PT 9.6.8

பக்தர்காள்! அன்புடன் குறுங்குடி அடையுங்கள்

1805 நாராரிண்டை நாண்மலர்கொண்டுநம்தமர்காள்! *
ஆராஅன்போடு எம்பெருமானூரடைமின்கள் *
தாராவாரும் வார்புனல்மேய்ந்துவயல்வாழும் *
கூர்வாய்நாரை பேடையொடாடும்குறுங்குடியே.
1805 nār ār iṇṭai * nāl̤ malar kŏṇṭu nam tamarkāl̤ *
ārā aṉpoṭu * ĕmpĕrumāṉ ūra-aṭaimiṉkal̤- **
tārā ārum * vār puṉal meyntu vayal vāzhum *
kūr vāy nārai * peṭaiyŏṭu āṭum kuṟuṅkuṭiye 8

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1805. O friends, take fresh flowers strung together into garlands and go lovingly to Thirukkurungudi and worship the highest lord there where male herons with sharp beaks live with their mates in the fields and eat fish from the water while sharp-beaked nārai birds play with their mates.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நம் தமர்காள்! பக்தர்களே! நீங்கள்; நார் ஆர் நாரால் தொடுத்த; இண்டை மாலைகளையும்; நாள் அப்போதலர்ந்த; மலர் பூக்களையும்; கொண்டு எடுத்துக் கொண்டு; ஆரா அன்போடு பரம பக்தியோடு; தாரா அங்கு தாரா என்னும்; ஆரும் பறவைகள்; வார் புனல் நீர் நிலங்களில்; மேய்ந்து மேய்ந்து; வயல் வாழும் வயல்களில் வாழும்; கூர் வாய் கூரிய அலகையுடைய; நாரை நாரை; பேடையோடு ஆடும் பெடையோடு ஆடும்; எம் பெருமான் எம்பெருமானின்; ஊர் ஊரான; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின்கள் அடையுங்கள்