IT 6

ஐம்புலனடக்கி அருச்சித்தால் அவனடி காணலாம்

2187 அறிந்தைந்துமுள்ளடக்கி ஆய்மலர்கொண்டு * ஆர்வம்
செறிந்தமனத்தராய்ச்செவ்வே * - அறிந்தவன்தன்
பேரோதியேத்தும் பெருந்தவத்தோர்காண்பரே *
காரோதவண்ணன்கழல்.
2187 aṟintu aintum ul̤ aṭakki * āy malar kŏṇṭu * ārvam
cĕṟinta maṉattarāy cĕvve ** - aṟintu avaṉ taṉ
per oti ettum * pĕruntavattor kāṇpare *
kār ota vaṇṇaṉ kazhal -6

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2187. If good-hearted devotees control their five senses, do much tapas with love, sprinkle fresh flowers and worship him reciting his names they will see the ankleted feet of the ocean-colored god.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிந்து எம்பெருமானின்பெருமையையும் உலகச் சிறுமையையும் நன்றாக அறிந்து; ஐந்தும் பஞ்சேந்திரியங்களையும்; உள் பகவத் விஷயங்களில்; அடக்கி ஈடுபடும்படி அடக்கி; ஆய் மலர் கொண்டு சிறந்த மலர்களைக் கொண்டு; ஆர்வம் செறிந்த பக்தி நிறைந்த; மனத்தராய் மனத்தையுடையவராக; செவ்வே இறைவனே பெருமான் தான் அடிமை; அறிந்து என்பதை நன்கு உணர்ந்து; அவன் தன் பேர் அப்பெருமானது திருநாமங்களை; ஓதி ஏத்தும் இடைவிடாமல் ஓதி துதிக்கும்; பெருந் தவத்தோர் மஹாபாக்யசாலிகள்; கார் ஓத வண்ணன் கருங்கடல் வண்ணனான; கழல் எம்பெருமானின் திருவடிகளை; காண்பரே கண்டு அநுபவிக்கப்பெறுவார்கள்
aṛindhu knowing well (the greatness of emperumān and the lowliness of worldly pursuits); aindhum the five sensory perceptions; ul̤ adakki (preventing them from engaging in other pursuits and) engaging with bhagavath vishayam (matters relating to emperumān) by anchoring firmly; āy malar koṇdu analysing and taking the appropriate flowers (apt for emperumān); ārvan seṛindha manaththaṛāy with the heart full of bhakthi (devotion); sevvĕ aṛindhu knowing well (the relationship of l̤ord; avan than pĕr the divine names of that emperumān; ŏdhi constantly reciting; ĕththum worshipping; perum thavaththŏr the great, fortunate ones; kār ŏdham vaṇṇan kazhal the divine feet of that emperumān who has the complexion of a dark sea; kāṇbar will see and enjoy

Detailed WBW explanation

ārindhu – Understanding both the trivial and significant aspects of existence. Specifically, comprehending the magnificence of Emperumān and the insignificance of worldly engagements. Recognizing the lowliness of one’s physical embodiment.

aindhum uzh adakki – Ensuring that one's thoughts are not drawn towards inferior matters associated with Śabdam and

+ Read more