78

Thirukkurungudi

திருக்குறுங்குடி

Thirukkurungudi

ஸ்ரீ குறுங்குடிவல்லீ ஸமேத ஸ்ரீ வைஷ்ணவநம்பி ஸ்வாமிநே நமஹ

An Introduction to the 18 Divya Desams of Pandya Nadu

Pandya Nadu is a land rich with the fragrance of Tamil. Avvai’s words, “Pandya ninnāṭuṭaittu nalla tamiḻ” (Pandya’s country is endowed with good Tamil), highlight this association. Among the rulers who safeguarded Tamil, the Pandya kings hold the distinction of establishing the esteemed Tamil

+ Read more
பாண்டி நாட்டுப் பதிகள் 18 - ஓர் அறிமுகம்

பாண்டி நாடு என்றாலே அது தமிழ் மணக்கும் காடாகும். பாண்டியா நின் நாடுடைத்து நல்ல தமிழ் என்பது ஒளவையின் வாக்கு. தமிழ் காத்த வேந்தர்களுள் பாண்டிய மன்னர்களே தமிழுக்குச் சங்கம் அமைத்த பெருமைக்கு உரியவர்கள். உலகிலேயே ஒரு மொழிக்கு முதன் முதலாகச் + Read more
Thayar: Sri Kurungudivalli Nāchiyār
Moolavar: Sundhara Paripooranan, Nindra Nambi, Vaduga Nambi, Kurungudi Nambi
Utsavar: Azhagiya Nambi, Vaishnava Nambi
Vimaanam: Panjakedhaka
Pushkarani: Thiruparkadal, Panjathurai, Sindhu Nadhi
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Pandiya Nādu
Area: Tirunelveli
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 6:30 a.m. to 11:30 a.m. 4:30 p.m. to 8:00 p.m.
Search Keyword: Kurungudi
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 1.5.8

71 உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும் *
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி *
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்
சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே! *
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே. (2)
71 உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி * உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும் *
கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர * கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி **
மன்னு குறுங்குடியாய் வெள்ளறையாய் மதில் சூழ் சோலைமலைக்கு அரசே கண்ணபுரத்து அமுதே *
என் அவலம் களைவாய் ஆடுக செங்கீரை * ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே (8)
71 uṉṉaiyum ŏkkalaiyiṟ kŏṇṭu tam il maruvi * uṉṉŏṭu taṅkal̤ karuttu āyiṉa cĕytu varum *
kaṉṉiyarum makizha kaṇṭavar kaṇkul̤ira * kaṟṟavar tĕṟṟivara pĕṟṟa ĕṉakku arul̤i **
maṉṉu kuṟuṅkuṭiyāy vĕl̤l̤aṟaiyāy matil cūzh colaimalaikku arace kaṇṇapurattu amute *
ĕṉ avalam kal̤aivāy āṭuka cĕṅkīrai * ezh ulakum uṭaiyāy āṭuka āṭukave (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

71. The cowherd women carry you on their waists, take you to their homes, play with you as they please and lovingly care for you. When the young girls see you, they become happy, and if learned people praise you, you give them your grace. You are the One giving me your grace and removing my sorrows. You stay in the eternal Thirukkurungudi, Thiruvellarai and Thirumālirunjolai surrounded with forts and You are the nectar that stays in Kannapuram. O dear one, shake your head and crawl. You are the lord of all the seven worlds. Crawl, crawl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னு பிரளயகாலத்திலும் அழியாத; குறுங்குடியாய்! திருக்குறுங்குடியிலிருப்பவனே!; வெள்ளறையாய்! திருவெள்ளறையிலிருப்பவனே!; மதிள் சூழ் மதிள்களால் சூழ்ந்த; சோலை மலைக்கு திருமாலிருஞ்சோலைமலைக்கு; அரசே! கண்ணபுரத்து அரசே! திருக்கண்ணபுரத்து; அமுதே! அமுதம் போன்றவனே!; என் அவலம் என் துன்பத்தை; களைவாய்! களைபவனே!; உன்னையும் உன்னை; ஒக்கலையில் இடுப்பிலே எடுத்துக்கொண்டு; தம் இல் மருவி தங்கள் வீடுகளில் கொண்டு போய்; உன்னொடு தங்கள் உன்னோடு தாங்கள்; கருத்து அறிந்தபடி உன்னுடன் களித்து; ஆயின செய்து பின் மறுடியும் கொண்டுவரும்; எங்கள் கன்னியரும் இளம்பெண்களும்; மகிழ உன்னோடு சேர்ந்து மகிழ்ந்திட; கண்டவர் கண் பார்த்தவர்களுடைய கண்கள்; குளிர குளிரும்படியாகவும்; கற்றவர் கவி சொல்லக் கற்றவர்கள்; தெற்றிவர பிள்ளைக்கவிகள் தொடுத்து வரும்படியாகவும்; பெற்ற உன்னை மகனாகப் பெற்ற; எனக்கு அருளி எனக்கு அன்பு கூர்ந்து; ஆடுக செங்கீரை ஆடுக செங்கீரை; ஆடுக ஆடுகவே ஆடுக ஆடுகவே

TCV 62

813 கரண்டமாடுபொய்கையுள் கரும்பனைப்பெரும்பழம் *
புரண்டுவீழ, வாளைபாய் குறுங்குடிநெடுந்தகாய்! *
திரண்டதோளிரணியஞ் சினங்கொளாகமொன்றையும் *
இரண்டுகூறுசெய்துகந்த சிங்கமென்பதுன்னையே. (2)
813 ## கரண்டம் ஆடு பொய்கையுள் * கரும் பனைப் பெரும் பழம் *
புரண்டு வீழ வாளை பாய் * குறுங்குடி நெடுந்தகாய் **
திரண்ட தோள்-இரணியன் * சினங் கொள் ஆகம் ஒன்றையும் *
இரண்டு கூறு செய்து உகந்த * சிங்கம் என்பது உன்னையே (62)
813 ## karaṇṭam āṭu pŏykaiyul̤ * karum paṉaip pĕrum pazham *
puraṇṭu vīzha vāl̤ai pāy * kuṟuṅkuṭi nĕṭuntakāy **
tiraṇṭa tol̤-iraṇiyaṉ * ciṉaṅ kŏl̤ ākam ŏṉṟaiyum *
iraṇṭu kūṟu cĕytu ukanta * ciṅkam ĕṉpatu uṉṉaiye (62)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

813. You, the mighty god who took the form of a lion and split open the chest of the angry Hiranyan with strong round arms, stay in Kurungudi where Valai fish leap and make large palm fruits fall into a pond, frightening a cow bathing there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரண்டம் ஆடு நீர் காக்கைகள் நிற்கும்; பொய்கையுள் குளத்திலே; கரும் பெரும் கருத்த பெரிய; பனைப் பழம் பனம்பழங்கள்; புரண்டு வீழ உருண்டு விழ; வாளை வாளை மீன்கள்; பாய் அவற்றை பிடிக்கப் பாய்கிற; குறுங்குடி திருக்குறுக்குடியிலே; நெடுந் தகாய் இருக்கும் மஹானே!; திரண்ட தோள் திரண்டதோள்களையுடைய; சினங்கொள் கோபத்தை வெளியிடும்; இரணியன் ஹிரண்யனுடைய; ஆகம் ஒன்றையும் ஒப்பற்ற சரீரத்தை; இரண்டு கூறு செய்து இருபிளவாகப் பிளந்து; உகந்த மகிழ்ந்த; சிங்கம் என்பது நரசிம்ஹ மூர்த்தியென்பது; உன்னையே நீதானோ?

PT 1.6.8

1005 ஏவினார்கலியார்நலிகவென்று என்மேல்
எங்ஙனேவாழுமாறு? * ஐவர்
கோவினார் செய்யும்கொடுமையைமடித்தேன்
குறுங்குடிநெடுங்கடல்வண்ணா! *
பாவினாரின்சொல் பன்மலர்கொண்டு உன்
பாதமேபரவிநான் பணிந்து * என்
நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்! (2)
1005 ஏவினார் கலியார் நலிக என்று * என்மேல் எங்ஙனே வாழும் ஆறு? * ஐவர்
கோவினார் செய்யும் கொடுமையை மடித்தேன் * குறுங்குடி நெடுங் கடல் வண்ணா **
பாவின் ஆர் இன் சொல் பல் மலர் கொண்டு * உன் பாதமே பரவி நான் பணிந்து * என்
நாவினால் வந்து உன் திருவடி அடைந்தேன் * நைமிசாரணியத்துள் எந்தாய்-8
1005 eviṉār kaliyār nalika ĕṉṟu * ĕṉmel ĕṅṅaṉe vāzhum āṟu? * aivar
koviṉār cĕyyum kŏṭumaiyai maṭitteṉ * kuṟuṅkuṭi nĕṭuṅ kaṭal vaṇṇā **
pāviṉ ār iṉ cŏl pal malar kŏṇṭu * uṉ pātame paravi nāṉ paṇintu * ĕṉ
nāviṉāl vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-8

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1005. Kali, the god of time, told the five senses to come to me and make me surrender to the pleasures they offered. Now I have been destroyed by the trouble that they cause me. You have the dark color of the wide ocean and stay in Thirukkurungudi. I have worshiped you with sweet words and flowers and praised you with my tongue. O my father, you stay in Naimeesāranyam, I have come to your divine feet and you are my refuge.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; குறுங்குடி திருக்குறுங்குடியிலிருப்பவனே!; நெடுங்கடல் பெரிய ஆழ்ந்த கடல் போல்; வண்ணா! நிறமுடையவனே!; கலியார் கலிகாலமானது திருமங்கை மன்னனை; நலிக என்று துன்புறுத்துங்கள் என்று; என் மேல் ஐவர் ஐம்புலன்களை என் மேல்; ஏவினார் ஏவினார்; எங்ஙனே அந்த ஐம்புலன்கள்; வாழும் ஆறு? இனி பிழைக்க வழி ஏது?; கோவினார் ஆளவந்த; செய்யும் அந்த இந்திரியங்களின்; கொடுமையை கொடுமையை; மடித்தேன் அப்புறபடுத்திவிட்டேன்; என் நாவினால் எனது நாவினாலே; பாவின் ஆர் நல்ல சந்தங்கள் நிறைந்த; இன் சொல் இனிய சொல்; பல் மலர் கொண்டு மலர் பலவற்றை கொண்டு; உன் பாதமே உன் பாதnங்களில்; நான் பரவி நான் வந்து; பணிந்து வந்து பணிந்து வீழ்ந்து; உன் திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
kuṛungudi one who mercifully resides in thirukkuṛungudi; nedu vast and deep; kadal the ocean-s; vaṇṇā having beautiful form with such complexion!; naimisāriṇayaththul endhāy ŏh my lord, who is residing in ṣrī naimaiṣāraṇiyam!; kaliyār age of kali; naliga enṛu saying -torment him-; en mĕl on me; aivar the five senses; ĕvinār sent;; vāzhum āṛu enganĕ ḥow will those senses survive?; kŏvinār seyyum to be done by those popular five senses; kodumaiyai cruel acts; madiththĕn driving away; en nāvināl with my tongue; with good meters; ār filled; in sol sweet words; pal malar many flowers; koṇdu earned; paravi hailed; un pādhamĕ paṇindhu falling at your highness- divine feet; un thiruvadi nān adaindhĕn ī surrendered at your divine feet.

PT 5.6.2

1399 பேரானைக் குறுங்குடியெம்பெருமானை * திருதண்கா
லூரானைக் கரம்பனூருத்தமனை * முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும் *
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கத்தே. (2)
1399 ## பேரானைக் * குறுங்குடி எம் பெருமானை * திருத்தண்கால்
ஊரானைக் * கரம்பனூர் உத்தமனை ** முத்து இலங்கு
கார் ஆர் திண் கடல் ஏழும் * மலை ஏழ் இவ் உலகு ஏழ் உண்டும் *
ஆராது என்று இருந்தானைக் * கண்டது-தென் அரங்கத்தே-2
1399 ## perāṉaik * kuṟuṅkuṭi ĕm pĕrumāṉai * tiruttaṇkāl
ūrāṉaik * karampaṉūr uttamaṉai ** muttu ilaṅku
kār ār tiṇ kaṭal ezhum * malai ezh iv ulaku ezh uṇṭum *
ārātu ĕṉṟu iruntāṉaik * kaṇṭatu-tĕṉ araṅkatte-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1399. In Thennarangam I saw Thirumāl, the lord of Thirupper (Koiladi), Thirukkurungudi, Thiruthangā, and the good lord of Thirukkarampanur (Uttamar Koil) who was still hungry even after he swallowed the dark seven oceans, seven mountains and seven worlds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேரானை திருப்பேர் நகரில் இருப்பவனை; குறுங்குடி திருக்குறுங்குடி; எம்பெருமானை எம்பெருமானை; திருதண்கால் திருதண்காவில்; ஊரானை இருப்பவனை; கரம்பனூர் திருக்கரம்பனூர்; உத்தமனை உத்தமனை; முத்து முத்துக்களின்; இலங்கு ஒளியோடு கூடின; கார் ஆர் திண் திடமான கறுத்த; கடல் ஏழும் ஏழு கடல்களையும்; மலை ஏழ் இவ் ஏழு மலைகளையும்; உலகு ஏழ் ஏழு உலகங்களயும்; உண்டும் உண்டும்; ஆராது திருப்திபெறாதவனாய்; என்று இருந்தானை இருந்த பெருமானை; கண்டது நான் கண்டது; தென் அரங்கத்தே திருவரங்கத்திலே

PT 6.3.3

1470 மானேய்நோக்குநல்லார் மதிபோல்முகத்துஉலவும் *
ஊனேய்கண்வாளிக்கு உடைந்தோட்டந்துஉன்னடைந்தேன் *
கோனே! குறுங்குடியுள்குழகா! திருநறையூர்த்
தேனே! * வருபுனல்சூழ் திருவிண்ணகரானே!
1470 மான் ஏய் நோக்கு நல்லார் * மதிபோல் முகத்து உலவும் *
ஊன் ஏய் கண் வாளிக்கு * உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன் ** -
கோனே குறுங்குடியுள் குழகா * திருநறையூர்த்
தேனே * வரு புனல் சூழ் * திருவிண்ணகரானே-3
1470 māṉ ey nokku nallār * matipol mukattu ulavum *
ūṉ ey kaṇ vāl̤ikku * uṭaintu oṭṭantu uṉ aṭainteṉ ** -
koṉe kuṟuṅkuṭiyul̤ kuzhakā * tirunaṟaiyūrt
teṉe * varu puṉal cūzh * tiruviṇṇakarāṉe-3

