Periya Thiruvandāthi

பெரிய திருவந்தாதி

Periya Thiruvandāthi
The Periya Thiruvanthathi, composed by Nammazhvar, stands as the essence of the Atharvana Veda. It is named Periya Thiruvanthathi due to its grandeur. In this Prabandham, āzhvār, showcasing his eloquence, tells the Lord, 'Who knows whether I am greater or You are greater? You, who are the foundation of everything, including the entire universe and Paramapadam, + Read more
நம்மாழ்வார் அருளிச் செய்த அதர்வண வேத ஸாரத்தின் பிரபந்தமாக திகழ்வது பெரிய திருவந்தாதியாகும். பெருமை பொருந்திய அந்தாதியாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. 'யான் பெரியன், நீ பெரியை என்பதனை யார் அறிவார்?' என்று அனைத்துலகம், பரமபதம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் விளங்கும் உன்னை என்னுடைய காது வழியாக + Read more
Group: 3rd 1000
Verses: 2585 to 2671
Glorification: Krishna Avatar (க்ருஷ்ணாவதாரம்)
Eq scripture: Atharva Veda
āzhvār: Namm Āzhvār
  • தனியன் / Taniyan
  • PTA 1
    2585 ## முயற்றி சுமந்து எழுந்து * முந்துற்ற நெஞ்சே *
    இயற்றுவாய் எம்மொடு நீ கூடி ** நயப்பு உடைய
    நா ஈன் தொடைக் கிளவியுள் * பொதிவோம் * நல் பூவைப்
    பூ ஈன்ற வண்ணன் புகழ் 1
  • PTA 2
    2586 புகழ்வோம் பழிப்போம் * புகழோம் பழியோம் *
    இகழ்வோம் மதிப்போம் * மதியோம் இகழோம் ** மற்று
    எங்கள் மால் செங்கண் மால் * சீறல் நீ தீவினையோம் *
    எங்கள் மால் கண்டாய் இவை 2
  • PTA 3
    2587 இவை அன்றே நல்ல * இவை அன்றே தீய *
    இவை என்று இவை அறிவனேலும் ** இவை எல்லாம்
    என்னால் அடைப்பு நீக்கு * ஒண்ணாது இறையவனே *
    என்னால் செயற்பாலது என்? 3
  • PTA 4
    2588 என்னின் மிகு புகழார் யாவரே? * பின்னையும் மற்று
    எண் இல் * மிகு புகழேன் யான் அல்லால் ** என்ன
    கருஞ் சோதிக் * கண்ணன் கடல் புரையும் * சீலப்
    பெருஞ்சோதிக்கு என் நெஞ்சு ஆட்பெற்று 4
  • PTA 5
    2589 பெற்ற தாய் நீயே * பிறப்பித்த தந்தை நீ *
    மற்றையார் ஆவாரும் நீ பேசில் ** எற்றேயோ
    மாய மா மாயவளை * மாய முலை வாய் வைத்த *
    நீ அம்மா காட்டும் நெறி? 5
  • PTA 6
    2590 நெறி காட்டி நீக்குதியோ? * நின்பால் கரு மா
    முறி மேனி காட்டுதியோ? * மேல் நாள் அறியோமை **
    என் செய்வான் எண்ணினாய்? கண்ணனே * ஈது உரையாய்
    என் செய்தால் என் படோம் யாம்? 6
  • PTA 7
    2591 யாமே அருவினையோம் சேயோம் * என் நெஞ்சினார் *
    தாமே அணுக்கராய்ச் சார்ந்தொழிந்தார் ** பூ மேய
    செம்மாதை ** நின் மார்வில் சேர்வித்து * பார் இடந்த *
    அம்மா! * நின் பாதத்து அருகு 7
  • PTA 8
    2592 அருகும் சுவடும் தெரிவு உணரோம் * அன்பே
    பெருகும் மிக இது என்? பேசீர் ** பருகலாம்
    பண்புடையீர் பார் அளந்தீர் பாவியெம் கண் காண்பு அரிய
