PT 9.6.10

பாடல்களைப் பாடுக: பாவம் நில்லா

1807 சிலையால்இலங்கைசெற்றான் மற்றோர்சினவேழம் *
கொலையார்கொம்புகொண்டான்மேய குறுங்குடிமேல் *
கலையார்பனுவல்வல்லான் கலியனொலிமாலை *
நிலையார்பாடல்பாடப் பாவம்நில்லாவே. (2)
1807 ## cilaiyāl ilaṅkai cĕṟṟāṉ * maṟṟu or ciṉa vezham *
kŏlai ār kŏmpu kŏṇṭāṉ meya * kuṟuṅkuṭimel **
kalai ār paṉuval vallāṉ * kaliyaṉ ŏli mālai *
nilai ār pāṭal pāṭap * pāvam nillāve 10

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1807. The good poet Kaliyan composed a musical garland of beautiful pāsurams on the lord of Thirukkurungudi who shot arrows, destroying Lankā and who killed the angry elephant Kuvalayābeedam with murderous tusks. If devotees learn and sing this musical garland of pāsurams, their karmā will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிலையால் அம்புகளால்; இலங்கை இலங்கையை; செற்றான் அழித்தவனும்; மற்று ஓர் மேலும்; கொலையார் துன்புறுத்திக் கொண்டிருந்த; சின சீற்றங்கொண்ட; வேழம் ஒப்பற்ற ஒரு யானையின்; கொம்பு கொம்பை முறித்த; கொண்டான் மேய பெருமானிருக்குமிடமான; குறுங்குடிமேல் திருக்குறுங்குடியைக் குறித்து; கலை ஆர் பனுவல் கலை மிகுந்த கவி பாட; வல்லான் கலியன் வல்ல திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த; நிலை ஆர் நிலைநிற்கும் பாசுரங்களாகிய; பாடல் பாட இவைகளைப் பாடுபவர்களுக்கு; பாவம் நில்லாவே பாவம் ஏற்படாது