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1470. I am afraid and tremble when I see beautiful women with soft glances like does, lovely faces like the moon and sharp eyes like arrows that can hurt anyone. I was frightened, ran and came to you, O lord, handsome god of Thirukkurungudi. You are the honey of Thirunaraiyur and you stay in Thiruvinnagar surrounded with abundant water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறுங்குடியுள் குறுங்குடியுள்; கோனே! இருக்கும் அரசனே!; குழகா! கலந்து பழக எளியவனே!; திருநறையூர்த் தேனே! திருநறையூர்த் தேனே!; வரு புனல் சூழ் பெருகிவரும் நீர் சூழ்ந்த; திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே!; மான் ஏய் நோக்கு மான் பார்வையுள்ள; நல்லார் பெண்களின்; மதி போல் சந்திரன் போன்ற; முகத்து உலவும் முகத்தில் உலாவும்; ஊன் ஏய் உடலிலிருக்கும்; கண்வாளிக்கு கண்களாகிற பாணத்துக்கு; உடைந்து ஓட்டந்து அஞ்சி நடுங்கி ஓடி வந்து; உன் அடைந்தேன் உன்னை அடைந்தேன்

PT 9.5.1

1788 தவளவிளம்பிறைதுள்ளுமுந்நீர்த்
தண்மலர்த்தென்றலோடன்றிலொன்றித்
துவள * என்னெஞ்சகம் சோரஈரும்
சூழ்பனிநாள்துயிலாதிருப்பேன் *
இவளும்ஓர்பெண்கொடியென்றிரங்கார்
என்னலமைந்துமுன்கொண்டுபோன *
குவளைமலர்நிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)
1788 ## தவள இளம் பிறை துள்ளும் முந்நீர்த் *
தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றித்
துவள * என் நெஞ்சகம் சோர ஈரும் *
சூழ் பனி நாள் துயிலாதிருப்பேன் **
இவளும் ஓர் பெண்கொடி என்று இரங்கார் *
என் நலம் ஐந்தும் முன் கொண்டு போன *
குவளை மலர் நிற வண்ணர் மன்னு *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-1
1788 ## taval̤a il̤am piṟai tul̤l̤um munnīrt *
taṇ malart tĕṉṟaloṭu aṉṟil ŏṉṟit
tuval̤a * ĕṉ nĕñcakam cora īrum *
cūzh paṉi nāl̤ tuyilātiruppeṉ **
ival̤um or pĕṇkŏṭi ĕṉṟu iraṅkār *
ĕṉ nalam aintum muṉ kŏṇṭu poṉa *
kuval̤ai malar niṟa vaṇṇar maṉṉu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-1

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1788. She says, “The white crescent moon, the rolling waves of the ocean, the breeze that blows with the fragrance of flowers, the calling of the andril birds all bring me the pain of love. I cannot sleep at night when dew falls. He has taken over all my five senses but doesn’t feel pity for me. I am just a girl soft as a creeper. Take me to Thirukkurungudi where he with the dark color of a kuvalai flower stays and leave me there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தவள இளம் பிறை தூய இளம் சந்திரனும்; துள்ளும் முந்நீர் அலைகளுள்ள கடலும்; தண் மலர் குளிர்ந்த மலர்களும்; தென்றலோடு தென்றல் காற்றும்; அன்றில் அன்றில் பறவையும்; ஒன்றி இந்திரியங்களும் ஒன்று சேர்ந்து; என் நெஞ்சகம் என் மனது; துவள சோர துவண்டு வாடும்படி; ஈரும் துன்புறுத்துகின்றன; சூழ் பனி எங்கும் பனியிருக்கும்; நாள் இக்காலத்தில்; துயிலாதிருப்பேன் உறங்காமலிருப்பேன்; இவளும் ஓர் இவளும் ஒரு; பெண்கொடி இளம்பெண்ணன்றோ?; என்று இரங்கார் என்று மனம் இரங்காதவராய்; என் என் ஞானமாகிற; நலம் ஐந்தும் ஐந்து இந்திரிய உணர்ச்சியையும்; முன் கொண்டு முன்பே கொண்டு; போன போனார்; குவளைமலர் நிற கருநெய்தற்பூவின் நிறம் போன்ற; வண்ணர் மன்னு வண்ணமுடைய பெருமான்; குறுங்குடிக்கே திருக்குறுங்குடிகே; என்னை என்னைக் கொண்டு போய்; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்

PT 9.5.2

1789 தாதவிழ்மல்லிகைபுல்லிவந்த
தண்மதியினிளவாடைஇன்னே *
ஊதைதிரிதந்துழறியுண்ண
ஓரிரவும்உறங்கேன் * உறங்கும்
பேதையர்பேதைமையால்இருந்து
பேசிலும்பேசுகபெய்வளையார் *
கோதைநறுமலர்மங்கைமார்வன்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1789 தாது அவிழ் மல்லிகை புல்லி வந்த *
தண் மதியின் இள வாடை இன்னே *
ஊதை திரிதந்து உழறி உண்ண *
ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் **
பேதையர் பேதைமையால் இருந்து *
பேசிலும் பேசுக பெய்வளையார் *
கோதை நறு மலர் மங்கை மார்வன் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-2
1789 tātu avizh mallikai pulli vanta *
taṇ matiyiṉ il̤a vāṭai iṉṉe *
ūtai tiritantu uzhaṟi uṇṇa *
or iravum uṟaṅkeṉ uṟaṅkum **
petaiyar petaimaiyāl iruntu *
pecilum pecuka pĕyval̤aiyār *
kotai naṟu malar maṅkai mārvaṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-2

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1789. She says, “The cool wind that blows from the jasmine flowers dripping with pollen and the cool crescent moon together take my life. I cannot sleep even for one night. If the ignorant women adorned with bangles on their hands are able to sleep, let them gossip about me as they wish. On his chest, the lord of Thirukkurungudi embraces Lakshmi whose hair is adorned with fragrant flowers. . Take me there and leave me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாது அவிழ் தாதுக்கள் நெகிழ்ந்து மலரும்; மல்லிகை புல்லி மல்லிகைப் பூவிலே பட்டு; வந்த தண் குளிர்ந்த; மதியின் சந்திரனுடன் வந்த; இள வாடை இளமையான வாடை; ஊதை குளிர்க்காற்று; இன்னே திரிதந்து இப்படியே தொகைத்து; உழறி உண்ண என்னைத் துன்புறுத்த; ஓர் இரவும் ஓர் இரவும்; உறங்கேன் நான் உறங்கேன்; உறங்கும் உறக்கமே இயல்பாக உள்ள; பெய்வளையார் வளையல் அணிந்த; பேதையர் பெண்கள் தங்கள்; பேதைமையால் இருந்து அறிவீனத்தினால்; பேசிலும் பேசுக என்னைப் பழித்தாலும்; கோதை கூந்தலிலே; நறு மலர் மணமிக்க பூக்கள் அணிந்துள்ள; மங்கை திருமகளை; மார்வன் மார்பிலுடைய எம்பெருமானிருக்கும்; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னைக் கொண்டு; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்

PT 9.5.3

1790 காலையும்மாலையொத்துண்டு
கங்குல்நாழிகைஊழியில்நீண்டுலாவும் *
போல்வதோர் தன்மைபுகுந்துநிற்கும்
பொங்கழலேயொக்கும்வாடைசொல்லில் *
மாலவன்மாமணிவண்ணன்
மாயம் மற்றுமுளஅவை வந்திடாமுன் *
கோலமயில்பயிலும்புறவின்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1790 காலையும் மாலை ஒத்துண்டு * கங்குல்
நாழிகை ஊழியில் நீண்டு உலாவும் *
போல்வது ஓர் தன்மை புகுந்து நிற்கும் *
பொங்கு அழலே ஒக்கும் வாடை சொல்லில் **
மாலவன் மா மணி வண்ணன் மாயம் *
மற்றும் உள அவை வந்திடாமுன் *
கோல மயில் பயிலும் புறவின் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-3
1790 kālaiyum mālai ŏttuṇṭu * kaṅkul
nāzhikai ūzhiyil nīṇṭu ulāvum *
polvatu or taṉmai pukuntu niṟkum *
pŏṅku azhale ŏkkum vāṭai cŏllil **
mālavaṉ mā maṇi vaṇṇaṉ māyam *
maṟṟum ul̤a avai vantiṭāmuṉ *
kola mayil payilum puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-3

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1790. She says, “The morning brings me the pain of love just like the evening, and the night only makes it greater, lasting as long as an eon. If I try to describe the cold wind I can only say it hurts me like a rising fire. There are many tricks that the beautiful sapphire-colored Thirumāl can do. Before he does something and hurts me, take me to Thirukkurungudi filled with forests where beautiful peacocks dance. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காலையும் காலையும்; மாலை மாலைப்போது போல்; ஒத்துண்டு துன்புறுத்திக்கொண்டும்; கங்குல் நாழிகை இரவு பொழுதோ எனில்; ஊழியில் கல்ப காலத்தைக் காட்டிலும்; நீண்டு உலாவும் நீண்டு உலாவுகிறது; போல்வது ஓர் தன்மை போன்ற ஒரு தன்மை; புகுந்து நிற்கும் புகுந்தது போலிருக்கிறது; வாடை வாடையைப் பற்றி; சொல்லில் சொல்ல வேண்டுமானால்; பொங்கு அழலே ஒக்கும் வடவாக்னி போலுள்ளது; மாலவன் அந்த பெருமான் மிகப் பெரியவனாயும்; மா மணி நீல மணி போன்ற வடிவழகை உடையவன்; வண்ணன் இவனிடம் மேலும் பல; மாயம் மற்றும் உள மாயங்களும் உண்டு; அவை அந்த மாயங்கள்; வந்திடா முன் வருவதற்கு முன்; கோல மயில் அழகிய மயில்கள்; பயிலும் புறவின் வாழும் இடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை கொண்டு; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்

PT 9.5.4

1791 கருமணிபூண்டுவெண்ணாகணைந்து
காரிமிலேற்றணர்தாழ்ந்துலாவும் *
ஒருமணியோசைஎன்னுள்ளந்தள்ள
ஓரிரவும்உறங்காதிருப்பேன் *
பெருமணிவானவருச்சிவைத்த
பேரருளாளன்பெருமை பேசி *
குருமணிநீர்கொழிக்கும்புறவின்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1791 கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து *
கார் இமில் ஏற்று அணர் தாழ்ந்து உலாவும் *
ஒரு மணி ஓசை என் உள்ளம் தள்ள *
ஓர் இரவும் உறங்காதிருப்பேன்- **
பெரு மணி வானவர் உச்சி வைத்த *
பேர் அருளாளன் பெருமை பேசி *
குரு மணி நீர் கொழிக்கும் புறவின் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-4
1791 karu maṇi pūṇṭu vĕṇ nāku aṇaintu *
kār imil eṟṟu aṇar tāzhntu ulāvum *
ŏru maṇi ocai ĕṉ ul̤l̤am tal̤l̤a *
or iravum uṟaṅkātiruppeṉ- **
pĕru maṇi vāṉavar ucci vaitta *
per arul̤āl̤aṉ pĕrumai peci *
kuru maṇi nīr kŏzhikkum puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-4

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1791. She says, “The sound of the bells on the dark necks of the bulls that wander with their white cows hurts my heart and I cannot sleep even one night. The generous lord stays in Thirukkurungudi where the fields flourish with water and the gods adorned with precious jewels praise his wonderful grace. Take me where he is. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மணி பூண்டு கறுத்த மணியை அணிந்து; வெண் நாகு வெள்ளைப் பசுக்கன்றுளை; அணைந்து கார் தழுவும் காளைகளின்; இமில் ஏற்று கருத்த முசுப்பையுடைய; அணர் தாழ்ந்து உலாவும் கழுத்தில் தொங்குகிற; ஒரு மணி ஓசை ஒரு மணி ஓசை; என் உள்ளம் தள்ள என் மனதை துன்புறுத்த; வானவர் உச்சி நித்யஸூர்கள் தங்கள் தலைமீது; பெரு மணி சிறந்த ரத்னமாக; வைத்த வைத்துப் போற்றுகிற; பேர் அருளாளன் பெருமானின்; பெருமை பேசி பெருமைகளைப் பேசிக்கொண்டு; ஓர் இரவும் இரவு முழுவதும்; உறங்காதிருப்பேன் உறங்காதிருப்பேன்; குரு மணி சிறந்த ரத்தினங்களைத் தள்ளி வரும்; நீர் கொழிக்கும் புறவின் நீர் நிலைகளையுடைய; குறுங்குடிக்கே என்னை திருகுறுங்குடிக்கே என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.5

1792 திண்திமிலேற்றின்மணியும்ஆயன்
தீங்குழலோசையும், தென்றலோடு *
கொண்டதோர்மாலையும் அந்தியீன்ற
கோலவிளம்பிறையோடு கூடி *
பண்டையவல்லஇவைநமக்குப்
பாவியேனாவியைவாட்டம்செய்யும் *
கொண்டல்மணிநிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1792 திண் திமில் ஏற்றின் மணியும் * ஆயன்
தீம் குழல் ஒசையும் தென்றலோடு *
கொண்டது ஓர் மாலையும் அந்தி ஈன்ற *
கோல இளம்பிறையோடு கூடி **
பண்டைய அல்ல இவை நமக்கு *
பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் *
கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-5
1792 tiṇ timil eṟṟiṉ maṇiyum * āyaṉ
tīm kuzhal ŏcaiyum tĕṉṟaloṭu *
kŏṇṭatu or mālaiyum anti īṉṟa *
kola il̤ampiṟaiyoṭu kūṭi **
paṇṭaiya alla ivai namakku *
pāviyeṉ āviyai vāṭṭam cĕyyum *
kŏṇṭal maṇi niṟa vaṇṇar maṉṉu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-5

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1792. She says, “In the evening I hear the bells on the necks of the bulls and the sweet music of the flute of the cowherds. The breeze blows and the crescent moon shines. They were always harmless before but now they all join together and hurt me. I have done bad karmā. Take me and leave me in Thirukurungudi where the lustrous cloud-colored lord stays. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண் திமில் திடமான முசுப்புடைய; ஏற்றின் காளையின்; மணியும் கழுத்து மணி ஓசையும்; ஆயன் கண்ணனின்; தீங்குழல் ஓசையும் இனிய குழலோசையும்; தென்றலோடு தென்றல் காற்றோடு; கொண்டது ஓர் சேர்ந்த ஒரு; மாலையும் மாலைப் பொழுதும் ஆகியவை; ஈன்ற பிறப்பித்தது போல; கோல இளம் அழகிய இளம்பிறை; பிறையோடு கூடி சந்திரனையும் கூட்டிக்கொண்டு; அந்தி ஈன்ற அந்திப்பொழுது தோற்றுவிக்கிற; இவை இவை முன்பு; நமக்கு என் விஷயத்திலே; பண்டைய முன்பு இருந்தது; அல்ல போலில்லை; பாவியேன் பாவியான; ஆவியை என் உயிரை; வாட்டம் செய்யும் துடிக்கச்செய்கின்றன; கொண்டல் மேகம் போன்றும்; மணி நிற நீல மணி போன்றும்; வண்ணர் நிறமுடைய பெருமாள்; குறுங்குடிக்கே பொருந்தி வாழப்பெற்ற திருகுறுங்குடிக்கே; என்னை உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.6

