93

ThirukKoshtiyur

திருகோஷ்டியூர்

ThirukKoshtiyur

Koshti Kshetram

ஸ்ரீ திருமாமகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீசௌம்யநாராயணாய நமஹ

Thayar: Thirumāmagal Nāchiyār
Moolavar: Sri Uragamellanaiyā
Utsavar: Sri Sowmyanārāyanan
Vimaanam: Ashtānga
Pushkarani: Deva (Thirupparkadal)
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Pudukotai
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Timings: 6:00 a.m. to 11:00 a.m. 4:00 p.m. to 8:30 p.m.
Search Keyword: Thirukkottiyur
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.1.1

13 வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர் *
கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில் *
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிட *
கண்ணன்முற்றம் கலந்துஅளராயிற்றே. (2)
13 ## வண்ண மாடங்கள் சூழ் * திருக்கோட்டியூர் *
கண்ணன் கேசவன் * நம்பி பிறந்தினில் (பிறந்த+இன்+இல்) **
எண்ணெய் சுண்ணம் * எதிரெதிர் தூவிட *
கண்ணன் முற்றம் * கலந்து அளறு ஆயிற்றே (1)
13. ##
vaNNa mādaNGgaL soozh * thirukkOttiyoor *
kaNNan kEsavan * nambi piRanthinil *
eNNey suNNam * ethirethir thoovidak *
kaNNan muRRam * kalandhu aLarāyiRRE. (2) 1.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

13. Kesavan, the Almighty incarnated as Kannan, was born in Thirukkottiyur filled with beautiful palaces. All cowherds sprinkled oil and turmeric powder mixed with fragrance on each other in joy. The front yards of the houses turned muddy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ண மாடங்கள் அழகிய மாடங்களால்; சூழ் சூழப்பட்ட; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; கேசவன் கேசவன் என்ற பெயருடைய; நம்பி நாயகன்; கண்ணன் ஸ்ரீகிருஷ்ணன்; இன் இல் நந்தகோபனுடைய இனிய திருமாளிகையில்; பிறந்து அவதரித்து அதனால் ஆய்ப்பாடியில் உள்ளவர்கள்; எண்ணெய் எண்ணெயும்; சுண்ணம் மஞ்சள் பொடியையும்; எதிரெதிர் ஒருவருக்கொருவர்; தூவிட எதிர்த்துத் தூவ; கண் நல் முற்றம் விசாலமான விக்ஷணாமான முற்றம்; கலந்து எண்ணெயும் மஞ்சள் பொடியையும் சேர்த்து; அளறு ஆயிற்றே சேறாகி விட்டது

PAT 1.1.2

14 ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார் *
நாடுவார்நம்பிரான் எங்குற்றானென்பார் *
பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று *
ஆடுவார்களும் ஆயிற்றுஆய்ப்பாடியே.
14 ஓடுவார் விழுவார் * உகந்து ஆலிப்பார் *
நாடுவார் நம்பிரான் * எங்குற்றான் என்பார் **
பாடுவார்களும் * பல்பறை கொட்ட நின்று *
ஆடுவார்களும் * ஆயிற்று ஆய்ப்பாடியே (2)
14
Oduvār vizhuvār * ukandhālippār *
nāduvār n^ampirān * eNGkutrān enbār *
pāduvār kaLum * palpaRai kottan^inRu *
āduvār kaLum * āyiRRu āyppādiyE. 2.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

14. (Thirukkottiyur) On hearing the birth of the divine child, The cowherds ran, fell to the ground and shouted in great joy. They searched for the baby and asked everyone, “Where is our dear Kannan?” They beat the drums, sang, danced and joy spread everywhere at Gokulam.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ப்பாடி திருவாய்பாடியானது; ஓடுவார் ஓடுவார்களும்; விழுவார் சேற்றிலே வழுக்கி விழுபவர்களும்; உகந்து ஆலிப்பார் மகிழ்ந்து கோஷிப்பார்களும்; நாடுவார் பிள்ளையைத் தேடுவார்களும்; நம்பிரான் நம்முடைய கண்ணன்; எங்குத்தான் எங்கே தான்; என்பார் இருக்கிறான் என்பாரும்; பாடுவார்களும் பாடுபவர்களும்; பல்பறை பல வித வாத்தியங்கள்; கொட்ட முழங்க; நின்று அதற்கு ஏற்ப; ஆடுவார்களும் கூத்தாடுவாருமாக; ஆயிற்று ஆயிற்று

PAT 1.1.3

15 பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில் *
காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார் *
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் * திரு
வோணத்தான் உலகாளுமென்பார்களே.
15 பேணிச் சீர் உடைப் * பிள்ளை பிறந்தினில் *
காணத் தாம் புகுவார் * புக்குப் போதுவார் **
ஆண் ஒப்பார் * இவன் நேர் இல்லை காண் *
திருவோணத்தான் * உலகு ஆளும் என்பார்களே (3)
15
pENich cheerudai * piLLai piRandhinil *
kāNaththām puhuvār * pukkup pOdhuvār *
āNoppār * ivan n^ErillaikāN * thiru-
vONaththān * ulahāLum enbār kaLE. 3.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

15. (Thirukkottiyur) On the birth of the glorious child protected from evil forces, cowherds entered with love into Yashodā’s house. Those who thronged said, "Among all men, He is incomparable! His birth star is Thiruvonam and He will rule the world. ”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீருடை நற்குணம் மிக்க; பிள்ளை பிள்ளை கிருஷ்ணன்; பேணி கம்சன் கண் படாதபடி; பிறந்தினில் பிறந்தவனைக் காத்து வந்ததால்; தாம் ஆய்ப்பாடி ஆயர்கள்; காண பிள்ளையைக்காண ஆசைப்பட்டு; புகுவார் உள்ளே நுழைவாரும்; புக்கு உள்ளேபோய் பார்த்து; போதுவார் திரும்புவாரும்; ஆணொப்பார் இவன் இவனுக்கு ஈடான ஆண்; நேர் இல்லை காண் யாரும் இல்லை; திரு வோணத்தான் திருவோணத்தில் அவதரித்தவன்; உலகு ஆளும் உலகங்களையெல்லாம் ஆள்வான்; என்பார்களே என்று சொல்லலானார்கள்

PAT 1.1.4

16 உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார் *
நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார் *
செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து * எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடியாயரே.
16 உறியை முற்றத்து * உருட்டி நின்று ஆடுவார் *
நறுநெய் பால் தயிர் * நன்றாகத் தூவுவார் **
செறி மென் கூந்தல் * அவிழத் திளைத்து *
எங்கும் அறிவு அழிந்தனர் * ஆய்ப்பாடி ஆயரே (4)
16
uRiyai muRRaththu * urutti n^inRāduvār *
naRun^ey pālthayir * nanRākath thoovuvār *
seRimen koondhal * avizhath thiLaiththu * eNGgum-
aRivazhindhanar * āyppādi āyarE. 4.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Simple Translation

16. (Thirukkottiyur) The women of Aipādi, Mathura took the uri, rolled the pots in front of their houses and danced. The fragrant ghee, milk and yogurt spilled all over and they were filled with frenzied joy and their thick soft hair became loose.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ப்பாடி ஆயர் ஆய்ப்பாடியிலுள்ள கோபர்கள்; உறியை உறிகளை; முற்றத்து உருட்டி நின்று முற்றத்தில் உருட்டிவிட்டு; ஆடுவார் கூத்தாடுபவரானார்கள்; நறுநெய் மணமிக்க நெய்; பால் தயிர் பால் தயிர் முதலியவற்றை; நன்றாக தாராளமாகத்; தூவுவார் தானம் அளிப்பவரானார்கள்; செறிமென் நெருங்கி மெத்தென்று படிந்திருக்கிற; கூந்தல் தலைமுடி; அவிழத் அவிழ்ந்து கலையும்படியாக; திளைத்து நாட்டியமாடி; எங்கும் ஆயர்பாடி முழுதும்; அறிவு அழிந்தனர் உன்மத்தமானார்கள்

PAT 1.1.5

17 கொண்டதாளுறி கோலக்கொடுமழு *
தண்டினர் பறியோலைச்சயனத்தர் *
விண்டமுல்லை அரும்பன்னபல்லினர் *
அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
17 கொண்ட தாள் உறி * கோலக் கொடுமழுத்
தண்டினர் * பறியோலைச் சயனத்தர் **
விண்ட முல்லை * அரும்பு அன்ன பல்லினர் *
அண்டர் மிண்டிப் * புகுந்து நெய்யாடினார் (5)
17
koNdathāLuRi * kOlak kodumazhu *
thaNdinar * paRiyOlai sayanaththar *
viNdamullai * arumbanna pallinar *
aNdar miNdip * puhundhu neyyādinār. 5.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

17. (Thirukkottiyur) The cowherds have tightly woven pots, sharp mazhu weapons. They hold staffs for grazing the cows and beds made from filaments of screw-pine flowers to lie on. Their teeth glitter like blossoming jasmine flowers. (When they heard that the divine child was born) They joined happily together, laughed and smeared oil on themselves and embraced each other in joy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொண்ட தாள் நெருங்கிப் பின்னப்பட்ட; உறி உறிகளையும்; கோல அழகிய; கொடு கூர்மையான; மழு மழு மற்றும்; தண்டினர் தடிகளை கொண்டவர்; பறியோலை தாழைமடல் ஓலை; சயனத்தர் படுக்கையில் சயனிப்பவராய்; விண்ட மலர்ந்த; முல்லை அரும்பு அன்ன முல்லை அரும்பு போன்ற; பல்லினர் பற்களையுடையவர்களான; அண்டர் இடையர்கள்; மிண்டிப் புகுந்து நெருங்கிப்புகுந்து; நெய்யாடினார் எண்ணெய் தேய்த்த உடலோடு தழுவினர்

PAT 1.1.6

18 கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர் *
பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால் *
ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட *
வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.
18 கையும் காலும் நிமிர்த்துக் * கடார நீர் *
பைய ஆட்டிப் * பசுஞ் சிறு மஞ்சளால் **
ஐய நா வழித்தாளுக்கு * அங்காந்திட *
வையம் ஏழும் கண்டாள் * பிள்ளை வாயுளே (6)
18
kaiyum kālum n^imirththuk * kadāra n^eer *
paiyavāttip * pasuNYchiRu maNYjaLāl *
aiya n^āvazhiththāLukku * aNGgāndhida *
vaiyam Ezhum kaNdāL * piLLai vāyuLE. 6.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

18. (Thirukkottiyur) Yashodā, the blessed mother massaged the baby’s hands and legs and gently poured fresh turmeric water on His body from the pot and bathed Him. When she cleaned His lovely tongue, she saw all the seven worlds inside the infant's mouth.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கையும் காலும் கையையும் காலையும்; நிமிர்த்துக் நிமிர்த்து; கடார நீர் கடாரத்தில் காய்ச்சின தீர்தத்திலே; பசுஞ் சிறு மஞ்சளால் சிறிய பசு மஞ்சளால்; பைய ஆட்டிப் பாங்காக நீராட்டி; ஐய நா மெல்லிய நாக்கை; வழித்தாளுக்கு வழித்த தாய்க்கு; அங்காந்திட கண்ணன் வாயைத் திறக்க; பிள்ளைவாயுளே பிள்ளையின் வாயினுள்ளே; வையம் ஏழும் ஏழுலகங்களையும்; கண்டாள் பார்த்தாள்

