PT 9.6.2

பாம்பணையான் ஊர் குறுங்குடி

1799 துங்காராரவத்திரைவந்துலவத் தொடுகடலுள் *
பொங்காரரவில்துயிலும் புனிதரூர்போலும் *
செங்காலன்னம் திகழ்தண்பணையில்பெடையோடும் *
கொங்கார்கமலத்தலரில்சேரும்குறுங்குடியே.
1799 tuṅka ār aravat * tirai vantu ulava * tŏṭu kaṭalul̤
pŏṅku ār aravil tuyilum * puṉitar ūrpolum- **
cĕṅ kāl aṉṉam * tikazh taṇ paṇaiyil pĕṭaiyoṭum *
kŏṅku ār kamalattu * alaril cerum kuṟuṅkuṭiye 2

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1799. Our pure lord resting on Adisesha on the ocean where the waves never cease rolling stays in Thirukkurungudi where male red-legged swans live with their mates on the beautiful lotuses that drip with honey in cool flourishing fields.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செங் கால் சிவந்தகால்களையுடைய; அன்னம் அன்னம்; திகழ் தண் அழகிய குளிர்ந்த; பணையில் நீர் நிலைகளின்; பெடையோடும் பெடையோடு; கொங்கு ஆர் மணம்மிக்க; கமலத்து அலரில் தாமரைப்பூவில்; சேரும் சேர்ந்துவாழுமிடமான; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; துங்கம் ஆர் ஓங்கிய; அரவ பெரும் ஆரவாரமுள்ள; திரை அலைகள்; வந்து உலவ வந்து உலாவ; தொடு கடலுள் ஆழ்ந்த கடலில்; பொங்கு ஆர் பெரிய சரீரமுடைய; அரவில் ஆதிசேஷன் மீது; துயிலும் துயிலும்; புனிதர் எம்பெருமானின்; ஊர் போலும் ஊர் போலும்