PT 9.5.2

யார் இகழ்ந்தாலும் என்னைக் குறுங்குடிக்கு அனுப்புங்கள்

1789 தாதவிழ்மல்லிகைபுல்லிவந்த
தண்மதியினிளவாடைஇன்னே *
ஊதைதிரிதந்துழறியுண்ண
ஓரிரவும்உறங்கேன் * உறங்கும்
பேதையர்பேதைமையால்இருந்து
பேசிலும்பேசுகபெய்வளையார் *
கோதைநறுமலர்மங்கைமார்வன்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1789 tātu avizh mallikai pulli vanta *
taṇ matiyiṉ il̤a vāṭai iṉṉe *
ūtai tiritantu uzhaṟi uṇṇa *
or iravum uṟaṅkeṉ uṟaṅkum **
petaiyar petaimaiyāl iruntu *
pecilum pecuka pĕyval̤aiyār *
kotai naṟu malar maṅkai mārvaṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-2

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1789. She says, “The cool wind that blows from the jasmine flowers dripping with pollen and the cool crescent moon together take my life. I cannot sleep even for one night. If the ignorant women adorned with bangles on their hands are able to sleep, let them gossip about me as they wish. On his chest, the lord of Thirukkurungudi embraces Lakshmi whose hair is adorned with fragrant flowers. . Take me there and leave me. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாது அவிழ் தாதுக்கள் நெகிழ்ந்து மலரும்; மல்லிகை புல்லி மல்லிகைப் பூவிலே பட்டு; வந்த தண் குளிர்ந்த; மதியின் சந்திரனுடன் வந்த; இள வாடை இளமையான வாடை; ஊதை குளிர்க்காற்று; இன்னே திரிதந்து இப்படியே தொகைத்து; உழறி உண்ண என்னைத் துன்புறுத்த; ஓர் இரவும் ஓர் இரவும்; உறங்கேன் நான் உறங்கேன்; உறங்கும் உறக்கமே இயல்பாக உள்ள; பெய்வளையார் வளையல் அணிந்த; பேதையர் பெண்கள் தங்கள்; பேதைமையால் இருந்து அறிவீனத்தினால்; பேசிலும் பேசுக என்னைப் பழித்தாலும்; கோதை கூந்தலிலே; நறு மலர் மணமிக்க பூக்கள் அணிந்துள்ள; மங்கை திருமகளை; மார்வன் மார்பிலுடைய எம்பெருமானிருக்கும்; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னைக் கொண்டு; உய்த்திடுமின் சேர்த்துவிடுங்கள்