PAT 1.1.7

19 வாயுள்வையகம்கண்ட மடநல்லார் *
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் *
பாயசீருடைப் பண்புடைப்பாலகன் *
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
19 வாயுள் வையகம் கண்ட * மடநல்லார் *
ஆயர் புத்திரன் அல்லன் * அருந்தெய்வம் **
பாய சீர் உடைப் * பண்பு உடைப் பாலகன்
மாயன் என்று * மகிழ்ந்தனர் மாதரே (7)
19
vāyuL vaiyakam kaNda * mada n^allār *
āyar puththiran allan * arundheyvam *
pāyaseerudaip * paNpudaip pālakan *
māyan enRu * mahizhndhanar mādharE. 7.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

19. (Thirukkottiyur) The virtuous women who saw the world in the baby's mouth, were amazed. They praised him, saying, “He is not a cowherd. He is the supreme lord, an epitome of virtues, accessible to all, a wonderful child - really the Māyan!”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாயுள் பிள்ளையின் வாயினுள்ளே; வையகம் கண்ட உலகங்களைப்பார்த்த; மடநல்லார் குணவதிகளான; மாதர் கோபிகைகள்; ஆயர் புத்திரன் இவன் கோபகுமாரன்; அல்லன் அல்லன்; அருந்தெய்வம் பெறுதற்கரிய தெய்வம்; பாய சீர் உடை பரம்பின புகழையுடையவனும்; பண்பு உடை எளிமையான குணமுடையவனும்; பாலகன் (இந்த) சிறுப்பிள்ளையானவன்; மாயன் ஆச்சர்யமான எம்பெருமான்; என்று என்று (ஒருவர்க்கொருவர்) சொல்லிக்கொண்டு; மகிழ்ந்தனர் ஆனந்தித்தார்கள்

PAT 1.1.8

20 பத்துநாளும்கடந்த இரண்டாநாள் *
எத்திசையும் சயமரம்கோடித்து *
மத்தமாமலை தாங்கியமைந்தனை *
உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.
20 பத்து நாளும் கடந்த * இரண்டாம் நாள் *
எத் திசையும் * சயமரம் கோடித்து **
மத்த மா மலை * தாங்கிய மைந்தனை *
உத்தானம் செய்து * உகந்தனர் ஆயரே (8)
20
paththun^āLum kadandha * iraNdā n^āL *
eththisaiyum * sayamaram kOdiththu *
maththa māmalai * thāNGgiya maindhanai *
uththānam seythu * uhandhanar āyarE. 8.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

20. (Thirukkottiyur) On the twelfth day of the birth, the cowherds planted poles of victory in all directions. They carried the baby, the one who held the mountain with elephants (Govardhanāgiri) in his finger and they rejoiced.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பத்து நாளும் கடந்த பத்து நாளும் கடந்த; இரண்டாம் நாள் பன்னிரண்டாம் நாள் நாமகர்ண தினத்திலே; எத் திசையும் எல்லா திசைகளிலும்; சயமரம் ஜய சூசகமான தோரணங்களைக்; கோடித்து கட்டி அலங்கரித்து; மத்தமா மலை யானைகள் உள்ள மலையைத்; தாங்கிய மைந்தனை தூக்கிய பிரானை; ஆயர் உத்தானம் செய்து ஆயர்கள் கையில் வைத்து; உகந்தனர் மகிழ்ந்தனர்

PAT 1.1.9

21 கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும் *
எடுத்துக்கொள்ளில் மருங்கையிறுத்திடும் *
ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும் *
மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
21 கிடக்கில் தொட்டில் * கிழிய உதைத்திடும் *
எடுத்துக் கொள்ளில் * மருங்கை இறுத்திடும் **
ஒடுக்கிப் புல்கில் * உதரத்தே பாய்ந்திடும் *
மிடுக்கு இலாமையால் * நான் மெலிந்தேன் நங்காய் (9)
21
kidakkil thottil * kizhiya uthaiththidum *
eduththuk koLLil * maruNGgai iRuththidum *
odukkippulkil * utharaththE pāyndhidum *
midukkilāmaiyāl * nān melindhEn n^aNGgāy. 9.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

21. (Thirukkottiyur) Yashodā sighed, “If I put Him in the cradle, He kicks and tears the cloth. If I hold Him in my hands, He hurts my waist. If I embrace Him tightly, He kicks my stomach. I lack the strength anymore to manage Him. I am tired, my friends!”

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நங்காய்! ஸ்தீரிகளே!; கிடக்கில் தொட்டிலில் கிடக்கையில்; தொட்டில் கிழிய தொட்டில் சிதிலமாகும்படி; உதைத்திடும் உதைக்கிறான்; எடுத்துக் கொள்ளில் இடுப்பில் எடுத்துக்கொண்டால்; மருங்கை இறுத்திடும் இடுப்பை முறிக்கிறான்; ஒடுக்கிப் கைகால்களைகட்டி பிடித்து; புல்கில் மார்பில் அணைத்துக்கொண்டால்; உதரத்தே வயிற்றில்; பாய்ந்திடும் பாய்கிறான்; மிடுக்கு இச்சேஷ்டைகளைப் பொறுக்கும் சக்தி; இலாமையால் இவனுக்கு இல்லாமையால் அதை எண்ணி; நான் மெலிந்தேன் நான் மிகவும் இளைத்துப்போனேன்

PAT 1.1.10

22 செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர் *
மன்னுநாரணன் நம்பிபிறந்தமை *
மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த * இப்
பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே. (2)
22 ## செந்நெல் ஆர் வயல் சூழ் * திருக்கோட்டியூர் *
மன்னு நாரணன் * நம்பி பிறந்தமை **
மின்னு நூல் * விட்டுசித்தன் விரித்த *
இப் பன்னு பாடல் வல்லார்க்கு * இல்லை பாவமே (10)
22. ##
sen^n^elār vayalsoozh * thirukkOttiyoor *
mannu n^āraNan * nambi piRandhamai *
minnun^ool * viShNuchiththan viriththa * ip-
pannupādal vallārkku * illai pāvamE. (2) 10.

Ragam

அபரூப

Thalam

அட

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

22. Vishnuchithan, wearing a shining sacred thread, composed hymns (pāsurams) that describe the birth of omnipresent Nārāyanan, Purushothaman of Thirukkottiyur, surrounded by flourishing paddy fields. Those who recite these pāsurams will be absolved of their sins.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்நெல் செந்நெல் தானியம்; ஆர் வயல் நிறைந்திருக்கிற கழனிகளால்; சூழ் சூழப்பட்ட; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரிலே; மன்னு நித்யவாஸம் பண்ணுகிற; நாரணன் நாராயணன்; நம்பி பிரான்; பிறந்தமை அவதரித்த பிரகாரத்தை; மின்னு நூல் பூணூலையுடைய; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்த விரித்துரைத்த; இப்பன்னு பாடல் இப்பாசுரங்களை; வல்லார்க்கு கற்றவர்களுக்கு; பாவம் இல்லை பாபம் இல்லாது போகும்

PAT 2.6.2

173 கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும் *
எங்கும்திரிந்து விளையாடும்என்மகன் *
சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க * நல்
அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.
173 கொங்கும் குடந்தையும் * கோட்டியூரும் பேரும் *
எங்கும் திரிந்து * விளையாடும் என்மகன் **
சங்கம் பிடிக்கும் * தடக்கைக்குத் தக்க * நல்
அங்கம் உடையது ஓர் கோல் கொண்டு வா * அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா (2)
173
koNGgum kudandhaiyum * kOttiyoorum pErum *
eNGgum thirindhu * viLaiyādum enmahan *
saNGgam pidikkum * thadakkaikku thakka *
nal aNGgamudaiyadhOr kOl koNduvā!
arakku vazhiththadhOr kOl koNduvā. 2.

Ragam

தேசி

Thalam

ஆதி

Bhavam

Mother

Simple Translation

173. My son wanders and plays everywhere and in the fragrant Kumbakonam, Thirukkotiyur and Thirupper O crow, bring a suitable, well-formed round grazing stick for my son with a conch in his strong hands Bring a grazing stick painted red.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொங்கும் வாசனை மிக்க; குடந்தையும் குடந்தை நகரிலும்; கோட்டியூரும் திருக்கோட்டியூர்; பேரும் மற்றும் திருப்பேரிலும்; எங்கும் திரிந்து எல்லா இடங்களுக்கும் சென்று; விளையாடும் விளையாடுகின்ற; என் மகன் என் பிள்ளையின்; சங்கம் பிடிக்கும் பாஞ்ச ஜன்னியம் ஏந்தும்; தடக்கைக்குத் தக்க விசாலமான கைக்குத் தகுந்த; நல் அங்கம் நல்ல; உடையதோர் வடிவுடைய ஒரு; கோல் கொண்டு வா கோலைக் கொண்டுவா; அரக்கு வழித்தது அரக்கு வழுவழுப்பாகப் பூசிய; ஓர் கோல் கொண்டு வா ஒரு கோலைக் கொண்டுவா

PAT 4.3.11

359 மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை *
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை *
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளின் *
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனனே. (2)
359 ## மாலிருஞ்சோலை என்னும் * மலையை உடைய மலையை *
நாலிரு மூர்த்திதன்னை * நால் வேதக்-கடல் அமுதை **
மேல் இருங் கற்பகத்தை * வேதாந்த விழுப் பொருளின் *
மேல் இருந்த விளக்கை * விட்டுசித்தன் விரித்தனனே (11)
359. ##
mālirunchOlai ennum * malaiyai udaiya malaiyai *
nāliru moorththi thannai * nāl vEdhak kadal amudhai *
mEliruNGgaRpahaththai * vEdhāndha vizhupporuLin *
mElirundha viLakkai * vishNu chiththan viriththananE. (2) 11.

