai with beautiful hands (given after tearing); oṇ kurudhi with beautiful blood; kaṇda porul̤ that incident seen (when the skull fell out of [rudhra’s] hands); kadhai will end up like mahābhāratha story

IT 64

2245 கதையின்பெரும்பொருளும் கண்ணா! * நின்பேரே
இதயமிருந்தவையேயேத்தில் * - கதையும்
திருமொழியாய் நின்றதிருமாலே! * உன்னைப்
பருமொழியால்காணப்பணி.
2245 கதையும் பெரும் பொருளும் கண்ணா ! * நின் பேரே
இதயம் * இருந்தவையே ஏத்தில் ** கதையும்
திருமொழியாய் நின்ற * திருமாலே ! * உன்னைப்
பரு மொழியால் காணப் பணி 64
2245 kataiyum pĕrum pŏrul̤um kaṇṇā ! * niṉ pere
itayam * iruntavaiye ettil ** - kataiyum
tirumŏzhiyāy niṉṟa * tirumāle ! * uṉṉaip
paru mŏzhiyāl kāṇap paṇi -64

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2245. O Kanna, all the stories that anyone tells, no matter what they are about, are only about you and nothing else. My heart wants to praise you. You are the stories and the divine words in them. Give me your grace so I may understand your stories.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ணா! கண்ணனே!; கதையும் இதிஹாஸ புராணங்களும்; பெரும் அவற்றின் சிறந்த; பொருளும் அர்த்தங்களும்; இதயம் தாத்பரியமும்; இருந்தவையே உள்ளது உள்ளபடியே; ஏத்தில் அறிந்து துதித்தால்; நின் அவை உன்னுடைய; பேரே திருநாமங்களேயாம்; கதையின் சிறந்த வேதங்களின்; திருமொழியாய் வடிவமாக; நின்ற திருமாலே நிற்கும் பெருமானே!; உன்னை உன்னை; பரு மொழியால் பெரிய வேத சப்தங்களாலே; காண கண்டு அநுபவிக்கும்படி; பணி அருள வேண்டும்
kaṇṇā ŏh krishṇa!; kadhaiyin in ithihāsams (epics) and purāṇams (ancient biographies); perum porul̤um eminent meanings; idhayam their inner connotations; irundhavaiyĕ as they are; ĕththil if known and praised; nin pĕrĕ (they are all) your divine names only; kadhaiyin thirumozhiyāy ninṛa thirumālĕ ŏh thirumāl̤ (ṣrīman nārāyaṇa)! ẏou are the epitome of all that is mentioned in the great vĕdhas; unnai you; paru mozhiyālĕ to enjoy after identifying you with the great words of vĕdhas; paṇi please show mercy

IT 65

2246 பணிந்தேன்திருமேனி பைங்கமலம்கையால் *
அணிந்தேனுன்சேவடிமேலன்பாய் * - துணிந்தேன்
புரிந்தேத்தி உன்னைப்புகலிடம்பார்த்து * ஆங்கே
இருந்தேத்திவாழுமிது.
2246 பணிந்தேன் திருமேனி * பைங் கமலம் கையால் *
அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** துணிந்தேன்
புரிந்து ஏத்தி * உன்னை புகலிடம் பார்த்து * ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது 65
2246 paṇinteṉ tirumeṉi * paiṅ kamalam kaiyāl *
aṇinteṉ uṉ cevaṭimel aṉpāy ** - tuṇinteṉ
purintu etti * uṉṉai pukaliṭam pārttu * āṅke
iruntu etti vāzhum itu -65

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2246. I worship your divine body, I bow to your beautiful lotus feet with love and I worship you folding my hands. I searched for you, my refuge, and know that the best life for me is to praise and live where you are.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமேனி திருமாலே உன் திருமேனியை; பணிந்தேன் வணங்கினேன்; உன் உன்; சேவடிமேல் சிவந்த திருவடிகளின் மேல்; பைங் கமலம் அழகிய தாமரை மலர்களை; அன்பாய் அன்புடன்; கையால் கைகளால்; அணிந்தேன் ஸமர்ப்பித்தேன்; உன்னை உன்னை; புரிந்து ஏத்தி விரும்பித் துதித்து; புகலிடம் பரமபதத்திலிருக்கும்; பார்த்து இருப்பை நோக்கி; ஆங்கே அங்கேயே; இருந்து இருந்துகொண்டு; ஏத்தி மங்களாசாஸனம் பண்ணும்; வாழும் வாழ்வை; இது துணிந்தேன் பெற உறுதி கொண்டேன்
thirumĕni (ŏh thirumāl!) your divine form; paṇindhĕn worshipped; un sĕvadi mĕl on your reddish divine feet; paim kamalam beautiful lotus flowers; anbu āy with affection; kaiyāl aṇindhĕn offered with hands; unnai you; purindhu ĕththi praising desirously; pugal idam pārththu looking at your dwelling in paramapadham (ṣrīvaikuṇtam); āngĕ irundhu ĕththi idhu thuṇindhĕn ī ascertained to myself that staying there and praising you is the life that ī should live

IT 66

2247 இதுகண்டாய்நன்னெஞ்சே! இப்பிறவியாவது *
இதுகண்டாய்எல்லாம்நாமுற்றது * - இதுகண்டாய்
நாரணன்பேரோதி நகரத்தருகணையா *
காரணமும்வல்லையேல்காண்.
2247 இது கண்டாய் நல் நெஞ்சே ! * இப் பிறவி ஆவது *
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது ** இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி * நரகத்து அருகு அணையா *
காரணமும் வல்லையேல் காண் 66
2247 itu kaṇṭāy nal nĕñce ! * ip piṟavi āvatu *
itu kaṇṭāy ĕllām nām uṟṟatu ** - itu kaṇṭāy
nāraṇaṉ per oti * narakattu aruku aṇaiyā *
kāraṇamum vallaiyel kāṇ -66

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2247. See, O good heart, this birth is what has happened to us. If we praise the names of Nārāyanan resting on the ocean on a snake bed, that will be the way to avoid going to hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; இப் பிறவி இந்த ஸம்ஸாரத்தின்; ஆவது கொடுமையை; இது கண்டாய் நீ தெரிந்துகொள்; நாம் உற்றது நாம் அநுபவித்த; எல்லாம் துக்கங்களெல்லாம்; இது இப்படிப்பட்டவை என்று; கண்டாய் புரிந்து கொள்; நாரணன் எம்பெருமானின்; பேர் ஓதி திருநாமங்களை ஓதி; நகரத்து ஸம்ஸாரமான நரகத்தின்; அருகு அருகிலும்; அணையா நாம் நிற்கலாகாது என்ற; காரணமும் காரணத்தையும்; இது கண்டாய் நீ அறிந்து கொள்; வல்லையேல் இவ்வாறு அறிந்து கொண்டால்; காண் உலக வாழ்க்கையின் தாழ்வை உணர்வாய்
nal nenjĕ ŏh good heart!; ip piṛavi āvadhu idhu kaṇdāy the cruelty of samsāram (materialistic realm) is like this, do observe.; nām uṝadhu ellām idhu kaṇdāy the sorrows that we experienced (in this samsāram) are like these.; nāraṇan ṣrīman nārāyana’s; pĕr divine names; ŏdhi reciting them well; naragaththu the hell called samsāram; arugu near; aṇaiyā kāraṇamum the reason for hating that we should not be here; idhu kaṇdāy is only the fault of this samsāram, do observe.; vallaiyĕl̤ if you are capable of knowing; kāṇ see for yourself (the lowliness of this samsāram).

IT 67

2248 கண்டேன் திருமேனி யான்கனவில் * ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ்சுடராழி * கண்டேன்
உறுநோய்வினையிரண்டும் ஓட்டுவித்து * பின்னும்
மறுநோய்செறுவான்வலி.
2248 கண்டேன் திருமேனி * யான் கனவில் * ஆங்கு அவன் கைக்
கண்டேன் * கனலும் சுடர் ஆழி ** கண்டேன்
உறு நோய் வினை இரண்டும் * ஓட்டுவித்து * பின்னும்
மறு நோய் செறுவான் வலி 67
2248 kaṇṭeṉ tirumeṉi * yāṉ kaṉavil * āṅku avaṉ kaik
kaṇṭeṉ * kaṉalum cuṭar āzhi ** - kaṇṭeṉ
uṟu noy viṉai iraṇṭum * oṭṭuvittu * piṉṉum
maṟu noy cĕṟuvāṉ vali -67

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2248. I saw his divine body in a dream, his hands and the fiery discus that he carries and found that he is the strength that will remove the results of my good and bad karmā and the troubles of my life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் கனவில் நான் கனவில்; திருமேனி உன் அழகிய திருமேனியை; கண்டேன் கண்டு வணங்கினேன்; ஆங்கு அவன் அப்போது அவன்; கைக் கனலும் கையில் தீ உமிழும்; சுடர் ஆழி ஜோதிமயமான சக்கரத்தை; கண்டேன் கண்டேன்; உறு நோய் ஆத்மாவின் நோயான; வினை இரண்டும் பாப புண்யம் இரண்டையும்; ஓட்டு வித்து தொலைத்து; பின்னும் மறு நோய் மறுபடியும் துளிர்க்காதபடி; செறுவான் வலி அவற்றின் வேரை அறுக்கும்; கண்டேன் எம்பெருமானின் மிடுக்கையும் கண்டேன்
yān adiyĕn (the servitor); kanavil in the experience of the mind, similar to dream; thirumĕni the beautiful divine form; kaṇdĕn worshipped; āngu at that time; avan kai in his divine hand; kanalum sudar āzhi kaṇdĕn ī saw the divine, radiant disc, which was spitting fire; uṛunŏy vinai iraṇdum the two deeds of vice and virtue, which are like a disease, fully united (with āthmā); ŏttuviththu getting rid; pinnum beyond that; maṛu nŏy seṛuvān emperumān who gets rid of even the scent of these deeds which spring up like off-shoots; vali strength; kaṇdĕn ī was able to see

IT 68

2249 வலிமிக்கவாளெயிற்று வாளவுணர்மாள *
வலிமிக்க வாள்வரைமத்தாக * -வலிமிக்க
வாள்நாகஞ்சுற்றி மறுகக்கடல்கடைந்தான் *
கோள்நாகங்கொம்பொசித்தகோ.
2249 வலி மிக்க வாள் எயிற்று * வாள் அவுணர் மாள *
வலி மிக்க வாள் வரை மத்து ஆக * வலி மிக்க
வாள் நாகம் சுற்றி * மறுகக் கடல் கடைந்தான் *
கோள் நாகம் கொம்பு ஒசித்த கோ 68
2249 vali mikka vāl̤ ĕyiṟṟu * vāl̤ avuṇar māl̤a *
vali mikka vāl̤ varai mattu āka * vali mikka
vāl̤ nākam cuṟṟi * maṟukak kaṭal kaṭaintāṉ *
kol̤ nākam kŏmpu ŏcitta ko -68

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2249. He, the king broke the tusks of the elephant Kuvalayābeedam, used big Mandara mountain as a churning stick and the enormous snake Vāsuki as a rope, churned the milky ocean, and gave the nectar to the gods, cheating the strong Asurans with sharp teeth.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலி மிக்க மகாபலசாலிகளாய்; வாள் வாள் போன்ற; எயிற்று கோரைப்பற்களையுடையவரும்; வாள் வாட்படையை உடைய; அவுணர் மாள அஸுரர்கள் மாள; வலி மிக்க மிக்க வலிய; வாள் வரை ஒளியுள்ள மந்தர மலையை; மத்து ஆக மத்தாக நாட்டி; வலி மிக்க மிக்க வலிய சக்தியுடைய; வாள் ஒளியையுமுடைய; நாகம் வாஸுகி நாகத்தை; சுற்றி கயிறாகச் சுற்றி; கடல் மறுக கடல் குழம்பும்படி; கடைந்தான் கடைந்தவரும்; கோள் குவலயாபீடமென்னும்; நாகம் மதயானையின்; கொம்பு கொம்புகளை; ஒசித்த கோ ஒடித்தவரும் எம்பெருமான்ஆவான்
vali mikka being mightily strong; vāl̤ eyiṛu having canine teeth resembling swords; vāl̤ having an army of swords; avuṇar demons; māl̤a to be destroyed; vali mikka vāl̤ varai maththāga having manthara mountain, which is very strong and radiant, as the churning staff; vali mikka vāl̤ nāgam the serpent vāsuki, which is very strong and radiant; suṝi using it as a rope around the churning staff; kadal maṛuga kadaindhān one who churned the ocean such that it became a slimey mass; kŏl̤ nāgam the exulting elephant called as kuvalayāpīdam, which is very strong; kombu its tusks; osiththa one who broke it (playfully); the l̤ord