    நுண்பு உடையீர்! நும்மை நுமக்கு 8
  • PTA 9
    2593 நுமக்கு அடியோம் என்று என்று * நொந்து உரைத்து என்? * மாலார்
    தமக்கு அவர் தாம் * சார்வு அரியர் ஆனால் ** எமக்கு இனி
    யாதானும் * ஆகிடு காண் நெஞ்சே * அவர்திறத்தே
    யாதானும் சிந்தித்து இரு 9
  • PTA 10
    2594 இரு நால்வர் ஈரைந்தின் மேல் ஒருவர் * எட்டோடு
    ஒரு நால்வர் * ஓர் இருவர் அல்லால் ** திருமாற்கு
    யாம் ஆர்? வணக்கம் ஆர்? * ஏ பாவம் நல் நெஞ்சே *
    நாமா மிக உடையோம் நாழ் 10
  • PTA 11
    2595 நாழால் அமர் முயன்ற * வல் அரக்கன் இன் உயிரை *
    வாழாவகை வலிதல் நின் வலியே? ** ஆழாத
    பாரும் நீ வானும் நீ * காலும் நீ தீயும் நீ *
    நீரும் நீ ஆய் நின்ற நீ 11
  • PTA 12
    2596 நீ அன்றே ஆழ் துயரில் * வீழ்விப்பான் நின்று உழன்றாய் *
    போய் ஒன்று சொல்லி என்? போ நெஞ்சே ** நீ என்றும்
    காழ்த்து உபதேசம் தரினும் * கைக்கொள்ளாய் * கண்ணன்தாள்
    வாழ்த்துவதே கண்டாய் வழக்கு 12
  • PTA 13
    2597 வழக்கொடு மாறுகோள் அன்று * அடியார் வேண்ட *
    இழக்கவும் காண்டும் இறைவ இழப்பு உண்டே? **
    எம் ஆட்கொண்டு ஆகிலும் * யான் வேண்ட என் கண்கள் *
    தம்மால் காட்டு உன் மேனிச் சாய் 13
  • PTA 14
    2598 சாயால் கரியானை * உள் அறியாராய் நெஞ்சே *
    பேயார் முலை கொடுத்தார் பேயர் ஆய் ** நீ யார்? போய்த்
    தேம்பு ஊண் சுவைத்து * ஊன் அறிந்து அறிந்தும் * தீவினை ஆம்
    பாம்பார் வாய்க் கைந் நீட்டல் பார்த்தி 14
  • PTA 15
    2599 பார்த்து ஓர் எதிரிதா நெஞ்சே * படு துயரம்
    பேர்த்து ஓதப் * பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை ** ஆர்த்து ஓதம்
    தம் மேனித் * தாள் தடவ தாம் கிடந்து * தம்முடைய
    செம்மேனிக் கண்வளர்வார் சீர் 15
  • PTA 16
    2600 சீரால் பிறந்து * சிறப்பால் வளராது *
    பேர் வாமன் ஆகாக்கால் பேராளா ** மார்பு ஆரப்
    புல்கி நீ உண்டு உமிழ்ந்த * பூமி நீர் ஏற்பு அரிதே? *
    சொல்லு நீ யாம் அறியச் சூழ்ந்து 16
  • PTA 17
    2601 சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் * தோன்றாது விட்டாலும் *
    வாழ்ந்திடுவர் பின்னும் தம் வாய்திறவார் ** சூழ்ந்து எங்கும்
    வாள் வரைகள் போல் அரக்கன் * வன் தலைகள் தாம் இடிய *
    தாள் வரை வில் ஏந்தினார் தாம் 17
  • PTA 18
    2602 தாம்பால் ஆப்புண்டாலும் * அத் தழும்பு தான் இளக *
    பாம்பால் ஆப்புண்டு பாடு உற்றாலும் ** சோம்பாது இப்
    பல் உருவை எல்லாம் * படர்வித்த வித்தா * உன்
    தொல் உருவை யார் அறிவார்? சொல்லு 18
  • PTA 19
    2603 சொல்லில் குறை இல்லை * சூது அறியா நெஞ்சமே *
    எல்லி பகல் என்னாது எப்போதும் ** தொல்லைக்கண்
    மாத் தானைக்கு எல்லாம் * ஓர் ஐவரையே மாறு ஆக *
    காத்தானைக் காண்டும் நீ காண் 19
  • PTA 20
    2604 காணப்புகில் அறிவு * கைக்கொண்ட நல் நெஞ்சம் *