Ragam

ஸஹானா

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

359. Vishnuchithan described and praised the god of the mountain Thirumālirunjolai, the ocean of nectar, the creator of the four Vedās, the ocean of nectar, the generous Karpaga tree in heaven, the deep meaning of Vedānta and the highest light, shining in all eight directions. Praising the Devotees of Thirumāl in Thirukkottiyur and blaming those who are not Vaishnavas

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலிருஞ்சோலை திருமாலிருஞ்சோலை; என்னும் மலையை என்கிற திருமலையை; உடைய மலையை தனக்கு இருப்பிடமாக உடையவனும்; நாலிரு மூர்த்தி தன்னை அஷ்டாக்ஷர மூர்த்தியாய்; நால்வேதக் கடல் நான்கு வேதங்களாகிய கடலில்; அமுதை சாரமான அமிர்தம் போன்றவனும்; மேல் இரும் மேன்மையான பெரிய; கற்பகத்தை கற்பக விருக்ஷத்தை போன்றவனும்; வேதாந்த வேதாந்தங்களிற் கூறப்படுகின்ற; விழுப் பொருளின் சிறந்த அர்த்தங்களுக்கும்; மேலிருந்த மேம்பட்டவனாக இருப்பவனும்; விளக்கை ஜோதியுமான கண்னனைக் குறித்து; விட்டுசித்தன் பெரியாழ்வார்; விரித்தனனே அருளிச் செய்தவை இப்பாசுரங்கள்

PAT 4.4.1

360 நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார் *
தேவகாரியம்செய்து வேதம்பயின்றுவாழ்திருக்கோட்டியூர் *
மூவர்காரியமும்திருத்தும் முதல்வனைச்சிந்தியாத * அப்
பாவகாரிகளைப்படைத்தவன் எங்ஙனம்படைத்தான்கொலோ. (2)
360 ## நா அகாரியம் சொல் இலாதவர் * நாள்தொறும் விருந்து ஓம்புவார் *
தேவ காரியம் செய்து * வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் **
மூவர்காரியமும் திருத்தும் * முதல்வனைச் சிந்தியாத * அப்
பாவகாரிகளைப் படைத்தவன் * எங்ஙனம் படைத்தான் கொலோ (1)
360. ##
nāva kāriyam sollilādhavar * nāLthoRum virundhOmbuvār *
dhEva kāriyam seydhu * vEdham payinRu vāzh thirukkOttiyoor *
moovar kāriyamum thiruththum * mudhalvanai sindhiyādha * ap-
pāva kārikaLaip padaiththavan * eNGNGanam padaiththān kolO! (2) 1.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

360. Thirukkottiyur is where devotees live who never say wrong things, feed guests every day, serve the god, and learn and recite the Vedās. Our ancient god, our creator is the three gods Nānmuhan, Shivā and Indra. How could he has created sinful people in Thirukkottiyur who do not think of him?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நா அகாரியம் நாவினாற் சொல்லவொண்ணாதவற்றை; சொல் இலாதவர் சொல்லியறியாத ஸ்ரீவைஷ்ணவர்கள்; நாள்தொறும் தினந்தோறும்; விருந்து ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு; ஓம்புவார் விருந்தளித்துக் கொண்டும்; தேவ காரியம் கடவுள் கைங்கர்யம்; செய்து பண்ணிக் கொண்டும்; வேதம் வேதங்களை; பயின்று வாழ் ஓதிக்கொண்டும் வாழும் இடமான; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; மூவர் பிரமன் ருத்ரன் இந்திரன் என்ற மூவருடைய; காரியமும் காரியமும்; திருத்தும் முதல்வனை செய்யும் எம்பெருமானை; சிந்தியாத நினைக்காதிருக்கும்; அப்பாவகாரிகளை அந்த பாவம் புரிபவர்களை; படைத்தவன் படைத்தவன்; எங்ஙனம் எதற்காக; படைத்தான் கொலோ! சிருஷ்டித்தானோ!

PAT 4.4.2

361 குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய் *
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத்தொழாதவர் *
பெற்றதாயர்வயிற்றினைப் பெருநோய்செய்வான்பிறந்தார்களே.
361 குற்றம் இன்றிக் குணம் பெருக்கிக் * குருக்களுக்கு அனுகூலராய் *
செற்றம் ஒன்றும் இலாத * வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர் **
துற்றி ஏழ் உலகு உண்ட * தூ மணி வண்ணன் தன்னைத் தொழாதவர் *
பெற்ற தாயர் வயிற்றினைப் * பெரு நோய்செய்வான் பிறந்தார்களே (2)
361
kuRRaminRi guNam perukki * kurukkaLukku anukoolarāy *
seRRam onRumilādha * vaN kaiyinārhaL vāzh thirukkOttiyoor *
thuRRiyEzhulahuNda * thoomaNi vaNNan thannai thozhādhavar *
peRRa thāyar vayiRRinai * peru n^Oy seyvān piRandhārhaLE. 2.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

361. In Thirukkottiyur the faultless devotees do only good deeds, do service to their gurus, never get angry and are generous. The sapphire colored lord has swallowed all the seven worlds. If the devotees do not worship him, could they have been born just to give terrible pain to their mothers?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குற்றம் இன்றி ஒருவகையான குற்றமுமில்லாமல்; குணம் சமம் தமம் முதலிய குணங்களை; பெருக்கி வளரச் செய்துகொண்டு; குருக்களுக்கு ஆசாரியர்களுக்கு; அனுகூலராய் பாங்காயிருப்பவர்களும்; செற்றம் ஒன்றும் பொறாமை யென்பது; இலாத சிறிதுமில்லாத; வண்கையினார்கள் வண்மையுடையவர்கள்; வாழ் வாழும்; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; ஏழு உலகு ஸப்தலோகங்களையும்; துற்றி ஒரு கவளமாகத்திரட்டி; உண்ட அமுது செய்த; தூ மணி தூய நீலமணி போன்ற; வண்ணன் நிறத்தையுடைய; தன்னை எம்பெருமானை; தொழாதவர் வணங்காதவர்கள்; பெற்ற தாயர் பெற்ற தாய்மாருடைய; வயிற்றினை வயிற்றை; பெரு நோய் மிகவும் நோக; செய்வான் செய்வதற்காக; பிறந்தார்களே பிறந்தவர்களே

PAT 4.4.3

362 வண்ணநல்மணியும் மரதகமும்அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் * திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள் *
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய் *
உண்ணக்கண்டதம்ஊத்தைவாய்க்குக் கவளமுந்துகின்றார்களே.
362 வண்ண நல் மணியும் * மரதகமும் அழுத்தி * நிழல் எழும்
திண்ணை சூழ் * திருக்கோட்டியூர்த் திரு மாலவன் திருநாமங்கள் **
எண்ணக் கண்ட விரல்களால் * இறைப் பொழுதும் எண்ணகிலாது போய் *
உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் * கவளம் உந்துகின்றார்களே (3)
362
vaNNa n^al maNiyum marahadhamum azhuththi * nizhalezhum-
thiNNai soozh * thirukkOttiyoor * thirumālavan thiru n^āmaNGgaL *
eNNak kaNda viralhaLāl * iRaip pozhudhum eNNahilādhupOy *
uNNakkaNda tham ooththai vāykku * kavaLam undhukinRārhaLE. 3.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

362. Thirukkottiyur is filled with porches studded with beautiful precious diamonds and emeralds and filled with cool shadow where the devotees count with their fingers the divine names of the auspicious god Thirumāvalavan. How can people live there not thinking of the god even for a moment, not counting the names of him with their fingers, and merely swallowing food with their dirty mouths.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ண நல் நல்ல நிறத்தையுடைய; மணியும் ரத்தினங்களையும்; மரகதமும் மரகதங்களையும்; அழுத்தி இழைத்ததனால்; நிழல் எழும் ஒளிவிடுகின்ற; திண்ணை சூழ் திண்ணைகளாலே சூழப்பெற்ற; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில் இருக்கும்; திருமாலவன் எம்பெருமானின்; திரு நாமங்கள் திரு நாமங்களை; எண்ணக் கண்ட எண்ணுவதற்கு ஹேதுவாக; விரல்களால் விரல்களாலே; இறைப் பொழுதும் ஒரு கணப் பொழுதும்; எண்ணகிலாது போய் எண்ணமாட்டாமல் போய்; உண்ணக் கண்ட தம் உண்ணுவதை நாடுகின்ற தமது; ஊத்தை வாய்க்கு அசுத்தமான வாயிலே; கவளம் சோற்றை; உந்துகின்றார்களே போடுகிறார்களே!

PAT 4.4.4

363 உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள் *
நிரைகணம்பரந்தேறும் செங்கமலவயல்திருக்கோட்டியூர் *
நரகநாசனைநாவிற்கொண்டழையாத மானிடசாதியர் *
பருகுநீரும்உடுக்குங்கூறையும் பாவம்செய்தனதாங்கொலோ.(2)
363 உரக மெல் அணையான் கையில் * உறை சங்கம் போல் மட அன்னங்கள் *
நிரைகணம் பரந்து ஏறும் * செங் கமல வயற் திருக்கோட்டியூர் **
நரகநாசனை நாவிற் கொண்டு அழை யாத * மானிட சாதியர் *
பருகு நீரும் உடுக்குங் கூறையும் * பாவம் செய்தன தாம் கொலோ (4)
363
urahamellaNaiyān_kaiyil * uRai shankam pOl madavannaNGgaL *
nirai kaNam parandhERum * seNGgamala vayal thirukkOttiyoor *
naraka n^āsanai n^āvil koNdazhaiyādha * mānida sādhiyar *
paruku n^eerum udukkum kooRaiyum * pāvam seydhanathān kgolO! 4.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

363. Thirukkottiyur is surrounded with fields filled with beautiful lotuses and flocks of white swans that are like the white conches in the hands of the lord resting on the soft snake bed. What sins would the water people there drink and the clothes they wear have to commit to make them fail to recite with their tongues his names that destroy hell for them?

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உரக மெல் மிருதுவான திருவனந்தாழ்வானை; அணையான் படுக்கையாகவுடைய பெருமானது; கையில் உறை கையிலுள்ள; சங்கம் போல் பாஞ்சஜந்யம் போல் வெளுத்த; மட மடப்பம் பொருந்திய; அன்னங்கள் ஹம்ஸங்கள்; நிரைகணம் ஒழுங்குபட திரளாக வந்து; பரந்து ஏறும் பரவி ஏறி இருக்கும்; செங்கமல செந்தாமரை மலர்களையுடைய; வயல் வயல் சூழ்; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில் இருக்கும்; நரக நரகத்தை; நாசனை நாசம் செய்த கண்ணனை; நாவிற் கொண்டு நாவினால்; அழையாத துதிக்காத; மானிட சாதியர் மானிடஜாதியிற் பிறந்தவர்கள்; பருகு நீரும் குடிக்கும் தண்ணீரும்; உடுக்கும் உடுத்துக்கொள்ளுகிற; கூறையும் வஸ்திரமும்; பாவம் செய்தன தாம் கொலோ! பாவஞ்செய்தவை அன்றோ!

PAT 4.4.5

364 ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய் *
தீமைசெய்துஇளவாளைகள் விளையாடுநீர்த்திருக்கோட்டியூர் *
நேமிசேர்தடங்கையினானை நினைப்பிலாவலிநெஞ்சுடை *
பூமிபாரங்களுண்ணும்சோற்றினைவாங்கிப் புல்லைத்திணிமினே.
364 ஆமையின் முதுகத்திடைக் குதி கொண்டு * தூ மலர் சாடிப் போய் *
தீமை செய்து இளவாளைகள் * விளை யாடு நீர்த் திருக்கோட்டியூர் **
நேமி சேர் தடங்கையினானை * நினைப்பு இலா வலி நெஞ்சு உடை *
பூமி-பாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் * புல்லைத் திணிமினே (5)
364
āmaiyin mudhukaththidaik kudhi koNdu * thoomalar sādippOy *
theemai seydhu_ iLavāLaihaL * viLaiyādu n^eerth thirukkOttiyoor *
nEmisEr thadaNGgaiyinānai * ninaippilā vali n^eNYchudai *
boomi bāraNGgaL uNNum sORRinai vāNGgi * pullaith thiNiminE. 5.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

364. In Thirukkottiyur young valai fish jump over the backs of turtles, knock over lovely flowers and play in the water mischievously. The hard-hearted ones living there without thinking of the lord with a discus in his strong hand should eat grass instead of rice. They are a burden to the earth.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆமையின் ஆமைகளினுடைய; முதுகத்திடை முதுகின்மேல்; குதி கொண்டு குதித்துக்கொண்டும்; தூமலர் நல்ல புஷ்பங்களை; சாடிப் போய் பறித்துக்கொண்டும்; தீமை செய்து ஒன்றை ஒன்று தீம்பு செய்து; இள வாளைகள் இளமையான ‘வாளை’ மீன்கள்; விளையாடு நீர் விளையாடும் நீர்த்தடமுடைய; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; நேமி சேர் திருச்சக்கரத்தோடு சேர்ந்திருக்கிற; தடம் பெரிய; கையினானை கைகளையுடைய பெருமானை; நினைப்பு இலா ஒரு போதும் நினையாத; வலி நெஞ்சு உடை கடினமான நெஞ்சை உடைய; பூமி பாரங்கள் பூமிக்குச் சுமையாயிருப்பவர்கள்; உண்ணும் சோற்றினை உண்ணும் சோற்றை; வாங்கி பிடுங்கி விட்டு; புல்லை அவர்கள் வாயில் புல்லை; திணிமினே திணியுங்கள்