1793 எல்லியும்நன்பகலும்இருந்தே
ஏசிலும்ஏசுகஏந்திழையார் *
நல்லரவர்திறம்நாமறியோம்
நாண்மடமச்சம்நமக்கிங்கில்லை *
வல்லனசொல்லிமகிழ்வரேனும்
மாமணிவண்ணரைநாம்மறவோம் *
கொல்லைவளரிளமுல்லைபுல்கு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1793 எல்லியும் நன் பகலும் இருந்தே *
ஏசிலும் ஏசுக ஏந்திழையார் *
நல்லர் அவர் திறம் நாம் அறியோம் *
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை **
வல்லன சொல்லி மகிழ்வரேலும் *
மா மணி வண்ணரை நாம் மறவோம் *
கொல்லை வளர் இள முல்லை புல்கு *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-6
1793 ĕlliyum naṉ pakalum irunte *
ecilum ecuka entizhaiyār *
nallar avar tiṟam nām aṟiyom *
nāṇ maṭam accam namakku iṅku illai **
vallaṉa cŏlli makizhvarelum *
mā maṇi vaṇṇarai nām maṟavom *
kŏllai val̤ar il̤a mullai pulku *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-6

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1793. She says, “Girls ornamented with beautiful jewels gossip about me night and day. Let them do what they want. I am not worried. They are good people—I don’t know what is wrong with them. I am not shy, naive or afraid. They may make themselves happy saying things about me, but I won’t forget the sapphire-colored lord. Take me and leave me in Thirukkurungudi where soft mullai blossoms bloom luxuriantly in the backyards of the houses. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லியும் நன் பகலும் நல்ல இரவும் பகலும்; இருந்தே எப்போதும்; ஏசிலும் ஏசுக என்னை ஏசினால் ஏசட்டும்; ஏந்திழையார் ஆபரணங்களணிந்துள்ள பெண்கள்; நல்லர் அவர்களே நல்லவர்களாக இருக்கட்டும்; அவர் திறம் அவர்கள் திறமையை; நாம் அறியோம் நான் அறியேன்; நாண் மடம் அச்சம் அச்சம் மடம் நாணம் பயிற்பு; நமக்கு இங்கு ஆகிய பெண்மை குணங்கள்; இல்லை எனக்கு இல்லை என்று; வல்லன சொல்லி வாய் கூசாமல் சொல்லி; மகிழ்வரேலும் சிரித்தார்களேயாகிலும்; மா மணி வண்ணரை மா மணி வண்ணரான பெருமாளை; நாம் மறவோம் நாம் மறக்க மாட்டோம்; கொல்லை வளர் தோட்டங்களிலே வளரும்; இள முல்லை புல்கு இளமுல்லை கொடிகளுள்ள; குறுங்குடிக்கே என்னை திருகுறுங்குடிக்கே என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.7

1794 செங்கண்நெடியகரியமேனித்
தேவரொருவர்இங்கேபுகுந்து * என்
அங்கம்மெலியவளைகழல
ஆதுகொலோ? என்றுசொன்னபின்னை *
ஐங்கணிவில்லிதன்னாண்மை
என்னோடாடுமதனைஅறியமாட்டேன் *
கொங்கலர்தண்பணைசூழ்புறவில்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1794 செங் கண் நெடிய கரிய மேனித் *
தேவர் ஒருவர் இங்கே புகுந்து * என்
அங்கம் மெலிய வளை கழல *
ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை **
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு *
ஆடும்-அதனை அறியமாட்டேன் *
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-7
1794 cĕṅ kaṇ nĕṭiya kariya meṉit *
tevar ŏruvar iṅke pukuntu * ĕṉ
aṅkam mĕliya val̤ai kazhala *
ātukŏlo? ĕṉṟu cŏṉṉa piṉṉai **
aiṅkaṇai villi taṉ āṇmai ĕṉṉoṭu *
āṭum-ataṉai aṟiyamāṭṭeṉ *
kŏṅku alar taṇ paṇai cūzh puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-7

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1794. She says, “A tall dark god with beautiful eyes entered here. He made my body weak and my bangles loose. I wonder, ‘Why is this happening to me?’ The tricks of Kāma who carries a bow with five flower arrows make me suffer from love. I didn’t understand that. Take me and leave me in Thirukkurungudi surrounded with forests and cool fields blooming with flowers that drip honey. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெடிய நீண்ட; செங் கண் சிவந்த கண்களையும்; கரிய மேனி கறுத்த சரீரமுமுடைய; தேவர் ஒருவர் ஒரு எம்பெருமான்; இங்கே புகுந்து என் இங்கு புகுந்து என்; அங்கம் உடல்; மெலிய இளைக்கும்படியாகவும்; வளை வளையல்கள்; கழல கழலும்படியாகவும்; ஆதுகொலோ? பிரியமாட்டேன்; என்று என்று சொன்ன; சொன்ன பின் பிரிந்தார்; வில்லி அதன் பின் மன்மதன்; ஐங்கணை ஐந்து அம்புகளின்; தன் தன்னுடைய; ஆண்மை ஆண்மையை; என்னோடு என் விஷயத்திலே; ஆடும் அதனை காட்டுவதை; அறியமாட்டேன் நான் அறியேன்; கொங்கு அலர் தேன் பெருகும்; தண் குளிர்ந்த; பணை சூழ் சோலைகள் சூழ்ந்த; புறவின் இடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.8

1795 கேவலமன்றுகடலினோசை
கேண்மின்கள்ஆயன்கைஆம்பல்வந்து * என்
ஆவியளவும் அணைந்துநிற்கும்
அன்றியும்ஐந்துகணைதெரிந்திட்டு *
ஏவலம்காட்டிஇவனொருவன்
இப்படியேபுகுந்துஎய்திடாமுன் *
கோவலர்கூத்தன்குறிப்பறிந்து
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1795 கேவலம் அன்று கடலின் ஓசை *
கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து * என்
ஆவி அளவும் அணைந்து நிற்கும் *
அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு **
ஏ வலம் காட்டி இவன் ஒருவன் *
இப்படியே புகுந்து எய்திடாமுன் *
கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-8
1795 kevalam aṉṟu kaṭaliṉ ocai *
kel̤miṉkal̤ āyaṉ kai āmpal vantu * ĕṉ
āvi al̤avum aṇaintu niṟkum *
aṉṟiyum aintu kaṇai tĕrintiṭṭu **
e valam kāṭṭi ivaṉ ŏruvaṉ *
ippaṭiye pukuntu ĕytiṭāmuṉ *
kovalar kūttaṉ kuṟippu aṟintu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-8

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1795. She says, “Listen, it is not only the sound of the ocean that hurts me, or the hands that are like ambal flowers of the cowherd that come and pain my life. Kāma may come and shoot his five flower arrows at me. Before that happens, find out what the dancer, the cowherd, thinks and take me and leave me in Thirukkurungudi. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடலின் ஓசை கடலின் ஓசை; கேவலம் அன்று ஸாமான்யமன்று; கேள்மின்கள் கேளுங்கள்; ஆயன் கண்ணனின்; கை கையிலிருக்கும்; ஆம்பல் குழலோசை; வந்து என் வந்து என்; ஆவி அளவும் பிராணன் அளவும்; அணைந்து அணைந்து; நிற்கும் நிற்கிறது; அன்றியும் அதற்கு மேலும்; இவன் ஒருவன் மன்மதனென்கிற இவன்; ஐந்து கணை ஐந்து அம்புகளை; தெரிந்திட்டு நன்றாக ஆராய்ந்து; ஏ வலங் பிரயோகிக்க வல்ல; காட்டி திறனை காட்டி; இப்படியே புகுந்து என் மேல்; எய்திடா முன் எய்துவதற்கு முன்; கோவலர் கோபாலர்கள்; கூத்தன் கூத்தனான; குறிப்பு கண்ணனின் குறிப்பு; அறிந்து அறிந்து; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.9

1796 சோத்தெனநின்றுதொழஇரங்கான்
தொன்னலங்கொண்டெனக்குஇன்றுகாறும் *
போர்ப்பதோர்பொற்படம்தந்துபோனான்
போயினவூரறியேன் * என்கொங்கை
மூத்திடுகின்றன
மற்றவன்தன்மொய்யகலமணையாதுவாளா *
கூத்தனிமையவர்கோன்விரும்பும்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1796 ## சோத்து என நின்று தொழ இரங்கான் *
தொல் நலம் கொண்டு எனக்கு இன்றுதாறும் *
போர்ப்பது ஓர் பொன்-படம் தந்து போனான் *
போயின ஊர் அறியேன் ** என் கொங்கை
மூத்திடுகின்றன * மற்று அவன்-தன்
மொய் அகலம் அணையாது வாளா *
கூத்தன் இமையவர்-கோன் விரும்பும் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-9
1796 ## cottu ĕṉa niṉṟu tŏzha iraṅkāṉ *
tŏl nalam kŏṇṭu ĕṉakku iṉṟutāṟum *
porppatu or pŏṉ-paṭam tantu poṉāṉ *
poyiṉa ūr aṟiyeṉ ** ĕṉ kŏṅkai
mūttiṭukiṉṟaṉa * maṟṟu avaṉ-taṉ
mŏy akalam aṇaiyātu vāl̤ā *
kūttaṉ imaiyavar-koṉ virumpum *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-9

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1796. She says, “Even though I praised him and worshiped him, he doesn’t take pity on me. He took my chastity, gave me golden clothes to cover myself and left, I don’t know where. My breasts have grown out but they are no use because he doesn’t embrace me. He, a dancer and king of the gods, wishes to stay in Thirukurungudi. Take me there and leave me where he is. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோத்து ‘சோத்தம்’ என்று கூறி கைகூப்பி; என நின்று வணங்குவதை நின்று; தொழ தொழுதாலும்; இரங்கான் இரங்கவில்லை; தொல் நலம் முன்பு என் பெண்மையை; கொண்டு கொண்ட அவன்; எனக்கு எனக்கு; இன்றுகாறும் இன்று வரை; போர்ப்பது ஓர் போர்த்திக் கொள்ள ஒரு; பொன் பொன்னாடை தருவது போல்; படம் பசலை நோய்; தந்து போனான் தந்து போனான்; போயின ஊர் போன ஊர்; அறியேன் அறியேன்; மற்று என் மேலும் என்; கொங்கை மார்பகங்கள்; அவன் தன் அவனுடைய; மொய் அகலம் மார்பை; அணையாது அணையப்பெறாமல்; வாளா வீணாக; மூத்து இடுகின்றன முதிர்ந்துவிடுகின்றன; கூத்தன் விசித்திர சேஷ்டிதங்களையுடையவனான; இமையவர் நித்யசூரிகளின்; கோன் தலைவன்; விரும்பும் விரும்பும் இடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.5.10

1797 செற்றவன்தென்னிலங்கைமலங்கத்
தேவர்பிரான், திருமாமகளைப்
பெற்றும் * என்நெஞ்சகம்கோயில்கொண்ட
பேரருளாளன், பெருமைபேசக்
கற்றவன் * காமருசீர்க்கலியன்
கண்ணகத்தும்மனத்தும்அகலாக்
கொற்றவன் * முற்றுலகாளிநின்ற
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)
1797 ## செற்றவன் தென் இலங்கை மலங்கத் *
தேவர் பிரான் திரு மா மகளைப்
பெற்றும் * என் நெஞ்சகம் கோயில் கொண்ட *
பேர்-அருளாளன் பெருமை பேசக்
கற்றவன் ** காமரு சீர்க் கலியன் *
கண் அகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் * முற்று உலகு ஆளி நின்ற *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்-10
1797 ## cĕṟṟavaṉ tĕṉ ilaṅkai malaṅkat *
tevar pirāṉ tiru mā makal̤aip
pĕṟṟum * ĕṉ nĕñcakam koyil kŏṇṭa *
per-arul̤āl̤aṉ pĕrumai pecak
kaṟṟavaṉ ** kāmaru cīrk kaliyaṉ *
kaṇ akattum maṉattum akalāk
kŏṟṟavaṉ * muṟṟu ulaku āl̤i niṉṟa *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-10

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1797. She says, “The god of the gods who keeps the goddess Lakshmi with him, the generous lord who destroyed southern Lankā, entered the heart and the eyes of famous Kaliyan who composed pāsurams that praise the victorious god, ruler of the whole world. Take me to Thirukkurungudi where he stays and leave me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செற்றவன் சத்ருவான ராவணனின்; தென் இலங்கை தென் இலங்கையை; மலங்க கலங்கப் பண்ணின; தேவர் பிரான் தேவர்களின் பெருமான்; திரு மா மகளை திரு மா மகளை; பெற்றும் அடைந்திருந்த போதும்; என் நெஞ்சகம் என் நெஞ்சத்தையும்; கோயில் கொண்ட கோயில் கொண்டான்; பேர் அருளாளன் பேர்அருளாளன்; பெருமை பெருமையை; பேச கற்றவன் பேச வல்லவரான; காமரு சீர் நற்குணங்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வாரின்; கண் அகத்தும் கண்ணிலிருந்தும்; மனத்தும் மனத்திலிருந்தும்; அகலா நீங்காத; கொற்றவன் அரசனானவன்; முற்று உலகு மூவுலகையும்; ஆளி ஆளும் பெருமான்; நின்ற இருக்குமிடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

