IT 86

மேக மணிவண்ணனை நான் எங்ஙனம் காண்பேன்?

2267 நவின்றுரைத்தநாவலர்கள் நாண்மலர்கொண்டு * ஆங்கே
பயின்றதனால் பெற்றபயனென்கொல்? * - பயின்றார்தம்
மெய்த்தவத்தால் காண்பரியமேகமணிவண்ணனை * யான்
எத்தவத்தால்காண்பன்கொல் இன்று?
2267 naviṉṟu uraitta nāvalarkal̤ * nāl̤ malar kŏṇṭu * āṅke
payiṉṟataṉāl pĕṟṟa payaṉ ĕṉkŏl? ** - payiṉṟār tam
mĕyt tavattāl * kāṇpu ariya meka maṇi vaṇṇaṉai * yāṉ
ĕt tavattāl kāṇpaṉ kŏl iṉṟu? -86

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2267. Poets cannot see him, they can only praise him with garlands of words. Even sages doing true tapas cannot see the cloud-colored god. What kind of tapas I could have done that I see him now?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நவின்று அவனது நாமங்களை; உரைத்த பலகாலும் சொல்லுகின்ற; நாவலர்கள் கவிகள்; நாண் அப்போதலர்ந்த; மலர் கொண்டு பூக்களைக் கொண்டு; ஆங்கே அந்த பெருமானை; பயின்று நெருங்கி ஆச்ரயித்து; அதனால் பெற்ற அதனால் பெற்ற; பயன் பயன்; என்கொல் தானே தன்னை காட்டினாலொழிய; பயின்றார் தம் சுயமுயற்சியால் அவனை காண முடியாது; மெய் உடலை வருத்தி செய்யும்; தவத்தால் தவத்தாலும்; காண்பு அரிய காணமுடியாதவனும்; மேக மேகம் போன்றவனும்; மணி நீலமணி போன்றவனுமான; வண்ணனை எம்பெருமானை; யான் இன்று நான் இன்று; எத் தவத்தால் எந்தத் தபஸ்ஸினால்; காண்பன்கொல் காண்பேன்
navinṛu uraiththa (through other means, reciting) emperumān’s divine names for a long time; nāvalargal̤ poets; nāl̤ malar koṇdu taking flowers which had just then blossomed; āngĕ payinṛu approaching that emperumān closely; adhanāl peṝa payan enkol what is the benefit (that they had) thus obtained?; payinṛār tham those who carry out efforts through other means [than emperumān’s mercy]; mey thavaththāl the penance that they carry out with their physical bodies; kāṇbariya one who is impossible to see; mĕga maṇivaṇṇanai emperumān who has the complexion of cloud and blue coloured gem; yān adiyĕn (the servitor, ī); inṛu now; eththavaththāl kol kāṇban with which penance will ī see?

Detailed WBW explanation

navinṛ uraiththu – Reciting Emperumān's divine names repeatedly, with profound involvement.

nāvalargazh – Entities such as Brahmā et al., who desire other benefits.

nāl̤ malar koṇdu – Taking objects such as freshly blossomed flowers; selecting excellent flowers.

Aṅgē payinṛadhanāl peṛṛa payan enkol – What benefits did such people derive after attaining

+ Read more