PAT 4.4.6

365 பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால் *
ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
நாதனைநரசிங்கனை நவின்றேத்துவார்களுழக்கிய *
பாததூளிபடுதலால் இவ்வுலகம்பாக்கியம்செய்ததே.
365 பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து * புலன்கள் ஐந்து பொறிகளால் *
ஏதம் ஒன்றும் இலாத * வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர் **
நாதனை நரசிங்கனை * நவின்று ஏத்துவார்கள் உழக்கிய *
பாத தூளி படுதலால் * இவ் உலகம் பாக்கியம் செய்ததே (6)
365
boodham aindhodu vELvi aindhu * pulanhaL aindhu poRikaLāl *
Edham onRumilādha * vaN kaiyinārhaL vāzh thirukkOttiyoor
nādhanai n^arasiNGganai * navinREththuvārhaL uzhakkiya *
pādha thooLi padudhalāl * ivvulaham bāgyam seydhadhE. 6.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

365. Thirukkottiyur is where devotees live praising Narasimhān, and performing the five sacrifices, never disturbed by water, sky, earth, wind or fire or the troubles that the five senses bring. The world is fortunate because dust falls on the earth from the feet of those generous devotees.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூதம் ஐந்தொடு பஞ்சபூதங்களாலாகிய சரீரத்தினாலும்; வேள்வி ஐந்து பஞ்ச மஹாயஜ்ஞங்களினாலும்; புலன் களைந்து ஐந்து புலன்களாலும்; பொறிகளால் பஞ்சேந்திரியங்களினாலும்; ஏதம் ஒன்றும் இலாத குற்றமொன்றுமில்லாத; வண் கையினார்கள் வள்ளல் குணமுடையவர்கள்; வாழ் திருக்கோட்டியூர் வாழும் திருக்கோட்டியூரில்; நாதனை நரசிங்கனை நரசிம்மமான ஸ்வாமியை; நவின்று ஏத்துவார்கள் அனுசந்தித்து துதிப்பவர்களின்; உழக்கிய பாத தூளி பாதத்தால் மிதியுண்ட தூள்கள்; படுதலால் படுவதால்; இவ் உலகம் இந்த பூவுலகமானது; பாக்கியம் செய்ததே நல்ல பாக்கியம் பண்ணியதாகும்

PAT 4.4.7

366 குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்து *
திருந்துநான்மறையோர் இராப்பகல்ஏத்திவாழ்திருக்கோட்டியூர் *
கருந்தடமுகில்வண்ணனைக் கடைக்கொண்டுகைதொழும்பத்தர்கள் *
இருந்தவூரிலிருக்கும்மானிடர் எத்தவங்கள்செய்தார்கொலோ.
366 குருந்தம் ஒன்று ஒசித்தானொடும் சென்று * கூடி ஆடி விழாச் செய்து *
திருந்து நான்மறையோர் * இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் **
கருந் தடமுகில் வண்ணனைக் * கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் *
இருந்த ஊரில் இருக்கும் மானிடர் * எத்தவங்கள் செய்தார் கொலோ (7)
366
kurundham onRosiththānodum senRu * koodiyādi vizhāchcheydhu *
thirundhu n^ānmaRaiyOr * irāppahal Eththi vāzh thirukkOttiyoor *
karundhada muhilvaNNanai * kadaikkoNdu kai thozhum paththarhaL *
irundhavooril irukkum mānidar * eththavaNGgaL seydhār kolO! 7.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

366. In Thirukkottiyur how much tapas must have been done by those living there, where Vediyars recite the four Vedās night and day and cowherds graze their cattle with sticks from kurundam trees and celebrate many festivals and devotees folding their hands worship the dark cloud-like lord.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குருந்தம் ஒன்று ஒரு குருத்த மரத்தை; ஒசித்தானொடும் முறித்த கண்ணபிரானை; சென்று கூடி ஆடி சென்று சேர்ந்து கூடி ஆடி; விழாச் செய்து கொண்டாட்டமாகச் செய்து; திருந்து திருத்தமான; நான்மறையோர் நான்கு வேதங்களையும் ஓதுபவர்கள்; இராப் பகல் இரவும் பகலும்; ஏத்தி வாழ் துதித்துக்கொண்டு வாழுமிடமான; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூர் பிரானை; கருந் தடமுகில் கருத்து அடர்ந்த மேகம் போன்ற; வண்ணனை நிறத்தையுடையவனை; கடைக் கொண்டு பவ்யத்துடன்; கை தொழும் பத்தர்கள் துதிக்கின்ற பக்தர்கள்; இருந்த ஊரிலிருக்கும் இருந்த ஊரிலிருக்கும்; மானிடர் எத் தவங்கள் மக்கள் எத்தகைய தவங்கள்; செய்தார் கொலோ! செய்தனரோ!

PAT 4.4.8

367 நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமானதுங்கனை * நாள்தொறும்
தெளிந்தசெல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர் *
குளிர்ந்துறைகின்றகோவிந்தன் குணம்பாடுவாருள்ளநாட்டினுள் *
விளைந்ததானியமும் இராக்கதர்மீதுகொள்ளகிலார்களே.
367 நளிர்ந்த சீலன் நயாசலன் * அபி மான துங்கனை * நாள்தொறும்
தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட * செங்கண் மால் திருக்கோட்டியூர் **
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தன் * குணம் பாடுவார் உள்ள நாட்டினுள் *
விளைந்த தானியமும் இராக்கதர் * மீது கொள்ளகிலார்களே (8)
367
naLirndha seelan n^ayāsalan * abimānathunganai * nāLthoRum-
theLindhaselvanaich * chEvakangoNda sengaNmālthirukkOttiyoor *
kuLirndhuRaikinRagOvindhan * guNampāduvāruLLan^āttinuL *
viLaindhathāniyamum irākkadhar * meedhukoLLakilār_kaLE. 8.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

367. Thirukkottiyur is where the lovely-eyed Thirumāl made the good king Abhimānadungan his devotee so that he praised and worshiped god every day. Rakshasās will never be able to take the grain that grows in that land where devotees sing the greatness of Govindan in the temple that is on the cool waterfront.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நளிர்ந்த சீலன் குளிர்ந்த சீலமிக்கவன்; நய அசலன் நீதிநெறி தவறாதவன்; அபிமான அபிமானத்தில்; துங்கனை உய்ந்தவனை; நாள் தொறும் ஒவ்வொரு நாளும்; தெளிந்த தெளிவு மிக்க; செல்வனை செல்வநம்பியை; சேவகங் கொண்ட அடிமை கொண்டவனாய்; செங்கண் சிவந்த கண்களையுடைய; மால் எம்பெருமானை; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில்; குளிர்ந்து உறைகின்ற உள்ளம் உகந்து இருக்கும்; கோவிந்தன் கண்ணனின்; குணம் கல்யாண குணங்களை; பாடுவார் உள்ள பாடுபவர்கள் இருக்கும்; நாட்டினுள் விளைந்த நாட்டிலே விளைந்த; தானியமும் விளைந்த தானியத்தையும்; இராக்கதர் ராக்ஷசர்கள்; மீதுகொள்ளகிலார்களே அபகரிக்க மாட்டார்கள்

PAT 4.4.9

368 கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர் *
செம்பொனார்மதிள்சூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் *
நம்பனைநரசிங்கனை நவின்றேத்துவார்களைக்கண்டக்கால் *
எம்பிரான்தனசின்னங்கள் இவரிவரென்றுஆசைகள்தீர்வனே.
368 கொம்பின் ஆர் பொழில்வாய்க் * குயிலினம் கோவிந்தன் குணம் பாடு சீர் *
செம்பொன் ஆர் மதிள் சூழ் * செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர் **
நம்பனை நரசிங்கனை * நவின்று ஏத்துவார்களைக் கண்டக்கால் *
எம்பிரான் தன சின்னங்கள் * இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே (9)
368
kombinār_pozhilvāyk * kuyilinamgOvindhan_kuNampāduseer *
semponārmadhiLsoozh * sezhungazhaniyudaiththirukkOttiyoor *
nambanain^arasinganai * navinREththuvār_kaLaik kaNdakkāl *
empirān_ dhanasinnangaL * ivarivarenRu_āsaikaLtheervanE. 9.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

368. Thirukkottiyur is filled with flourishing fields and surrounded with beautiful walls that are like pure gold. The cuckoo birds that live on the branches of the groves there sing the fame of Govindan. When I see the devotees praising our dear Narasimhān, I want to live like them so my worldly desires go away.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொம்பின் ஆர் கிளைகள் நிறைந்த; பொழில்வாய் சோலைகளிலே; குயிலினம் குயில்களின் கூட்டம்; கோவிந்தன் குணம் கண்ணனின் குணங்களை; பாடு சீர் பாடும் சீர்மை பெற்ற; செம்பொன் ஆர் செம்பொன்னாலே சமைந்த; மதிள் சூழ் மதிள்களாலே சூழப்பட்டதும்; செழுங் கழனி உடை செழுமையான வயல்களைஉடைய; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில் இருக்கும்; நம்பனை அடியார்களுக்கு நம்பத்தகுந்த; நரசிங்கனை நரசிம்மமான பிரானை; நவின்று உள்ளன்போடு வாய்விட்டு; ஏத்துவார்களை துதிக்கும் பாகவதர்களை; கண்டக்கால் கண்டால்; எம்பிரான் தன எம்பெருமான் தன்; சின்னங்கள் அடையாளமாயிருப்பவர்கள்; இவர் இவர் என்று இவர்களே என்று; ஆசைகள் தீர்வனே ஆசைகள் தீரப்பெறுவான்

PAT 4.4.10

369 காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டு *
தேசவார்த்தைபடைக்கும் வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர் *
கேசவா! புருடோ த்தமா! கிளர்சோதியாய்! குறளா! என்று *
பேசுவார்அடியார்கள் எந்தம்மைவிற்கவும்பெறுவார்களே.
369 காசின் வாய்க் கரம் விற்கிலும் * கர வாது மாற்று இலி சோறு இட்டு *
தேச வார்த்தை படைக்கும் * வண்கையி னார்கள் வாழ் திருக்கோட்டியூர் **
கேசவா புருடோத்தமா! * கிளர் சோதியாய் குறளா! என்று *
பேசுவார் அடியார்கள் * எம்தம்மை விற்கவும் பெறுவார்களே (10)
369
kāsinvāykkaramviRkilum * karavādhumāRRilisORittu *
dhEsavārththaipadaikkum * vaN_kaiyinār_kaLvāzhthirukkOttiyoor *
kEsavā! purudOththamā! * kiLarsOdhiyāy! kuRaLā! enRu *
pEsuvār_adiyār_kaL * endhammaiviRkavumpeRuvār_kaLE. 10.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

