PT 9.5.5

பிரிவுத்துயர் வாட்டுகிறது: என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்

1792 திண்திமிலேற்றின்மணியும்ஆயன்
தீங்குழலோசையும், தென்றலோடு *
கொண்டதோர்மாலையும் அந்தியீன்ற
கோலவிளம்பிறையோடு கூடி *
பண்டையவல்லஇவைநமக்குப்
பாவியேனாவியைவாட்டம்செய்யும் *
கொண்டல்மணிநிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1792 tiṇ timil eṟṟiṉ maṇiyum * āyaṉ
tīm kuzhal ŏcaiyum tĕṉṟaloṭu *
kŏṇṭatu or mālaiyum anti īṉṟa *
kola il̤ampiṟaiyoṭu kūṭi **
paṇṭaiya alla ivai namakku *
pāviyeṉ āviyai vāṭṭam cĕyyum *
kŏṇṭal maṇi niṟa vaṇṇar maṉṉu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-5

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1792. She says, “In the evening I hear the bells on the necks of the bulls and the sweet music of the flute of the cowherds. The breeze blows and the crescent moon shines. They were always harmless before but now they all join together and hurt me. I have done bad karmā. Take me and leave me in Thirukurungudi where the lustrous cloud-colored lord stays. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திண் திமில் திடமான முசுப்புடைய; ஏற்றின் காளையின்; மணியும் கழுத்து மணி ஓசையும்; ஆயன் கண்ணனின்; தீங்குழல் ஓசையும் இனிய குழலோசையும்; தென்றலோடு தென்றல் காற்றோடு; கொண்டது ஓர் சேர்ந்த ஒரு; மாலையும் மாலைப் பொழுதும் ஆகியவை; ஈன்ற பிறப்பித்தது போல; கோல இளம் அழகிய இளம்பிறை; பிறையோடு கூடி சந்திரனையும் கூட்டிக்கொண்டு; அந்தி ஈன்ற அந்திப்பொழுது தோற்றுவிக்கிற; இவை இவை முன்பு; நமக்கு என் விஷயத்திலே; பண்டைய முன்பு இருந்தது; அல்ல போலில்லை; பாவியேன் பாவியான; ஆவியை என் உயிரை; வாட்டம் செய்யும் துடிக்கச்செய்கின்றன; கொண்டல் மேகம் போன்றும்; மணி நிற நீல மணி போன்றும்; வண்ணர் நிறமுடைய பெருமாள்; குறுங்குடிக்கே பொருந்தி வாழப்பெற்ற திருகுறுங்குடிக்கே; என்னை உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்