PT 9.6.7

பெண்ணாசை ஒழியக் குறுங்குடி சேர்மின்

1804 வல்லிச் சிறுநுண்ணிடையாரிடை நீர்வைக்கின்ற *
அல்லல்சிந்தைதவிர அடைமின் அடியீர்காள்! *
சொல்லில்திருவேயனையார் கனிவாயெயிறொப்பான் *
கொல்லைமுல்லை மெல்லரும்பீனும்குறுங்குடியே.
1804 vallic ciṟu nuṇ iṭaiyāriṭai * nīr vaikkiṉṟa *
allal cintai tavira * aṭaimiṉ aṭiyīrkāl̤!- **
cŏllil tiruve aṉaiyār * kaṉi vāy ĕyiṟu ŏppāṉ *
kŏllai mullai * mĕl arumpu īṉum kuṟuṅkuṭiye 7

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1804. O devotees, if you want to remove the desires that you have for women with vine-like waists, go to Thirukkurungudi and worship the lord where the mullai buds blooming slowly in the backyard of the houses are as beautiful as the teeth of the women with mouths as sweet as fruits and with beauty like that of Lakshmi.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியீர்காள்! பக்தர்களே!; வல்லிச் கொடிபோன்ற; சிறு நுண் நுண்ணிய; இடையாரிடை இடையுடைய பெண்களிடத்தில்; நீர் நீங்கள்; வைக்கின்ற வைத்த; அல்லல் துன்பம் தரும்; சிந்தை தவிர ஆசையைத் தவிர்த்து; அடைமின் குறுங்குடியை அடையுங்கள்; அனையார் அங்குள்ள பெண்களின் அழகை; சொல்லில் சொல்லப் பார்க்கில்; திருவே மஹா லக்ஷ்மியை ஒத்திருக்கின்ற; கனி கோவைக்கனிபோன்ற பெண்களின்; வாய் வாயிலுள்ள; எயிறு ஒப்பான் முத்துப் பல்வரிசைப்போல்; கொல்லை கொல்லையிலுள்ள; முல்லை முல்லைக் கொடி; ஈனும் கொடுக்கும்; மெல் அழகிய; அரும்பு அரும்புகளையுடைய; குறுங்குடியே திருக்குறுங்குடியை; அடைமின் அடையுங்கள்