369. Thirukkottiyur is where generous people live, giving food to others without hiding it even if they need to sell whatever is in their hands for some money. They praise him, saying, “You are Kesavan, you are the Purushothaman, you are a shining light, you are the dwarf. ” They would even sell themselves to do good for the devotees of him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காசின் வாய் ஒரு காசுக்கு; கரம் விற்கிலும் ஒரு பிடி நெல் விற்கும் காலத்திலும்; கரவாது எதையும் மறைத்து வைக்காமல்; மாற்று இலி எதையும் எதிர்பாராமல்; சோறு இட்டு அதிதிகளுக்கு அன்னமளித்து; தேசவார்த்தை புகழுரைகளை; படைக்கும் பெற்றவர்களாய்; வண் கையினார்கள் உதார குணமுடையவர்கள்; வாழ் வாழும்; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூர்; கேசவா! புருடோத்தமா! கேசவனே! புருடோத்தமனே!; கிளர் சோதியாய்! மிகுந்த தேஜஸ்ஸை யுடையவனே!; குறளா! என்று வாமன வேடம் பூண்டவனே! என்று; பேசுவார் அடியார்கள் பேசுபவர்களான பாகவதர்கள்; எந்தம்மை அடியோங்களை; விற்கவும் விற்றுக்கொள்ளவும்; பெறுவார்களே அதிகாரம் பெறுவார்கள்

PAT 4.4.11

370 சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர் *
ஆதியானடியாரையும் அடிமையின்றித்திரிவாரையும் *
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன்விட்டுசித்தன்சொல் *
ஏதமின்றிஉரைப்பவர் இருடீகேசனுக்காளரே. (2)
370 ## சீத நீர் புடை சூழ் * செழுங் கழனி உடைத் திருக்கோட்டியூர் *
ஆதியான் அடியாரையும் * அடிமையின்றித் திரிவாரையும் **
கோதில் பட்டர்பிரான் * குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல் *
ஏதம் இன்றி உரைப்பவர் * இருடீகேசனுக்கு ஆளரே (11)
370. ##
seedhan^eer_pudaisoozh * sezhungazhaniyudaiththirukkOttiyoor *
ādhiyānatiyāraiyum * adimaiyinRiththirivāraiyum *
kOdhilpattar_pirān * kuLir_pudhuvaimanvittuchiththan_sol *
EdhaminRi_uraippavar * irudeekEsanukkāLarE. (2) 11.

Ragam

நாதநாமக்ரியை

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

370. If those wandering without serving as slaves to the ancient god in Thirukkottiyur surrounded by fertile fields and flourishing water recite without mistakes the pāsurams of the faultless Pattarpiran Vishnuchithan of beautiful Puduvai, they will become the devotees of Rishikesā.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீதநீர் குளிர்ந்த நீராலே; புடை சூழ் சுற்றும் சூழப்பெற்ற; செழும் செழுமையான; கழனி உடை கழனிகளையுடைய; திருக்கோட்டியூர் திருக்கோட்டியூரில் இருக்கும்; ஆதியான் எம்பெருமானுக்கு; அடியாரையும் அடிமை செய்யும் பாகவதர்களையும்; அடிமை இன்றி சேவகம் செய்யாமல்; திரிவாரையும் திரிவாரையும்; கோதில் குற்றமற்றவரும்; பட்டர் பிரான் பட்டர் தலைவரும்; குளிர் குளிர்ந்த; புதுவைமன் ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு தலைவருமான; விட்டுசித்தன் பெரியாழ்வார்; சொல் அருளிச்செய்த இப்பாசுரங்களை; ஏதம் இன்றி குறைபாடின்றி; உரைப்பவர்கள் அனுசந்திப்பவர்கள்; இருடீகேசனுக்கு எம்பெருமானுக்கு; ஆளரே ஆட்பட்டவர்களே!

PT 7.1.3

1550 தாரேன்பிறர்க்கு உன்னருள்என்னிடைவைத்தாய் *
ஆரேன் அதுவேபருகிக்களிக்கின்றேன் *
காரேய்கடலேமலையே திருக்கோட்டி
யூரே * உகந்தாயை உகந்தடியேனே.
1550 தாரேன் பிறர்க்கு * உன் அருள் என்னிடை வைத்தாய் *
ஆரேன் அதுவே * பருகிக் களிக்கின்றேன் **
கார் ஏய் கடலே மலையே * திருக்கோட்டி
ஊரே * உகந்தாயை * உகந்து அடியேனே-3
1550
thārEn piRarkku * un aruL ennidai vaiththāy *
ārENn adhuvE * parugik kaLikkinREn *
kārEy kadalE malaiyE * thirukkOttiyoorE *
uganNdhāyai * uganNthu adiyEnE * . 7.1.3

Ragam

முகாரி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1550. You, the Lord of Naraiyur, gave me your grace and I will not give it away to anyone else. I drink your grace and relish it—it is never enough for me. You have the dark color of the ocean and are like a mountain, O god of Thirukkottiyur. You are happy to have me as your devotee and I, your slave, have received you with joy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன் அருள் உன் அருளை; என்னிடைவைத்தாய் என்னிடம் வைத்தாய்; தாரேன் வேறொருவர்க்கும்; பிறர்க்கு கொடுக்கமாட்டேன்; அடியேனே உகந்து அடியேனை உகந்து; கார் ஏய் மேகங்கள் படிந்திருக்கும்; கடலே பாற்கடலையும்; மலையே திருமலையையும்; திருக்கோட்டி ஊரே திருக்கோட்டியூரையும்; உகந்தாய் உகந்து அருளினாய்; அதுவே பருகிக் அந்த அருளையே அனுபவித்து; ஆரேன் திருப்தியடையாதவனாகவும் அதேசமயம்; களிக்கின்றேன் திருப்தியாகவும் களிக்கின்றேன்

PT 9.10.1

1838 எங்கள்எம்மிறைஎம்பிரான் இமையோர்க்குநாயகன் * ஏத்தடியவர்
தங்கள்தம்மனத்துப்பிரியாதுஅருள்புரிவான் *
பொங்குதண்ணருவிபுதம்செய்யப் பொன்களேசிதறும், இலங்கொளி *
செங்கமலம்மலரும் திருக்கோட்டியூரானே. (2)
1838 ## எங்கள் எம் இறை எம் பிரான் * இமையோர்க்கு நாயகன் * ஏத்து அடியவர்-
தங்கள் தம் மனத்துப் * பிரியாது அருள் புரிவான்- **
பொங்கு தண் அருவி புதம் செய்யப் * பொன்களே சிதற இலங்கு ஒளி *
செங்கமலம் மலரும்- * திருக்கோட்டியூரானே-1
1838
eNGgaL emmiRai embirāNn * imaiyOrkku-
nNāyagaNn, * Eththu adiyavar thangaL-
thammaNnaththup * piriyāthu aruLpurivāNn, *
poNGgu thaNNaruvi puthamcheyyap *
poNnkaLE chidhaRum ilaNGgoLi, *
cheNGgamalam malarum * thirukkOttiyoorāNnE. (2)9.10.1

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1838. Our dear god, our king, chief of the gods in the sky, who stays in the minds of the devotees who praise him and gives them his grace, stays in Thirukkottiyur where a cool, tall waterfall makes a cloud of golden drops and lovely lotuses bloom and shine.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கள் எம் இறை எங்களுக்கே இறைவன்; எம் பிரான் எம் பெருமான்; இமையோர்க்கு நித்யஸூரிகளுக்கு; நாயகன் தலைவனும்; ஏத்து துதிக்கின்ற; அடியவர் பக்தர்களின்; தங்கள் தம் மனத்து மனதிலிருந்து; பிரியாது பிரியாமல்; அருள்புரிவான் அருள்புரிபவனும்; பொங்கு தண் பொங்கி ஓடும்; அருவி அருவி போல்; புதம் செய்ய மேகம்; பொன்களே பொன்னை; சிதற சிந்துவதால்; இலங்கு ஒளி மிக்க ஒளியையுடையதாய்; செங்கமலம் சிவந்த தாமரைப்பூக்கள்; மலரும் மலரும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.2

1839 எவ்வநோய்தவிர்ப்பான்எமக்கிறைஇன்னகைத்துவர்வாய் * நிலமகள்
செவ்விதோயவல்லான் திருமாமகட்கினியான் *
மௌவல்மாலைவண்டாடும் மல்லிகைமாலையோடுமணந்து * மாருதம்
தெய்வம்நாறவரும் திருக்கோட்டியூரானே.
1839 எவ்வ நோய் தவிர்ப்பான் * எமக்கு இறை இன் நகைத் துவர் வாய் * நில-மகள்
செவ்வி தோய வல்லான் * திரு மா மகட்கு இனியான்- **
மௌவல் மாலை வண்டு ஆடும் * மல்லிகை மாலையோடும் அணைந்து * மாருதம்
தெய்வம் நாற வரும்- * திருக்கோட்டியூரானே-2
1839
evvanNOy thavirppāNn * emakkiRai-
iNnNnakaith thuvarvāy, * nNilamagaL-
chevvi thOya vallāNn * thirumā magatkiNniyāNn, *
mowval mālai vaNdādum * malligai-
mālaiyodu maNanNdhu, * mārutham-
theyva nNāRavarum * thirukkOttiyoorāNnE. 9.10.2

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1839. He, our king is the sweet lord of beautiful Lakshmi and the beloved of the sweetly-smiling earth goddess with a coral mouth whom he embraces. He cures all painful diseases of his devotees and he stays in divine Thirukkottiyur where the breeze blows and spreads the fragrance of jasmine and mauval flowers everywhere.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எமக்கு இறை எனக்கு இறைவன்; எவ்வம் துக்கம் தரும்; நோய் நோய்களை; தவிர்ப்பான் நீக்கியருள்வதற்காக; இன் நகை இனிய புன்சிரிப்பையும்; துவர் சிவந்த; வாய் அதரத்தையுமுடைய; நிலமகள் பூமிப் பிராட்டியின்; செவ்வி அழகை இனிமையை; தோய அநுபவிக்க; வல்லான் வல்லவனாய்; திரு மா மகட்கு திருமகளுக்கு; இனியான் இனியனான எம்பெருமான்; வண்டு ஆடும் வண்டுகள் ரீங்கரிக்கும்; மௌவல் காட்டு மல்லிகை; மாலை மாலையோடும்; மல்லிகை மாலையோடும் மல்லிகை பூக்களோடும்; அணைந்து கூடி அணைந்த; மாருதம் காற்று; தெய்வம் நாற தெய்வ மணம்; வரும் வீசிக்கொண்டிருக்கும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.3

1840 வெள்ளியான்கரியான் மணிநிறவண்ணன் விண்ணவர்தமக்கிறை * எமக்கு
ஒள்ளியானுயர்ந்தான் உலகேழும்உண்டுமிழ்ந்தான் *
துள்ளுநீர்மொண்டுகொண்டு சாமரைக்கற்றைச்சந்தனமுந்திவந்தசை *
தெள்ளுநீர்ப்புறவில் திருக்கோட்டியூரானே.
1840 வெள்ளியான் கரியான் * மணி நிற வண்ணன் விண்ணவர்-தமக்கு இறை * எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் * உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்- **
துள்ளு நீர் மொண்டு கொண்டு * சாமரைக் கற்றைச் சந்தனம் உந்தி வந்து அசை *
தெள்ளு நீர்ப் புறவில்- * திருக்கோட்டியூரானே-3
1840
veLLiyāNn kariyāNn * maNinNiRa vaNNaNn-
viNNavar thamakkiRai, * emakku-
oLLiyān uyarnNdhān * ulakEzhum uNdumizhnNdhāNn, *
thuLLunNIr moNdu koNdu * chāmaraik-
kaRRai chanNdhaNna munNdhi vanNdhachai, *
theLLunNIrp puRavil * thirukkOttiyoorāNnE. 9.10.3