IT 69

2250 கோவாகி மாநிலங்காத்து * நங்கண்முகப்பே
மாவேகிச்செல்கின்ற மன்னவரும் * - பூமேவும்
செங்கமலநாபியான் சேவடிக்கேயேழ்பிறப்பும் *
தண்கமலமேய்ந்தார்தமர்.
2250 கோ ஆகி * மா நிலம் காத்து * நம் கண் முகப்பே
மா ஏகிச் செல்கின்ற மன்னவரும் ** பூ மேவும்
செங் கமல நாபியான் * சேவடிக்கே ஏழ் பிறப்பும் *
தண் கமலம் ஏய்ந்தார் தமர் 69
2250 ko āki * mā nilam kāttu * nam kaṇ mukappe
mā ekic cĕlkiṉṟa maṉṉavarum ** pū mevum
cĕṅ kamala nāpiyāṉ * cevaṭikke ezh piṟappum *
taṇ kamalam eyntār tamar -69

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2250. Even the kings of famous countries who ride horses have been devotees of the lord for their seven births. on whose navel Nānmuhan abides on a lotus,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோ ஆகி அரசர்களுக்கு அரசர்களாய்; மா நிலம் பரந்த பூமண்டலத்தை; காத்து அரசாட்சிபுரிந்து; நம் கண் முகப்பே நம் கண்ணெதிரே; மா ஏகிச் குதிரையேறி; செல்கின்ற திரிகின்ற; மன்னவரும் அரசர்களும்; செங் கமல செந்தாமரை; பூ மேவும் மலர் இருக்கும்; நாபியான் நாபியையுடைய பெருமானின்; சேவடிக்கே திருவடிகளுக்கு; ஏழ் பிறப்பும் ஏழ் ஏழ் பிறப்பிலும்; தண் அழகிய குளிர்ந்த; கமலம் தாமரைப் பூக்களை; ஏய்ந்தார் ஸமர்ப்பித்தவர்களான; தமர் பக்தர்களாவர்
kŏ āgi being king of kings; mā nilam kāththu ruling over the expansive earth; nam kaṇ mugappĕ in front of our eyes; mā ĕgi selginṛa riding atop horses; mannavarum kings; sem kamalappū mĕvum one with the reddish lotus flower adorning; nābiyān emperumān with divine navel; sĕ adikkĕ to the divine feet; ĕzh piṛappum over many births; thaṇ kamalam cool lotus flowers; ĕyndhār offered; thamar followers

IT 70

2251 தமருள்ளம்தஞ்சை தலையரங்கம்தண்கால் *
தமருள்ளும்தண்பொருப்புவேலை * - தமருள்ளும்
மாமல்லைகோவல் மதிட்குடந்தையென்பரே *
ஏவல்லவெந்தைக்கிடம்.
2251 தமர் உள்ளம் தஞ்சை * தலை அரங்கம் தண்கால் *
தமர் உள்ளும் தண் பொருப்பு வேலை ** தமர் உள்ளும்
மாமல்லை கோவல் * மதிள் குடந்தை என்பரே *
ஏ வல்ல எந்தைக்கு இடம் 70
2251 tamar ul̤l̤am tañcai * talai araṅkam taṇkāl *
tamar ul̤l̤um taṇ pŏruppu velai ** - tamar ul̤l̤um
māmallai koval * matil̤ kuṭantai ĕṉpare *
e valla ĕntaikku iṭam -70

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2251. The places of our heroic lord, skilled in shooting arrows and conquering his enemies, are Thanjai Māmani koil, which is the hearts of his devotees, divine Srirangam and Thiruthangā, the cool milky ocean, Thirukkadalmallai praised by devotees, Thirukkovalur and Thirukkudandai surrounded with walls.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தமர் உள்ளம் பக்தர்களுடைய மனம்; தஞ்சை தஞ்சை மா மணிக்கோயில்; தலை அரங்கம் சிறந்த திருவரங்கம்; தண் கால் திருத்தண்கால்; தமர் அடியார்கள்; உள்ளும் நினைத்துருகும்; தண் பொருப்பு குளிர்ந்த திருமலை; வேலை திருப்பாற்கடல்; தமர் உள்ளும் பக்தர்கள் சிந்திக்கும்; மாமல்லை திருக்கடல்மல்லை; கோவல் திருக்கோவலூர்; மதிள் மதிள்களோடு கூடிய; குடந்தை திருக்குடந்தை ஆகியவை; ஏ வல்ல அம்பு எய்வதில் வல்லவரான; எந்தைக்கு எம்பெருமான் இருக்கும்; இடம் என்பரே இடம் என்பர்
thamar ul̤l̤am devotees’ heart; thanjai thanjai māmaṇik kŏyil [a divine abode in thanjāvūr]; thalai arangam (among all divine places) most special thiruvarangam; thaṇkāl thiruththaṇkāl [a divine abode near present day sivakāsi]; thamar ul̤l̤um what the followers have thought of (as everything for them); thaṇ poruppu the cool thirumalai (thiruvĕngadam); vĕlai thiruppāṛkadal (milky ocean); thamar ul̤l̤um places meditated upon by followers; māmallai thirukkadal mallai [mahābalipuram]; kŏval thirukkŏvalūr; madhil̤ kudandhai kudandhai [kumbakŏṇam] with divine fortified walls; ĕ valla endhaikku idam enbar [his followers] will say are the residences for chakravarthy thirumagan (ṣrī rāma) who is an expert at shooting arrows.

IT 71

2252 இடங்கை வலம்புரிநின்றார்ப்ப * எரிகான்று
அடங்கார் ஓடுங்குவித்ததாழி * - விடங்காலும்
தீவாயரவணைமேல்தோன்றல் திசையளப்பான் *
பூவாரடி நிமிர்த்தபோது.
2252 இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப * எரி கான்று
அடங்கார் * ஒடுங்குவித்தது ஆழி ** விடம் காலும்
தீ வாய் அரவு அணைமேல் * தோன்றல் திசை அளப்பான் *
பூ ஆர் அடி நிமிர்த்த போது 71
2252 iṭaṅkai valampuri niṉṟu ārppa * ĕri kāṉṟu
aṭaṅkār * ŏṭuṅkuvittatu āzhi ** - viṭam kālum
tī vāy aravu aṇaimel * toṉṟal ticai al̤appāṉ *
pū ār aṭi nimirtta potu -71

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2252. When the lord who rests on the poisonous snake Adishesa raised his flower-like feet, grew to the sky and measured the world, the conch in his left hand sounded loud and his shining discus that conquers his enemies shot out fire in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விடம் காலும் விஷத்தை உமிழ்கின்ற; தீ வாய் தீ வாய் உடைய; அரவு ஆதிசேஷன் மீது; அணை மேல் பள்ளிகொண்டிருக்கும்; தோன்றல் எம்பெருமான்; திசை எல்லா உலகங்களையும்; அளப்பான் அளந்து கொள்வதற்காக; பூ ஆர் அடி பூப்போன்ற திருவடியை; நிமிர்த்த உயரத்தூக்கி; போது வளர்ந்த போது; வலம்புரி சங்கானது; இடங்கை இடது கையில்; நின்று ஸ்திரமாக இருந்து கொண்டு; ஆர்ப்ப முழங்க; ஆழி சக்கரம்; எரி நெருப்பை; கான்று உமிழ்ந்து கொண்டு எதிரிகளாய்; அடங்கார் நின்ற நமுசி முதலானவர்களை; ஒடுங்குவித்தது செயலற்றவர்களாகப் பண்ணிற்று
vidam kālum spitting poison; thī vāy having frightening mouth; aravu ananthāzhwān (ādhiṣĕshan); aṇai mĕl (reclining) on his bed; thŏnṛal the supreme being; dhisai all the worlds; al̤appān to measure; pū ār adi the soft divine feet, which are like flowers; nimirththapŏdhu during the time when [emperumān] lifted and made them grow; valampuri his conch; idangai on his left hand; ninṛu standing firmly; ārppa blew vociferously; āzhi divine disc [sudharṣana]; eri kānṛu spat fire; adangār enemies such as namuchi; odunguviththadhu made them incapacitated

IT 72

2253 போதறிந்துவானரங்கள் பூஞ்சுனைபுக்கு * ஆங்கலர்ந்த
போதரிந்துகொண்டேத்தும் போது * உள்ளம்! - போது
மணிவேங்கடவன் மலரடிக்கேசெல்ல *
அணிவேங்கடவன்பேராய்ந்து.
2253 போது அறிந்து வானரங்கள் * பூஞ்சுனை புக்கு * ஆங்கு அலர்ந்த
போது அரிந்துகொண்டு ஏத்தும் போது ** உள்ளம் போது
மணி வேங்கடவன் * மலர் அடிக்கே செல்ல *
அணி வேங்கடவன் பேர் ஆய்ந்து 72
2253 potu aṟintu vāṉaraṅkal̤ * pūñcuṉai pukku * āṅku alarnta
potu arintukŏṇṭu ettum potu ** - ul̤l̤am potu
maṇi veṅkaṭavaṉ * malar aṭikke cĕlla *
aṇi veṅkaṭavaṉ per āyntu -72

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2253. The monkeys in the Thiruvenkatam hills enter the ponds where flowers bloom, bathe, take flowers place them on his feet and worship him. O heart, come, let us go there, recite his divine names, place the flowers on his feet and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானரங்கள் குரங்குகள்; போது விடியற்காலம்; அறிந்து விழித்து எழுந்து; பூஞ்சுனை புஷ்பித்த நீர்நிலைகளிலே; புக்கு புகுந்து நீராடி; ஆங்கு அப்போதே; அலர்ந்த போது மலர்ந்த பூக்களை; அரிந்து கொண்டு பறித்து ஸமர்ப்பித்து; ஏத்தும் வணங்கி நின்றன; உள்ளம்! மனமே நீயும்; போது அப்படி செய்யப் புறப்படு; அணி அழகிய திருமலையிலுள்ள; வேங்கடவன் பெருமானின்; பேர் திருநாமங்களை; ஆய்ந்து பாடிக்கொண்டு; வேங்கடவன் திருவேங்கடவன்; மலர் அடிக்கே மலரடிக்கே; செல்ல சென்று; போதும் அணி பூக்களை ஸமர்பிப்பாயாக
vānarangal̤ monkeys; pŏdhu aṛindhu waking up early in the morning (and getting up); pū sunai pukku entering ponds with flowers (and having a bath); āngu alarndha just then blossomed; pŏdhu flowers; arindhu koṇdu plucking and offering them; ĕththum will worship; ul̤l̤am ŏh mind!; pŏdhu you too start (to carry out like that); maṇi vĕngadavan thiruvĕngadavan who is like a blue coloured gem; pĕr divine names; āyndhu meditating on; vĕngadavan malar adikkĕ sella ensuring that they reach the lotus-like divine feet of; pŏdhu aṇi offer the flowers

