PT 9.5.6

குறுங்குடிக்கு பெருமானை நான் மறக்கவே மாட்டேன்

1793 எல்லியும்நன்பகலும்இருந்தே
ஏசிலும்ஏசுகஏந்திழையார் *
நல்லரவர்திறம்நாமறியோம்
நாண்மடமச்சம்நமக்கிங்கில்லை *
வல்லனசொல்லிமகிழ்வரேனும்
மாமணிவண்ணரைநாம்மறவோம் *
கொல்லைவளரிளமுல்லைபுல்கு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1793 ĕlliyum naṉ pakalum irunte *
ecilum ecuka entizhaiyār *
nallar avar tiṟam nām aṟiyom *
nāṇ maṭam accam namakku iṅku illai **
vallaṉa cŏlli makizhvarelum *
mā maṇi vaṇṇarai nām maṟavom *
kŏllai val̤ar il̤a mullai pulku *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-6

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1793. She says, “Girls ornamented with beautiful jewels gossip about me night and day. Let them do what they want. I am not worried. They are good people—I don’t know what is wrong with them. I am not shy, naive or afraid. They may make themselves happy saying things about me, but I won’t forget the sapphire-colored lord. Take me and leave me in Thirukkurungudi where soft mullai blossoms bloom luxuriantly in the backyards of the houses. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லியும் நன் பகலும் நல்ல இரவும் பகலும்; இருந்தே எப்போதும்; ஏசிலும் ஏசுக என்னை ஏசினால் ஏசட்டும்; ஏந்திழையார் ஆபரணங்களணிந்துள்ள பெண்கள்; நல்லர் அவர்களே நல்லவர்களாக இருக்கட்டும்; அவர் திறம் அவர்கள் திறமையை; நாம் அறியோம் நான் அறியேன்; நாண் மடம் அச்சம் அச்சம் மடம் நாணம் பயிற்பு; நமக்கு இங்கு ஆகிய பெண்மை குணங்கள்; இல்லை எனக்கு இல்லை என்று; வல்லன சொல்லி வாய் கூசாமல் சொல்லி; மகிழ்வரேலும் சிரித்தார்களேயாகிலும்; மா மணி வண்ணரை மா மணி வண்ணரான பெருமாளை; நாம் மறவோம் நாம் மறக்க மாட்டோம்; கொல்லை வளர் தோட்டங்களிலே வளரும்; இள முல்லை புல்கு இளமுல்லை கொடிகளுள்ள; குறுங்குடிக்கே என்னை திருகுறுங்குடிக்கே என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்