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1840. The faultless sapphire-colored lord, the god of gods in the sky, the light of our lives, who swallowed all the seven worlds and spit them out stays in Thirukkottiyur surrounded with fields where the abundant wave-filled water of the rivers flows carrying sandalwood and samarai stones making the fields flourish.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெள்ளியான் கிருதயுகத்தில் வெளுத்தவனும்; கரியான் கலியுகத்தில் கறுத்தவனும்; மணி த்வாபரயுகத்தில்; நிற வண்ணன் பசுமை நிறமுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளின்; தமக்கு இறை தலைவன்; உயர்ந்தான் உயர்ந்தவன்; எமக்கு எனக்கு; ஒள்ளியான் காட்டியவன்; உலகு பிரளயத்தில்; ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டு உண்டு காத்து; உமிழ்ந்தான் பின் ஸ்ருஷ்டித்தான்; துள்ளு நீர் துள்ளி ஓடும் நீர்; சாமரை சாமர; கற்றை திரள்களையும்; சந்தனம் சந்தனமரங்களையும்; மொண்டு இழுத்து; கொண்டு கொண்டு வந்து; உந்தி வந்து தள்ளிக் கொண்டு வந்து; அசை பிரவஹிக்கும்; தெள்ளு நீர் தெளிந்த நீரையுடைய; புறவில் சுற்றுப்பக்கங்களோடு கூடின; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.4

1841 ஏறுமேறிஇலங்குமொண்மழுப்பற்றும் ஈசற்குஇசைந்து * உடம்பிலோர்
கூறுதான்கொடுத்தான் குலமாமகட்கினியான் *
நாறுசண்பகமல்லிகைமலர்புல்கி இன்னிளவண்டு * நல்நறும்
தேறல்வாய்மடுக்கும் திருக்கோட்டியூரானே.
1841 ஏறும் ஏறி இலங்கும் ஒண் மழுப் பற்றும் * ஈசற்கு இசைந்து * உடம்பில் ஓர்
கூறு-தான் கொடுத்தான் * குல மா மகட்கு இனியான்- **
நாறு செண்பகம் மல்லிகை மலர் புல்கி * இன் இள வண்டு * நல் நறும்
தேறல் வாய்மடுக்கும்- * திருக்கோட்டியூரானே-4
1841
ERu mERi ilaNGgumoN mazhuppaRRum *
IchaRku ichainNdhu, * udambil Or-
kooRuthāNn koduththāNn * kulamāmagatku iNniyāNn, *
nNāRu chaNbaga malligai malar_pulgi *
iNnNniLa vaNdu, * nNaNnNnaRunN-
thERalvāy madukkum * thirukkOttiyoorāNnE. 9.10.4

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1841. He, the beloved of Lakshmi, the goddess who nurtures good families, gave a part of himself to Shivā who carries a sharp shining axe and rides a bull, stays in Thirukkottiyur where lovely young bees embrace the fragrant jasmine and shanbaga flowers and drink good sweet-smelling honey.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏறும் ரிஷபத்தை வாஹனமாக உடைய; ஏறி ரிஷபத்தில் ஏறி; இலங்கும் ஒளியுள்ள; ஒண் மழு அழகிய மழுவை; பற்றும கையிலேந்திய; ஈசற்கு சிவனுக்கு; இசைந்து தன்னுடைய; உடம்பில் ஓர் உடலின் ஒரு; கூறு தான் பாகத்தை; கொடுத்தான் கொடுத்தவனும்; குல மா மகட்கு திருமகளின்; இனியான் நாயகனுமான பெருமான்; இன் இனிய; இள வண்டு இளம் வண்டுகள்; நாறு மிக்க மணம் கமழும்; செண்பகம் செண்பகம்; மல்லிகை மலர் மல்லிகை மலர்; புல்கி ஆகியவற்றில் தழுவி; நல் நறும் நல்ல மணமுள்ள; தேறல் தேனில்; வாய் வாய்வைத்து; மடுக்கும் பருகுமிடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.5

1842 வங்கமாகடல்வண்ணன் மாமணிவண்ணன்விண்ணவர்கோன் * மதுமலர்த்
தொங்கல்நீண்முடியான் நெடியான்படிகடந்தான் *
மங்குல்தோய்மணிமாடவெண்கொடி மாகமீதுயர்ந்தேறி * வானுயர்
திங்கள்தானணவும் திருக்கோட்டியூரானே.
1842 வங்க மா கடல் வண்ணன் * மா மணி வண்ணன் விண்ணவர்-கோன் * மதுமலர்த்
தொங்கல் நீள் முடியான் * நெடியான் படி கடந்தான்- **
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி * மாகம்மீது உயர்ந்து ஏறி * வான் உயர்
திங்கள்-தான் அணவும்- * திருக்கோட்டியூரானே-5
1842
vaNGga māgadal vaNNaNn * māmaNi vaNNaNn-
viNNavar kONn * mathumalar_th
thoNGgal nNILmudiyāNn * nNediyāNn padikadanNdhāNn, *
maNGgul thOymaNi māda veNkodi *
māgamIthu uyarnNthERi, * vāNnuyar-
thiNGgaL thāNnaNavum * thirukkOttiyoorāNnE.9.10.5

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1842. The ocean-colored Nedumāl, the king of the gods in the sky, beautiful as a precious sapphire, whose crown is adorned with long flower garlands dripping with honey, who measured the world at Mahabali’s sacrifice- stays in Thirukkottiyur where the moon floats in the sky above the white flags flying above the beautiful jewel-studded palaces touching the clouds.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வங்க மா கப்பல்கள் நிறைந்த பெரிய; கடல் கடல் போன்ற; வண்ணன் நிறமுடையவனும்; மா மணி நீலமணி போன்ற; வண்ணன் வடிவழகையுடையவனும்; விண்ணவர் நித்யஸூரிகளுக்கு; கோன் தலைவனும்; மது மலர் தேனோடு கூடின பூ; தொங்கல் மாலையையுடையவனும்; நீள் பெரிய; முடியான் கிரீடமுடையவனும்; நெடியான் அனைத்தையும் அறிந்தவனும்; படி பூமியை; கடந்தான் அளந்தவனுமான பெருமான்; மங்குல் மேகமண்டலத்தை; தோய் அளாவியிருக்கும்; மணி மாட மணிமாடங்களிலிருக்கும்; வெண் கொடி வெள்ளைக் கொடிகள்; மாகம் மீது ஆகாயத்தின் மேல்; உயர்ந்து ஏறி வியாபித்து; வான் உயர் மிக உயரத்திலுள்ள; திங்கள் தான் சந்திரனை; அணவும் தழுவும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.6

1843 காவலனிலங்கைக்கிறைகலங்கச் சரம்செலவுய்த்து * மற்றவன்
ஏவலம்தவிர்த்தான் என்னையாளுடையம்பிரான் *
நாவலம்புவிமன்னர்வந்துவணங்க மாலுறைகின்றதுஇங்கென *
தேவர்வந்திறைஞ்சும் திருக்கோட்டியூரானே.
1843 காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் * சரம் செல உய்த்து * மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் * என்னை ஆளுடை எம் பிரான்- **
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க * மால் உறைகின்றது இங்கு என *
தேவர் வந்து இறைஞ்சும்- * திருக்கோட்டியூரானே-6
1843
kāvalaNn ilaNGgaikku iRaikalaNGkach *
charam chela uyththu, * maRRavaNn-
Evalam thavirththāNn * eNnNnai āLudai embirāNn, *
nNāvalam buvimaNnNnar vanNdhu vaNaNGga *
māl uRaikiNnRathu iNGgeNna, *
thEvar vanNdhiRainchum * thirukkOttiyoorāNnE.9.10.6

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1843. The dear god, my ruler, who shot his arrows at the king of Lankā, destroyed his valor and defeated him stays in Thirukkottiyur where all the rulers of the world and the gods come to worship him knowing that it is there that he stays.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இலங்கைக்கு இலங்கையை; காவலன் காக்கும்; இறை அதிபதி இராவணன்; கலங்க கலங்கும்படியும்; மற்று சரம் மேலும் அம்புகளை; செல தொடுக்கும்; உய்த்து அவன் மிடுக்கையும்; அவன் ஏ வலம் சாம்ர்த்தியத்தையும்; தவிர்த்தான் அழித்த இராமபிரான்; என்னை என்னை; ஆளுடை ஆளும் அடிமைகொண்ட; எம் பிரான் பிரான்; நா வலம் புவி நாவலத் தீவிலுள்ள [ஜம்பூ]; மன்னர் மன்னர்கள்; இங்கு மால் என எம்பெருமான் இங்கு; உறைகின்றது உள்ளான் என்று அறிந்து; வந்து வணங்க வந்து வணங்க; தேவர் வந்து தேவர்களும் வந்து; இறைஞ்சும் வணங்கும் இடமான; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.7

1844 கன்றுகொண்டுவிளங்கனியெறிந்து ஆநிரைக்கழிவென்று * மாமழை
நின்றுகாத்துகந்தான் நிலமாமகட்கினியான் *
குன்றின்முல்லையின்வாசமும் குளிர்மல்லிகைமணமும்அளைந்து * இளந்
தென்றல்வந்துலவும் திருக்கோட்டியூரானே.
1844 கன்று கொண்டு விளங்கனி எறிந்து * ஆ-நிரைக்கு அழிவு என்று * மா மழை
நின்று காத்து உகந்தான் * நில மா மகட்கு இனியான்- **
குன்றின் முல்லையின் வாசமும் * குளிர் மல்லிகை மணமும் அளைந்து * இளம்
தென்றல் வந்து உலவும்- * திருக்கோட்டியூரானே-7
1844
kaNnRu koNdu viLaNGgaNni eRinNdhu *
ānNiraikku azhiveNnRu, * māmazhai-
nNiNnRu kāththuganNthāNn * nNilamāmagatku iNniyāNn, *
kuNnRiNn mullaiyiNn vāchamum * kuLirmalligai-
maNamum aLainNdhu, * iLanNthenral-
vanNdhulavum * thirukkOttiyoorāNnE. 9.10.7

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1844. Our god, the beloved of the earth goddess, threw a vilam fruit at a calf and killed the two Asurans when they came as a tree and a calf and easily carried Govardhanā mountain as an umbrella to protect the cows and the cowherds from a terrible storm. He stays in Thirukkottiyur where the fresh breeze mixes with the fragrance of cool jasmine flowers and mullai flowers as it comes from the hills.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கன்று கொண்டு கன்றாகவந்த அஸுரனை; விளங்கனி விளங்கனியாக வந்த அஸுரன்; எறிந்து மீது எறிந்து இருவரையும் முடித்தவனும்; ஆ நிரைக்கு பசுக்கூட்டத்திற்கு; அழிவு என்று அழிவு வந்ததே என்று; மா மழை பெரும் மழையை மலையை; நின்று காத்து எடுத்து நிலை நின்று தடுத்து; உகந்தான் மகிழ்ந்த எம்பெருமான்; நில மா மகட்கு பூமாதேவிக்கு; இனியான் இனியவன்; குன்றின் மலையின்; முல்லையின் முல்லைப்பூவின்; வாசமும் நறுமணமும்; குளிர் குளிர்ந்த; மல்லிகை மல்லிகையின்; மணமும் மணமும்; அளைந்து தழுவி வரும் குளிர்ந்த; இளம்தென்றல் இளம்தென்றல் காற்று; வந்து உலவும் வந்து உலவும்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.8

