PT 9.5.1

என்னைத் திருக்குறுங்குடியில் சேர்த்துவிடுங்கள்

1788 தவளவிளம்பிறைதுள்ளுமுந்நீர்த்
தண்மலர்த்தென்றலோடன்றிலொன்றித்
துவள * என்னெஞ்சகம் சோரஈரும்
சூழ்பனிநாள்துயிலாதிருப்பேன் *
இவளும்ஓர்பெண்கொடியென்றிரங்கார்
என்னலமைந்துமுன்கொண்டுபோன *
குவளைமலர்நிறவண்ணர்மன்னு
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின். (2)
1788 ## taval̤a il̤am piṟai tul̤l̤um munnīrt *
taṇ malart tĕṉṟaloṭu aṉṟil ŏṉṟit
tuval̤a * ĕṉ nĕñcakam cora īrum *
cūzh paṉi nāl̤ tuyilātiruppeṉ **
ival̤um or pĕṇkŏṭi ĕṉṟu iraṅkār *
ĕṉ nalam aintum muṉ kŏṇṭu poṉa *
kuval̤ai malar niṟa vaṇṇar maṉṉu *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-1

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1788. She says, “The white crescent moon, the rolling waves of the ocean, the breeze that blows with the fragrance of flowers, the calling of the andril birds all bring me the pain of love. I cannot sleep at night when dew falls. He has taken over all my five senses but doesn’t feel pity for me. I am just a girl soft as a creeper. Take me to Thirukkurungudi where he with the dark color of a kuvalai flower stays and leave me there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தவள இளம் பிறை தூய இளம் சந்திரனும்; துள்ளும் முந்நீர் அலைகளுள்ள கடலும்; தண் மலர் குளிர்ந்த மலர்களும்; தென்றலோடு தென்றல் காற்றும்; அன்றில் அன்றில் பறவையும்; ஒன்றி இந்திரியங்களும் ஒன்று சேர்ந்து; என் நெஞ்சகம் என் மனது; துவள சோர துவண்டு வாடும்படி; ஈரும் துன்புறுத்துகின்றன; சூழ் பனி எங்கும் பனியிருக்கும்; நாள் இக்காலத்தில்; துயிலாதிருப்பேன் உறங்காமலிருப்பேன்; இவளும் ஓர் இவளும் ஒரு; பெண்கொடி இளம்பெண்ணன்றோ?; என்று இரங்கார் என்று மனம் இரங்காதவராய்; என் என் ஞானமாகிற; நலம் ஐந்தும் ஐந்து இந்திரிய உணர்ச்சியையும்; முன் கொண்டு முன்பே கொண்டு; போன போனார்; குவளைமலர் நிற கருநெய்தற்பூவின் நிறம் போன்ற; வண்ணர் மன்னு வண்ணமுடைய பெருமான்; குறுங்குடிக்கே திருக்குறுங்குடிகே; என்னை என்னைக் கொண்டு போய்; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்