IT 73

2254 ஆய்ந்துரைப்பனாயிரம்பேர் ஆய்நடுவந்திவாய் *
வாய்ந்தமலர்தூவிவைகலும் * - ஏய்ந்த
பிறைக்கோட்டுச் செங்கண்கரிவிடுத்தபெம்மான்
இறைக்குஆட்படத்துணிந்தயான்.
2254 ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் * ஆதி நடு அந்திவாய் *
வாய்ந்த மலர் தூவி வைகலும் ** ஏய்ந்த
பிறைக் கோட்டுச் * செங்கண் கரி விடுத்த பெம்மான் *
இறைக்கு ஆட்படத் துணிந்த யான் 73
2254 āyntu uraippaṉ āyiram per * āti naṭu antivāy *
vāynta malar tūvi vaikalum ** - eynta
piṟaik koṭṭuc * cĕṅkaṇ kari viṭutta pĕmmāṉ *
iṟaikku āṭpaṭat tuṇinta yāṉ -73

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2254. When the elephant Gajendra with tusks like crescent moons and angry eyes was caught by a crocodile, our lord went to the pond, killed the crocodile and saved him. I have decided to become his slave, praising his thousand names and placing fresh flowers on his feet every day.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறை ஏய்ந்த சந்திரகலை போன்ற; கோட்டு தந்தத்தையும்; செங்கண் சிவந்த கண்களையுமுடைய; கரி கஜேந்திரனை; விடுத்த முதலைவாயிலிருந்து விடுவித்த; பெம்மான் பெருமானான; இறைக்கு ஸ்ரீமந் நாராயணனுக்கு; ஆட்பட அடிமை செய்ய; துணிந்த யான் உறுதிகொண்ட நான்; ஆதி நடு காலை பகல்; அந்திவாய் மாலை முதலிய; வைகலும் எல்லா காலங்களிலும்; வாய்ந்த கிடைத்த; மலர் தூவி புஷ்பங்களைத் தூவி; ஆயிரம் பேர் அயிரம் திருநாமங்களையும்; ஆய்ந்து மனதார வாயார; உரைப்பன் பாடி வணங்குவேன்
piṛai ĕyndha kŏdu having crescent shaped tusks; sem kān having reddish eyes; kari the elephant gajĕndhrāzhwān; viduththa one who released it from the jaws of crocodile; pemmān the supreme being; iṛaikku to ṣrīman nārāyaṇa; āl̤ pada to be his servitor; thuṇindha yān ī became firm; ādhi nadu andhivāy vaigalum during all times in the morning, noon and night; vāyndha malar flowers that ī could get my hands on; thūvi strew them haphaśardly; āyiram pĕr the thousand divine names; āyndhu uraippan ī will meditate in my heart

IT 74

2255 யானே தவஞ்செய்தேன் ஏழ்பிறப்புமெப்பொழுதும் *
யானேதவமுடையேன் எம்பெருமான்! * - யானே
இருந்ததமிழ்நன்மாலை இணையடிக்கேசொன்னேன் *
பெருந்தமிழன்நல்லேன்பெரிது.
2255 யானே தவம் செய்தேன் * ஏழ் பிறப்பும் எப்பொழுதும் *
யானே தவம் உடையேன் எம் பெருமான் ! ** யானே
இருந்த தமிழ் நல் மாலை * இணை அடிக்கே சொன்னேன் *
பெருந் தமிழன் நல்லேன் பெருகு 74
2255 yāṉe tavam cĕyteṉ * ezh piṟappum ĕppŏzhutum *
yāṉe tavam uṭaiyeṉ ĕm pĕrumāṉ ! ** - yāṉe
irunta tamizh nal mālai * iṇai aṭikke cŏṉṉeṉ *
pĕrun tamizhaṉ nalleṉ pĕruku-74

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2255. I have received the fruit of all the tapas of seven births, for I have composed a wonderful garland of Tamil pāsurams and placed it at his feet. I am fortunate to have written them in fine Tamil.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்பெருமான்! எம்பெருமானே!; ஏழ் பிறப்பும் எல்லா பிறப்புக்களிலும்; எப்பொழுதும் எல்லா நிலைகளிலும்; யானே நானே; தவம் செய்தேன் தவம் புரிந்தவன்; யானே தவம் நானே தவம்; உடையேன் உடையவன் தவத்தின்; யானே பலனைப்பெற்றவனும் யானே; இருந் தமிழ் சிறந்த தமிழ்; நல் மாலை சொல் மாலைகளை; இணை அடிக்கே உன் திருவடிகளுக்கே; சொன்னேன் சூட்டினேன்; பெரும் பெரிய; தமிழன் தமிழ்க்கலையில் வல்லவனாய்; பெரிது சிறப்புடையவனாய்; நல்லேன் இருப்பவன் நானே
emperumān ŏh my swāmy (l̤ord)!; ĕzh piṛappum in all births; eppozhudhum in all states; thavam seydhĕn carried out penance; yānĕ only ī; thavam udaiyan yānĕ it is ī who reaped the benefit of carrying out that penance; irum thamizh nal mālai beautiful garlands of words strung in great thamizh; iṇai adikkĕ (to your) two divine feet; sonnĕn ī offered; perum thamizhan being an expert in great thamizh arts; peridhu to a great extent; nallĕn being great; yānĕ only ī

IT 75

2256 பெருகுமதவேழம் மாப்பிடிக்கிமுன்னின்று *
இருகணிளமூங்கில்வாங்கி * - அருகிருந்த
தேன்கலந்துநீட்டும் திருவேங்கடம்கண்டீர் *
வான்கலந்தவண்ணன்வரை.
2256 பெருகு மத வேழம் * மாப் பிடிக்கு முன் நின்று *
இரு கண் இள மூங்கில் வாங்கி ** அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் * திருவேங்கடம் கண்டீர் *
வான் கலந்த வண்ணன் வரை 75
2256 pĕruku mata vezham * māp piṭikku muṉ niṉṟu *
iru kaṇ il̤a mūṅkil vāṅki ** - aruku irunta
teṉ kalantu nīṭṭum * tiruveṅkaṭam kaṇṭīr *
vāṉ kalanta vaṇṇaṉ varai -75

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2256. The lord colored like a cloud stays in the Thiruvenkatam hills where a male elephant dripping with ichor plucks bamboo sticks, soaks them in honey and gives them to his mate.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெருகு மத பெருகுகின்ற மதநீரையுடை; வேழம் யானை; மாப் பிடிக்கு சிறந்த பேடையின்; முன் நின்று முன்னே நின்று; இரு கண் இரண்டு கணுக்களையுடைய; இள மூங்கில் இளைய மூங்கில் குருத்தை; வாங்கி பிடுங்கி; அருகு இருந்த ஸமீபத்தில் இருந்த; தேன் கலந்து தேனில் தோய்த்து பேடைக்கு; நீட்டும் கொடுக்க கையை நீட்டப் பெற்ற; திருவேங்கடம் கண்டீர் திருமலையன்றோ; வான் கலந்த மேகத்தோடொத்த; வண்ணன் நிறத்தவனான பெருமான்; வரை இருக்கும் மலை
perugum flowing copiously; madham the liquid that comes out during periods of exultation; vĕzham (male) elephant; mā pidikku mun ninṛu standing in front of its great female elephant; iru kaṇ il̤a mūngil vāngi plucking a bamboo sprout with two nodes; arugu irundha thĕn kalandhu dipping (that bamboo sprout) in honey available nearby; nīttum when it offered (to the female elephant, with its trunk); thiruvĕngadam kaṇdīr is that not thiruvĕngadam!; vān kalandha vaṇṇan varai it is the hill which is the residence for emperumān who has the complexion of cloud

IT 76

2257 வரைச்சந்தனக்குழம்பும் வான்கலனும்பட்டும் *
விரைப்பொலிந்த வெண்மல்லிகையும்-நிரைத்துக் கொண்டு *
ஆதிக்கண்நின்ற அறிவனடியிணையே *
ஓதிப்பணிவதுறும்.
2257 வரைச் சந்தனக் குழம்பும் * வான் கலனும் பட்டும் *
விரைப் பொலிந்த வெண் மல்லிகையும் நிரைத்துக்கொண்டு **
ஆதிக்கண் நின்ற * அறிவன் அடி இணையே *
ஓதிப் பணிவது உறும் 76
2257 varaic cantaṉak kuzhampum * vāṉ kalaṉum paṭṭum *
viraip pŏlinta vĕṇ mallikaiyum - niraittukkŏṇṭu **
ātikkaṇ niṉṟa * aṟivaṉ aṭi iṇaiye *
otip paṇivatu uṟum -76

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2257. It is good for us to take the sandal paste from the hills, precious ornaments, silk clothes, and fragrant white jasmine flowers and offer them at the feet of the wise ancient lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வரை மலைகளில் உண்டான; சந்தன சந்தனத்தின்; குழம்பும் குழம்பையும்; வான் சிறந்த; கலனும் ஆபரணங்களையும்; பட்டும் பட்டுப் பீதாம்பரங்களையும்; விரைப் பொலிந்த மணம் மிகுந்த; வெண் வெளுத்த; மல்லிகையும் மல்லிகை மாலைகளையும்; நிரைத்துக் கொண்டு சேகரித்துக்கொண்டு; ஆதிக்கண் நின்ற முழு முதல்; அறிவன் கடவுளின்; அடி இணையே இரண்டு திருவடிகளையும்; ஓதி வாயார வாழ்த்தி; பணிவது மனதார வணங்குவது; உறும் அடியவர்களுக்கு ஏற்றதாகும்
varaich chandhanak kuzhambum sandalwood paste made from sandalwood trees in mountains; vān kalanum great jewels; pattum silken clothes; virai polindha full of fragrance; veṇ malligaiyum garlands of white jasmine flower; niraiththukkoṇdu gathering these materials; ādhikkaṇ ninṛa aṛivan the omniscient emperumān who has been there from time immemorial as the causative factor for the worlds; adi iṇaiyĕ the two divine feet; ŏdhi praising him handsomely with the mouth; paṇivadhu bowing down to him with the head; uṛum will be apt (for the nature of chĕthana, the sentient entity)

IT 77

2258 உறுங்கண்டாய்நன்னெஞ்சே! உத்தமன்நற்பாதம் *
உறுங்கண்டா யொண்கமலந்தன்னால் * - உறுங்கண்டாய்
ஏத்திப்பணிந்து அவன்பேர் ஈரைஞ்ஞூறுஎப்பொழுதும் *
சாத்தியுரைத்தல்தவம்.
2258 உறும் கண்டாய் நல் நெஞ்சே ! * உத்தமன் நல் பாதம் *
உறும் கண்டாய் ஒண் கமலம் தன்னால் ** உறும் கண்டாய்
ஏத்திப் பணிந்து அவன் பேர் * ஈர் ஐஞ்ஞூறு எப்பொழுதும் *
சாற்றி உரைத்தல் தவம் 77
2258 uṟum kaṇṭāy nal nĕñce ! * uttamaṉ nal pātam *
uṟum kaṇṭāy ŏṇ kamalam taṉṉāl ** - uṟum kaṇṭāy
ettip paṇintu avaṉ per * īr aiññūṟu ĕppŏzhutum *
cāṟṟi uraittal tavam -77

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2258. O good heart, if we worship the faultless lord offering beautiful lotus flowers at his beautiful feet and reciting his thousand names and praising him, that is the only tapas we need to do.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல மனமே!; உத்தமன் உத்தமனான பெருமானின்; நல் நல்ல சிறந்த; பாதம் திருவடிகளைப் பணிவது; உறும் கண்டாய் நமக்கு ஏற்றது; ஒண் கமலம் அழகிய தாமரை; தன்னால் மலர்களை; உறும் அணிவித்துப் பணிவது; கண்டாய் நமக்கு ஏற்றது; சாற்றி மலர்களை ஸமர்ப்பித்து; ஏத்தி பணிந்து வணங்கி துதித்து; அவன் பேர் அவனுடைய திருநாமங்களான; ஈர் ஐஞ்ஞூறு ஸஹஸ்ர நாமங்களையும்; எப்பொழுதும் அநவரதமும்; உரைத்தல் வாயார வாழ்த்தி; தவம் பண்ணும் தவம்; உறும் கண்டாய் சாலச் சிறந்ததே
nannenjĕ ŏh good heart!; uththaman the purushŏththaman [emperumān]; nal pādham the great divine feet; (paṇivadhu) to attain; uṛum kaṇdāy it is very apt, see for yourself.; oṇ kamalam thannāl with beautiful lotus flowers; (sāṝip paṇivadhu) to decorate and to pay obeisance; uṛum kaṇdāy is very apt for us, see for yourself; sāṝi offering (those lotus flowers with our hands); paṇindhu bowing (with our heads); ĕththi praising him handsomely with the mouth; avan pĕr īraigyūṛu his thousand divine names; eppozhudhum at all times; uraiththal the act of reciting them; thavam penance; uṛum kaṇdāy is apt, see for yourself.