1845 பூங்குருந்தொசித்து ஆனைகாய்ந்துஅரிமாச்செகுத்து * அடியேனையாளுகந்து
ஈங்கென்னுள்புகுந்தான் இமையோர்கள்தம்பெருமான் *
தூங்குதண்பலவின்கனி தொகுவாழையின்கனியொடு மாங்கனி *
தேங்குதண்புனல்சூழ் திருக்கோட்டியூரானே.
1845 பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து * அரி மாச் செகுத்து * அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் * இமையோர்கள்-தம் பெருமான்- **
தூங்கு தண் பலவின் கனி * தொகு வாழையின் கனியொடு மாங்கனி *
தேங்கு தண் புனல் சூழ்- * திருக்கோட்டியூரானே-8
1845
pooNGgurunNdhu ochiththu āNnaikāynNthu * arimāch cheguththu, *
adiyENnai āLuganNdhu-
INGgu ennuL pugunNdhān * imaiyOrgaL tham perumāNn, *
thooNGgu thaNpalaviNnkaNni * thoguvāzhaiyiNn-
kaNniyodu māNGgaNni * thENGgu-
thaNpuNnal choozh * thirukkOttiyoorāNnE. 9.10.8

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1845. The god of the gods who broke the kurundu trees when the Asurans came in the form of those trees, killed the elephant Kuvalayābeedam and destroyed the Asuran Kesi when he came as a horse made me his devotee and slave and entered my heart. He stays in Thirukkottiyur surrounded with cool water and groves where sweet jackfruits rest on the ground, bunches of bananas ripen on their branches and mangoes grow on their trees.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூம் பூத்திருந்த; குருந்து குருந்தை மரத்தை; ஒசித்து முறித்தவனும்; ஆனை குவலாயாபீட யானையை; காய்ந்து அழித்தவனும்; அரி மா கேசி என்ற குதிரையை; செகுத்து கொன்றவனும்; அடியேனை அடியேனை; ஆள் ஆட்கொண்டவனும்; உகந்து ஈங்கு உகந்து இங்கு வந்து; இமையோர்கள் நித்யஸூரிகளின்; தம் தலைவனான; பெருமான் பெருமான்; என்னுள் என்னுள்; புகுந்தான் புகுந்தான்; தூங்கு பழுத்துத் தொங்கும்; தண் அழகிய; பலவின் கனி பலாப் பழங்களும்; தொகு வாழையின் திரண்ட வாழை; கனியொடு பழங்களோடு; மாங்கனி மாம்பழங்களும்; தேங்கு தேங்காய்களும்; தண் குளிர்ந்த; புனல் சூழ் ஆறுகளால் சூழ்ந்த; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.9

1846 கோவையின்தமிழ்பாடுவார்குடமாடுவார், தடமாமலர்மிசை *
மேவுநான்முகனில் விளங்குபுரிநூலர் *
மேவுநான்மறைவாணர் ஐவகைவேள்விஆறங்கம் வல்லவர் தொழும் *
தேவதேவபிரான் திருக்கோட்டியூரானே.
1846 கோவை இன் தமிழ் பாடுவார் * குடம் ஆடுவார் தட மா மலர்மிசை *
மேவும் நான்முகனில் * விளங்கு புரி நூலர் **
மேவும் நான்மறை வாணர் * ஐவகை வேள்வி ஆறு அங்கம் வல்லவர் தொழும் *
தேவ-தேவபிரான்- * திருக்கோட்டியூரானே-9
1846
kOvaiyiNn thamizh pāduvār * kudamāduvār-
thada māmalarmichai, * mEvu nNāNnmugaNnil *
viLaNGgu purinNoolar, *
mEvu nNāNnmaRai vāNar * aivagai vELvi-
āRu aNGgam vallavar thozhum, *
thEva thEvapirāNn * thirukkOttiyoorāNnE. 9.10.9

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1846. The Vediyars in Thirukkottiyur who wear shining threads and are as divine as Nānmuhan seated on a beautiful lotus sing Tamil pāsurams and dance the kudakkuthu dance. Scholars of the four Vedās and six Upanishads and performers of the five kinds of fire sacrifice, they all worship the god of gods in Thirukkottiyur.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோவை இன் ஒழுங்கான இனிய; தமிழ் இந்த பெரிய திருமொழியை; பாடுவார் பாடுபவர்களும்; குடம் குடக்கூத்து; ஆடுவார் ஆடுபவர்களும்; தட மா பெரிய; மலர் மிசை தாமரையில்; மேவும் பிறந்த; நான்முகனில் பிரமனைக் காட்டிலும்; விளங்கு ஒளியுள்ள; புரி நூலர் மேவும் பூணூல் உள்ள; நான்மறை நான்கு வேதங்களையும்; மேவும் விரும்பி; வாணர் கற்றவர்களும்; ஐவகை ஐந்து வகை; வேள்வி யாகங்களிலும்; ஆறு வேதங்களின் ஆறு; அங்கம் அங்கங்களிலும்; வல்லவர் வல்லவர்களானவர்கள்; தொழும் வணங்கும்; தேவ தேவபிரான் தேவாதி தேவன்; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானே! ஊரில் உள்ளவனே!

PT 9.10.10

1847 ஆலுமாவலவன்கலிகன்றி மங்கையர்தலைவன் * அணிபொழில்
சேல்கள்பாய்கழனித் திருக்கோட்டியூரானை *
நீலமாமுகில்வண்ணனை நெடுமாலைஇன்தமிழால்நினைந்த * இந்
நாலுமாறும்வல்லார்க்கு இடமாகும் வானுலகே. (2)
1847 ## ஆலும் மா வலவன் கலிகன்றி * மங்கையர் தலைவன் * அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் * திருக்கோட்டியூரானை **
நீல மா முகில் வண்ணனை * நெடுமாலை இன் தமிழால் நினைந்த * இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு * இடம் ஆகும்-வான் உலகே-10
1847
ālumā valavaNn kalikaNnRi * maNGgaiyar-
thalaivaNn * aNipozhil-
chElgaL pāykazhaNnith * thirukkOttiyoorāNnai, *
nNIla māmugil vaNNaNnai * nNedumālai-
iNnthamizhāl nNiNnainNdha, * inN-
nNālum āRum vallārkku * idamāgum vāNnulagE. (2) 9.10.10

Ragam

யமுனாகல்யாணி

Thalam

அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1847. The poet Kaliyan, the mighty chief of Thirumangai who rides a horse, composed a garland of sweet Tamil pāsurams on the dark cloud-colored god of Thirukkottiyur surrounded with beautiful groves and fields where fish frolic. If devotees learn and recite these ten sweet Tamil songs and praise Nedumāl, they will go to the spiritual world.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆலும் மா ஆடல் மா குதிரையை; வலவன் நடத்துவதில் வல்லவரான; மங்கையர் திருமங்கை நாட்டுக்கு; தலைவன் தலைவனான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; அணி அழகிய; பொழில் சோலைகளையும்; சேல்கள் மீன்கள்; பாய் துள்ளிவிளையாடும்; கழனி வயல்களையுமுடைய; நீல வண்ணனை நீல வண்ணனை; மா முகில் மேகத்தை ஒத்த நிறமுடைய; நெடுமாலை மோஹமுடையவனை; திருக்கோட்டி திருக்கோட்டி; ஊரானை ஊரானை குறித்து; இன் தமிழால் இனிய தமிழால்; நினைந்த நனைந்த; இந் நாலும் ஆறும் பத்துப் பாசுரங்களையும்; வல்லார்க்கு ஓதவல்லவர்களுக்கு; வான் உலகே பரமபதம்; இடமாகும் இருப்பிடமாகும்

PT 10.1.9

1856 கம்பமாகளிறு அஞ்சிக்கலங்க * ஓர்
கொம்புகொண்ட குரைகழல்கூத்தனை *
கொம்புலாம்பொழில் கோட்டியூர்க்கண்டுபோய் *
நம்பனைச்சென்றுகாண்டும் நாவாயுளே.
1856 கம்ப மா களிறு * அஞ்சிக் கலங்க * ஓர்
கொம்பு கொண்ட * குரை கழல் கூத்தனை **
கொம்பு உலாம் பொழில் * கோட்டியூர்க் கண்டு போய் *
நம்பனைச் சென்று காண்டும்-நாவாயுளே-9
1856
kamba mAkaLiRu * ancik kalanga, * Or-
kombu koNda * kuraikazhal kooththanai *
kombulAm pozhil * kOttiyUrk kaNdupOy *
n^ambaNnais senRu kāNdum * n^āvAyuLE 10.1.9

Ragam

தர்பார்

Thalam

அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1856. The dancing one with sounding anklets on his feet frightened the strong elephant and broke its tusks. I will go and see him in Thirukkottiyur where the groves bloom with flowers and I will go see my friend in Thirunāvāy.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கம்ப மா நடுக்கம் விளைவித்த பெரிய; களிறு அஞ்சி யானை அஞ்சி; கலங்க ஓர் கலங்கும்படி; கொம்பு அதன் கொம்பை; கொண்ட முறித்தவனும்; குரை ஒலிக்கின்ற; கழல் வீரக்கழல் உடையவனும்; கூத்தனை விசித்திரமான நடையுடையவனை; கொம்பு உலாம் தாழ்ந்த கிளைகளோடு கூடின; பொழில் சோலைகளையுடைய; கோட்டியூர் திருக்கோட்டியூர்; கண்டு போய் சென்று வணங்கினோம்; நம்பனை நம்புவதற்குரியவனான பெருமானை; நாவாயுளே திருநாவாயில் சென்று; கண்டும் வணங்குவோம்

IT 46

2227 பயின்றதுஅரங்கம் திருக்கோட்டி * பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே * பன்னாள் -பயின்றது
அணிதிகழுஞ்சோலை அணிநீர்மலையே *
மணிதிகழும்வண்தடக்கைமால்.
2227 பயின்றது அரங்கம் திருக்கோட்டி * பல் நாள்
பயின்றதுவும் * வேங்கடமே பல்நாள் ** - பயின்றது
அணி திகழும் சோலை * அணி நீர் மலையே *
மணி திகழும் வண் தடக்கை மால் -46
2227
payinRathu arangam thirukkOtti, * pannāL-
payinRathuvum * vEngadamE pannāL, * - payinRathu-
aNithikazum sOlai * aNin^eer malaiyE *
maNithikazum vaNthadakkai māl. 46

Ragam

பைரவி

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2227. The generous sapphire-colored lord stays in Srirangam, Thirukkottiyur and in his favorite place, Thiruvenkatam. He is lord of beautiful Thirumālirunjolai and Thiruneermalai flourishing with abundant water.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணி நீலமணிபோல்; திகழும் விளங்குமவனும்; வண் உதாரமான; தடக்கை கைகளை உடைய; மால் எம்பெருமான்; பயின்றது இருக்குமிடம்; அரங்கம் திருவரங்கமும்; திருக்கோட்டி திருக்கோட்டியூருமாம்; பல் நாள் அநாதிகாலம்; பயின்றதுவும் நித்யவாஸம் செய்யுமிடமும்; வேங்கடமே திருமலையாம்; அணி திகழும் அழகாகத் திகழும்; சோலை சோலைகளையுடைய; அணி நீர் மலையே திருநீர்மலையாம்
maNi thigazhum shining like a blue gem; vaN thadakkai being magnanimous, having rounded divine hands; mAl emperumAn; payinRadhu residing permanently; arangam thirukkOtti at thiruvarangam and at thirukkOttiyUr; pal nAL for a very long time; payinRadhuvum also residing permanently; vEngadamE at thirumalai; pal nAL payinRadhuvum living permanently for a very long time; aNi thigazhum sOlai having beautiful gardens; aNi being a jewel-piece for the world; nIrmalai at thirunIrmalai

