PT 9.6.3

தொண்டர்காள்! குறுங்குடிக்கு வருக; வாழ்வு பெறுக

1800 வாழக்கண்டோம்வந்துகாண்மின்தொண்டீர்காள்! *
கேழல் செங்கண்மாமுகில்வண்ணர்மருவுமூர் *
ஏழைச்செங்கால் இன்துணைநாரைக்குஇரைதேடி *
கூழைப்பார்வைக் கார்வயல்மேயும்குறுங்குடியே.
1800 vāzhak kaṇṭom * vantu kāṇmiṉ tŏṇṭīrkāl̤! *
kezhal cĕṅkaṇ * mā mukil vaṇṇar maruvum ūr **
ezhaic cĕṅkāl * iṉ tuṇai nāraikku irai teṭi *
kūzhaip pārvaik * kār vayal meyum kuṟuṅkuṭiye-3

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1800. We have found the way to be saved. Thirumāl O devotees, come and see! Our lord with a dark cloud-color and beautiful eyes who took the form of a boar to save the earth goddess from the underworld stays in Thirukkurungudi where a heron searches for food in the flourishing paddy fields to take to his beloved red-legged mate.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்காள்! தொண்டர்களே!; வாழக் கண்டோம் வாழ வழி கண்டோம்; வந்து காண்மின் வந்து பாருங்கள்; ஏழை மிருதுவான; செங்கால் சிவந்தகால்களுயுடைய; இன் துணை நாரைக்கு இனிய ஆண் நாரைக்கு; இரை தேடி உணவு கொண்டு வந்து கொடுக்கும்; கூழை க்ருத்ரிமமான; பார்வை பார்வையையுடைய பெண் நாரை; கார் வயல் செழித்த வயல்களிலே; மேயும் மேய்ந்து நிற்கும்; கேழல் வராஹமாக வந்த பெருமான்; செங்கண் சிவந்த கண்களுடையவராய்; மா முகில் வண்ணர் மேக வண்ணராய்; மருவும் ஊர் விரும்பி வாழும் ஊர்; குறுங்குடியே திருக்குறுங்குடியே!