IT 78

2259 தவஞ்செய்து நான்முகனேபெற்றான் * தரணி
நிவந்தளப்ப நீட்டியபொற்பாதம் * - சிவந்ததன்
கையனைத்தும் ஆரக்கழுவினான் * கங்கைநீர்
பெய்தனைத்துப்பேர்மொழிந்துபின்.
2259 தவம் செய்து * நான் முகனே பெற்றான் * தரணி
நிவந்து அளப்ப * நீட்டிய பொன் பாதம் ** சிவந்த தன்
கை அனைத்தும் * ஆரக் கழுவினான் * கங்கை நீர்
பெய்து அனைத்துப் பேர் மொழிந்து பின் 78
2259 tavam cĕytu * nāṉ mukaṉe pĕṟṟāṉ * taraṇi
nivantu al̤appa * nīṭṭiya pŏn pātam ** - civanta taṉ
kai aṉaittum * ārak kazhuviṉāṉ * kaṅkai nīr
pĕytu aṉaittup per mŏzhintu piṉ -78

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2259. When he grew, measuring the world and the sky, Nānmuhan was the only one who had the fortune of washing his golden feet with the water of the Ganges and embracing and praising him with all his divine names.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தரணி பூமியை; அளப்ப தாவி அளக்க; நிவந்து திருவிக்கிரமனாக வளர்ந்து; நீட்டிய உயரத் தூக்கிய; பொற் பாதம் பொற் பாதத்தில்; கங்கை கங்கையாகப் பெருகும்படி; நீர் பெய்து நீர வார்த்து; அனைத்து எல்லா; பேர் திருநாமங்களையும்; மொழிந்து வாயாரச்சொல்லி; பின் சிவந்த தன் தனது அழகிய சிவந்த; கை அனைத்தும் கைகளெல்லாம்; ஆர பயன் பெற்றதாகும்படி; கழுவினான் கழுவினான்; நான் முகனே பிரமன் ஒருவனே; செய்து நாம ஸங்கீர்த்தனத்தின்; தவம் தவப் பயனை; பெற்றான் பெற்றான்
tharaṇi the earth; al̤appa nivandhu growing up in siśe as thrivikrama to measure; nīttiya (the divine foot that) he raised; poṛpādham the great divine foot; gangai nīr peydhu carrying out service by pouring gangā water which was actually dharmam (all the righteousness)[ which melted upon seeing emperumān’s divine foot]; anaiththu pĕr mozhindhu reciting (emperumān’s) all the divine names wholeheartedly; pin later; than sivandha kai anaiththum āra to make his beautiful hands become benefitted; kazhuvinān one who washed the divine foot; nānmuganĕ it is only nānmugan; thavam seyudhu peṝān who reaped the benefit out of carrying out the penance of reciting the divine names of emperumān

IT 79

2260 பின்னின்று தாயிரப்பக்கேளான் * பெரும்பணைத்தோள்
முன்னின்று தானிரப்பாள் மொய்ம்மலராள் * -சொல்நின்ற
தோள்நலந்தான் நேரில்லாத்தோன்றல் * அவனளந்த
நீள்ணிலந்தானத்தனைக்கும்நேர்.
2260 பின் நின்று * தாய் இரப்ப கேளான் * பெரும் பணைத் தோள்
முன் நின்று * தான் இரப்பாள் மொய்ம் மலராள் ** சொல் நின்ற
தோள் நலத்தான் * நேர் இல்லாத் தோன்றல் * அவன் அளந்த
நீள் நிலம் தான் அத்தனைக்கும் நேர் 79
2260 piṉ niṉṟu * tāy irappa kel̤āṉ * pĕrum paṇait tol̤
muṉ niṉṟu * tāṉ irappāl̤ mŏym malarāl̤ ** - cŏl niṉṟa
tol̤ nalattāṉ * ner illāt toṉṟal * avaṉ al̤anta
nīl̤ nilam tāṉ attaṉaikkum ner -79

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2260. When Rāma’s mother Kosalai asked him not to go to the forest he did not listen to her, and when his wife Sita, soft as a flower, told him not to go, he did not listen to her either. Wanting only to obey his father’s order, he went to the forest. The strength he showed then was equal to when he measured the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாய் தாயான கௌஸல்யை; பின் நின்று பின் தொடர்ந்து; இரப்ப பிரார்த்திக்கவும் அதனை; கேளான் ஏற்றுக் கொள்ளளாதவனாயும்; பெரும் பணை சிறந்த மூங்கில் போன்ற; தோள் தோள்களையுடைய; மொய்மலராள் தாமரையில் பிறந்த திருமகளின்; தான் அம்சமான ஸீதையானவள்; முன் நின்று காடு செல்ல முன் நின்று; இரப்பாள் பிரார்த்திக்க அதையும் ஏற்காதவனும்; சொல் தந்தையின் சொல்லை; நின்ற காப்பாற்ற விரும்புபவனாயும்; தோள் நலந்தான் புஜபலத்தையுடையவனும்; நேர் இல்லா ஒப்பற்ற பெருமானுமான; தோன்றல் ராமபிரானின்; அத்தனைக்கும் அப்படிப்பட்ட செயலுக்கு; அவன் மிகப்பெரிய; நீள் நிலம் இவ்வுலகத்தை அவன்; அளந்த அளந்த செயல் ஒன்றே; தான் நேர் ஒத்ததாகும்
thāy the mother, kausalyā; pin ninṛu following [ṣrī rāma]; irappa praying (not to go to forest, leaving her); kĕl̤ān not heeding to that; perum paṇai thŏl̤ one who is having divine shoulders similar to great bamboo; moy malarāl̤ thān sīthā, who is personification of mahālakshmi, who in turn was born in a lotus flower; mun ninṛu taking the lead (to go to forest); irappāl̤ on praying (to take her too to the forest); sol ninṛa one who acted as per the word (of ṣrī rāmāyaṇam); thŏl̤ nalam thān in the matter of the strength of shoulder; nĕr illā thŏnṛal one who has none comparable, ṣrī rāma pirān; aththanaikkum for that activity (of going to the forest not looking at the ills of the forest and boldly going there); avan al̤andha nīl̤ nilam thān nĕr only the activity of measuring this huge world, is equivalent.

IT 80

2261 நேர்ந்தேனடிமை நினைந்தேனதொண்கமலம் *
ஆர்ந்தேனுன்சேவடிமேலன்பாய் * - ஆர்ந்த
அடிக்கோலம் கண்டவர்க்குஎன்கொலோ? * முன்னைப்
படிக்கோலம்கண்டபகல்.
2261 நேர்ந்தேன் அடிமை * நினைந்தேன் அது ஒண் கமலம் *
ஆர்ந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் ** ஆர்ந்த
அடிக் கோலம் * கண்டவர்க்கு என்கொலோ * முன்னைப்
படிக் கோலம் கண்ட பகல்? 80
2261 nernteṉ aṭimai * niṉainteṉ atu ŏṇ kamalam *
ārnteṉ uṉ cevaṭimel aṉpāy ** ārnta
aṭik kolam * kaṇṭavarkku ĕṉkŏlo * muṉṉaip
paṭik kolam kaṇṭa pakal? -80

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2261. I have become his slave, love him and think only of his divine lotus feet lovely as lotuses dripping with honey. The joy of worshiping his feet is sweeter than the joy of seeing his form.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடிமை உனது திருவடிகளில் கைங்கரியம்பண்ண; நேர்ந்தேன் வாய்ப்புப் பெற்றேன்; அது ஒண் அழகிய; கமலம் தாமரைப் பூப்போன்ற; நினைந்தேன் அத்திருவடிகளைச் சிந்தித்தேன்; உன் உனது; சேவடிமேல் அந்த திருவடிகளைக் நினைத்து; அன்பாய் அன்புடன்; ஆர்ந்தேன் பக்தியில் ஆழ்ந்தேன்; ஆர்ந்த உலகளந்த; அடிக் கோலம் திருவடிகளின் அழகை; கண்டவர்க்கு வணங்கப் பெற்றவர்களுக்கு; படிக் கோலம் திருவடிகளின் அழகை; கண்ட கண்டு வணங்கியவர்களுக்கு; முன்னை இயற்கை அழகை காணப் பெற்ற; பகல் முன்காலம்; என்கொலோ? சிறந்ததாகுமோ?
adimai nĕrndhĕn (at your divine feet) ī got to carry out service; oṇ kamalam adhu ninaindhĕn ī thought about the beautiful lotus-like divine feet; un sĕvadi mĕl in the matter of your divine feet; anbu āy ārndhĕn ī became the epitome of affection; ārndha that which measured the worlds; adi kŏlam the beauty of the divine feet; kaṇdavarkku to those who were fortunate to have a dharṣan (vision) of; padi kŏlam kaṇda munnaip pagal en kolŏ how would it have been to those who were able to have dharṣan of the natural decoration in the previous times?

IT 81

2262 பகல்கண்டேன் நாரணனைக்கண்டேன் * - கனவில்
மிகக்கண்டேன் மீண்டுஅவனைமெய்யே * - மிகக்கண்டேன்
ஊன்திகழும்நேமி ஒளிதிகழும்சேவடியான் *
வான்திகழும்சோதி வடிவு.
2262 பகல் கண்டேன் * நாரணனைக் கண்டேன் * கனவில்
மிகக் கண்டேன் * மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன் **
ஊன் திகழும் நேமி * ஒளி திகழும் சேவடியான் *
வான் திகழும் சோதி வடிவு 81
2262 pakal kaṇṭeṉ * nāraṇaṉaik kaṇṭeṉ * kaṉavil
mikak kaṇṭeṉ * mīṇṭu avaṉai mĕyye - mikak kaṇṭeṉ **
ūṉ tikazhum nemi * ŏl̤i tikazhum cevaṭiyāṉ *
vāṉ tikazhum coti vaṭivu -81

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2262. I saw Nārayanan in the day and in my dreams at night, and again I saw him truly. I worship the beautiful shining feet of the lord who carries a discus smeared with flesh and his bright form in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பகல் இருள் கலவாத பகல்; கண்டேன் கண்டேன்; நாரணனை ஸ்ரீமந் நாராயணனை; கண்டேன் கண்டேன்; மீண்டும் கனவில் மீண்டும் கனவில்; மிக மெய்யே மிகத் தெளிவாக; அவனை கண்டேன் அவனை கண்டேன்; ஊன் திருமேனியிலிருக்கும்; திகழும் நேமி சக்கரத்தையும்; ஒளி திகழும் ஒளி திகழும் அப்பெருமானின்; சேவடியான திருவடிகளையும்; வான் பரமபதத்தில்; திகழும் விளங்கும் அவன்; சோதி ஜோதி வடிவான; வடிவு திருமேனியையும்; மிகக் கண்டேன் இங்கே நன்கு கண்டேன்
pagal kaṇdĕn ī saw continuous daylight, without any admixture with night, which was like a new dawn; nāraṇanaik kaṇdĕn ī saw ṣrīman nārāyaṇa (who is like the never-setting sun); mīṇdu again; kanavil more than seeing him directly, through the mind; miga meyyĕ very clearly; avanaik kāṇdĕn ī got to see him; ūn thigazhum nĕmi having the divine disc on his divine form; ol̤i thigazhum sĕvadiyān emperumān having radiantly divine feet; vān thigazhum in the paramapadham (ṣrīvaikuṇtam); sŏdhi vadivu the radiant divine form; miga kaṇdĕn ī got to see well (here)