    நாணப்படும் அன்றே நாம் பேசில்! ** மாணி
    உரு ஆகிக்கொண்டு * உலகம் நீர் ஏற்ற சீரான் *
    திரு ஆகம் தீண்டிற்றுச் சென்று 20
  • PTA 21
    2605 சென்று அங்கு வெம் நரகில் * சேராமல் காப்பதற்கு *
    இன்று இங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட ** அன்று அங்குப்
    பார் உருவும் * பார் வளைத்த நீர் உருவும் * கண் புதைய
    கார் உருவன் தான் நிமிர்த்த கால் 21
  • PTA 22
    2606 காலே பொதத் திரிந்து * கத்துவராம் இனநாள் *
    மாலார் குடிபுகுந்தார் என் மனத்தே ** மேலால்
    தருக்கும் இடம்பாட்டினொடும் * வல்வினையார் தாம் * வீற்று
    இருக்கும் இடம் காணாது இளைத்து 22
  • PTA 23
    2607 இளைப்பாய் இளையாப்பாய் * நெஞ்சமே சொன்னேன் *
    இளைக்க நமன் தமர்கள் பற்றி இளைப்பு எய்த **
    நாய் தந்து மோதாமல் * நல்குவான் நல்காப்பான் *
    தாய் தந்தை எவ் உயிர்க்கும் தான் 23
  • PTA 24
    2608 தானே தனித் தோன்றல் * தன் அளப்பு ஒன்று இல்லாதான் *
    தானே பிறர்கட்கும் தன் தோன்றல் ** தானே
    இளைக்கில் பார் கீழ் மேல் ஆம் * மீண்டு அமைப்பான் ஆனால் *
    அளக்கிற்பார் பாரின்மேல் ஆர்? 24
  • PTA 25
    2609 ஆரானும் ஆதானும் செய்ய * அகலிடத்தை
    ஆராய்ந்து * அது திருத்தல் ஆவதே? ** சீர் ஆர்
    மனத்தலை * வன் துன்பத்தை மாற்றினேன் * வானோர்
    இனத் தலைவன் கண்ணனால் யான் 25
  • PTA 26
    2610 யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் * வல்வினையைக்
    கானும் மலையும் புகக் கடிவான் ** தான் ஓர்
    இருள் அன்ன மா மேனி * எம் இறையார் தந்த *
    அருள் என்னும் தண்டால் அடித்து 26
  • PTA 27
    2611 அடியால் * படி கடந்த முத்தோ? * அது அன்றேல்
    முடியால் * விசும்பு அளந்த முத்தோ? ** நெடியாய்
    செறி கழல் கொள் தாள் நிமிர்த்துச் * சென்று உலகம் எல்லாம் *
    அறிகிலமால் நீ அளந்த அன்று 27
  • PTA 28
    2612 அன்றே நம் கண் காணும் * ஆழியான் கார் உருவம் *
    இன்றே நாம் காணாது இருப்பதுவும் ** என்றேனும்
    கட்கண்ணால் * காணாத அவ் உருவை * நெஞ்சு என்னும்
    உட்கண்ணேல் காணும் உணர்ந்து 28
  • PTA 29
    2613 உணர ஒருவர்க்கு * எளியேனே செவ்வே *
    இணரும் துழாய் அலங்கல் எந்தை? ** உணரத்
    தனக்கு எளியர் * எவ் அளவர் அவ் அளவன் ஆனால் *
    எனக்கு எளியன் எம் பெருமான் இங்கு 29
  • PTA 30
    2614 இங்கு இல்லை பண்டுபோல் * வீற்றிருத்தல் * என்னுடைய
    செங்கண் மால் சீர்க்கும் சிறிது உள்ளம் ** அங்கே
    மடி அடக்கி நிற்பதனில் * வல்வினையார் தாம் * ஈண்டு
    அடி எடுப்பது அன்றோ அழகு? 30
  • PTA 31
    2615 அழகும் அறிவோமாய் * வல்வினையைத் தீர்ப்பான் *
    நிழலும் அடி தாறும் ஆனோம் ** சுழலக்
    குடங்கள் * தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி * அன்று அத்
    தடங் கடலை மேயார் தமக்கு 31
  • PTA 32
