PT 1.6.8

எந்தாய்! உன் திருவடியைச் சேர்ந்துவிட்டேன்

1005 ஏவினார்கலியார்நலிகவென்று என்மேல்
எங்ஙனேவாழுமாறு? * ஐவர்
கோவினார் செய்யும்கொடுமையைமடித்தேன்
குறுங்குடிநெடுங்கடல்வண்ணா! *
பாவினாரின்சொல் பன்மலர்கொண்டு உன்
பாதமேபரவிநான் பணிந்து * என்
நாவினால்வந்துஉன்திருவடியடைந்தேன்
நைமிசாரணியத்துள்எந்தாய்! (2)
PT.1.6.8
1005 eviṉār kaliyār nalika ĕṉṟu * ĕṉmel ĕṅṅaṉe vāzhum āṟu? * aivar
koviṉār cĕyyum kŏṭumaiyai maṭitteṉ * kuṟuṅkuṭi nĕṭuṅ kaṭal vaṇṇā **
pāviṉ ār iṉ cŏl pal malar kŏṇṭu * uṉ pātame paravi nāṉ paṇintu * ĕṉ
nāviṉāl vantu uṉ tiruvaṭi aṭainteṉ * naimicāraṇiyattul̤ ĕntāy-8

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1005. O my Father in Naimiśāraṇyam, O Lord of Kurungudi, with a hue deep as the vast ocean. In this age of Kali, the five senses rose against me at its command, shouting, “Crush him!” What path to life was left for them now? But I pushed aside their cruelty, and with this tongue of mine, I praised You in sweet words, woven in graceful meter, offering many flowers. I bowed down and worshipped Your feet, and now, I have come and surrendered to Your divine feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நைமிசாரணியத்துள் நைமிசாரணியத்தில் இருக்கும்; எந்தாய்! என் தந்தையே!; குறுங்குடி திருக்குறுங்குடியிலிருப்பவனே!; நெடுங்கடல் பெரிய ஆழ்ந்த கடல் போல்; வண்ணா! நிறமுடையவனே!; கலியார் கலிகாலமானது திருமங்கை மன்னனை; நலிக என்று துன்புறுத்துங்கள் என்று; என் மேல் ஐவர் ஐம்புலன்களை என் மேல்; ஏவினார் ஏவினார்; எங்ஙனே அந்த ஐம்புலன்கள்; வாழும் ஆறு? இனி பிழைக்க வழி ஏது?; கோவினார் ஆளவந்த; செய்யும் அந்த இந்திரியங்களின்; கொடுமையை கொடுமையை; மடித்தேன் அப்புறபடுத்திவிட்டேன்; என் நாவினால் எனது நாவினாலே; பாவின் ஆர் நல்ல சந்தங்கள் நிறைந்த; இன் சொல் இனிய சொல்; பல் மலர் கொண்டு மலர் பலவற்றை கொண்டு; உன் பாதமே உன் பாதnங்களில்; நான் பரவி நான் வந்து; பணிந்து வந்து பணிந்து வீழ்ந்து; உன் திருவடி உன் திருவடிகளை; அடைந்தேன் சரணமடைந்தேன்
kuṛungudi one who mercifully resides in thirukkuṛungudi; nedu vast and deep; kadal the ocean-s; vaṇṇā having beautiful form with such complexion!; naimisāriṇayaththul endhāy ŏh my lord, who is residing in ṣrī naimaiṣāraṇiyam!; kaliyār age of kali; naliga enṛu saying -torment him-; en mĕl on me; aivar the five senses; ĕvinār sent;; vāzhum āṛu enganĕ ḥow will those senses survive?; kŏvinār seyyum to be done by those popular five senses; kodumaiyai cruel acts; madiththĕn driving away; en nāvināl with my tongue; with good meters; ār filled; in sol sweet words; pal malar many flowers; koṇdu earned; paravi hailed; un pādhamĕ paṇindhu falling at your highness- divine feet; un thiruvadi nān adaindhĕn ī surrendered at your divine feet.