PT 9.5.7

குறுங்குடிப் பெருமான் அருள் எனக்கு நிச்சயம் உண்டு

1794 செங்கண்நெடியகரியமேனித்
தேவரொருவர்இங்கேபுகுந்து * என்
அங்கம்மெலியவளைகழல
ஆதுகொலோ? என்றுசொன்னபின்னை *
ஐங்கணிவில்லிதன்னாண்மை
என்னோடாடுமதனைஅறியமாட்டேன் *
கொங்கலர்தண்பணைசூழ்புறவில்
குறுங்குடிக்கேஎன்னைஉய்த்திடுமின்.
1794 செங் கண் நெடிய கரிய மேனித் *
தேவர் ஒருவர் இங்கே புகுந்து * என்
அங்கம் மெலிய வளை கழல *
ஆதுகொலோ? என்று சொன்ன பின்னை **
ஐங்கணை வில்லி தன் ஆண்மை என்னோடு *
ஆடும் அதனை அறியமாட்டேன் *
கொங்கு அலர் தண் பணை சூழ் புறவின் *
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் 7
1794 cĕṅ kaṇ nĕṭiya kariya meṉit *
tevar ŏruvar iṅke pukuntu * ĕṉ
aṅkam mĕliya val̤ai kazhala *
ātukŏlo? ĕṉṟu cŏṉṉa piṉṉai **
aiṅkaṇai villi taṉ āṇmai ĕṉṉoṭu *
āṭum-ataṉai aṟiyamāṭṭeṉ *
kŏṅku alar taṇ paṇai cūzh puṟaviṉ *
kuṟuṅkuṭikke ĕṉṉai uyttiṭumiṉ-7

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Aḍa / அட

Bhavam

Nāyaki (lovelorn lady)

Saranagathi

Divya Desam

Simple Translation

1794. She says, “A tall dark god with beautiful eyes entered here. He made my body weak and my bangles loose. I wonder, ‘Why is this happening to me?’ The tricks of Kāma who carries a bow with five flower arrows make me suffer from love. I didn’t understand that. Take me and leave me in Thirukkurungudi surrounded with forests and cool fields blooming with flowers that drip honey. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
நெடிய நீண்ட; செங் கண் சிவந்த கண்களையும்; கரிய மேனி கறுத்த சரீரமுமுடைய; தேவர் ஒருவர் ஒரு எம்பெருமான்; இங்கே புகுந்து என் இங்கு புகுந்து என்; அங்கம் உடல்; மெலிய இளைக்கும்படியாகவும்; வளை வளையல்கள்; கழல கழலும்படியாகவும்; ஆதுகொலோ? பிரியமாட்டேன்; என்று என்று சொன்ன; சொன்ன பின் பிரிந்தார்; வில்லி அதன் பின் மன்மதன்; ஐங்கணை ஐந்து அம்புகளின்; தன் தன்னுடைய; ஆண்மை ஆண்மையை; என்னோடு என் விஷயத்திலே; ஆடும் அதனை காட்டுவதை; அறியமாட்டேன் நான் அறியேன்; கொங்கு அலர் தேன் பெருகும்; தண் குளிர்ந்த; பணை சூழ் சோலைகள் சூழ்ந்த; புறவின் இடமான; குறுங்குடிக்கே திருகுறுங்குடிக்கே; என்னை என்னை; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்