    2616 தமக்கு அடிமை வேண்டுவார் * தாமோதரனார்
    தமக்கு * அடிமை செய் என்றால் செய்யாது ** எமக்கு என்று
    தாம் செய்யும் தீவினைக்கே * தாழ்வுறுவர் நெஞ்சினார் *
    யாம் செய்வது இவ்விடத்து இங்கு யாது? 32
  • PTA 33
    2617 யாதானும் ஒன்று அறியில் * தன் உகக்கில் என் கொலோ *
    யாதானும் நேர்ந்து அணுகா ஆறு தான் ** யாதானும்
    தேறுமா * செய்யா அசுரர்களை * நேமியால்
    பாறுபாறு ஆக்கினான்பால்? 33
  • PTA 34
    2618 பால் ஆழி நீ கிடக்கும் பண்பை * யாம் கேட்டேயும்
    கால் ஆழும் * நெஞ்சு அழியும் கண் சுழலும் ** நீல் ஆழிச்
    சோதியாய் ஆதியாய் * தொல்வினை எம்பால் கடியும் *
    நீதியாய் நின் சார்ந்து நின்று 34
  • PTA 35
    2619 நின்றும் இருந்தும் * கிடந்தும் திரிதந்தும் *
    ஒன்றும் ஓவாற்றான் என் நெஞ்சு அகலான் ** அன்று அம் கை
    வன் புடையால் பொன்பெயரோன் * வாய் தகர்த்து மார்வு இடந்தான் *
    அன்புடையன் அன்றே அவன்? 35
  • PTA 36
    2620 அவன் ஆம்? இவன் ஆம்? உவன் ஆம்? * மற்று உம்பர்
    அவன் ஆம்? * அவன் என்று இராதே ** அவன் ஆம்
    அவனே எனத் தெளிந்து * கண்ணனுக்கே தீர்ந்தால் *
    அவனே எவனேலும் ஆம் 36
  • PTA 37
    2621 ஆம் ஆறு அறிவுடையார் * ஆவது அரிது அன்றே? *
    நாமே அது உடையோம் நல் நெஞ்சே ** பூ மேய்
    மதுகரம் மே * தண் துழாய் மாலாரை * வாழ்த்து ஆம்
    அது கரமே அன்பால் அமை 37
  • PTA 38
    2622 அமைக்கும் பொழுது உண்டே * ஆராயில் நெஞ்சே *
    இமைக்கும் பொழுதும்? இடைச்சி குமைத்திறங்கள் **
    ஏசியே ஆயினும் * ஈன் துழாய் மாயனையே *
    பேசியே போக்காய் பிழை 38
  • PTA 39
    2623 பிழைக்க முயன்றோமோ * நெஞ்சமே பேசாய்? *
    தழைக்கும் துழாய் மார்வன் தன்னை ** அழைத்து ஒருகால்
    போய் உபகாரம் * பொலியக் கொள்ளாது * அவன் புகழே
    வாய் உபகாரம் கொண்ட வாய்ப்பு 39
  • PTA 40
    2624 வாய்ப்போ இது ஒப்ப * மற்று இல்லை வா நெஞ்சே *
    போய்ப் போஒய் * வெம் நரகில் பூவியேல் ** தீப் பால
    பேய்த் தாய் * உயிர் கலாய்ப் பால் உண்டு * அவள் உயிரை
    மாய்த்தானை வாழ்த்தே வலி 40
  • PTA 41
    2625 வலியம் என நினைந்து * வந்து எதிர்ந்த மல்லர் *
    வலிய முடி இடிய வாங்கி ** வலிய நின்
    பொன் ஆழிக் கையால் * புடைத்திடுதி கீளாதே *
    பல் நாளும் நிற்கும் இப் பார் 41
  • PTA 42
    2626 பார் உண்டான் பார் உமிழ்ந்தான் * பார் இடந்தான் பார் அளந்தான் *
    பார் இடம் முன் படைத்தான் என்பரால் ** பார் இடம்
    ஆவானும் * தான் ஆனால் ஆர் இடமே? * மற்றொருவர்க்கு
    ஆவான் புகாவால் அவை 42
  • PTA 43
    2627 அவையம் என நினைந்து * வந்த சுரர்பாலே *
    நவையை நளிர்விப்பான் தன்னை ** கவை இல்
    மனத்து உயர வைத்திருந்து * வாழ்த்தாதார்க்கு உண்டோ *
    மனத் துயரை மாய்க்கும் வகை? 43
  • PTA 44
    2628 வகை சேர்ந்த நல் நெஞ்சும் * நா உடைய வாயும் *
    மிக வாய்ந்து வீழா எனிலும் ** மிக ஆய்ந்து