PT 9.6.1

1798 அக்கும்புலியினதளும் உடையார்அவரொருவர் *
பக்கம்நிற்கநின்ற பண்பரூர்போலும் *
தக்கமரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின்பிள்ளை வெள்ளிறவுண்ணும்குறுங்குடியே. (2)
1798 ## அக்கும் புலியின் * அதளும் உடையார்- * அவர் ஒருவர்
பக்கம் நிற்க நின்ற * பண்பர் ஊர்போலும்- **
தக்க மரத்தின் தாழ் சினை ஏறி * தாய் வாயில்
கொக்கின் பிள்ளை * வெள் இறா உண்ணும் குறுங்குடியே 1
1798 ## akkum puliyiṉ * atal̤um uṭaiyār- * avar ŏruvar
pakkam niṟka niṉṟa * paṇpar ūrpolum- **
takka marattiṉ tāzh ciṉai eṟi * tāy vāyil
kŏkkiṉ pil̤l̤ai * vĕl̤ iṟā uṇṇum kuṟuṅkuṭiye 1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1798. The good-natured god who has with him Shivā wearing a garland of skulls and a tiger skin around his waist stays in Thirukkurungudi where a heron fledgling climbs on the small branch of a tree, takes a vellira fish from its mother and eats.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொக்கின் பிள்ளை கொக்கின் குஞ்சு; தக்க மரத்தின் தனக்கு தகுந்த மரத்தின்; தாழ் தாழ்ந்த; சினை ஏறி கிளை ஏறி; தாய் வாயில் தாய் வாயிலிருக்கும்; வெள் இறா ‘வெள் இறா’ என்னும் மீனை; உண்ணும் உண்ணும்; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; அக்கும் எலும்பையும்; புலியின் அதளும் புலிதோலையும்; உடையார் தரித்தவரான; அவர் ஒருவர் சிவன்; பக்கம் அருகில் நிற்க; நிற்க அவருக்கும் இடம் கொடுத்த; பண்பர் நற்குணங்களுடையவரான; நின்ற பெருமான் நின்ற; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.2

1799 துங்காராரவத்திரைவந்துலவத் தொடுகடலுள் *
பொங்காரரவில்துயிலும் புனிதரூர்போலும் *
செங்காலன்னம் திகழ்தண்பணையில்பெடையோடும் *
கொங்கார்கமலத்தலரில்சேரும்குறுங்குடியே.
1799 துங்க ஆர் அரவத் * திரை வந்து உலவ * தொடு கடலுள்
பொங்கு ஆர் அரவில் துயிலும் * புனிதர் ஊர்போலும்- **
செங் கால் அன்னம் * திகழ் தண் பணையில் பெடையோடும் *
கொங்கு ஆர் கமலத்து * அலரில் சேரும் குறுங்குடியே 2
1799 tuṅka ār aravat * tirai vantu ulava * tŏṭu kaṭalul̤
pŏṅku ār aravil tuyilum * puṉitar ūrpolum- **
cĕṅ kāl aṉṉam * tikazh taṇ paṇaiyil pĕṭaiyoṭum *
kŏṅku ār kamalattu * alaril cerum kuṟuṅkuṭiye 2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1799. Our pure lord resting on Adisesha on the ocean where the waves never cease rolling stays in Thirukkurungudi where male red-legged swans live with their mates on the beautiful lotuses that drip with honey in cool flourishing fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் கால் சிவந்தகால்களையுடைய; அன்னம் அன்னம்; திகழ் தண் அழகிய குளிர்ந்த; பணையில் நீர் நிலைகளின்; பெடையோடும் பெடையோடு; கொங்கு ஆர் மணம்மிக்க; கமலத்து அலரில் தாமரைப்பூவில்; சேரும் சேர்ந்துவாழுமிடமான; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; துங்கம் ஆர் ஓங்கிய; அரவ பெரும் ஆரவாரமுள்ள; திரை அலைகள்; வந்து உலவ வந்து உலாவ; தொடு கடலுள் ஆழ்ந்த கடலில்; பொங்கு ஆர் பெரிய சரீரமுடைய; அரவில் ஆதிசேஷன் மீது; துயிலும் துயிலும்; புனிதர் எம்பெருமானின்; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.3

1800 வாழக்கண்டோம்வந்துகாண்மின்தொண்டீர்காள்! *
கேழல் செங்கண்மாமுகில்வண்ணர்மருவுமூர் *
ஏழைச்செங்கால் இன்துணைநாரைக்குஇரைதேடி *
கூழைப்பார்வைக் கார்வயல்மேயும்குறுங்குடியே.
1800 வாழக் கண்டோம் * வந்து காண்மின் தொண்டீர்காள்! *
கேழல் செங்கண் * மா முகில் வண்ணர் மருவும் ஊர் **
ஏழைச் செங்கால் * இன் துணை நாரைக்கு இரை தேடி *
கூழைப் பார்வைக் * கார் வயல் மேயும் குறுங்குடியே-3
1800 vāzhak kaṇṭom * vantu kāṇmiṉ tŏṇṭīrkāl̤! *
kezhal cĕṅkaṇ * mā mukil vaṇṇar maruvum ūr **
ezhaic cĕṅkāl * iṉ tuṇai nāraikku irai teṭi *
kūzhaip pārvaik * kār vayal meyum kuṟuṅkuṭiye-3

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1800. We have found the way to be saved. Thirumāl O devotees, come and see! Our lord with a dark cloud-color and beautiful eyes who took the form of a boar to save the earth goddess from the underworld stays in Thirukkurungudi where a heron searches for food in the flourishing paddy fields to take to his beloved red-legged mate.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; வாழக் கண்டோம் வாழ வழி கண்டோம்; வந்து காண்மின் வந்து பாருங்கள்; ஏழை மிருதுவான; செங்கால் சிவந்தகால்களுயுடைய; இன் துணை நாரைக்கு இனிய ஆண் நாரைக்கு; இரை தேடி உணவு கொண்டு வந்து கொடுக்கும்; கூழை க்ருத்ரிமமான; பார்வை பார்வையையுடைய பெண் நாரை; கார் வயல் செழித்த வயல்களிலே; மேயும் மேய்ந்து நிற்கும்; கேழல் வராஹமாக வந்த பெருமான்; செங்கண் சிவந்த கண்களுடையவராய்; மா முகில் வண்ணர் மேக வண்ணராய்; மருவும் ஊர் விரும்பி வாழும் ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடியே!

PT 9.6.4

1801 சிரமுனைந்துமைந்தும் சிந்தச்சென்று * அரக்கன்
உரமும்கரமும்துணித்த உரவோனூர்போலும் *
இரவும்பகலும் ஈன்தேன் முரல * மன்றெல்லாம்
குரவின்பூவேதான் மணம்நாறும்குறுங்குடியே.
1801 சிரம் முன் ஐந்தும் ஐந்தும் * சிந்தச் சென்று * அரக்கன்
உரமும் கரமும் துணித்த * உரவோன் ஊர்போலும்- **
இரவும் பகலும் * ஈன் தேன் முரல * மன்று எல்லாம்
குரவின் பூவே-தான் * மணம் நாறும் குறுங்குடியே 4
1801 ciram muṉ aintum aintum * cintac cĕṉṟu * arakkaṉ
uramum karamum tuṇitta * uravoṉ ūrpolum- **
iravum pakalum * īṉ teṉ murala * maṉṟu ĕllām
kuraviṉ pūve-tāṉ * maṇam nāṟum kuṟuṅkuṭiye 4

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1801. The heroic god who went to Lankā fought and pierced the chest of the ten-headed Rakshasā Rāvana and cut off his hands - stays in Thirukkurungudi where bees that make honey swarm night and day in the mandram and kuravam blossoms spread their fragrance everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இரவும் பகலும் இரவும் பகலும்; ஈன் தேன் வண்டுகள் இனிமையாக; முரல பாடும்; மன்று எல்லாம் இங்கே இத்தலத்தில்; குரவின் பூவே தான் குரவ மர பூக்களில்; மணம் நாறும் மணம் மிக்க; சிரம் ஐந்தும் ஐந்தும் பத்துத் தலைகளும்; சிந்த வீழ; சென்று இலங்கை சென்று; முன் அரக்கன் முன்பு அரக்கன் ராவணனின்; உரமும் மார்பையும்; கரமும் கைகளையும்; துணித்த துணித்த; உரவோன் எம்பெருமானின் ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடி; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.5

1802 கவ்வைக்களிற்றுமன்னர்மாளக் கலிமான்தேர்
ஐவர்க்காய் * அன்றுஅமரில் உய்த்தான்ஊர்போலும் *
மைவைத்திலங்குகண்ணார்தங்கள் மொழியொப்பான் *
கொவ்வைக்கனிவாய்க் கிள்ளைபேசும்குறுங்குடியே.
1802 கவ்வைக் களிற்று மன்னர் மாள * கலி மான் தேர்
ஐவர்க்கு ஆய் * அன்று அமரில் உய்த்தான் ஊர்போலும்- **
மை வைத்து இலங்கு * கண்ணார்-தங்கள் மொழி ஒப்பான் *
கொவ்வைக் கனி வாய்க் * கிள்ளை பேசும் குறுங்குடியே 5
1802 kavvaik kal̤iṟṟu maṉṉar māl̤a * kali māṉ ter
aivarkku āy * aṉṟu amaril uyttāṉ ūrpolum- **
mai vaittu ilaṅku * kaṇṇār-taṅkal̤ mŏzhi ŏppāṉ *
kŏvvaik kaṉi vāyk * kil̤l̤ai pecum kuṟuṅkuṭiye 5

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1802. The lord who drove the chariot in Bhārathā war for the five Pāndavās and destroyed the heroic Kauravā kings fighting as they rode their strong elephants - stays in Thirukkurungudi where parrots with mouths like sweet kovvai fruits speak like beautiful women with eyes that are bright and darkened with kohl.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை வைத்து இலங்கு மையிட்ட ஒளியுள்ள; கண்ணார் தங்கள் பெண்களின்; மொழி ஒப்பான் வார்த்தை போல; கொவ்வை கோவை; கனி பழம் போல் சிவந்த; வாய்க் கிள்ளை அலகையுடைய கிளிகள்; பேசும் பேசும்; கவ்வை பேரொலிகொண்ட; களிற்று யானைகளை யுடைய; மன்னர் மாள மன்னர்கள் மாள; ஐவர்க்கு ஆய் பஞ்சபாண்டவர்களுக்காக; அன்று முன்பு ஒரு சமயம்; அமரில் பாரதயுத்தத்தில்; கலி மாத் தேர் திடமான பெரிய தேரை; உய்த்தான் நடத்தின பெருமானுடைய ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடி; ஊர் போலும் ஊர் போலும்

PT 9.6.6

1803 தீநீர்வண்ணமாமலர்கொண்டுவிரையேந்தி *
தூநீர்பரவித் தொழுமின்எழுமின்தொண்டீர்காள்! *
மாநீர்வண்ணர் மருவியுறையுமிடம் * வானில்
கூனீர்மதியை மாடம்தீண்டும்குறுங்குடியே.
1803 தீ நீர் வண்ண * மா மலர் கொண்டு விரை ஏந்தி *
தூ நீர் பரவித் * தொழுமின் எழுமின் தொண்டீர்காள்!- **
மா நீர் வண்ணர் * மருவி உறையும் இடம் * வானில்
கூன் நீர் மதியை * மாடம் தீண்டும் குறுங்குடியே 6
1803 tī nīr vaṇṇa * mā malar kŏṇṭu virai enti *
tū nīr paravit * tŏzhumiṉ ĕzhumiṉ tŏṇṭīrkāl̤!- **
mā nīr vaṇṇar * maruvi uṟaiyum iṭam * vāṉil
kūṉ nīr matiyai * māṭam tīṇṭum kuṟuṅkuṭiye 6

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1803. O devotees, come, take lamps, water, beautiful flowers and fragrances, sprinkle pure water and worship the lord. The ocean-colored god wishes to stay in Thirukkurungudi where the palaces touch the crescent moon in the sky.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; தூ நீர் தூய்மையையுடைய நீங்கள்; தீ தூப தீபங்களுக்காக அக்னியையும்; நீர் அர்க்கியத்துக்காக நீரையும்; வண்ண மா பல வண்ண; மலர் மலர்களையும்; விரை மணமுள்ள பொருள்களையும்; ஏந்தி கொண்டு எடுத்துக்கொண்டு; பரவி எம்பெருமானை வாயால் பாடி; தொழுமின் கைகளைக்கூப்பி தொழுது; எழுமின் உய்வு அடையுங்கள்; வானில் வானில்; கூன் நீர் வளைந்த இயற்கையாக உடைய; மதியை தீண்டும் சந்திரனை தொடுமளவு; மாடம் உயர்ந்த மாடங்களையுடைய; குறுங்குடியே திருக்குறுங்குடி; மா நீர் கடல் போன்ற; வண்ணர் நிறமுடையவன்; மருவி விரும்பி; உறையும் வாழும் பெருமான்; இடம் இருக்குமிடம் திருக்குறுங்குடி

PT 9.6.7

1804 வல்லிச் சிறுநுண்ணிடையாரிடை நீர்வைக்கின்ற *
அல்லல்சிந்தைதவிர அடைமின் அடியீர்காள்! *
சொல்லில்திருவேயனையார் கனிவாயெயிறொப்பான் *
கொல்லைமுல்லை மெல்லரும்பீனும்குறுங்குடியே.
1804 வல்லிச் சிறு நுண் இடையாரிடை * நீர் வைக்கின்ற *
அல்லல் சிந்தை தவிர * அடைமின் அடியீர்காள்!- **
சொல்லில் திருவே அனையார் * கனி வாய் எயிறு ஒப்பான் *
கொல்லை முல்லை * மெல் அரும்பு ஈனும் குறுங்குடியே 7
1804 vallic ciṟu nuṇ iṭaiyāriṭai * nīr vaikkiṉṟa *
allal cintai tavira * aṭaimiṉ aṭiyīrkāl̤!- **
cŏllil tiruve aṉaiyār * kaṉi vāy ĕyiṟu ŏppāṉ *
kŏllai mullai * mĕl arumpu īṉum kuṟuṅkuṭiye 7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1804. O devotees, if you want to remove the desires that you have for women with vine-like waists, go to Thirukkurungudi and worship the lord where the mullai buds blooming slowly in the backyard of the houses are as beautiful as the teeth of the women with mouths as sweet as fruits and with beauty like that of Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியீர்காள்! பக்தர்களே!; வல்லிச் கொடிபோன்ற; சிறு நுண் நுண்ணிய; இடையாரிடை இடையுடைய பெண்களிடத்தில்; நீர் நீங்கள்; வைக்கின்ற வைத்த; அல்லல் துன்பம் தரும்; சிந்தை தவிர ஆசையைத் தவிர்த்து; அடைமின் குறுங்குடியை அடையுங்கள்; அனையார் அங்குள்ள பெண்களின் அழகை; சொல்லில் சொல்லப் பார்க்கில்; திருவே மஹா லக்ஷ்மியை ஒத்திருக்கின்ற; கனி கோவைக்கனிபோன்ற பெண்களின்; வாய் வாயிலுள்ள; எயிறு ஒப்பான் முத்துப் பல்வரிசைப்போல்; கொல்லை கொல்லையிலுள்ள; முல்லை முல்லைக் கொடி; ஈனும் கொடுக்கும்; மெல் அழகிய; அரும்பு அரும்புகளையுடைய; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின் அடையுங்கள்

