PT 9.5.3

விரைவில் என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்

1790 காலையும்மாலையொத்துண்டு
கங்குல்நாழிகைஊழியில்நீண்டுலாவும் *
போல்வதோர் தன்மைபுகுந்துநிற்கும்
பொங்கழலேயொக்கும்வாடைசொல்லில் *
மாலவன்மாமணிவண்ணன்
மாயம் மற்றுமுளஅவை வந்திடாமுன் *
கோலமயில்பயிலும்புறவின்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1790 kālaiyum mālai ŏttuṇṭu * kaṅkul
nāzhikai ūzhiyil nīṇṭu ulāvum *
polvatu or taṉmai pukuntu niṟkum *
pŏṅku azhale ŏkkum vāṭai cŏllil **
mālavaṉ mā maṇi vaṇṇaṉ māyam *
maṟṟum ul̤a avai vantiṭāmuṉ *
kola mayil payilum puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-3

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1790. She says, “The morning brings me the pain of love just like the evening, and the night only makes it greater, lasting as long as an eon. If I try to describe the cold wind I can only say it hurts me like a rising fire. There are many tricks that the beautiful sapphire-colored Thirumāl can do. Before he does something and hurts me, take me to Thirukkurungudi filled with forests where beautiful peacocks dance. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காலையும் காலையும்; மாலை மாலைப்போது போல்; ஒத்துண்டு துன்புறுத்திக்கொண்டும்; கங்குல் நாழிகை இரவு பொழுதோ எனில்; ஊழியில் கல்ப காலத்தைக் காட்டிலும்; நீண்டு உலாவும் நீண்டு உலாவுகிறது; போல்வது ஓர் தன்மை போன்ற ஒரு தன்மை; புகுந்து நிற்கும் புகுந்தது போலிருக்கிறது; வாடை வாடையைப் பற்றி; சொல்லில் சொல்ல வேண்டுமானால்; பொங்கு அழலே ஒக்கும் வடவாக்னி போலுள்ளது; மாலவன் அந்த பெருமான் மிகப் பெரியவனாயும்; மா மணி நீல மணி போன்ற வடிவழகை உடையவன்; வண்ணன் இவனிடம் மேலும் பல; மாயம் மற்றும் உள மாயங்களும் உண்டு; அவை அந்த மாயங்கள்; வந்திடா முன் வருவதற்கு முன்; கோல மயில் அழகிய மயில்கள்; பயிலும் புறவின் வாழும் இடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை கொண்டு; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்