    மாலைத் தாம் * வாழ்த்தாது இருப்பர் இது அன்றே *
    மேலைத் தாம் செய்யும் வினை? 44
  • PTA 45
    2629 வினையார் தர முயலும் * வெம்மையை அஞ்சி *
    தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது **
    வாசகத்தால் ஏத்தினேன் * வானோர் தொழுது இறைஞ்சும் *
    நாயகத்தான் பொன் அடிக்கள் நான் 45
  • PTA 46
    2630 நான் கூறும் * கூற்றாவது இத்தனையே * நாள்நாளும்
    தேங்கு ஓத நீர் உருவன் செங்கண் மால் ** நீங்காத
    மா கதி ஆம் * வெம் நரகில் சேராமல் காப்பதற்கு *
    நீ கதி ஆம் நெஞ்சே நினை 46
  • PTA 47
    2631 நினைத்து இறைஞ்சி மானிடவர் * ஒன்று இரப்பர் என்றே *
    நினைத்திடவும் வேண்டா நீ நேரே ** நினைத்து இறைஞ்ச
    எவ் அளவர்? * எவ் இடத்தோர்? மாலே * அது தானும்
    எவ் அளவும் உண்டோ எமக்கு? 47
  • PTA 48
    2632 எமக்கு யாம் விண் நாட்டுக்கு * உச்சமது ஆம் வீட்டை *
    அமைத்திருந்தோம் அஃது அன்றே ஆம் ஆறு? ** அமைப் பொலிந்த
    மென் தோளி காரணமா * வெம் கோட்டு ஏறு ஏழ் உடனே *
    கொன்றானையே மனத்துக் கொண்டு 48
  • PTA 49
    2633 கொண்டல் தான் மால் வரை தான் * மா கடல் தான் கூர் இருள் தான் *
    வண்டு அறாப் பூவை தான் மற்றுத்தான் ** கண்ட நாள்
    கார் உருவம் * காண்தோறும் நெஞ்சு ஓடும் * கண்ணனார்
    பேர் உரு என்று எம்மைப் பிரிந்து 49
  • PTA 50
    2634 பிரிந்து ஒன்று நோக்காது * தம்முடைய பின்னே *
    திரிந்து உழலும் சிந்தனையார் தம்மை ** புரிந்து ஒருகால்
    ஆஆ என இரங்கார் * அந்தோ வலிதேகொல் *
    மா வாய் பிளந்தார் மனம்? 50
  • PTA 51
    2635 மனம் ஆளும் ஓர் ஐவர் * வன் குறும்பர் தம்மை *
    சினம் மாள்வித்து ஓர் இடத்தே சேர்த்து ** புனம் மேய
    தண் துழாயான் அடியைத் * தாம் காணும் அஃது அன்றே *
    வண் துழாம் சீரார்க்கு மாண்பு? 51
  • PTA 52
    2636 மாண் பாவித்து அஞ்ஞான்று * மண் இரந்தான் * மாயவள் நஞ்சு
    ஊண் பாவித்து உண்டானது * ஓர் உருவம் ** காண்பான் நம்
    கண் அவா * மற்று ஒன்று காண் உறா * சீர் பரவாது
    உண்ண வாய் தான் உறுமோ ஒன்று? 52
  • PTA 53
    2637 ஒன்று உண்டு செங்கண்மால் * யான் உரைப்பது * உன் அடியார்க்கு
    என் செய்வன் என்றே இருத்தி நீ ** நின் புகழில்
    வைகும் * தம் சிந்தையிலும் மற்று இனிதோ * நீ அவர்க்கு
    வைகுந்தம் என்று அருளும் வான்? 53
  • PTA 54
    2638 வானோ மறி கடலோ * மாருதமோ தீயகமோ *
    கானோ ஒருங்கிற்று? கண்டிலமால் ** ஆன் ஈன்ற
    கன்று உயர தாம் எறிந்து * காய் உதிர்த்தார் தாள் பணிந்தோம் *
    வன் துயரை ஆஆ மருங்கு 54
  • PTA 55
    2639 மருங்கு ஓதம் மோதும் * மணி நாகணையார் *
    மருங்கே வர அரியரேலும் ** ஒருங்கே
    எமக்கு அவரைக் காணலாம் * எப்பொழுதும் உள்ளால் *
    மனக் கவலை தீர்ப்பார் வரவு 55
  • PTA 56
    2640 வரவு ஆறு ஒன்று இல்லையால் * வாழ்வு இனிதால் * எல்லே!