PT 9.6.8

1805 நாராரிண்டை நாண்மலர்கொண்டுநம்தமர்காள்! *
ஆராஅன்போடு எம்பெருமானூரடைமின்கள் *
தாராவாரும் வார்புனல்மேய்ந்துவயல்வாழும் *
கூர்வாய்நாரை பேடையொடாடும்குறுங்குடியே.
1805 நார் ஆர் இண்டை * நாள் மலர் கொண்டு நம் தமர்காள் *
ஆரா அன்போடு * எம்பெருமான் ஊர-அடைமின்கள்- **
தாரா ஆரும் * வார் புனல் மேய்ந்து வயல் வாழும் *
கூர் வாய் நாரை * பேடையொடு ஆடும் குறுங்குடியே 8
1805 nār ār iṇṭai * nāl̤ malar kŏṇṭu nam tamarkāl̤ *
ārā aṉpoṭu * ĕmpĕrumāṉ ūra-aṭaimiṉkal̤- **
tārā ārum * vār puṉal meyntu vayal vāzhum *
kūr vāy nārai * peṭaiyŏṭu āṭum kuṟuṅkuṭiye 8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1805. O friends, take fresh flowers strung together into garlands and go lovingly to Thirukkurungudi and worship the highest lord there where male herons with sharp beaks live with their mates in the fields and eat fish from the water while sharp-beaked nārai birds play with their mates.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம் தமர்காள்! பக்தர்களே! நீங்கள்; நார் ஆர் நாரால் தொடுத்த; இண்டை மாலைகளையும்; நாள் அப்போதலர்ந்த; மலர் பூக்களையும்; கொண்டு எடுத்துக் கொண்டு; ஆரா அன்போடு பரம பக்தியோடு; தாரா அங்கு தாரா என்னும்; ஆரும் பறவைகள்; வார் புனல் நீர் நிலங்களில்; மேய்ந்து மேய்ந்து; வயல் வாழும் வயல்களில் வாழும்; கூர் வாய் கூரிய அலகையுடைய; நாரை நாரை; பேடையோடு ஆடும் பெடையோடு ஆடும்; எம் பெருமான் எம்பெருமானின்; ஊர் ஊரான; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின்கள் அடையுங்கள்

PT 9.6.9

1806 நின்றவினையும்துயரும்கெட மாமலரேந்தி *
சென்றுபணிமின்எழுமின் தொழுமின்தொண்டீர்காள்! *
என்றும்இரவும்பகலும் வரிவண்டுஇசைபாட *
குன்றின்முல்லை மன்றிடைநாறும்குறுங்குடியே.
1806 நின்ற வினையும் துயரும் கெட * மா மலர் ஏந்தி *
சென்று பணிமின் எழுமின் தொழுமின் * தொண்டீர்காள் **
என்றும் இரவும் பகலும் * வரி வண்டு இசை பாட *
குன்றின் முல்லை * மன்றிடை நாறும் குறுங்குடியே 9
1806 niṉṟa viṉaiyum tuyarum kĕṭa * mā malar enti *
cĕṉṟu paṇimiṉ ĕzhumiṉ tŏzhumiṉ * tŏṇṭīrkāl̤ **
ĕṉṟum iravum pakalum * vari vaṇṭu icai pāṭa *
kuṉṟiṉ mullai * maṉṟiṭai nāṟum kuṟuṅkuṭiye 9

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1806. O devotees, if you want to be rid of the results of your bad karmā and the troubles of your lives, carry fresh flowers and worship the lord in Thirukkurungudi where night and day the lined bees sing and the fragrance of the mullai flowers from the hills spreads everywhere in the mandram.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; நின்ற வினையும் செய்த பாபங்களும்; துயரும் செய்யும் பாபங்களும்; கெட கெட வேண்டுமானால்; மா மலர் சிறந்த புஷ்பங்களை; ஏந்தி எடுத்துக் கொண்டு எப்போதும்; இரவும் பகலும் இரவும் பகலும்; என்றும் என்றும் எப்போதும்; வரி வண்டு வரி வண்டுகள்; இசை பாட இசை பாட; குன்றின் குன்றிலுள்ள; முல்லை முல்லைப் பூக்கள்; மன்றிடை எல்லா இடங்களிலும்; நாறும் மணம் வீச; குறுங்குடியே திருக்குறுங்குடியை; சென்று அடைந்து; தொழுமின் தொழுது; பணிமின் வணங்குங்கள்; எழுமின் உய்வடையுங்கள்

PT 9.6.10

1807 சிலையால்இலங்கைசெற்றான் மற்றோர்சினவேழம் *
கொலையார்கொம்புகொண்டான்மேய குறுங்குடிமேல் *
கலையார்பனுவல்வல்லான் கலியனொலிமாலை *
நிலையார்பாடல்பாடப் பாவம்நில்லாவே. (2)
1807 ## சிலையால் இலங்கை செற்றான் * மற்று ஓர் சின வேழம் *
கொலை ஆர் கொம்பு கொண்டான் மேய * குறுங்குடிமேல் **
கலை ஆர் பனுவல் வல்லான் * கலியன் ஒலி மாலை *
நிலை ஆர் பாடல் பாடப் * பாவம் நில்லாவே 10
1807 ## cilaiyāl ilaṅkai cĕṟṟāṉ * maṟṟu or ciṉa vezham *
kŏlai ār kŏmpu kŏṇṭāṉ meya * kuṟuṅkuṭimel **
kalai ār paṉuval vallāṉ * kaliyaṉ ŏli mālai *
nilai ār pāṭal pāṭap * pāvam nillāve 10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1807. The good poet Kaliyan composed a musical garland of beautiful pāsurams on the lord of Thirukkurungudi who shot arrows, destroying Lankā and who killed the angry elephant Kuvalayābeedam with murderous tusks. If devotees learn and sing this musical garland of pāsurams, their karmā will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிலையால் அம்புகளால்; இலங்கை இலங்கையை; செற்றான் அழித்தவனும்; மற்று ஓர் மேலும்; கொலையார் துன்புறுத்திக் கொண்டிருந்த; சின சீற்றங்கொண்ட; வேழம் ஒப்பற்ற ஒரு யானையின்; கொம்பு கொம்பை முறித்த; கொண்டான் மேய பெருமானிருக்குமிடமான; குறுங்குடிமேல் திருக்குறுங்குடியைக் குறித்து; கலை ஆர் பனுவல் கலை மிகுந்த கவி பாட; வல்லான் கலியன் வல்ல திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த; நிலை ஆர் நிலைநிற்கும் பாசுரங்களாகிய; பாடல் பாட இவைகளைப் பாடுபவர்களுக்கு; பாவம் நில்லாவே பாவம் ஏற்படாது

TNT 2.14

2065 முளைக்கதிரைக்குறுங்குடியுள்முகிலை மூவா
மூவுலகும்கடந்துஅப்பால்முதலாய்நின்ற *
அளப்பரியஆரமுதை அரங்கம்மேய
அந்தணனை அந்தணர்தம்சிந்தையானை *
விளக்கொளியைமரதகத்தைத்திருத்தண்காவில்
வெஃகாவில்திருமாலைப்பாடக்கேட்டு *
வளர்த்ததனால்பயன்பெற்றேன்வருகவென்று
மடக்கிளியைக்கைகூப்பிவணங்கினாளே. (2)
2065 ## முளைக் கதிரைக் குறுங்குடியுள் முகிலை * மூவா
மூவுலகும் கடந்து அப்பால் முதலாய் நின்ற *
அளப்பு அரிய ஆர் அமுதை அரங்கம் மேய
அந்தணனை * அந்தணர்-தம் சிந்தையானை **
விளக்கு ஒளியை மரதகத்தை திருத்தண்காவில் *
வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு *
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று *
மடக் கிளியைக் கைகூப்பி வணங்கினாளே-14
2065 ## mul̤aik katiraik kuṟuṅkuṭiyul̤ mukilai * mūvā
mūvulakum kaṭantu appāl mutalāy niṉṟa *
al̤appu ariya ār amutai araṅkam meya
antaṇaṉai * antaṇar-tam cintaiyāṉai **
vil̤akku ŏl̤iyai maratakattai tiruttaṇkāvil *
vĕḵkāvil tirumālaip pāṭak keṭṭu *
val̤arttataṉāl payaṉpĕṟṟeṉ varuka ĕṉṟu *
maṭak kil̤iyaik kaikūppi vaṇaṅkiṉāl̤e-14

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2065. “My daughter says, ‘He is a sprouting shoot with the dark color of a cloud and he stays in Thirukkurungudi. He is the first one, without any end, who came as a dwarf, grew tall and crossed over all the three worlds at Mahābali’s sacrifice. Faultless, limitless nectar, he stays in Srirangam. and in the minds of the Vediyars. Like the brightness of a lamp and precious like an emerald, he stays in Thiruthangā and Thiruvekkā. ’ When my daughter sings the praise of Thirumāl her parrot listens and sings with her. She is happy that she taught her beautiful parrot the praise of the lord and she says ‘I taught you the praise of the lord and I am happy to hear that from you. ’

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முளைக் கதிரை இளங் கதிரவனைப் போன்றவனும்; குறுங்குடியுள் திருக்குறுங்குடியில்; முகிலை மேகம் போன்றவனும்; மூவா மூவுலகும் நித்யமான அவன் மூவுலகும்; கடந்து கடந்து; அப்பால் முதலாய் அப்பால் பரமபதத்தில் முதல்வனாய்; நின்ற நிற்பவனும்; அளப்பு அளவிடமுடியாத; அரிய அரிய குணங்களையுடைய; ஆர் அமுதை அம்ருதம் போன்றவனும்; அரங்கம் மேய திருவரங்க மா நகரில் இருக்கும்; அந்தணனை பெருமானை; அந்தணர் தம் அந்தணர்களின்; சிந்தையானை சிந்தையிலிருப்பவனை; திருத்தண்காவில் திருத்தண்காவில்; விளக்கு ஒளியை விளக்கொளியாய் இருப்பவனை; மரதகத்தை மரகதப்பச்சைப் போன்றவனை; வெஃகாவில் திருவெஃகாவில்; திருமாலை திருமாலை; பாடக் கேட்டு செவியாரப் பாடக் கேட்டு; வளர்த்ததனால் வளர்த்ததனால்; பயன்பெற்றேன் பயன்பெற்றேன் என்று; மடக் கிளியை அழகிய கிளியை; கை கூப்பி கை கூப்பி; வருக; என்று வருக என்று; வணங்கினாளே வணங்கினாள்
mul̤aikkadhirai ḥe who is like a young sun; kuṛunkudiyul̤ mugilai and bright in thirukkurunkudi as a rainy cloud; mūvā mūvulagum kadandhu and ever present and beyond the three types of worlds; appāl in paramapadham; mudhalāy ninṛa being present as the leader (for both the worlds (leelā and nithya vithi),; al̤appariya who is not measurable by number (of auspicious qualities of true nature and form); ār amudhai who is like a specal nectar; arangame mĕya andhaṇanai who is the ultimate purity, present in great city of thiruvarangam; andhaṇar tham sindhaiyānai who is having ḥis abode as the mind of vaidhikas (those who live based on the words of vĕdhas),; thiruththaṇkāvil vil̤akku ol̤iyai who provides dharṣan as the deity vil̤akkol̤ip perumāl̤ in thiruththaṇkā,; maradhakaththai who is having a beautiful form like the green of gem of emerald,; vehāvil thirumālai who the sarvĕṣvaran, who is the husband of ṣrīdhĕvī, who is in reclining resting pose in thiruvekhā,; pādak kĕttu as the (parrot) sung (about ḥim), and she listened (to its pāsurams),; madak kil̤iyai looking at that beautiful parrot,; val̤arththadhanāl payan peṝĕn varuga enṛu ṣhe called it, saying  ‘ī got the fulfilment due to nurturing/raising you; come here’; kai kūppi vaṇangināl̤ and joined her hands in anjali form, and prostrated to it.

PTM 17.60

2772 தாமரைமேல்
மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை *
பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை *
தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை *
மன்னியதண் சேறை வள்ளலை * -
2772 தாமரைமேல்
மின் இடையாள் நாயகனை விண் நகருள் பொன் மலையை *
பொன்னி மணி கொழிக்கும் பூங் குடந்தைப் போர் விடையை *
தென்னன் குறுங்குடியுள் செம் பவளக் குன்றினை *
மன்னிய தண் சேறை வள்ளலை 62
2772 tāmaraimel
miṉ iṭaiyāl̤ nāyakaṉai viṇ nakarul̤ pŏṉ malaiyai *
pŏṉṉi maṇi kŏzhikkum pūṅ kuṭantaip por viṭaiyai *
tĕṉṉaṉ kuṟuṅkuṭiyul̤ cĕm paval̤ak kuṉṟiṉai *
maṉṉiya taṇ ceṟai val̤l̤alai 62

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2772. “He, the beloved of the goddess with a lighting-like waist, fights in the war like a bull. He stays on the golden mountain of Thiruvinnagar and he is the god of the flourishing Kudandai where the Ponni river brings jewel and leaves them on its banks. Majestic as a red coral hill, he is the god of Thirukkkurungudi in the Pandiyan country. He is the generous god of Thiruthancherai. (62)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமரைமேல் தாமரைப்பூவில் பிறந்தவளும்; மின் மின்னல் போன்ற; இடையாள் இடையுடையளுமான; நாயகனை பிராட்டிக்கு நாயகனும்; விண் நகருள் திருவிண்ணகரில்; பொன் பொன்; மலையை மலை போல் இருப்பவனும்; பொன்னி காவேரி நதி; மணி ரத்னங்களைக் கொண்டு; கொழிக்கும் தள்ளுமிடமான; பூங் குடந்தை அழகிய திருக்குடந்தையில்; போர் விடையை காளை போன்ற செருக்குடையவனும்; தென்னன் தென் திசையிலுள்ள; குறுங்குடியுள் திருக்குறுங்குடியிலே; செம்பவள சிவந்த பவழ; குன்றினை மலைபோல் இருப்பவனும்; மன்னிய தண் சேறை குளிர்ந்த திருச்சேறையில்; வள்ளலை இருக்கும் வள்ளலும்
thāmarai mĕl min idaiyāl̤ nāyaganai the consort of pirātti who was born on a lotus and who has a waist similar to lightning.; viṇṇagarul̤ ponmalaiyai one who is shining like a golden mountain at thiruviṇṇagar.; ponni maṇi kozhikkum pūngudandhai pŏrvidaiyai one who is reclining like a bull which has got tired after waging a war, at thirukkudandhai, where the river kāviri brings precious gems; then nan kuṛungudiyul̤ sembaval̤am kunṛinai one who is shining like a reddish coral like mountain at thirukkuṛungudi which is a distinguished divine abode in the southern direction; thaṇ sĕṛai manniya val̤l̤alai the supremely generous entity who has fittingly taken residence in the cool thiruchchĕṛai.