IT 82

2263 வடிக்கோலவாள்நெடுங்கண் மாமலராள் * செவ்விப்
படிக்கோலங்கண்டு அகலாள்பல்நாள் * - அடிக்கோலி
ஞாலத்தாள் பின்னும்நலம்புரிந்ததென்கொலோ? *
கோலத்தாலில்லைகுறை.
2263 வடிக் கோல வாள் நெடுங் கண் * மா மலராள் * செவ்விப்
படிக் கோலம் கண்டு அகலாள் பல்நாள் ** அடிக்கோலி
ஞாலத்தாள் * பின்னும் நலம் புரிந்தது என்கொலோ? *
கோலத்தால் இல்லை குறை 82
2263 vaṭik kola vāl̤ nĕṭuṅ kaṇ * mā malarāl̤ * cĕvvip
paṭik kolam kaṇṭu akalāl̤ palnāl̤ ** - aṭikkoli
ñālattāl̤ * piṉṉum nalam purintatu ĕṉkŏlo? *
kolattāl illai kuṟai -82

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2263. Lakshmi with lovely long sword-like eyes sees his divine form all the time as she stays on his chest. Why does the earth goddess feel jealous of her? The beauty of his form will never be reduced no matter who sees him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வடிக் கோல அழகே வடிவான; வாள் நெடும் ஒளியுள்ள நீண்ட; கண் கண்களையுடையவளும்; மா மலராள் தாமரையில் பிறந்த திருமகளும்; செவ்விப் படிக் இயற்கையான; கோலம் கண்டு அவன் அழகைக் கண்டு; பல் நாள் க்ஷணகாலமும்; அகலாள் விட்டுப்பிரியாமல் அவனுடனேயே; பின்னும் இருக்கிறாள் மேலும்; ஞாலத்தாள் பூமாதேவி இதைக் கண்டு; அடிக்கோலி பாரித்துக்கொண்டு; நலம் அப்பெருமானிடத்தில்; புரிந்தது ஆசையை பெருக்கிக்கொண்டது; என்கொலோ? ஏனோ?; கோலத்தால் எத்தனை பேர்கள்; குறை அநுபவித்தாலும் அவன் அழகிற்கு குறைவு; இல்லை இல்லையன்றோ!
vadikkŏlam having filtered (pure) beauty; vāl nedum kaṇ having divine sweet eyes which are shining; mā malarāl̤ periya pirāttiyār (ṣrī mahālakshmi) who was born in a great lotus flower; sevvi padik kŏlam having a natural beauty which is appropriate [referring to emperumān]; kaṇdu enjoying with her divine eyes; pal nāl̤ agalāl̤ is always together with emperumān, without separating from him even for a moment; pinnum even after seeing periya pirāttiyār being engaged with the beautiful form of emperumān; gyālaththāl̤ bhūmippirātti (bhūdhĕvi); adikkŏli being ecstatic; nalam purindhadhu enkolŏ why is she nurturing her desire for emperumān?; kŏlaththāl kuṛai illai (despite many people enjoying) there is no shortcoming in the beauty (since emperumān has unlimited beauty, there is no embargo on many persons desiring his beauty at the same time)

IT 83

2264 குறையாகவெஞ்சொற்கள் கூறினேன்கூறி *
மறையாங்கெனவுரைத்தமாலை * - இறையேனும்
ஈயுங்கொல்! என்றே இருந்தேன்எனைப்பகலும் *
மாயன்கண்சென்றவரம்.
2264 குறையாக வெஞ் சொற்கள் * கூறினேன் கூறி *
மறை ஆங்கு என உரைத்த மாலை ** இறையேனும்
ஈயும்கொல் ! என்றே * இருந்தேன் எனைப் பகலும் *
மாயன்கண் சென்ற வரம் 83
2264 kuṟaiyāka vĕñ cŏṟkal̤ * kūṟiṉeṉ kūṟi *
maṟai āṅku ĕṉa uraitta mālai ** - iṟaiyeṉum
īyumkŏl ! ĕṉṟe * irunteṉ ĕṉaip pakalum *
māyaṉkaṇ cĕṉṟa varam -83

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2264. With my poor words I worship Thirumāl whom the Vedās praise with their divine words thinking that Māyan might somehow accept me and give me a small bit of his grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறை வேதங்களும்; ஆங்கு என அப்படிப்பட்டவன் என்றே; உரைத்த மாலை சொன்ன எம்பெருமானை; குறையாக குறையாக; வெம் செவி சுடும்படியான; சொற்கள் சொற்களால்; கூறினேன் கூறி பேசினேன் பேசி; மாயன் கண் அப்பெருமானிடத்தில்; சென்ற வரம் இருக்கும் அருளில்; இறையேனும் சிறிதளவாவது; ஈயுங்கொல் நமக்கு கொடுப்பனோ; என்றே என்றே; எனைப் பகலும் வெகுகாலமாக; இருந்தேன் காத்திருக்கிறேன்
maṛai vĕdhas (sacred texts); āngu ena uraiththa mālai stating that emperumān is like that (instead of like this); kuṛai āga having faults; vem soṛkal̤ with words which singe the eardrum; kūṛinĕn ī spoke; kūṛi apart from speaking (like that); māyan kaṇ senṛa varam with the mercy which is present in him; iṛaiyĕnum at least a little bit; eeyum kol enṛĕ will give me (expecting the benefit); enaip pagalum for a long time; irundhĕn ī am waiting

IT 84

2265 வரங்கருதித்தன்னை வணங்காதவன்மை *
உரம்கருதி மூர்க்கத்தவனை * -நரங்கலந்த
சிங்கமாய்க்கீண்ட திருவனடியிணையே *
அங்கண்மாஞாலத்தமுது.
2265 வரம் கருதி தன்னை * வணங்காத வன்மை *
உரம் கருதி மூர்க்கத்தவனை ** நரம் கலந்த
சிங்கமாய்க் கீண்ட * திருவன் அடி இணையே *
அம் கண் மா ஞாலத்து அமுது 84
2265 varam karuti taṉṉai * vaṇaṅkāta vaṉmai *
uram karuti mūrkkattavaṉai ** naram kalanta
ciṅkamāyk kīṇṭa * tiruvaṉ aṭi iṇaiye *
am kaṇ mā ñālattu amutu -84

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2265. The lord went as a man-lion and killed Hiranyan who had the boon that no one could kill him and afflicted the gods, not obeying anyone. It is like drinking nectar in this beautiful world to worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வரம் தான் பெற்ற வரத்தை; கருதி எண்ணி; தன்னை எம்பெருமானை; வணங்காத வணங்காது இருந்தவனும்; வன்மை வரன் உடல் வலிமையை; உரம் கருதி நினைத்து; மூர்க்கத்து பிடிவாதமாக இருந்த; அவனை அவனை; நரம் கலந்த சிங்கமாய் நரசிம்மமாய்; கீண்ட அவதரித்து பிளந்தொழித்த; திருவன் அழகனின்; அடி இணையே திருவடிகளே; மா ஞாலத்து அம் கண் இவ்வுலகில்; அமுது அமுதினும் சிறந்தது
varam karudhi keeping the boons (granted by dhĕvas, celestial entities) in mind; thannai vaṇangādha not bowing down to him (emperumān); vanmai uram karudhi thinking about (his) strength of boons and physical strength; mūrkkaththavanai iraṇiyan (hiraṇyakashyap) who was arrogant; naram kalandha singamāyk kīṇda breaking him, taking the form of narasimha (face of lion with body of human); thiruvan the beautiful; adi iṇaiyĕ the two divine feet; am kaṇ mā gyālaththu in this expansive beautiful place; amudhu (sweet) nectar

IT 85

2266 அமுதென்றும்தேனென்றும் ஆழியானென்றும் *
அமுதன்றுகொண்டுகந்தானென்றும் * - அமுதன்ன
சொன்மாலையேத்தித் தொழுதேன்சொலப்பட்ட *
நன்மாலையேத்திநவின்று.
2266 அமுது என்றும் தேன் என்றும் * ஆழியான் என்றும் *
அமுது அன்று கொண்டு உகந்தான் என்றும் ** அமுது அன்ன
சொல் மாலை ஏத்தித் * தொழுதேன் சொலப்பட்ட *
நல் மாலை ஏத்தி நவின்று 85
2266 amutu ĕṉṟum teṉ ĕṉṟum * āzhiyāṉ ĕṉṟum *
amutu aṉṟu kŏṇṭu ukantāṉ ĕṉṟum ** - amutu aṉṉa
cŏl mālai ettit * tŏzhuteṉ cŏlappaṭṭa *
nal mālai etti naviṉṟu -85

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2266. I worshiped him saying, He is nectar. He is honey. He carries a discus. He churned the milky ocean, got the nectar and joyfully gave it to the gods. ” I praised and worshiped the lord with a garland of words sweet as nectar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமுது அமிருதம் போன்றவன்; என்றும் என்றும்; தேன் என்றும் தேன் போன்றவனென்றும்; ஆழியான் சக்கரத்தையுடையவன்; என்றும் என்றும்; அன்று அன்று கடல் கடைந்து; அமுது கொண்டு அமுதம் கொடுத்து; உகந்தான் என்றும் உகந்தான் என்றும்; ஏத்தி சொலப்பட்ட துதித்துச் சொலப்பட்ட; நல் மாலை சிறந்த எம்பெருமானை; அமுது அன்ன அமுதம் போன்ற; சொல் மாலை இப்பாசுரங்களினால்; ஏத்தி நவின்று புகழ்ந்து துதித்துப் பாடி; தொழுதேன் தொழுதேன்
amudhu enṛum that he [emperumān] is like nectar; thĕn enṛum that he is like honey; āzhiyān enṛum that he has the divine disc [chakrāyudham]; anṛu amdhu koṇdu ugandhān enṛum that he had, in previous time, (churned the ocean and) gave nectar (to dhĕvas) and was happy; ĕththi worshipping (him); solappatta mentioned (like these in ṣāsthras, the sacred texts); nal mālai the very great emperumān; amudhu anna sol mālai with these pāsurams (hymns) which are like nectar; ĕththi navinṛu thozhudhĕn worshipped him, praising him many times

IT 86

2267 நவின்றுரைத்தநாவலர்கள் நாண்மலர்கொண்டு * ஆங்கே
பயின்றதனால் பெற்றபயனென்கொல்? * - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரியமேகமணிவண்ணனை * யான்
எத்தவத்தால்காண்பன்கொல் இன்று?
2267 நவின்று உரைத்த நாவலர்கள் * நாள் மலர் கொண்டு * ஆங்கே
பயின்றதனால் பெற்ற பயன் என்கொல்? ** பயின்றார் தம்
மெய்த் தவத்தால் * காண்பு அரிய மேக மணி வண்ணனை * யான்
எத் தவத்தால் காண்பன் கொல் இன்று? 86
2267 naviṉṟu uraitta nāvalarkal̤ * nāl̤ malar kŏṇṭu * āṅke
payiṉṟataṉāl pĕṟṟa payaṉ ĕṉkŏl? ** - payiṉṟār tam
mĕyt tavattāl * kāṇpu ariya meka maṇi vaṇṇaṉai * yāṉ
ĕt tavattāl kāṇpaṉ kŏl iṉṟu? -86

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2267. Poets cannot see him, they can only praise him with garlands of words. Even sages doing true tapas cannot see the cloud-colored god. What kind of tapas I could have done that I see him now?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நவின்று அவனது நாமங்களை; உரைத்த பலகாலும் சொல்லுகின்ற; நாவலர்கள் கவிகள்; நாண் அப்போதலர்ந்த; மலர் கொண்டு பூக்களைக் கொண்டு; ஆங்கே அந்த பெருமானை; பயின்று நெருங்கி ஆச்ரயித்து; அதனால் பெற்ற அதனால் பெற்ற; பயன் பயன்; என்கொல் தானே தன்னை காட்டினாலொழிய; பயின்றார் தம் சுயமுயற்சியால் அவனை காண முடியாது; மெய் உடலை வருத்தி செய்யும்; தவத்தால் தவத்தாலும்; காண்பு அரிய காணமுடியாதவனும்; மேக மேகம் போன்றவனும்; மணி நீலமணி போன்றவனுமான; வண்ணனை எம்பெருமானை; யான் இன்று நான் இன்று; எத் தவத்தால் எந்தத் தபஸ்ஸினால்; காண்பன்கொல் காண்பேன்
navinṛu uraiththa (through other means, reciting) emperumān’s divine names for a long time; nāvalargal̤ poets; nāl̤ malar koṇdu taking flowers which had just then blossomed; āngĕ payinṛu approaching that emperumān closely; adhanāl peṝa payan enkol what is the benefit (that they had) thus obtained?; payinṛār tham those who carry out efforts through other means [than emperumān’s mercy]; mey thavaththāl the penance that they carry out with their physical bodies; kāṇbariya one who is impossible to see; mĕga maṇivaṇṇanai emperumān who has the complexion of cloud and blue coloured gem; yān adiyĕn (the servitor, ī); inṛu now; eththavaththāl kol kāṇban with which penance will ī see?