    ஒரு ஆறு ஒருவன் புகாவாறு ** உரு மாறும்
    ஆயவர் தாம் சேயவர் தாம் * அன்று உலகம் தாயவர் தாம் *
    மாயவர் தாம் காட்டும் வழி 56
  • PTA 57
    2641 வழித் தங்கு வல்வினையை * மாற்றானோ? நெஞ்சே! *
    தழீஇக்கொண்டு போர் அவுணன் தன்னை ** சுழித்து எங்கும்
    தாழ்வு இடங்கள் பற்றி * புலால் வெள்ளம் தான் உகள *
    வாழ்வு அடங்க மார்வு இடந்த மால் 57
  • PTA 58
    2642 மாலே படிச் சோதி மாற்றேல் * இனி உனது
    பாலே போல் * சீரில் பழுத்தொழிந்தேன் ** மேலால்
    பிறப்பு இன்மை பெற்று * அடிக்கீழ்க் குற்றேவல் அன்று *
    மறப்பு இன்மை யான் வேண்டும் மாடு 58
  • PTA 59
    2643 மாடே வரப்பெறுவராம் என்றே * வல்வினையார்
    காடானும் ஆதானும் கைக்கொள்ளார் ** ஊடே போய்ப்
    பேர் ஓதம் சிந்து * திரைக் கண்வளரும் * பேராளன்
    பேர் ஓத சிந்திக்க பேர்ந்து? 59
  • PTA 60
    2644 பேர்ந்து ஒன்று நோக்காது * பின் நிற்பாய் நில்லாப்பாய் *
    ஈன் துழாய் மாயனையே என் நெஞ்சே ** பேர்ந்து எங்கும்
    தொல்லை மா வெம் நரகில் * சேராமல் காப்பதற்கு *
    இல்லை காண் மற்றோர் இறை 60
  • PTA 61
    2645 இறை முறையான் சேவடிமேல் * மண் அளந்த அந் நாள் *
    மறை முறையால் வான் நாடர் கூடி ** முறைமுறையின்
    தாது இலகு * பூத் தெளித்தால் ஒவ்வாதே * தாழ் விசும்பின்
    மீது இலகித் தான் கிடக்கும் மீன்? 61
  • PTA 62
    2646 மீன் என்னும் கம்பில் * வெறி என்னும் வெள்ளி வேய் *
    வான் என்னும் கேடு இலா வான் குடைக்கு ** தான் ஓர்
    மணிக் காம்பு போல் * நிமிர்ந்து மண் அளந்தான் * நங்கள்
    பிணிக்கு ஆம் பெரு மருந்து பின் 62
  • PTA 63
    2647 பின் துரக்கும் காற்று இழந்த * சூல் கொண்டல் பேர்ந்தும் போய் *
    வன் திரைக்கண் வந்து அணைந்த வாய்மைத்தே ** அன்று
    திருச் செய்ய நேமியான் * தீ அரக்கி மூக்கும்
    பருச் செவியும் ஈர்ந்த பரன் 63
  • PTA 64
    2648 பரன் ஆம் அவன் ஆதல் * பாவிப்பர் ஆகில் *
    உரனால் ஒரு மூன்று போதும் ** மரம் ஏழ் அன்று
    எய்தானை * புள்ளின் வாய் கீண்டானையே * அமரர்
    கைதான் தொழாவே கலந்து? 64
  • PTA 65
    2649 கலந்து நலியும் * கடுந் துயரை நெஞ்சே *
    மலங்க அடித்து மடிப்பான் ** விலங்கல் போல்
    தொல்மாலை கேசவனை * நாரணனை மாதவனை *
    சொல் மாலை எப்பொழுதும் சூட்டு 65
  • PTA 66
    2650 சூட்டாய நேமியான் * தொல் அரக்கன் இன் உயிரை *
    மாட்டே துயர் இழைத்த மாயவனை ** ஈட்ட
    வெறி கொண்ட * தண் துழாய் வேதியனை * நெஞ்சே
    அறி கண்டாய் சொன்னேன் அது 66
  • PTA 67