TVM 1.10.9

2898 நம்பியைத் தென்குறுங்குடி நின்ற * அச்
செம்பொனேதிகழும் திருமூர்த்தியை *
உம்பர்வானவர் ஆதியஞ்சோதியை *
எம்பிரானை என்சொல்லிமறப்பனோ? (2)
2898 நம்பியை * தென் குறுங்குடி நின்ற * அச்
செம்பொனே திகழும் * திரு மூர்த்தியை **
உம்பர் வானவர் * ஆதி அம் சோதியை *
எம் பிரானை * என் சொல்லி மறப்பனோ? (9)
2898 nampiyai * tĕṉ kuṟuṅkuṭi niṉṟa * ac
cĕmpŏṉe tikazhum * tiru mūrttiyai **
umpar vāṉavar * āti am cotiyai *
ĕm pirāṉai * ĕṉ cŏlli maṟappaṉo? (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

How could I ever forget my Lord of dazzling charm, the creator of the exalted beings in SriVaikuntam? He is the perfect Lord who stands in Tentirukkuṟuṅkuṭi with a beautiful form that shines like red gold.

Explanatory Notes

(i) Asked whether he would not forget the Lord like the worldlings and go in pursuit of food and material pleasures, the Āzhvār says, he just does not know how and on what grounds he can forget the Lord. By exhibiting His exquisite charm in His Arcā form at Tirukkuṟuṅkuṭi (Tirunelveli, in Tamil Nadu), He enthralled the Āzhvār. How then could he forget Him? Could it be + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் குறுங்குடி நின்ற திருக்குறுங்குடியில் நின்ற; நம்பியை எம்பெருமானை; அச்செம்பொனே திகழும் அழகிய செம்பொன் போன்ற; திரு மூர்த்தியை ஒளிமயமான மூர்த்தியை உடையவனும்; உம்பர் வானவர் நித்ய ஸூரிகளுக்கு; ஆதி காரணபூதனுமான; அம் சோதியை அழகிய ஒளி உருவனுமான; எம் பிரானை எம் பிரானை; என் சொல்லி என்ன காரணம் கூறி; மறப்பனோ? மறப்பேன்
then kuṛungudi īn thirukkuṛungudi [then- south/beautiful]; ninṛa due to him standing there; nambiyai one who is filled with all auspicious qualities; a such (even more beautiful than in paramapadham); chempon like molten-red gold; thigazhum radiant; thirumūrththiyai having divine form; umbar great; vānavar for nithyasūris; ādhi being the cause for their sustenance, etc; am most beautiful that makes others see him always; sŏdhiyai one who is known by the term -paramjyŏthi #(supremely effulgent); em pirānai one who accepted my servitude after making me experience (such wonderful form); en solli what will ī say; maṛappan to forget

TVM 3.9.2

3102 உளனாகவேயெண்ணித் தன்னையொன்றாகத்தன் செல்வத்தை *
வளனாமதிக்கும் இம்மானிடத்தைக் கவிபாடியென்? *
குளனார்கழனிசூழ் கண்ணன்குறுங்குடிமெய்ம்மையே *
உளனாயவெந்தையை எந்தைபெம்மானையொழியவே?
3102 உளனாகவே எண்ணித் * தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை *
வளனா மதிக்கும் * இம் மானிடத்தைக் கவி பாடி என் **
குளன் ஆர் கழனி சூழ் * கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *
உளனாய எந்தையை * எந்தை பெம்மானை ஒழியவே? (2)
3102 ul̤aṉākave ĕṇṇit * taṉṉai ŏṉṟākat taṉ cĕlvattai *
val̤aṉā matikkum * im māṉiṭattaik kavi pāṭi ĕṉ **
kul̤aṉ ār kazhaṉi cūzh * kaṇṇaṉ kuṟuṅkuṭi mĕymmaiye *
ul̤aṉāya ĕntaiyai * ĕntai pĕmmāṉai ŏzhiyave? (2)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Why bother composing hymns to praise feeble humans who overestimate themselves and their fleeting wealth? Instead, let's honor my great benefactor, the eternal Lord who resides in Kuṟuṅkuṭi, a place its abundant ponds and fertile fields.

Explanatory Notes

(i) The Lord’s wealth and His auspicious traits are unlimited, in dire contrast to the petty wealth possessed, for a short while, by the mortals who still think no end of themselves and their so-called possessions. It provokes the righteous indignation of the Āzhvār when he finds people running after the petty men and their equally petty wealth, as good as non-existent, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குளன் ஆர் குளங்கள் நிறைந்த; கழனி சூழ் வயல்களால் சூழ்ந்த; கண் நல் இடமான நல்ல; குறுங்குடி திருக்குறுங்குடியில்; மெய்ம்மையே மெய்யான குணங்களோடு; உளனாய எந்தையை கூடின என் தந்தையை; எந்தை பெம்மானை ஒழியவே எம்பெருமானைத் தவிர; தன்னை இறைவனை மறந்து தன்னை மட்டும்; உளனாகவே உளனாகவே; ஒன்றாக ஒரு வஸ்துவாக எண்ணி; தன் செல்வத்தை தன் அல்ப செல்வத்தை; வளனா மதிக்கும் பெரிதாக மதிக்கும்; இம் மானிடத்தை இந்த அற்ப மனிதர்களை; கவி பாடி என்? கவி பாடுவதனால் என்ன பலன்?
kul̤an ār filled with water-bodies (ponds, lakes etc); kazhani sūzh surrounded by fields; kaṇ having vast space; nal beautiful; kuṛungudiyĕ in thirukkuṛungudi; meymmaiyĕ revealing the ultimate benefit of auspicious qualities such as saulabhya; ul̤an āya one who permanently presented himself; endhaiyai my benefactor; endhai pemmānai the lord of my clan; ozhiya other than him; thannai oneself (who is as good as asath (achith) due to lack of knowledge about bhagavān); ul̤an āgavĕ to be existing; onṛāga as an entity; eṇṇi considering; than selvaththai the lowly wealth which is considered as one-s own though not belonging to oneself; val̤anā greatly distinguished; madhikkum oneself respecting/considering; i mānidaththai this human species which is very lowly; kavi pādi en what is the benefit of singing their praises?

TVM 5.5.1

3277 எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னைமுனிவதுநீர்? *
நங்கள்கோலத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
சங்கினோடும்நேமியோடும் தாமரைக்கண்களோடும் *
செங்கனிவாயொன்றினோடும் செல்கின்றதுஎன் நெஞ்சமே. (2)
3277 ## எங்ஙனேயோ அன்னைமீர்காள் *
என்னை முனிவது நீர்? *
நங்கள் கோலத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
சங்கினோடும் நேமியோடும் *
தாமரைக் கண்களோடும் *
செங்கனி வாய் ஒன்றினோடும் *
செல்கின்றது என் நெஞ்சமே * (1)
3277 ## ĕṅṅaṉeyo aṉṉaimīrkāl̤ *
ĕṉṉai muṉivatu nīr? *
naṅkal̤ kolat tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
caṅkiṉoṭum nemiyoṭum *
tāmaraik kaṇkal̤oṭum *
cĕṅkaṉi vāy ŏṉṟiṉoṭum *
cĕlkiṉṟatu ĕṉ nĕñcame * (1)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mind refuses to stray from the exquisite Lord, Nambi, whom I beheld at Tirukkurunkuti, with the conch and discus in His hands, His lotus eyes, and red lips, unparalleled. How can you, elders, fault me for this?

Explanatory Notes

(i) This pilgrim centre, deep south in Tamil Nadu, is also known as Vaiṣṇava Vāmana Kṣetra. The end-stanza of this decad also says that those who learn this decad will become Vaiṣṇavas. Further, it was at this particular shrine that Kāriyār, the father of Māṟaṉ (who later became Saint Nammāḻvār), prayed tor an issue and the Lord signified to him through the temple priest + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னை மீர்காள்! தாய்மார்களே!; நீர் என்னை நீங்கள் என்னை; முனிவது கோபித்துக் கொள்வது; எங்ஙனேயோ? பொருந்துமா?; நங்கள் கோல நம்முடைய அழகிய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; என் நெஞ்சமே என் மனமானது; சங்கினோடும் சங்கினோடும்; நேமியோடும் சக்கரத்தோடும்; தாமரை தாமரைபோன்ற; கண்களோடும் கண்களோடும்; செங்கனி சிவந்த கனிபோன்ற; வாய் ஒன்றினோடும் ஒப்பற்ற அதரத்தோடும்; செல்கின்றது செல்கின்றது. நான் என் செய்வேன்?
ŏ instead of showing your love; ennai me (who became attached to apt matter); ŏ when you are supposed to be joyful; munivadhu showing anger; enganĕ why?; nangal̤ a distinguished person, matching the greatness of our clan; kŏlam attractive; thirukkuṛungudi of thirukkuṛungudi; nambiyai nambi who is complete with all auspicious qualities; nān ī; kaṇda pin after enjoying; sanginŏdum with ṣrī pānchajanyam (conch); nĕmiyŏdum with the divine chakra (disc); thāmarai lotus like attractive; kaṇgal̤ŏdum with divine eyes; sem reddish; kani fruit like; onṛu unique; vāyinŏdum divine lips; en my; nenjam heart; selginṛadhu becoming attached; ennai me; muniyādhĕ instead of ordering

TVM 5.5.2

3278 என்நெஞ்சினால்நோக்கிக்காணீர்என்னைமுனியாதே *
தென்னன்சோலைத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
மின்னும்நூலும்குண்டலமும் மார்வில்திருமறுவும் *
மன்னுபூணும்நான்குதோளும் வந்தெங்கும்நின்றிடுமே.
3278 என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் *
என்னை முனியாதே *
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
மின்னு நூலும் குண்டலமும் *
மார்பில் திருமறுவும் *
மன்னு பூணும் நான்கு தோளும் *
வந்து எங்கும் நின்றிடுமே (2)
3278 ĕṉ nĕñciṉāl nokkik kāṇīr *
ĕṉṉai muṉiyāte *
tĕṉ naṉ colait tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
miṉṉu nūlum kuṇṭalamum *
mārpil tirumaṟuvum *
maṉṉu pūṇum nāṉku tol̤um *
vantu ĕṅkum niṉṟiṭume (2)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Instead of reproaching me, elders, it would be wise for you to understand my perspective. Ever since I beheld the Lord at Tirukkurunkuti, surrounded by beautiful orchards, with the mole on His winsome chest, the shining sacred thread, the ear-rings, and the jewels adorning His person, along with His four broad shoulders, I see His image wherever I look.

Explanatory Notes

The elders will not allow themselves to be bamboozled by the Nāyakī and they insist that they too have seen the Lord at Tirukkuṟuṅkuṭi. The Nāyakī sharply retorts that, if only they could see through her eyes, they would feel the difference all right. Wherever she turned, she saw the shining sacred thread like the lightning tearing the bosom of the cloud, the mole on the

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை முனியாதே என்னை வீணாகச் சீறாமல்; என் நெஞ்சினால் எனது நெஞ்சைக் கொண்டு; நோக்கிக் காணீர் அநுபவித்துப் பாருங்கள்; தென் நன் தென் திசையிலுள்ள நல்ல; சோலை சோலைகள் சூழ்ந்த; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; மின்னு நூலும் பளபளக்கும் பூணூலும்; குண்டலமும் குண்டலங்களும்; மார்வில் திரு மார்பில் திருமகளும்; மறுவும் மறுவும்; மன்னு பூணும் சிறந்த ஆபரணங்களும்; நான்கு தோளும் நான்கு தோள்களும்; வந்து எங்கும் நான் போகும் இடமெங்கும் வந்து; நின்றிடுமே நிற்கின்றன்வே
en nenjināl (unlike your heart which does not transform even after enjoying him) through my heart (which is emotionally attached to him); nŏkki experience; kāṇīr see;; then in south direction; nan nice; sŏlai having garden; thirukkuṛungudi in thirukkuṛungudi; nambiyai nambi (complete with all auspicious qualities); nān ī; kaṇda pin after seeing; minnum (matching his form) revealing (his splendour); nūlum divine yagyŏpavīdham (sacred thread); kuṇdalamum his divine ear rings (which are swaying in both ears); mārbil in the (distinguished) divine chest; thiru inseparable ornament; maṛuvum ṣrīvathsa (molehill); mannu fixed permanently; pūṇum various ornaments; nāngu four; thŏl̤um divine shoulders; engum wherever ī go; vandhu following me; ninṛidum stood; ninṛidum standing dumbfounded (being unable to do anything else); thisaikkum remain bewildered (not to understand what is said to her)

TVM 5.5.3

3279 நின்றிடும்திசைக்கும்நையுமென்று அன்னையரும்முனிதிர் *
குன்றமாடத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
வென்றிவில்லும்தண்டும்வாளும் சக்கரமும்சங்கமும் *
நின்றுதோன்றிக்கண்ணுள்நீங்கா நெஞ்சுள்ளும்நீங்காவே.
3279 நின்றிடும் திசைக்கும் நையும் என்று *
அன்னையரும் முனிதிர் *
குன்ற மாடத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
வென்றி வில்லும் தண்டும் வாளும் *
சக்கரமும் சங்கமும் *
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா *
நெஞ்சுள்ளும் நீங்காவே (3)
3279 niṉṟiṭum ticaikkum naiyum ĕṉṟu *
aṉṉaiyarum muṉitir *
kuṉṟa māṭat tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
vĕṉṟi villum taṇṭum vāl̤um *
cakkaramum caṅkamum *
niṉṟu toṉṟik kaṇṇul̤ nīṅkā *
nĕñcul̤l̤um nīṅkāve (3)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

You, elders, speak harshly of me, claiming I appear foolish and bewildered. Yet, know that since witnessing the Lord at Tirukkurunkuti, with its towering castles, His triumphant weapons including bow, mace, sword, conch, and discus, are deeply ingrained in my memory and cannot be erased.