IT 87

2268 இன்றாவறிகின்றேனல்லேன் * இருநிலத்தைச்
சென்றுஆங்களந்த திருவடியை * - அன்று
கருக்கோட்டியுள்கிடந்து கைதொழுதேன், கண்டேன் *
திருக்கோட்டியெந்தைதிறம்.
2268 இன்றா அறிகின்றேன் அல்லேன் * இரு நிலத்தைச்
சென்று ஆங்கு அளந்த திருவடியை ** - அன்று
கருக்கோட்டியுள் கிடந்து * கைதொழுதேன் கண்டேன் *
திருக்கோட்டி எந்தை திறம் -87
2268
inRā aRikinREn allEn * irun^ilatthaic-
senRu āNGku aLantha thiruvadiyai, * - anRu-
karukkOttiyuL kidanthu * kaithozuthEn kaNdEn, *
thirukkOtti enthai thiRam. 87

Ragam

பைரவி

Thalam

திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2268. Do I know only today the feet of the lord who measured the world? When I was in my mother’s womb itself I knew him and worshiped him with folded hands. I know the power of my father, the god of Thirukkottiyur.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பு; கருக்கோட்டியுள் கர்ப்பத்தில்; கிடந்து இருந்து; திருக்கோட்டி திருக்கோட்டியூர்; எந்தை திறம் பெருமானின் தன்மையை; கண்டேன் கண்டேன்; கை தொழுதேன் கை தொழுதேன்; இரு அதன் பின் விசாலமான; நிலத்தை இந்நிலத்தை; சென்று ஆங்கு அங்கே தானே வியாபித்து; அளந்த திருவிக்கிரமனாக அளந்த; திருவடியை திருவடியை; இன்றா இன்றைக்கா நான்; அறிகின்றேன் அறிந்தேன் இல்லை கர்ப்பவாஸம்; அல்லேன் தொடங்கியதிலிருந்து மறக்கவில்லை
anRu karukkOttiyuL kidandhu lying inside the womb, earlier; thirukkOtti endhai thiRam the nature of thirukkOttiyUr perumAn; kaNdEn I had the fortune to enjoy; kai thozhudhEn (as a consequence of that experience) I worshipped with folded hands; irunilaththai this expansive mass of land [earth]; Angu senRu aLandha thiru adiyai (during the time of thrivikrama avathAram) the divine foot which spread out, on its own, to various places and measured them; inRA aRiginREn allEn it is not that I knew about it only today (I have not forgotten it right from my days of being in the womb)

MUT 62

2343 விண்ணகரம்வெஃகா விரிதிரைநீர்வேங்கடம் *
மண்ணகரம்மாமாடவேளுக்கை * மண்ணகத்த
தென்குடந்தை தேனார்திருவரங்கம்தென்கோட்டி *
தன்குடங்கைநீரேற்றான்தாழ்வு.
2343 விண்ணகரம் வெஃகா * விரி திரை நீர் வேங்கடம் *
மண் நகரம் மா மாட வேளுக்கை ** - மண்ணகத்த
தென் குடந்தை * தேன் ஆர் திருவரங்கம் தென்கோட்டி *
தன் குடங்கை நீர் ஏற்றான் தாழ்வு 62
2343
viNNagaram veqkā * virithirain^eer vEngadam, *
maNNakaram māmāda vELukkai, * - maNNakattha
then_kudanthai * thEnār thiruvarangam then_kOtti, *
than_kudangai neerERRān thāzvu. 62

Ragam

மோஹன

Thalam

திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2343. The lord who took three feet of land from Mahābali and measured the world after receiving a promise from him with water poured on his hands stays in Thiruvinnagaram, in Thiruvekka surrounded by ocean with rolling waves, in Thiruvenkatam, in Mannakaram, in Thiruvelukkai filled with beautiful palaces, in Thirukkudandai in the south, in sweet Thiruvarangam surrounded with groves dripping with honey and in southern Thirukkottiyur.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண்ணகரம் திருவிண்ணகரம்; வெஃகா திருவெக்கா; விரி திரை விரிந்து அலைகளோடு கூடின; நீர் வேங்கடம் நீர்வளமுள்ள திருமலை; மண் பூமியில் இதுவே; நகரம் நகரமெனத்தக்க; மா மாட பெரிய மாடங்களையுடைய; வேளுக்கை திருவேளுக்கை; மண்ணகத்த பூமிக்கு நடுநாயகமான; தென் குடந்தை அழகிய திருக்குடந்தை; தேனார் தேன்வெள்ளம் பாயும்; திருவரங்கம் திருவரங்கம்; தென்கோட்டி தென் திருக்கோட்டியூர்; தன் ஆகியவைகளை தன்; குடங்கை உள்ளங்கையால்; நீர் தான நீர்; ஏற்றான் பெற்ற பெருமான்; தாழ்வு தங்குமிடங்களாம்
viNNagaram thiruviNNagaram (a divine abode in kumbakONam); vehkA thiruvehkA (a divine abode in kAnchIpuram); viri thirai nIr vEngadam thirumalai where there is plenty of water resource with splashing waves; maNNagaram only this is a city on earth; mA mAdam vELukkai thiruvELukkai (a divine abode in kAnchIpuram) which has huge mansions; maN agaththa then kudandhai the beautiful thirukkudandhai (kumbakONam) which is at the centre of earth; thEn Ar thiruvarangam the divine thiruvarangam town which has flood of honey (inside the surrounding gardens); then kOtti the divine thirukkOttiyUr on the southern side; than kudangai in his palm; nIr ERRAn emperumAn who took water (from mahAbali as symbolic of accepting alms); thAzhvu are the places of residence where emperumAn stays with modesty

NMT 34

2415 குறிப்பெனக்குக் கோட்டியூர்மேயானையேத்த *
குறிப்பெனக்கு நன்மைபயக்க * - வெறுப்பனோ?
வேங்கடத்துமேயானை மெய்வினைநோயெய்தாமல் *
தான்கடத்தும்தன்மையான்தாள்.
2415 குறிப்பு எனக்குக் * கோட்டியூர் மேயானை ஏத்த *
குறிப்பு எனக்கு நன்மை பயக்க ** - வெறுப்பனோ?
வேங்கடத்து மேயானை * மெய் வினை நோய் எய்தாமல் *
தான் கடத்தும் தன்மையான் தாள் -34
2415
kuRippu enakkuk * kOttiyoor mEyānaiyEththa *
kuRippu enakku nanmai payakka *
veRuppanO vEngadaththu mEyānai * meyvinainNOy eythāmal *
thān_kadaththum thanmaiyān thāL

Ragam

அடாணா

Thalam

அட

Bhavam

Self

Simple Translation

2415. My aim is to praise the god of Thirukkottiyur. and receive good life from him. Will I ever hate the lord of Thiruvenkatam? I will worship his feet, for he saves me from any sickness that I may have and removes the results of my bad karmā.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; மேயானை இருப்பவனையும்; வேங்கடத்து திருமலையிலிருக்கும்; மேயானை பெருமானையும்; ஏத்த துதிப்பதற்கு; எனக்கு குறிப்பு எனக்கு விருப்பம்; நன்மை நல்ல காரியங்களை; பயக்க செய்ய; எனக்கு எனக்கு; குறிப்பு அளவிலாத ஆர்வம்; மெய் சரீர ஸம்பந்தமான; வினை கர்மங்களும்; நோய் எய்தாமல் வியாதிகளும் வராமல்; தான் தானே அவற்றை; கடத்தும் போக்கியருளும்; தன்மையான் பெருமானின்; தாள் திருவடிகளை; வெறுப்பனோ? வெறுப்பேனோ?
kOttiyUr mEyAnai Eththa kuRippu my opinion is to keep praising emperumAn who is aptly residing at thirukkOttiyUr.; enakku nanmai payakka kuRippu my opinion is that I should derive some benefit.; vEngadaththu mEyAnai veRuppanO will I dislike emperumAn who has taken residence at thiruvEngadam?; mey vinai nOy eydhAmal thAn kadaththum thanmaiyAn thAL veRuppanO will I forget and ignore the divine feet of emperumAn who (protects and) prevents diseases and deeds which come about on account of physical form?

PTM 17.67

2779 கோட்டியூர் அன்னவுருவினரியை * திருமெய்யத்து
இன்னமுதவெள்ளத்தை இந்தளூரந்தணனை *
மன்னுமதிள்கச்சி வேளுக்கையாளரியை *
மன்னியபாடகத்து எம்மைந்தனை * -
2779 கோட்டியூர் அன்ன உருவின் அரியை * திருமெய்யத்து
இன் அமுதவெள்ளத்தை இந்தளூர் அந்தணனை *
மன்னு மதிள் கச்சி வேளுக்கை ஆள் அரியை *
மன்னிய பாடகத்து எம் மைந்தனை * 69
kOttiyoor-anna vuruvin ariyai, * thirumeyyatthu-
innamudha veLLatthai inthaLoor andhaNanai, *
mannum madhitkacchi vELukkai āLariyai, *
manniya pādakatthu em maindhanai, * (69)

Ragam

நாதநாமக்ரியை

Thalam

ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2779. He has the form of a man-lion in Thirukkottiyur, a flood of sweet nectar and the god of Thirumeyyam, the good Andanan of Thiruvindalur, the man-lion of Thiruvelukkai in Thirukkachi surrounded with strong forts. He is the young god of Thiruppādagam, (69)

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட்டியூர் திருக்கோட்டியூரில்; அன்ன உருவில் விலக்ஷணமாக இருக்கும்; அரியை நரசிம்ம மூர்த்தியை; திருமெய்யத்து திருமெய்யத்திலிருக்கும்; இன் அமுத இனிய அமுத; வெள்ளத்தை வெள்ளத்தை; இந்தளூர் திருவிந்தளூரிலிருக்கும்; அந்தணனை அந்தணனை; மன்னு அழகிய; மதிள் மதிள்களையுடைய; கச்சி காஞ்சீபுரத்தில்; வேளுக்கை திருவேளுக்கை என்னும் இடத்திலிருக்கும்; ஆள் அரியை நரசிம்ம மூர்த்தியை; பாடகத்து திருப்பாடகத்தில்; மன்னிய வாஸம் செய்யும்; எம் மைந்தனை எம் மைந்தனை
kOttiyUr at thirukkOttiyUr; anna uruvil ariyai as narasimhamUrththy (emperumAn’s divine form with lion face and human body) who has such (distinguished) divine form; thiru meyyaththu in thirumeyyam; in amudham veLLaththai being greatly enjoyable as a sweet ocean of nectar; indhaLUr at thiruvindhaLUr; andhaNanai being supremely merciful; kachchi in the town of kAnchIpuram; vELukkai ALariyai as narasimha in the divine abode of thiruvELukkai; pAdagaththu manniya em maindhanai as our youthful entity at thiruppAdagam where he has taken permanent residence