PT 9.5.4

உறக்கமே இல்லை: என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்

1791 கருமணிபூண்டுவெண்ணாகணைந்து
காரிமிலேற்றணர்தாழ்ந்துலாவும் *
ஒருமணியோசைஎன்னுள்ளந்தள்ள
ஓரிரவும்உறங்காதிருப்பேன் *
பெருமணிவானவருச்சிவைத்த
பேரருளாளன்பெருமை பேசி *
குருமணிநீர்கொழிக்கும்புறவின்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1791 karu maṇi pūṇṭu vĕṇ nāku aṇaintu *
kār imil eṟṟu aṇar tāzhntu ulāvum *
ŏru maṇi ocai ĕṉ ul̤l̤am tal̤l̤a *
or iravum uṟaṅkātiruppeṉ- **
pĕru maṇi vāṉavar ucci vaitta *
per arul̤āl̤aṉ pĕrumai peci *
kuru maṇi nīr kŏzhikkum puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-4

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1791. She says, “The sound of the bells on the dark necks of the bulls that wander with their white cows hurts my heart and I cannot sleep even one night. The generous lord stays in Thirukkurungudi where the fields flourish with water and the gods adorned with precious jewels praise his wonderful grace. Take me where he is. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கரு மணி பூண்டு கறுத்த மணியை அணிந்து; வெண் நாகு வெள்ளைப் பசுக்கன்றுளை; அணைந்து கார் தழுவும் காளைகளின்; இமில் ஏற்று கருத்த முசுப்பையுடைய; அணர் தாழ்ந்து உலாவும் கழுத்தில் தொங்குகிற; ஒரு மணி ஓசை ஒரு மணி ஓசை; என் உள்ளம் தள்ள என் மனதை துன்புறுத்த; வானவர் உச்சி நித்யஸூர்கள் தங்கள் தலைமீது; பெரு மணி சிறந்த ரத்னமாக; வைத்த வைத்துப் போற்றுகிற; பேர் அருளாளன் பெருமானின்; பெருமை பேசி பெருமைகளைப் பேசிக்கொண்டு; ஓர் இரவும் இரவு முழுவதும்; உறங்காதிருப்பேன் உறங்காதிருப்பேன்; குரு மணி சிறந்த ரத்தினங்களைத் தள்ளி வரும்; நீர் கொழிக்கும் புறவின் நீர் நிலைகளையுடைய; குறுங்குடிக்கே என்னை திருகுறுங்குடிக்கே என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்