Explanatory Notes

The Lord’s lovely weapons also decorate the Lord’s person just like His numerous jewels. This twin aspect is extended to the Nāyakī’s own experience, the Lord’s weapons feasting her eyes as well as her mind.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்றிடும் செயலற்று நிற்கிறாள் என்றும்; திசைக்கும் அறிவழிந்து கிடக்கிறாள் என்றும்; நையுமென்று வருந்துகிறாள் என்றும்; அன்னையரும் தாய்மார்களாகிய நீங்களும்; முனிதிர் கோபிக்கிறீர்கள்; குன்ற மாட குன்றம்போன்ற மாடங்களை உடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; வென்றி வில்லும் வெற்றி பொருந்திய வில்லும்; தண்டும் வாளும் கதையும் வாளும்; சக்கரமும் சங்கமும் சக்கரமும் சங்கும்; நின்று தோன்றி நிரந்தரமாக நின்று தோன்றி; கண்ணுள் நீங்கா கண்களைவிட்டு நீங்குவதில்லை; நெஞ்சுள்ளும் மனதிலிருந்தும்; நீங்காவே நீங்கவில்லையே
naiyum becomes weakened (due to internal thinking); enṛu saying that; annaiyarum the mothers who first instigated me into this love; munidhir you are talking unsavoury words;; kunṛam like a hill; mādam having mansions; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who enjoy seeing his brave form as said in ṣrī rāmāyaṇam āraṇya kāṇdam -tham dhrushtvā-); kaṇda pin after enjoying; venṛi victorious; villum bow; thaṇdum mace; vāl̤um sword; chakkaramum disc; sangamum conch; ninṛu standing together; kaṇṇul̤ inside my eyes; thŏnṛi appear; nīngā do not leave;; nenjul̤l̤um from inside my heart too; nīngā do not leave; kaṇṇā nīrgal̤ (her) tears; nīnga flow

TVM 5.5.4

3280 நீங்கநில்லாகண்ணநீர்களென்று அன்னையரும்முனிதிர் *
தேன்கொள்சோலைத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
பூந்தண்மாலைத்தண்டுழாயும் பொன்முடியும்வடிவும் *
பாங்குதோன்றும்பட்டும்நாணும் பாவியேன்பக்கத்தவே.
3280 நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று *
அன்னையரும் முனிதிர் *
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
பூந் தண் மாலைத் தண் துழாயும் *
பொன் முடியும் வடிவும் *
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் *
பாவியேன் பக்கத்தவே * (4)
3280 nīṅka nillā kaṇṇa nīrkal̤ ĕṉṟu *
aṉṉaiyarum muṉitir *
teṉ kŏl̤ colait tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
pūn taṇ mālait taṇ tuzhāyum *
pŏṉ muṭiyum vaṭivum *
pāṅku toṉṟum paṭṭum nāṇum *
pāviyeṉ pakkattave * (4)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

You are truly displeased with me, elders, unable to dry my tears. Since beholding the Lord at Tirukkurunkuti, surrounded by beautiful orchards, His golden crown, fragrant garland, and graceful attire, His divine form remains etched in my mind, shining brightly within me at all times.

Explanatory Notes

(i) It is but appropriate that one sheds tears of joy while contemplating His auspicious traits. And so, the Nāyakī is at a loss to understand why the elderly women should frown at her for being in tears, all the time. She says that with the glorious vision of the Iconic Form of the Lord at Tirukkuṟuṅkuṭi, ever in front of her, she can’t but shed tears of ecstasy, which + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ண நீர்கள் கண்ணீர்த் துளிகளானவை; நீங்க நில்லா நீங்காமல் இருக்கின்றன்வே; என்று அன்னையரும் என்று தாய்மார்களும்; முனிதிர் கோபிக்கிறீர்கள்; தேன் கொள் தேனையுடைய; சோலை சோலைகள் சூழ்ந்த; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; பூந் தண் மலர்ந்த குளிர்ந்த; தண் துழாயும் மாலை துளசி மாலையும்; பொன் முடியும் பொன் முடியும்; வடிவும் பாங்கு வடிவழகும் திருமேனியும்; பட்டும் பொருத்தமான பட்டாடையும்; நாணும் அரை நாணும்; தோன்றும் என் கண் முன்னே தோன்றுகிறது; பாவியேன் பாவியான என்; பக்கத்தவே என் அருகிலேயே இருக்கின்றனவே
nillā not stopping; enṛu saying that; annaiyarum you who engaged me in nambi to start with; munidhir are scolding;; thĕn honey; kol̤ containing; sŏlai having gardens; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who rejoice his supremacy); kaṇda pin after enjoying; enjoyable; thaṇ invigorating; mālai in the form of a garland; thaṇ thuzhāyum fresh thul̤asi; pon attractive, highlighting his supremacy; mudiyum crown; vadivum form (which matches that garland and crown); pāngu fitting (the divine waist); thŏnṛum appearing; pattu silk garment; nāṇum waist string (which is worn on top of the garment); pāviyĕn having me who is having the sin (of not attaining and enjoying the same, while they shine inside),; pakkaththa came in close proximity.; pakkam side (from where he may arrive); nŏkki seeing

TVM 5.5.5

3281 பக்கம்நோக்கிநிற்கும்நையுமென்று அன்னையரும்முனிதிர் *
தக்ககீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
தொக்கசோதித்தொண்டைவாயும் நீண்டபுருவங்களும் *
தக்கதாமரைக்கண்ணும் பாவியேனாவியின்மேலனவே.
3281 பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று *
அன்னையரும் முனிதிர் *
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
தொக்க சோதித் தொண்டை வாயும் *
நீண்ட புருவங்களும் *
தக்க தாமரைக் கண்ணும் * பாவியேன்
ஆவியின் மேலனவே * (5)
3281 pakkam nokki niṟkum naiyum ĕṉṟu *
aṉṉaiyarum muṉitir *
takka kīrttit tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
tŏkka cotit tŏṇṭai vāyum *
nīṇṭa puruvaṅkal̤um *
takka tāmaraik kaṇṇum * pāviyeṉ
āviyiṉ melaṉave * (5)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

While I yearn for my beloved Lord, you elders fret and scold. I search everywhere for Him, the renowned one. His radiant red lips, long brows, and luminous lotus eyes, seen at Tirukkurunkuti, are ever-present in my mind, consuming my thoughts continually.

Explanatory Notes

The Lord’s fine features with symmetrical perfection naturally enthral the Nāyakī’s mind and it meet would be that the elders looked upon her with pride instead of frowning at her.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பக்கம் அவன் எந்தப் பக்கமாக வருகின்றான் என்று; நோக்கி நிற்கும் எதிர்பார்த்திருக்கிறாளென்றும்; நையும் என்று வருந்துகிறாள் என்றும்; அன்னையரும் தாய்மார்களும்; முனிதிர் கோபிக்கிறீர்கள்; தக்க கீர்த்தி தகுந்த கீர்த்தியையுடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; தொக்க சோதி ஒன்றாகத்திரண்ட சோதியும்; தொண்டை கோவைக் கனி போன்ற; வாயும் சிவந்த அதரமும்; நீண்ட புருவங்களும் நீண்ட புருவங்களும்; தக்க தாமரை தாமரை போன்ற; கண்ணும் கண்களும்; பாவியேன் பாவியேனான என்; ஆவியின் உயிருடனுன் ஆத்மாவுடனுன்; மேலனவே கலந்து துன்புறுத்துகின்றனவே
niṛkum standing; naiyum becomes weakened (due to his non-arrival); enṛu saying that; annaiyarum you [mothers] (who first established our friendship); munidhir angrily scolding me (to eliminate the friendship);; thakka matching (his completeness); kīrththi having fame; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who is captivated by his fame); kaṇda pin after enjoying; thokka abundant; sŏdhi having radiance; thoṇdai like thoṇdai (a reddish) fruit; vāyum divine lips; nīṇda long; puruvangal̤um divine eyebrows; thakka having matching length (of those eyebrows); thāmarai lotus like attractive; kaṇṇum divine eyes; pāviyĕn me who is having the sin not to enjoy him as desired,; āviyin mĕlana reaches up to my self[soul]; nam kudikku for our clan (which is waiting to see him come); ival̤ she (who is in haste to see him)

TVM 5.5.6

3282 மேலும்வன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள் *
சோலைசூழ்தண்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
கோலநீள்கொடிமூக்கும் தாமரைக்கண்ணும்கனிவாயும் *
நீலமேனியும்நான்குதோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே.
3282 மேலும் வன் பழி நம் குடிக்கு இவள் என்று *
அன்னை காண கொடாள் *
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
கோல நீள் கொடி மூக்கும் * தாமரைக்
கண்ணும் கனி வாயும் *
நீல மேனியும் நான்கு தோளும் *
என் நெஞ்சம் நிறைந்தனவே * (6)
3282 melum vaṉ pazhi nam kuṭikku ival̤ ĕṉṟu *
aṉṉai kāṇa kŏṭāl̤ *
colai cūzh taṇ tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
kola nīl̤ kŏṭi mūkkum * tāmaraik
kaṇṇum kaṉi vāyum *
nīla meṉiyum nāṉku tol̤um *
ĕṉ nĕñcam niṟaintaṉave * (6)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mother fears that my actions might tarnish our family's reputation forever. She forbids me from seeing the revered Lord at Tirukkurunkuti. However, I have already seen Him, with His captivating long nose, red lips, deep blue lotus eyes, and broad shoulders, etched vividly in my mind.

Explanatory Notes

The Mother is apprehensive that the Nāyakī is transgressing her bounds as a ‘prapanna’ who has to await the descent of the Lord’s grace, and decides not to allow the Nāyakī to see Nampi, (The perfect Lord) at Tirukkuṟuṅkuṭi. But then, this is like erecting a bund after all the water in the basin has flown down the stream. The truth of the matter is that the Nāyakī has + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் மேலும் இப்பெண் மேலும்; நம் குடிக்கு நம் குடிப் பெருமைக்கு; வன்பழி பெருத்த பெருத்த பழியாயிருப்பவள்; என்று என்று சொல்லி; அன்னை தாயானவள்; காண நான் நம்பியை வணங்கவிடாதபடி; கொடாள் தடுக்கிறாள்; சோலை சூழ் தண் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; கோல நீள் அழகிய நீண்ட; கொடி மூக்கும் கொடிபோன்ற திருமூக்கும்; தாமரைக் கண்ணும் தாமரை போன்ற கண்களும்; கனி வாயும் சிவந்த பழம் போன்ற அதரமும்; நீல மேனியும் நீலமணி போன்ற திருமேனியும்; நான்கு தோளும் நான்கு தோள்களும்; என் நெஞ்சம் என் மனதை; நிறைந்தனவே நிறைத்து விட்டனவே
mĕlum forever (not just today); van tight (which is difficult to eliminate); pazhi embodiment of ridicule; enṛu saying that; annai mother; kāṇa to see nambi; kodāl̤ does not allow;; sŏlai garden; sūzh surround; thaṇ invigorating; thirukkuṛungudi of thirukkuṛungudi; nambiyai nambi; nān ī (who has attachment which makes me consider those ridicules to be praises); kaṇda pin after seeing; kŏlam beautiful; nīl̤ long; kodi like a kalpaka (celestial plant/tree) creeper; mūkkum divine nose; thāmarai (like the flower of such creeper) resembling a lotus; kaṇṇum divine eyes; kani (like the fruit in that flower) ripened; vāyum divine lips; neelam (contrasting such reddish lips) having a blue complexion; mĕniyum divine form; nāngu four; thŏl̤um divine shoulders; en my; nenjam heart; niṛaindhana filled.; nam our; kudikku clan

TVM 5.5.7

3283 நிறைந்தவன்பழிநங்குடிக்கிவளென்று அன்னைகாண கொடாள் *
சிறந்தகீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
நிறைந்தசோதிவெள்ளம்சூழ்ந்த நீண்டபொன்மேனி யொடும் *
நிறைந்தென்னுள்ளேநின்றொழிந்தான் நேமியங்கை யுளதே. (2)
3283 நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று *
அன்னை காண கொடாள் *
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த *
நீண்ட பொன் மேனியொடும் *
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான் *
நேமி அங்கை உளதே (7)
3283 niṟainta vaṉ pazhi nam kuṭikku ival̤ ĕṉṟu *
aṉṉai kāṇa kŏṭāl̤ *
ciṟanta kīrttit tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
niṟainta coti vĕl̤l̤am cūzhnta *
nīṇṭa pŏṉ meṉiyŏṭum *
niṟaintu ĕṉ ul̤l̤e niṉṟŏzhintāṉ *
nemi aṅkai ul̤ate (7)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mother prohibits me from seeing the esteemed Lord at Tirukkurunkuti, fearing it would bring disgrace upon our family. Yet, I have beheld Him, and He remains steadfast in my mind, resplendent in golden hue, with the graceful Discus in His lovely hand.

Explanatory Notes

As already stated in V-3-4, the rebukes of the elders who can’t see eye to eye with the Nāyakī in the matter of Godlove, sedulously nurture it and the Nāyakī only feels elated, rather flattered by such rebukes. With all His ineffable radiant beauty, the Lord has entered inside the Nāyakī and filled her entire being (Vigraha vyāpti or specific presence as in His beautiful + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இந்தப் பெண்; நம் குடிக்கு நம் குடிப் பெருமைக்கு; நிறைந்த நிறைந்த கொடிய; வன்பழி பழியாயிருப்பவள்; என்று என்று சொல்லி; அன்னை தாயானவள்; காண நான் நம்பியை வணங்கவிடாதபடி; கொடாள் தடுக்கிறாள்; சிறந்த கீர்த்தி சிறந்த கீர்த்தியையுடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; நிறைந்த நிறைந்த; சோதி வெள்ளம் சூழ்ந்த சோதி வெள்ளம் சூழ்ந்த; நீண்ட பொன் நீண்ட பொன்; மேனியொடும் மேனியோடு; நிறைந்து என்னுள்ளே நிறைந்து என்னுள்ளே; நின்று ஒழிந்தான் நின்றுவிட்டான்; நேமி சக்கரமும்; அங்கை உளதே அழகிய கையில் உள்ளதே
ival̤ she (parānguṣa nāyaki); niṛaindha complete; van very strong; pazhi ridicule; enṛu saying that; annai mother; kāṇa to see; kodāl̤ not allowing;; siṛandha glorious; kīrththi having fame; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who am captivated in such great fame); kaṇda pin after enjoying; niṛaindha complete; sŏdhi vel̤l̤am flood of radiance; sūzhndha being surrounded; nīṇda splendid; pon attractive; mĕniyŏdum with divine form; en ul̤l̤ĕ in my heart; niṛaindhu filled; ninṛu ozhindhān stood;; nĕmi divine chakra (which is a unique symbol); am beautiful; kai in the divine hand; ul̤adhu is present; kaiyul̤ in the hand; nal beautiful

TVM 5.5.8

3284 கையுள்நன்முகம்வைக்கும்நையுமென்று அன்னையரும் முனிதிர் *
மைகொள்மாடத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
செய்யதாமரைக்கண்ணுமல்குலும் சிற்றிடையும்வடிவும் *
மொய்யநீள்குழல்தாழ்ந்ததோள்களும் பாவியேன் முன்னிற்குமே.
3284 கையுள் நன் முகம் வைக்கும் நையும் என்று *
அன்னையரும் முனிதிர் *
மை கொள் மாடத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் *
சிற்றிடையும் வடிவும் *
மொய்ய நீள் குழல் தாழ்ந்த தோள்களும் *
பாவியேன் முன் நிற்குமே (8)
3284 kaiyul̤ naṉ mukam vaikkum naiyum ĕṉṟu *
aṉṉaiyarum muṉitir *
mai kŏl̤ māṭat tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
cĕyya tāmaraik kaṇṇum alkulum *
ciṟṟiṭaiyum vaṭivum *
mŏyya nīl̤ kuzhal tāzhnta tol̤kal̤um *
pāviyeṉ muṉ niṟkume (8)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

You, elders, express concern as I seem to decline, covering my lovely face with my hands. Yet, since beholding the Lord at Tirukkurunkuti with its dark castles, His eyes resembling the red lotus, His captivating form, slender waist, and broad shoulders with locks of hair cascading upon them, remain vivid in my mind.

