PT 9.6.1

சிவனுக்கு இடங்கொடுத்தவர் குறுங்குடி நம்பி

1798 அக்கும்புலியினதளும் உடையார்அவரொருவர் *
பக்கம்நிற்கநின்ற பண்பரூர்போலும் *
தக்கமரத்தின் தாழ்சினையேறி * தாய்வாயில்
கொக்கின்பிள்ளை வெள்ளிறவுண்ணும்குறுங்குடியே. (2)
1798 ## akkum puliyiṉ * atal̤um uṭaiyār- * avar ŏruvar
pakkam niṟka niṉṟa * paṇpar ūrpolum- **
takka marattiṉ tāzh ciṉai eṟi * tāy vāyil
kŏkkiṉ pil̤l̤ai * vĕl̤ iṟā uṇṇum kuṟuṅkuṭiye 1

Ragam

Aṭāṇa/ அடாணா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1798. The good-natured god who has with him Shivā wearing a garland of skulls and a tiger skin around his waist stays in Thirukkurungudi where a heron fledgling climbs on the small branch of a tree, takes a vellira fish from its mother and eats.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொக்கின் பிள்ளை கொக்கின் குஞ்சு; தக்க மரத்தின் தனக்கு தகுந்த மரத்தின்; தாழ் தாழ்ந்த; சினை ஏறி கிளை ஏறி; தாய் வாயில் தாய் வாயிலிருக்கும்; வெள் இறா ‘வெள் இறா’ என்னும் மீனை; உண்ணும் உண்ணும்; குறுங்குடியே திருக்குறுங்குடி என்னும் ஊர்; அக்கும் எலும்பையும்; புலியின் அதளும் புலிதோலையும்; உடையார் தரித்தவரான; அவர் ஒருவர் சிவன்; பக்கம் அருகில் நிற்க; நிற்க அவருக்கும் இடம் கொடுத்த; பண்பர் நற்குணங்களுடையவரான; நின்ற பெருமான் நின்ற; ஊர் போலும் ஊர் போலும்