PT 9.5.10

என் மனத்தில் இருப்பவன் குறுங்குடிப் பெருமான்

1797 செற்றவன்தென்னிலங்கைமலங்கத்
தேவர்பிரான், திருமாமகளைப்
பெற்றும் * என்நெஞ்சகம்கோயில்கொண்ட
பேரருளாளன், பெருமைபேசக்
கற்றவன் * காமருசீர்க்கலியன்
கண்ணகத்தும்மனத்தும்அகலாக்
கொற்றவன் * முற்றுலகாளிநின்ற
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)
1797 ## செற்றவன் தென் இலங்கை மலங்கத் *
தேவர் பிரான் திரு மா மகளைப்
பெற்றும் * என் நெஞ்சகம் கோயில் கொண்ட *
பேர் அருளாளன் பெருமை பேசக்
கற்றவன் ** காமரு சீர்க் கலியன் *
கண் அகத்தும் மனத்தும் அகலாக்
கொற்றவன் * முற்று உலகு ஆளி நின்ற *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 10
1797 ## cĕṟṟavaṉ tĕṉ ilaṅkai malaṅkat *
tevar pirāṉ tiru mā makal̤aip
pĕṟṟum * ĕṉ nĕñcakam koyil kŏṇṭa *
per-arul̤āl̤aṉ pĕrumai pecak
kaṟṟavaṉ ** kāmaru cīrk kaliyaṉ *
kaṇ akattum maṉattum akalāk
kŏṟṟavaṉ * muṟṟu ulaku āl̤i niṉṟa *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-10

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1797. She says, “The god of the gods who keeps the goddess Lakshmi with him, the generous lord who destroyed southern Lankā, entered the heart and the eyes of famous Kaliyan who composed pāsurams that praise the victorious god, ruler of the whole world. Take me to Thirukkurungudi where he stays and leave me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
செற்றவன் சத்ருவான ராவணனின்; தென் இலங்கை தென் இலங்கையை; மலங்க கலங்கப் பண்ணின; தேவர் பிரான் தேவர்களின் பெருமான்; திரு மா மகளை திரு மா மகளை; பெற்றும் அடைந்திருந்த போதும்; என் நெஞ்சகம் என் நெஞ்சத்தையும்; கோயில் கொண்ட கோயில் கொண்டான்; பேர் அருளாளன் பேர்அருளாளன்; பெருமை பெருமையை; பேச கற்றவன் பேச வல்லவரான; காமரு சீர் நற்குணங்களையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வாரின்; கண் அகத்தும் கண்ணிலிருந்தும்; மனத்தும் மனத்திலிருந்தும்; அகலா நீங்காத; கொற்றவன் அரசனானவன்; முற்று உலகு மூவுலகையும்; ஆளி ஆளும் பெருமான்; நின்ற இருக்குமிடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்

Āchārya Vyākyānam

(தனியாக வேறே பலன் சொல்ல வேண்டாமே -இங்கே உய்த்திடச் செய்வதே பலம் )

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவபிரான் திரு மா மகளைப் பெற்றும் என்னெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் பெருமை பேசக் கற்றவன் காமரு சீர்க் கலியன் கண்ணகத்தும் மனத்தும் அகலாக் கொற்றவன் முற்றுலக ஆளி   நின்ற குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் —9-5-10-

சீர்-ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ –

செற்றவன் தென்னிலங்கை மலங்கத் தேவ பிரான்

+ Read more