IT 87

2268 இன்றாவறிகின்றேனல்லேன் * இருநிலத்தைச்
சென்றுஆங்களந்த திருவடியை * - அன்று
கருக்கோட்டியுள்கிடந்து கைதொழுதேன், கண்டேன் *
திருக்கோட்டியெந்தைதிறம்.
2268 இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை ** அன்று
கருக்கோட்டியுள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
திருக்கோட்டி எந்தை திறம் 87
2268 iṉṟā aṟikiṉṟeṉ alleṉ * iru nilattaic
cĕṉṟu āṅku al̤anta tiruvaṭiyai ** - aṉṟu
karukkoṭṭiyul̤ kiṭantu * kaitŏzhuteṉ kaṇṭeṉ *
tirukkoṭṭi ĕntai tiṟam -87

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2268. Do I know only today the feet of the lord who measured the world? When I was in my mother’s womb itself I knew him and worshiped him with folded hands. I know the power of my father, the god of Thirukkottiyur.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு; கருக்கோட்டியுள் கர்ப்பத்தில்; கிடந்து இருந்து; திருக்கோட்டி திருக்கோட்டியூர்; எந்தை திறம் பெருமானின் தன்மையை; கண்டேன் கண்டேன்; கை தொழுதேன் கை தொழுதேன்; இரு அதன் பின் விசாலமான; நிலத்தை இந்நிலத்தை; சென்று ஆங்கு அங்கே தானே வியாபித்து; அளந்த திருவிக்கிரமனாக அளந்த; திருவடியை திருவடியை; இன்றா இன்றைக்கா நான்; அறிகின்றேன் அறிந்தேன் இல்லை கர்ப்பவாஸம்; அல்லேன் தொடங்கியதிலிருந்து மறக்கவில்லை
anṛu karukkŏttiyul̤ kidandhu lying inside the womb, earlier; thirukkŏtti endhai thiṛam the nature of thirukkŏttiyūr perumān; kaṇdĕn ī had the fortune to enjoy; kai thozhudhĕn (as a consequence of that experience) ī worshipped with folded hands; irunilaththai this expansive mass of land [earth]; āngu senṛu al̤andha thiru adiyai (during the time of thrivikrama avathāram) the divine foot which spread out, on its own, to various places and measured them; inṛā aṛiginṛĕn allĕn it is not that ī knew about it only today (ī have not forgotten it right from my days of being in the womb)

IT 88

2269 திறம்பிற்றினியறிந்தேன் தென்னரங்கத்தெந்தை *
திறம்பாவழிசென்றார்க்கல்லால் * - திறம்பாச்
செடிநரகைநீக்கித் தாம்செல்வதன்முன் * வானோர்
கடிநகரவாசற்கதவு.
2269 திறம்பிற்று இனி அறிந்தேன் * தென் அரங்கத்து எந்தை *
திறம்பா வழிச் சென்றார்க்கு அல்லால் ** திறம்பாச்
செடி நரகை நீக்கி * தாம் செல்வதன் முன் * வானோர்
கடி நகர வாசல் கதவு 88
2269 tiṟampiṟṟu iṉi aṟinteṉ * tĕṉ araṅkattu ĕntai *
tiṟampā vazhic cĕṉṟārkku allāl ** - tiṟampāc
cĕṭi narakai nīkki * tām cĕlvataṉ muṉ * vāṉor
kaṭi nakara vācal katavu -88

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2269. I know that the only way to reach our father, the god of Thennarangam, is to leave family life and think of him always. If devotees follow the divine path, they will not go to cruel hell and the guarded door of the gods’ world will open for them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் அரங்கத்து ஸ்ரீரங்கத்தில்; எந்தை பள்ளிகொண்டிருக்கும் பெருமானை; திறம்பா உபாயமாகக் கொள்ளும்; வழி நெறியிலே; சென்றார்க்கு சென்றவர்களை; அல்லால் தவிர மற்றவர்களுக்கு; தாம் தாமாகவே; திறம்பா புதர்போன்ற; செடி நரகை உலக வாழ்க்கையை; நீக்கி செல்வதன் அறுத்துக்கொண்டு; முன் போகும் முன்பே; வானோர் நித்யஸூரிகளின்; கடி நகர வைகுந்தமாநகரத்தின்; வாசல் கதவு வாசல் கதவானது; திறம்பிற்று மூடிக்கொண்டுவிடும்; இனி இதை இப்போது; அறிந்தேன் அறிந்து கொண்டேன்
then arangaththu endhai my swāmy (l̤ord) who is reclining in the beautiful temple [ṣrīrangam temple]; thiṛambā vazhi in the path from where one cannot fail; senṛarkku allāl except for those people; thām on their own; thiṛambā sedi naragai nīkki trying to sever themselves from the terrible hell called samsāram (materialistic realm) which is like an unseverable bush; selvadhan mun before they could go; vānŏr nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); kadi having well fortified; nagaram the city of ṣrīvaikuṇtam; vāsal kadhavu the entrance door; thiṛambiṝu will close; ini ārindhĕn ī know now.

IT 89

2270 கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து *
அதவிப்போர்யானையொசித்து * - பதவியாய்ப்
பாணியால்நீரேற்றுப் பண்டொருகால்மாவலியை *
மாணியாய்க்கொண்டிலையேமண்?
2270 கதவி கதம் சிறந்த * கஞ்சனை முன் காய்ந்து *
அதவி போர் யானை ஒசித்து ** பதவியாய்ப்
பாணியால் நீர் ஏற்றுப் * பண்டு ஒருகால் மாவலியை *
மாணியாய்க் கொண்டிலையே மண்? 89
2270 katavi katam ciṟanta * kañcaṉai muṉ kāyntu *
atavi por yāṉai ŏcittu ** - pataviyāyp
pāṇiyāl nīr eṟṟup * paṇṭu ŏrukāl māvaliyai *
māṇiyāyk kŏṇṭilaiye maṇ? -89

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2270. Did you, who were angry with Kamsan, fought and killed him, and fought with elephant Kuvalayābeedam and broke its tusks, go to Mahābali’s sacrifice as a dwarf and ask for three feet of land in ancient times just to take over the world?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கதம் சிறந்த கோபம் மிகுந்த; கஞ்சனை கம்ஸனை; முன் அவன் கண்முன்னே; கதவி கோபித்து; காய்ந்து அவனை முடித்தவனும்; போர் குவலயாபீட; யானை யானையை; அதவி அடக்கி கொம்பு; ஒசித்து முறித்தவனுமான நீ; பண்டு ஒரு கால் முன்னொரு காலத்தில்; பதவியாய் நீர்மை குணத்தோடு; மாணியாய் பிரம்மசாரியாக வந்து; மாவலியை மகாபலியிடம்; பாணியால் கையால்; நீர் ஏற்று தான நீர் பெற்று; மண் பூமியை; கொண்டிலையே? பெற்றாயல்லையோ?
kadham siṛandha very angry; kanjanai kamsa; mun kadhavik kāyndhu getting angry with him in his presence; poṛ yānai the elephant kuvalayāpidam which came to fight with him [krishṇa]; adhavi controlling it; osiththu breaking its tusks; paṇdu oru kāl once upon a time; padhaviyāy having the quality of gentleness; māṇiyāy as a brahmachāri (bachelor); māvaliyai king mahābali; pāṇiyāl with hand; nīr ĕṝu taking water as indication of accepting alms; maṇ koṇdilaiyĕ did you not obtain earth?

IT 90

2271 மண்ணுலகம்ஆளேனே? வானவர்க்கும்வானவனாய் *
விண்ணுலகம்தன்னகத்துமேவேனே? * - நண்ணித்
திருமாலைச் செங்கணெடியானை * எங்கள்
பெருமானைக் கைதொழுதபின்.
2271 மண்ணுலகம் ஆளேனே ? * வானவர்க்கும் வானவனாய் *
விண்ணுலகம் தன் அகத்தும் மேவேனே? ** நண்ணித்
திருமாலைச் * செங்கண் நெடியானை * எங்கள்
பெருமானைக் கை தொழுத பின் 90
2271 maṇṇulakam āl̤eṉe ? * vāṉavarkkum vāṉavaṉāy *
viṇṇulakam taṉ akattum meveṉe? ** - naṇṇit
tirumālaic * cĕṅkaṇ nĕṭiyāṉai * ĕṅkal̤
pĕrumāṉaik kai tŏzhuta piṉ -90

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2271. Won’t I rule this world and go to the world of the gods and stay with them in the sky if I go and worship lovely-eyed Nedumāl of Thirumālai?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமாலை எம்பெருமானும்; செங்கண் சிவந்த கண்களை உடையவனும்; நெடியானை ஸர்வேச்வரனுமான; எங்கள் பெருமானை எங்கள் பெருமானை; நண்ணி அணுகி; கை தொழுத பின் வணங்கிய பின்; மண் உலகம் இந்த பூமியை நான்; ஆளேனே ஆளமாட்டேனோ!; வானவர்க்கும் நித்யசூரிகளுக்கும்; வானவனாய் தலைவனாய்; விண்ணுலகம் வைகுந்தத்தில்; தன் அகத்து எல்லா இடங்களிலும் பேரானந்தம்; மேவேனே அநுபவிக்கமாட்டேனோ!
thirumālai the swāmy (lord) of pirātti (ṣrī mahālakshmi); sem kaṇ having divine eyes like reddish lotus; nediyānai the supreme being; engal̤ perumānai emperumān; naṇṇi approaching; kai thozhudha pin after worshipping him with joined palms; maṇ ulagam āl̤ĕnĕ can ī not administer this leelā vibhūthi (materialistic realm) under my control!; vānavarkkum vānavanāy being the head of nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); viṇ ulagam than agaththu all places in ṣrīvaikuṇtam; mĕvĕnĕ will ī not enjoy great joy, comfortably!

