PT 9.5.8

மன்மதன் துன்புறுத்துமுன் குறுங்குடிக்கு அனுப்புங்கள்

1795 கேவலமன்றுகடலினோசை
கேண்மின்கள்ஆயன்கைஆம்பல்வந்து * என்
ஆவியளவும் அணைந்துநிற்கும்
அன்றியும்ஐந்துகணைதெரிந்திட்டு *
ஏவலம்காட்டிஇவனொருவன்
இப்படியேபுகுந்துஎய்திடாமுன் *
கோவலர்கூத்தன்குறிப்பறிந்து
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1795 kevalam aṉṟu kaṭaliṉ ocai *
kel̤miṉkal̤ āyaṉ kai āmpal vantu * ĕṉ
āvi al̤avum aṇaintu niṟkum *
aṉṟiyum aintu kaṇai tĕrintiṭṭu **
e valam kāṭṭi ivaṉ ŏruvaṉ *
ippaṭiye pukuntu ĕytiṭāmuṉ *
kovalar kūttaṉ kuṟippu aṟintu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-8

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1795. She says, “Listen, it is not only the sound of the ocean that hurts me, or the hands that are like ambal flowers of the cowherd that come and pain my life. Kāma may come and shoot his five flower arrows at me. Before that happens, find out what the dancer, the cowherd, thinks and take me and leave me in Thirukkurungudi. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடலின் ஓசை கடலின் ஓசை; கேவலம் அன்று ஸாமான்யமன்று; கேள்மின்கள் கேளுங்கள்; ஆயன் கண்ணனின்; கை கையிலிருக்கும்; ஆம்பல் குழலோசை; வந்து என் வந்து என்; ஆவி அளவும் பிராணன் அளவும்; அணைந்து அணைந்து; நிற்கும் நிற்கிறது; அன்றியும் அதற்கு மேலும்; இவன் ஒருவன் மன்மதனென்கிற இவன்; ஐந்து கணை ஐந்து அம்புகளை; தெரிந்திட்டு நன்றாக ஆராய்ந்து; ஏ வலங் பிரயோகிக்க வல்ல; காட்டி திறனை காட்டி; இப்படியே புகுந்து என் மேல்; எய்திடா முன் எய்துவதற்கு முன்; கோவலர் கோபாலர்கள்; கூத்தன் கூத்தனான; குறிப்பு கண்ணனின் குறிப்பு; அறிந்து அறிந்து; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்