PTM 17.60

மண்ணுலகில் மாயவன் தரும் காட்சிகள்

2772 தாமரைமேல்
மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை *
பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை *
தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை *
மன்னியதண் சேறை வள்ளலை * -
2772 tāmaraimel
miṉ iṭaiyāl̤ nāyakaṉai viṇ nakarul̤ pŏṉ malaiyai *
pŏṉṉi maṇi kŏzhikkum pūṅ kuṭantaip por viṭaiyai *
tĕṉṉaṉ kuṟuṅkuṭiyul̤ cĕm paval̤ak kuṉṟiṉai *
maṉṉiya taṇ ceṟai val̤l̤alai 62

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2772. “He, the beloved of the goddess with a lighting-like waist, fights in the war like a bull. He stays on the golden mountain of Thiruvinnagar and he is the god of the flourishing Kudandai where the Ponni river brings jewel and leaves them on its banks. Majestic as a red coral hill, he is the god of Thirukkkurungudi in the Pandiyan country. He is the generous god of Thiruthancherai. (62)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமரைமேல் தாமரைப்பூவில் பிறந்தவளும்; மின் மின்னல் போன்ற; இடையாள் இடையுடையளுமான; நாயகனை பிராட்டிக்கு நாயகனும்; விண் நகருள் திருவிண்ணகரில்; பொன் பொன்; மலையை மலை போல் இருப்பவனும்; பொன்னி காவேரி நதி; மணி ரத்னங்களைக் கொண்டு; கொழிக்கும் தள்ளுமிடமான; பூங் குடந்தை அழகிய திருக்குடந்தையில்; போர் விடையை காளை போன்ற செருக்குடையவனும்; தென்னன் தென் திசையிலுள்ள; குறுங்குடியுள் திருக்குறுங்குடியிலே; செம்பவள சிவந்த பவழ; குன்றினை மலைபோல் இருப்பவனும்; மன்னிய தண் சேறை குளிர்ந்த திருச்சேறையில்; வள்ளலை இருக்கும் வள்ளலும்
thāmarai mĕl min idaiyāl̤ nāyaganai the consort of pirātti who was born on a lotus and who has a waist similar to lightning.; viṇṇagarul̤ ponmalaiyai one who is shining like a golden mountain at thiruviṇṇagar.; ponni maṇi kozhikkum pūngudandhai pŏrvidaiyai one who is reclining like a bull which has got tired after waging a war, at thirukkudandhai, where the river kāviri brings precious gems; then nan kuṛungudiyul̤ sembaval̤am kunṛinai one who is shining like a reddish coral like mountain at thirukkuṛungudi which is a distinguished divine abode in the southern direction; thaṇ sĕṛai manniya val̤l̤alai the supremely generous entity who has fittingly taken residence in the cool thiruchchĕṛai.