IT 91

2272 பின்னாலருநரகம் சேராமல் பேதுறுவீர் *
முன்னால்வணங்கமுயன்மினோ * - பல்நூல்
அளந்தானைக் கார்க்கடல்சூழ்ஞாலத்தை * எல்லாம்
அளந்தானவன்சேவடி.
2272 பின்னால் அரு நரகம் * சேராமல் பேதுறுவீர் *
முன்னால் வணங்க முயல்மினோ ** பல் நூல்
அளந்தானைக் * கார்க் கடல் சூழ் ஞாலத்தை * எல்லாம்
அளந்தான் அவன் சேவடி 91
2272 piṉṉāl aru narakam * cerāmal petuṟuvīr *
muṉṉāl vaṇaṅka muyalmiṉo ** - pal nūl
al̤antāṉaik * kārk kaṭal cūzh ñālattai * ĕllām
al̤antāṉ avaṉ cevaṭi -91

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2272. The ocean-colored lord who saved the Vedās received a boon from Mahābali and measured the world and the sky with his two divine feet. If you worship him, he will give his grace and you will not have to worry about hell.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பின்னால் சரீரம் விழுந்தபின்பு; அரு நரகம் கொடிய நரகத்தை; சேராமல் அடையாமலிருப்பது எப்படி என்று; பேதுறுவீர்! கலங்குபவர்களே!; பல் நூல் பல நூல்களால்; அளந்தானை நிச்சயிக்கப்பட்டிருப்பவனை; கார்க்கடல் சூழ் கரிய கடலால் சூழப்பட்ட; ஞாலத்தை எல்லாம் பூமியையெல்லாம்; அளந்தான் அவன் அளந்த எம்பெருமானின்; சேவடி செவ்விய திருவடிகளை; முன்னால் இப்போதே; வணங்க வணங்க; முயல்மினோ முயற்சிசெய்யுங்கள்
pinnāl after the body falls down; aru naragam the cruel hell; sĕrāmal how to prevent from reaching there; pĕdhuṛuvīr ŏh people, who are bewildered!; pal nūl in different types of ṣāsthras (sacred texts); al̤andhānai one who has been affirmed; kār kadal sūzh gyālaththai ellām al̤andhān avan emperumān who measured all the earth which is surrounded by dark oceans; sĕvadi the fresh divine feet; munnāl now itself; vaṇanga to worship; muyalmin make an effort

IT 92

2273 அடியால் முன்கஞ்சனைச்செற்று * அமரரேத்தும்
படியான் கொடிமேற்புள்கொண்டான் * -நெடியான்றன்
நாமமே ஏத்துமின்கள், ஏத்தினால் * தாம்வேண்டும்
காமமே காட்டும்கடிது.
2273 அடியால் முன் கஞ்சனைச் செற்று * அமரர் ஏத்தும்
படியான் * கொடிமேல் புள் கொண்டான் ** நெடியான் தன்
நாமமே * ஏத்துமின்கள் ஏத்தினால் * தாம் வேண்டும்
காமமே காட்டும் கடிது 92
2273 aṭiyāl muṉ kañcaṉaic cĕṟṟu * amarar ettum
paṭiyāṉ * kŏṭimel pul̤ kŏṇṭāṉ ** - nĕṭiyāṉ taṉ
nāmame * ettumiṉkal̤ ettiṉāl * tām veṇṭum
kāmame kāṭṭum kaṭitu -92

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2273. Nedumāl with a Garudā banner, and is praised by the gods in the sky killed Kamsan by kicking him with his feet. If you worship him and praise his names quickly you will find how to receive all that you wish.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் முன்பு; அடியால் திருவடியினால்; கஞ்சனை கம்ஸனை; செற்று உதைத்துக் கொன்றவனும்; அமரர் தேவர்கள்; ஏத்தும் துதிக்கும் படியாக; படியான் உள்ளவனும்; கொடிமேல் புள் கருடனை கொடியில்; கொண்டான் உடையவனுமான; நெடியான் தன் பெருமானின்; நாமமே நாமங்களைச் சொல்லி; ஏத்தினால் வணங்கினால்; தாம் வேண்டும் தாங்கள் விரும்பும்; காமமே பயனை அத்திருநாமம்; கடிது காட்டும் விரைவாக தந்தருளும்
mun before (kamsa could harm him); adiyāl with his divine feet; kanjanai kamsa; seṝu killed him by kicking; amarar ĕththum padiyān one who is worshipped by dhĕvas; kodi mĕl pul̤ koṇdān one who has garuda on his flag; nediyāṇ than sarvĕṣvaran who has a deep memory; namamĕ reciting his divine names; ĕththumingal̤ worship him; ĕththināl if (you) worship him like this; thām vĕṇdum kāmam the benefit that one desires; kadidhu quickly; kāttum (the divine names will) grant

IT 93

2274 கடிதுகொடுநரகம் பிற்காலுஞ்செய்கை *
கொடிதென்று அதுகூடாமுன்னம் * - வடிசங்கம்
கொண்டானைக் கூந்தல்வாய்கீண்டானை * கொங்கைநஞ்சு
உண்டானையேத்துமினோவுற்று.
2274 கடிது கொடு நரகம் * பிற்காலும் செய்கை *
கொடிது என்று அது கூடா முன்னம் ** வடி சங்கம்
கொண்டானைக் * கூந்தல் வாய் கீண்டானை * கொங்கை நஞ்சு
உண்டானை ஏத்துமினோ உற்று 93
2274 kaṭitu kŏṭu narakam * piṟkālum cĕykai *
kŏṭitu ĕṉṟu atu kūṭā muṉṉam ** - vaṭi caṅkam
kŏṇṭāṉaik * kūntal vāy kīṇṭāṉai * kŏṅkai nañcu
uṇṭāṉai ettumiṉo uṟṟu -93

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2274. Hell is cruel and if you collect bad karmā you will go to the most cruel of hells. Before any such terrible thing happens to you, worship without ceasing the lord with a conch in his hand who split open the mouth of the Asuran when he came as a bird and drank the milk of Putanā and killed her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடு நரகம் கொடிய நரகமானது; கடிது கோரமானது; பிற்காலும் அதற்குமேலும்; செய்கை யமபடர்கள் செய்யும் வேதனைகள்; கொடிது என்று மிகக் கொடியது என்று அறிந்து; அது கூடா முன்னம் அது நேராதபடி; வடி சங்கம் கூர்மையான சங்கை; கொண்டானை கையிலே உடையவனும்; கூந்தல் வாய் கேசியின் வாயை; கீண்டானை கிழித்து ஒழித்தவனும்; கொங்கை நஞ்சு பூதனையின் விஷத்தை; உண்டானை உண்டவனுமான பெருமானை; உற்று ஏத்துமினோ அடைந்து துதியுங்கள்
kodu naragam the cruel hell; kadidhu will be so horrible that we cannot even see it; piṛkālum on top of that; seygai the activities (of yama and his followers there); kodidhu cannot be borne; enṛu knowing thus; adhu kūdā munnam before that event happens [to us]; vadi sangam koṇdānai one who has the sharp conch in his divine hand; kūndhal vāy kīṇdānai one who destroyed the demon kĕṣi by tearing apart his mouth; kongai nanju uṇdānai emperumān who drank the poison from the bosom (of demon pūthanā); uṝu attain him; eththumin worship him

IT 94

2275 உற்றுவணங்கித்தொழுமின் * உலகேழும்
முற்றும்விழுங்கும் முகில்வண்ணன் * - பற்றிப்
பொருந்தாதான்மார்பிடந்து பூம்பாடகத்துள்
இருந்தானை * ஏத்தும்என்நெஞ்சு.
2275 உற்று வணங்கித் தொழுமின் * உலகு ஏழும்
முற்றும் விழுங்கும் முகில் வண்ணன் ** பற்றிப்
பொருந்தாதான் மார்பு இடந்து * பூம் பாடகத்துள்
இருந்தானை * ஏத்தும் என் நெஞ்சு 94
2275 uṟṟu vaṇaṅkit tŏzhumiṉ * ulaku ezhum
muṟṟum vizhuṅkum mukil vaṇṇaṉ ** - paṟṟip
pŏruntātāṉ mārpu iṭantu * pūm pāṭakattul̤
iruntāṉai * ettum ĕṉ nĕñcu -94

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2275. My heart bows to his feet and worships the cloud-colored god of beautiful Thiruppādagam, who split open the chest of his enemy Hiranyan and swallowed all the seven worlds,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; முற்றும் விழுங்கும் முழுதும் உண்டவனும்; முகில் மேகம் போன்ற; வண்ணன் வடிவுடையவனும்; பொருந்தாதான் இரணியனை; பற்றி பிடித்து; மார்பு அவன் மார்பை; இடந்து கிழித்தவனும்; பூம் பாடகத்துள் திருப்பாடகத்தில்; இருந்தானை இருப்பவனுமான; என் நெஞ்சு பெருமானை என் மனது; ஏத்தும் துதிக்கும்; உற்று வணங்கி நீங்களும் வணங்கி; தொழுமின் துதிப்பீர்களாக
ulagu ĕzhum muṝum vizhungum swallowing all the worlds without leaving out anything (so that deluge cannot destroy them); mugilvaṇṇan one who has the complexion of cloud; porundhādhān iraṇiyan (hiraṇyakashyap) who was not a match for him; paṝi catching hold of him; pūmpādagaththul̤ irundhānai emperumān who is sitting in the beautiful divine abode of thiruppādagam; en nenju my heart; ĕththum will worship; uṝu vaṇangith thozhumin hold on to him, worship him and attain him (without leaving him)

IT 95

2276 என்னெஞ்சமேயான் என்சென்னியான் * தானவனை
வன்னெஞ்சங்கீண்ட மணிவண்ணன் * -முன்னம்சேய்
ஊழியான் ஊழிபெயர்த்தான் * உலகேத்தும்
ஆழியான் அத்தியூரான்.
2276 என் நெஞ்சம் மேயான் * என் சென்னியான் * தானவனை
வல் நெஞ்சம் கீண்ட மணி வண்ணன் ** முன்னம் சேய்
ஊழியான் * ஊழி பெயர்த்தான் * உலகு ஏத்தும்
ஆழியான் அத்தியூரான் 95
2276 ĕṉ nĕñcam meyāṉ * ĕṉ cĕṉṉiyāṉ * tāṉavaṉai
val nĕñcam kīṇṭa maṇi vaṇṇaṉ ** - muṉṉam cey
ūzhiyāṉ * ūzhi pĕyarttāṉ * ulaku ettum
āzhiyāṉ attiyūrāṉ -95

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2276. O my heart, all the world praises the sapphire-colored lord of Thiruvathiyur (Thirukkachi) who split open the chest of the Asuran Hiranyan, swallowed all the earth at the end of the eon and spat it out again to save it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தானவனை இரணியனான அசுரனுடைய; வன் நெஞ்சம் வலிய மார்பை; கீண்ட கிழித்தவனும்; மணி நீலமணி நிறத்தை; வண்ணன் உடையவனும்; முன்னம் ஸ்ருஷ்டிகாலத்தில்; சேய் எல்லாமாயும்; ஊழியான் ஊழி பிரளய காலத்தில்; பெயர்த்தான் ஸம்ஹரித்தும்; உலகு உலகத்தவரால்; ஏத்தும் துதிக்கப்பட்டு; ஆழியான் பாற்கடலில் இருப்பவனும்; அத்தியூரான் ஹஸ்திகிரியில்; என் நெஞ்சம் என் மனதில்; மேயான் நிற்பவனுமானவன்; என் சென்னியான் என் தலையிலும் உள்ளான்
dhānavanai the demon (iraṇiyan); val nenjam strong chest; kīṇda one who tore; maṇivaṇṇan one who has the complexion of a blue coloured gem stone; munnam sĕy ūzhiyān he was everything in the earlier period of creation; ūzhi peyarththān one who destroyed everything during the time of deluge; ulagu ĕththum āzhiyān one who is worshipped by the people of the world and who reclines in thiruppāṛkadal (milky ocean); aththiyūrān one who is residing in thiruvaththiyūr; en nenjam mĕyān he stood firmly in my heart; en senniyān he took residence in my head

IT 96

2277 அத்தியூரான் புள்ளையூர்வான் * அணிமணியின்
துத்திசேர் நாகத்தின்மேல்துயில்வான் * - மூத்தீ
மறையாவான் மாகடல்நஞ்சுண்டான்தனக்கும்
இறையாவான் எங்கள்பிரான்.
2277 ## அத்தியூரான் புள்ளை ஊர்வான் * அணி மணியின்
துத்தி சேர் * நாகத்தின்மேல் துயில்வான் ** முத்தீ
மறை ஆவான் * மா கடல் நஞ்சு உண்டான் தனக்கும் *
இறை ஆவான் எங்கள் பிரான் 96
2277 ## attiyūrāṉ pul̤l̤ai ūrvāṉ * aṇi maṇiyiṉ
tutti cer * nākattiṉmel tuyilvāṉ ** - muttī
maṟai āvāṉ * mā kaṭal nañcu uṇṭāṉ taṉakkum *
iṟai āvāṉ ĕṅkal̤ pirāṉ -96