Explanatory Notes

(i) Seated inside the hollow of a tamarind tree in the quadrangle of the temple at Kurukūr (Āzhvār Tirunakari), the Saint enjoyed the vision of the Lord, enshrined at Tirukkuṟuṅkuṭi, as set above. Carried away by the splendour of the vision, the Nāyakī was, however, tempted to clasp the Lord of such exquisite charm. Her inability to do so makes her very sad and she, therefore, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நன் முகம் நல்ல மென்மையான முகத்தை; கையுள் வைக்கும் கைக்குள் வைக்கிறாள்; நையும் என்று வருந்துகிறாள் என்று சொல்லி; அன்னையரும் தாயாராகிய நீங்கள்; முனிதிர் கோபிக்கிறீர்கள்; மை கொள் கருத்த நிறம் கொண்ட; மாட மாடங்களையுடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; செய்ய தாமரை சிவந்த தாமரை போன்ற; கண்ணும் அல்குலும் கண்களும் அல்குலும்; சிற்றிடையும் சிறிய இடையும்; வடிவும் மொய்ய வடிவழகும் செறிந்த; நீள்குழல் நீண்ட முடியும்; தாழ்ந்த தோள்களும் தாழ்ந்த தோள்களும்; பாவியேன் பாவியான என் கண்; முன் நிற்குமே முன்னே நிற்கின்றனவே
mugam face; vaikkum placing; naiyum (moreover) becomes weakened; enṛu saying that; annaiyarum you mothers who put in the efforts initially leading to this weakness in me; munidhir showing your anger;; mai blackish complexion; kol̤ having; mādam having mansions; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who am naturally weak); kaṇda pin after seeing; seyya reddish; thāmarai lotus like; kaṇṇum divine eyes; alkulum (enjoyable) hip; siṛu thin (to be contained in a fist); idaiyum waist; vadivum the form (which is the abode for these beautiful aspects); moy density; kol̤ having; nīl̤ lengthy; kuzhal hair; thāzhndha lowering; thŏl̤gal̤um shoulders; pāviyĕn ī who am having sin (which stops me from enjoying those desirable aspects); mun in front of me; niṛkum stood.; mun in front; ninṛāy stood

TVM 5.5.9

3285 முன்னின்றாயென்றுதோழிமார்களும் அன்னையரும் முனிதிர் *
மன்னுமாடத்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
சென்னிநீண்முடியாதியாய உலப்பிலணிகலத்தன் *
கன்னல்பாலமுதாகிவந்து என்நெஞ்சம்கழியானே.
3285 முன் நின்றாய் என்று தோழிமார்களும் *
அன்னையரும் முனிதிர் *
மன்னு மாடத் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
சென்னி நீள் முடி ஆதி ஆய *
உலப்பு இல் அணிகலத்தன் *
கன்னல் பால் அமுது ஆகி வந்து * என்
நெஞ்சம் கழியானே (9)
3285 muṉ niṉṟāy ĕṉṟu tozhimārkal̤um *
aṉṉaiyarum muṉitir *
maṉṉu māṭat tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
cĕṉṉi nīl̤ muṭi āti āya *
ulappu il aṇikalattaṉ *
kaṉṉal pāl amutu āki vantu * ĕṉ
nĕñcam kazhiyāṉe (9)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

You, my companions and elders, reprimand me for my public display. Yet, I cannot forget the sight of the Lord at Tirukkurunkuti, adorned with majestic mansions, wearing a long crown and countless other beautiful jewels. Since that moment, this grand spectacle has remained firmly entrenched in my mind, akin to the sweetness of cane-juice, milk, and nectar.

Explanatory Notes

The mates and the elders would want the Nāyakī to keep indoors, consistent with feminine modesty. But she says that the exquisite charm of the Lord at Tirukkuṟuṅkuṭi, bedecked with a vast array of lovely jewels, has already taken possession of her and that she is not, therefore, in a position to conform to the ordinary norms of feminine conduct. With the Lord in front

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நின்றாய் பலர் காண முன்னே வந்து நிற்கின்றாய்; என்று தோழிமார்களும் என்று தோழிகளும்; அன்னையரும் தாய்மாரும்; முனிதிர் கோபிக்கிறீர்கள்; மன்னு மாட நிலைபெற்ற மாடங்களையுடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; சென்னி தலையில் தலையில் அணிந்திருக்கும்; நீள் முடி ஆதியாய நீண்டகிரீடம் முதலிய; உலப்பில் கணக்கிலடங்காத; அணி கலத்தன் ஆபரணங்களையுடைய எம்பெருமான்; கன்னல் பால் கன்னலும் பாலும்; அமுது ஆகி அமுதமும் போலே பரம போக்யனாய்; வந்து என் நெஞ்சம் மனக்கண் முன் வந்து; கழியானே நீங்காமல் இருக்கிறானே
enṛu saying that; thŏzhimārgal̤um the friends (who suffer along); annaiyarum mothers (who seek out the well-being); munidhir were angry [on me];; mannum firmly rooted; mādam having mansions; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who am setting out to go without caring for my femininity); kaṇda pin after seeing; senni on the head; nīl̤ tall (which indicates supremacy over everyone); mudi divine crown; ādhiyāy etc; ulappil countless; aṇi wore; kalaththan has ornaments; kannal sugar; pāl milk; amudhu like nectar; āgi being infinitely enjoyable; vandhu came; en my; nenjam heart; kazhiyān is not leaving; ival̤ she; kazhiya to eliminate

TVM 5.5.10

3286 கழியமிக்கதோர்காதலளிவளென்று அன்னைகாண கொடாள் *
வழுவில்கீர்த்தித்திருக்குறுங்குடிநம்பியை நான்கண்டபின் *
குழுமித்தேவர்குழாங்கள் கைதொழச்சோதிவெள்ளத்தினுள்ளே *
எழுவதோருருவென்னெஞ்சுள்ளெழும் ஆர்க்குமறிவரிதே.
3286 கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று *
அன்னை காண கொடாள் *
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி
நம்பியை * நான் கண்டபின் **
குழுமித் தேவர் குழாங்கள் * கைதொழச்
சோதி வெள்ளத்தினுள்ளே *
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும் *
ஆர்க்கும் அறிவு அரிதே * (10)
3286 kazhiya mikkatu or kātalal̤ ival̤ ĕṉṟu *
aṉṉai kāṇa kŏṭāl̤ *
vazhu il kīrttit tirukkuṟuṅkuṭi
nampiyai * nāṉ kaṇṭapiṉ **
kuzhumit tevar kuzhāṅkal̤ * kaitŏzhac
coti vĕl̤l̤attiṉul̤l̤e *
ĕzhuvatu or uru ĕṉ nĕñcul̤ ĕzhum *
ārkkum aṟivu arite * (10)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

My mother, sensing my fervent devotion to God, forbids me from visiting the Lord at Tirukkurunkuti anymore. But what does it matter to me? Once I beheld Nambi, the radiant Lord praised by the powerful Nithyasuris, His fame flawless, He shines forever in my heart, a sentiment none here can grasp.

Explanatory Notes

Surely, this is not a case of “out of sight, out of mind” or the proverbial mellowing of sorrow due to separation, with the passage of time. The Lord shines perpetually, in all His resplendence, before the Nāyakī’s mind, a grand spectacle attracting even the denizens of spiritual world, clasping the hands of one another, so as not to be swept off by the Lord’s brilliance

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவள் இப்பெண்பிள்ளை; கழிய மிக்கது ஓர் எல்லை மீறிய; காதலள் என்று காதலை உடையவள் என்று; அன்னை தாயானவள்; காண நான் நம்பியை வணங்கவிடாதபடி; கொடாள் தடுக்கிறாள்; வழுவில் கீர்த்தி குற்றமில்லாத கீர்த்தியையுடைய; திருக் குறுங்குடி திருக்குறுங்குடியில் இருக்கும்; நம்பியை எம்பெருமானை; நான் கண்டபின் நான் வணங்கி அநுபவித்த பின்; தேவர் குழாங்கள் நித்யஸூரிகளின் கூட்டங்கள்; குழுமி கைதொழ கூடி வணங்கி அநுபவிக்கும்; சோதி வெள்ளத்தின் சோதி வெள்ளத்தின்; உள்ளே எழுவது நடுவிலே தோன்றுகிற; ஓர் உரு என் ஓர் ஒப்பற்ற உருவம் என்; நெஞ்சுள் எழும் மனதுக்குள்ளே தோன்றுகிறது; ஆர்க்கும் அது எப்படிப்பட்ட ஞானியர்க்கும்; அறிவு அரிதே அறிவது அரிதே
mikkadhu ŏr great; kādhalal̤ one who has love; enṛu saying that; annai mother; kāṇa to see (nambi); kodāl̤ does not allow;; vazhuvil unimpaired; kīrththi having glories; thirukkuṛungudi nambiyai thirukkuṛungudi nambi; nān ī (who am having overwhelming affection); kaṇda pin after seeing; dhĕvar kuzhāngal̤ groups of nithyasūris; kuzhumi associating with each other; kai thozha to be served and enjoyed; sŏdhi vel̤l̤aththin ul̤l̤ĕ amidst a flood of radiance; ezhuvadhu appearing in a raised manner; ŏr unique; uru the divine form, which is the apt destiny; en my; nenjul̤ in the heart; ezhum appeared;; ārkkum for even those who are very wise; aṛivu to know (through self effort); aridhu difficult; aṛivu to know; ariya impossible

TVM 5.5.11

3287 அறிவரியபிரானை ஆழியங்கையனையேயலற்றி *
நறியநல்மலர்நாடி நன்குருகூர்ச்சடகோபன்சொன்ன *
குறிகொளாயிரத்துள்இவைபத்தும் திருக்குறுங்குடியதன்மேல் *
அறியக்கற்றுவல்லார்வைட்டணவர் ஆழ்கடல்ஞாலத்துள்ளே. (2)
3287 ## அறிவு அரிய பிரானை *
ஆழி அங்கையனையே அலற்றி *
நறிய நன் மலர் நாடி *
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன **
குறி கொள் ஆயிரத்துள் இவை பத்தும் *
திருக்குறுங்குடி அதன்மேல் *
அறியக் கற்று வல்லார்
வைட்டவர் * ஆழ் கடல் ஞாலத்துள்ளே * (11)
3287 ## aṟivu ariya pirāṉai *
āzhi aṅkaiyaṉaiye alaṟṟi *
naṟiya naṉ malar nāṭi *
naṉ kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
kuṟi kŏl̤ āyirattul̤ ivai pattum *
tirukkuṟuṅkuṭi ataṉmel *
aṟiyak kaṟṟu vallār
vaiṭṭavar * āzh kaṭal ñālattul̤l̤e * (11)

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

Studying these ten songs from Tirukkurunkudi, celebrating the magnificence of Lord Nambi's form, jewels, and weapons, among a thousand composed by Kurukur Catakopan, renowned for fragrant flowers, and passionately chanting the glory of the incomprehensible Lord who holds the discus, earns praise as devout souls in this vast world.

Explanatory Notes

(i) Fragrant flowers fine: This could refer to either these hymns full of fragrance, like unto a collection of choice flowers of sweet fragrance of soulful flowers offered in a genuine spirit, emitting the fragrance of self-less service.

(ii) Chaste Vaiṣṇavas: Those who fully appreciate, despite their stay in this arid land of samsāra, the sanctity of the pilgrim centres,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அறிவு அரிய தங்கள் முயற்சியால் அறியமுடியாத; பிரானை எம்பெருமானை; ஆழி சக்கரத்தை; அம் கையனையே அழகிய கையிலுடையவனையே; அலற்றி வாயாரப் பேசி; நறிய நன் மலர் நாடி நல்ல மணம் கமழும் பூக்களை நாடி; நன் குருகூர் நல்ல திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; திருக்குறுங்குடி திருக்குறுங்குடியை; அதன் மேல் குறித்து; சொன்ன அருளிச்செய்த; குறி கொள் எம்பெருமானின் குறிகளை உடைய; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களும்; அறியக் கற்று ஞானம் உண்டாகும்படி கற்று; வல்லார் ஓத வல்லவர்கள்; ஆழ்கடல் ஞாலத்துள்ளே கடல் சூழ்ந்த பூலோகத்தில்; வைட்டணவர் வைணவர்களாகக் கொண்டாடப்படுவார்கள்
pirānai being lord; āzhi the divine chakra (which reveals that lordship); am beautiful; kaiyanai having in his divine hand; alaṝi talk unceasingly (highlighting his love); naṛiya having ultimate fragrance; nal best; malar like flowers; nādi seeking out; nan having distinguished gyānam etc which gives qualification to enjoy [bhagavān]; kurugūr the leader of āzhvārthirunuagari; satakŏpan nammāzhvār; sonna blessed; āyiraththul̤ among the thousand pāsurams; kuṛi the symbols in the form, weapons and ornaments; kol̤ having; thirukkuṛungudi adhan mĕl ivai paththum this decad about thirukkuṛungudi; aṛiya to have their knowledge shining; kaṝu learn; vallār those who can meditate upon the meanings; āzh deep; kadal surrounded by ocean; gyālaththu ul̤l̤ĕ in the earth; vaittaṇavar will live, having distinguished relationship with bhagavān and experience of him.; kadal surrounded by ocean; gyālam earth