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2277. The highest lord of Athiyur (Thirukkachi) who rides on an eagle and rests on the ocean on Adishesa with diamonds on his head, is the god of the three sacrifices and the Vedās. He is the lord of Shivā who drank poison that came from the milky ocean and he is also our dear lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புள்ளை கருடனை வாகனமாக; ஊர்வான் உடையவனும்; அணி அழகிய; மணியின் மாணிக்கங்களையும்; துத்தி சேர் படங்களையும் உடைய; நாகத்தின் மேல் ஆதிசேஷன் மேல்; துயில்வான் பள்ளிகொள்பவனும்; முத்தீ மூன்று அக்நிகளைச் சொல்லும்; மறை வேதங்களால்; ஆவான் விவரிக்கப்படுபவனும்; மா கடல் பெருங்கடலில்; நஞ்சு உண்டான விஷத்தை; உண்டான் தனக்கும் உண்ட சிவனுக்கும்; இறை ஆவான் ஸ்வாமியாய் இருக்கும்; எங்கள் பிரான் எம்பெருமான்; அத்தியூரான் திருவத்தியூரில் உள்ளான்
pul̤l̤ai ūrvān one who has periya thiruvadi (garudāzhwān) as his vehicle; aṇi maṇiyin thuththi sĕr nāgaththin mĕl thuyilvān one who reclines on ādhiṣĕshan who has beautiful carbuncles and sweetly identified hoods; muththī maṛaiyāvān one who is described by vĕdhas (sacred texts) which talk about the rituals with three types of agni (fire); mā kadal nanju uṇdān thanakkum iṛai āvān he is the swāmy (lord) for rudhra (ṣivan) who swallowed the poison which got generated during churning of the big ocean; engal̤ pirān our lord; aththiyūrān residing at thiruvaththiyūr [kānchipuram]

IT 97

2278 எங்கள்பெருமான்! இமையோர்தலைமகன்! நீ *
செங்கண்நெடுமால்! திருமார்பா! * - பொங்கு
படமூக்கினாயிரவாய்ப் பாம்பணைமேல்சேர்ந்தாய் *
குடமூக்கில் கோயிலாக் கொண்டு.
2278 எங்கள் பெருமான் * இமையோர் தலைமகன்! நீ *
செங்கண் நெடு மால் திருமார்பா! ** பொங்கு
பட மூக்கின் ஆயிர வாய்ப் * பாம்பு அணைமேல் சேர்ந்தாய் *
குடமூக்கில் கோயிலாக் கொண்டு 97
2278 ĕṅkal̤ pĕrumāṉ * imaiyor talaimakaṉ! nī *
cĕṅkaṇ nĕṭu māl tirumārpā! ** - pŏṅku
paṭa mūkkiṉ āyira vāyp * pāmpu aṇaimel cerntāy *
kuṭamūkkil koyilāk kŏṇṭu -97

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2278. You, lovely-eyed Nedumal, king of the gods in the sky, abide, embracing Lakshmi on your chest, in the temple of Kudamukku (Thirukkudandai) resting on the ocean on thousand-mouthed Adishesa.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருமார்பா! திருமகளை மார்பிலுடையவனும்; செங்கண் சிவந்த கண்களையுடைய; நெடு மால்! பெருமானும்; இமையோர் நித்யசூரிகளுக்கு; தலைமகன் தலைவனும்; எங்கள் எங்கள்; பெருமான் நீ பெருமானுமான நீ; குடமூக்கில் கும்பகோண க்ஷேத்திரத்தை; கோயிலாக் கொண்டு கோயிலாகக் கொண்டு; பொங்கு பட விகஸித்த படங்களையும்; மூக்கின் மூக்கையுமுடையவனும்; ஆயிரம் ஆயிரம்; வாய் வாயையும் உடையவனுமான; பாம்பு அணைமேல் ஆதிசேஷன் மேல்; சேர்ந்தாய் பள்ளி கொண்டாய்
thirumārbā ŏh one who has periya pirātti (ṣrī mahālakshmi) on his chest!; sem kaṇ nedumāl̤ as the supreme being with reddish divine eyes; imaiyŏr thalai magan you are the lord of nithyasūris; engal̤ perumān nī you are our lord; kudamūkku il having the kumbakŏnam region; kŏyilāyk koṇdu thinking of it in your divine mind as the temple; pongum pada mūkkin having well spread out hoods and nose; āyiram vāy one with thousand mouths; pāmbu ādhiṣĕshan (serpent mattress of emperumān); aṇai mĕl on top of that mattress; sĕrndhāy you reclined and blessed us

IT 98

2279 கொண்டுவளர்க்கக் குழவியாய்த்தான்வளர்ந்தது *
உண்டதுலகேழும்உள்ளொடுங்க * - கொண்டு
குடமாடிக் கோவலனாய்மேவி * என்னெஞ்சம்
இடமாகக்கொண்டஇறை.
2279 கொண்டு வளர்க்கக் * குழவியாய்த் தான் வளர்ந்தது *
உண்டது உலகு ஏழும் உள் ஒடுங்க ** கொண்டு
குடம் ஆடிக் * கோவலனாய் மேவி * என் நெஞ்சம்
இடமாகக் கொண்ட இறை 98
2279 kŏṇṭu val̤arkkak * kuzhaviyāyt tāṉ val̤arntatu *
uṇṭatu ulaku ezhum ul̤ ŏṭuṅka ** - kŏṇṭu
kuṭam āṭik * kovalaṉāy mevi * ĕṉ nĕñcam
iṭamākak kŏṇṭa iṟai -98

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2279. The lord who was born on the earth, raised in a cowherd village as Nandan’s son, grazed the cows, danced on a pot and swallowed all the earth stays in my heart

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவலனாய் ஆயர்குலத்தில் தோன்றினவனே!; குடம் கொண்டு ஆடி குடக் கூத்தாடி; என் நெஞ்சம் மேவி என் நெஞ்சிலேயே; இடமாக கொண்ட இறை நிலை நின்ற ஸ்வாமி; கொண்டு சீராட்டி; வளர்க்க வளர்க்க வேண்டும்படியான; குழவியாய் தான் குழந்தையாய்; வளர்ந்தது வளர்ந்த மிகச்சிறிய பருவத்திலே; உலகு ஏழும் ஸப்தலோகங்களும்; உள் தன்வயிற்றினுள்ளே; ஒடுங்க ஒடுங்கும்படி; உண்டது உட்கொண்டது என்ன ஆச்சரியம்!
kŏvalanāy being born as a cowherd; kudam koṇdu ādi dancing with pots on hand and head; en nenjam mĕvi getting into my heart; idamāgak koṇda iṛai the lord, considering( my heart) as the temple for himself; koṇdu val̤arkka enabling others to cuddle and nurture him; kuzhavi āy as an infant; thān val̤arndhadhu he grew up mercifully; ul̤ odunga shrinking within (in a corner); uṇdadhu ate as food; ulagu ĕzhum the seven worlds! (ḥow amaśing!)

IT 99

2280 இறையெம்பெருமான்! அருளென்று * இமையோர்
முறைநின்று மொய்ம்மலர்கள்தூவ * - அறைகழல
சேவடியான் செங்கணெடியான் * குறளுருவாய்
மாவடிவில்மண்கொண்டான்மால்.
2280 ## இறை எம் பெருமான் ! அருள் என்று * இமையோர்
முறை நின்று * மொய்ம் மலர்கள் தூவ ** அறை கழல
சேவடியான் * செங்கண் நெடியான் * குறள் உருவாய்
மாவடிவின் மண் கொண்டான் மால் 99
2280 ## iṟai ĕm pĕrumāṉ ! arul̤ ĕṉṟu * imaiyor
muṟai niṉṟu * mŏym malarkal̤ tūva ** - aṟai kazhala
cevaṭiyāṉ * cĕṅkaṇ nĕṭiyāṉ * kuṟal̤ uruvāy
māvaṭiviṉ maṇ kŏṇṭāṉ māl -99

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2280. Thirumāl with beautiful eyes went as a dwarf to Mahābali’s sacrifice and measured the earth and the sky with his two feet, making Mahābali his slave as the gods in the sky sprinkled flowers on his divine feet ornamented with sounding anklets and asked him for his grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் பிரமன் முதலான தேவர்கள்; எம் பெருமான்! எம்பெருமானே!; இறை எங்கள் விஷயத்தில் சிறிது; அருள் என்று அருள் புரிய வேண்டும் என்று; முறை நின்று முறைப்படி காத்திருந்து; மொய் அழகிய; மலர்கள் தூவ மலர்களை தூவ; அறை ஒலிக்கின்ற; கழல வீரக்கழலையுடைய; சேவடியான் திருவடிகளையுடையவனும்; செங்கண் சிவந்த கண்களையுடையவனும்; நெடியான் மேன்மையுடையவனுமான; மால் திருமால்; குறள் உருவாய் வாமனனாய் வந்து; மாவடிவின் பெரிய வடிவாய் திருவிக்கிரமனாக வளர்ந்து; மண் கொண்டான் உலகளந்தான்
imaiyŏr dhĕvathās (such as brahmā, rudhra et al); emperumān ŏh our lord!; iṛai ŏh supreme being!; arul̤ enṛu please show mercy (in our matter), so saying; muṛai ninṛu standing in the form of servitors; moy malargal̤ beautiful flowers; thūva scattering them in a disorderly way; aṛai kazhala sĕvadiyān having divine feet adorned with warrior’s anklets; sem kaṇ having reddish eyes; nediyān being superior to everyone else; māl having affection towards his followers; kuṛal̤ uruvāy incarnating in the form of vāmana (dwarf); māvadivil with mahābali; maṇ koṇdān māl measured the earth

IT 100

2281 மாலே! நெடியோனே! கண்ணனே! * விண்ணவர்க்கு
மேலா! வியன்துழாய்க்கண்ணியனே! * - மேலால்
விளவின்காய் கன்றினால்வீழ்த்தவனே! * என்தன்
அளவன்றால் யானுடையஅன்பு.
2281 ## மாலே நெடியோனே! கண்ணனே ! * விண்ணவர்க்கு
மேலா! * வியன் துழாய்க் கண்ணியனே ! ** மேலால்
விளவின் காய் * கன்றினால் வீழ்த்தவனே! * என் தன்
அளவு அன்றால் யானுடைய அன்பு 100
2281 ## māle nĕṭiyoṉe! kaṇṇaṉe ! * viṇṇavarkku
melā! * viyaṉ tuzhāyk kaṇṇiyaṉe ! ** - melāl
vil̤aviṉ kāy * kaṉṟiṉāl vīzhttavaṉe! * ĕṉ taṉ
al̤avu aṉṟāl yāṉuṭaiya aṉpu -100

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2281. O Thirumāl, Nedumāl, Kannan, adorned with a wonderful thulasi garland and lord of the gods in the sky, who threw a calf at the vilam tree and killed the Asurans, my love for you has no limit.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே! அடியாரிடத்தில் அன்புடையவனே!; நெடியோனே! கண்ணனே! எம்பெருமானே!; விண்ணவர்க்கு நித்யசூரிகளுக்கு; மேலா! தலைவனே!; வியன் துழாய் துளசி மாலை; கண்ணியனே! அணிந்தவனே!; மேலால் முன்பொருசமயம்; விளவின் காய் விளாம் பழத்தை; கன்றினால் கன்றினால்; வீழ்த்தவனே! வீழ்த்தினவனே!; யானுடைய உன்னிடத்தில் அடியேன்; அன்பு வைத்திருக்கும் பக்தி; என்தன் அளவு அன்றால் அளவிடமுடயாதது
mālĕ ŏh one who is affectionate (towards his followers)!; nediyŏnĕ ŏh one who cannot be estimated [as this much]!; viṇṇavarkku mĕlā ŏh one who is the lord of nithyasūris!; viyan thuzhāyk kaṇṇiyanĕ ŏh one who is adorning the thul̤asi garland!; kaṇṇanĕ ŏh one who was born as krishṇa!; mĕnāl̤ once upon a time; vil̤avin kāy wood apple fruit (inside which a demon had entered); kanṛināl with a calf (inside which another demon had entered); vīzhththavanĕ ŏh one who felled it; yān udaiya that ī have (towards you); anbu the affection; enthan al̤avanṛu does not remain within me