    2651 அதுவோ நன்று என்று * அங்கு அமர் உலகோ வேண்டில் *
    அதுவோ பொருள் இல்லை அன்றே? ** அது ஒழிந்து
    மண் நின்று * ஆள்வேன் எனிலும் கூடும் மட நெஞ்சே *
    கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் 67
  • PTA 68
    2652 கல்லும் கனை கடலும் * வைகுந்த வான் நாடும் *
    புல் என்று ஒழிந்தனகொல்? ஏ பாவம் ** வெல்ல
    நெடியான் நிறம் கரியான் * உள்புகுந்து நீங்கான் *
    அடியேனது உள்ளத்து அகம் 68
  • PTA 69
    2653 அகம் சிவந்த கண்ணினர் ஆய் * வல்வினையர் ஆவார் *
    முகம் சிதைவராம் அன்றே முக்கி ** மிகும் திருமால்
    சீர்க் கடலை உள் பொதிந்த * சிந்தனையேன் தன்னை *
    ஆர்க்கு அடல் ஆம் செவ்வே அடர்த்து? 69
  • PTA 70
    2654 அடர் பொன் முடியானை * ஆயிரம் பேரானை *
    சுடர் கொள் சுடர் ஆழியானை ** இடர் கடியும்
    மாதா பிதுவாக * வைத்தேன் எனது உள்ளே *
    யாது ஆகில் யாதே இனி? 70
  • PTA 71
    2655 இனி நின்று நின் பெருமை * யான் உரைப்பது என்னே? *
    தனி நின்ற சார்வு இலா மூர்த்தி ** பனி நீர்
    அகத்து உலவு * செஞ்சடையான் ஆகத்தான் * நான்கு
    முகத்தான் நின் உந்தி முதல் 71
  • PTA 72
    2656 முதல் ஆம் திரு உருவம் மூன்று என்பர் * ஒன்றே
    முதல் ஆகும் * மூன்றுக்கும் என்பர் ** முதல்வா
    நிகர் இலகு கார் உருவா * நின் அகத்தது அன்றே *
    புகர் இலகு தாமரையின் பூ? 72
  • PTA 73
    2657 பூவையும் காயாவும் * நீலமும் பூக்கின்ற *
    காவி மலர் என்றும் காண்தோறும் ** பாவியேன்
    மெல் ஆவி * மெய் மிகவே பூரிக்கும் * அவ்வவை
    எல்லாம் பிரான் உருவே என்று 73
  • PTA 74
    2658 என்றும் ஒருநாள் * ஒழியாமை யான் இரந்தால் *
    ஒன்றும் இரங்கார் உருக் காட்டார் ** குன்று
    குடை ஆக * ஆ காத்த கோவலனார் * நெஞ்சே
    புடை தான் பெரிதே புவி 74
  • PTA 75
    2659 புவியும் இரு விசும்பும் நின் அகத்த * நீ என்
    செவியின் வழி புகுந்து * என் உள்ளாய் ** அவிவு இன்றி
    யான் பெரியன் நீ பெரியை * என்பதனை யார் அறிவார்? *
    ஊன் பருகு நேமியாய் உள்ளு 75
  • PTA 76
    2660 உள்ளிலும் உள்ளம் தடிக்கும் * வினைப் படலம் *
    விள்ள விழித்து உன்னை மெய் உற்றால் ** உள்ள
    உலகு அளவும் யானும் * உளன் ஆவன் என்கொலோ? *
    உலகு அளந்த மூர்த்தி உரை 76
  • PTA 77
    2661 உரைக்கில் ஓர் சுற்றத்தார் * உற்றார் என்று ஆரே? *
    இரைக்கும் கடல் கிடந்த எந்தாய் ** உரைப்பு எல்லாம்
    நின் அன்றி * மற்று இலேன் கண்டாய் * எனது உயிர்க்கு ஓர்
    சொல் நன்றி ஆகும் துணை 77
  • PTA 78
    2662 துணை நாள் பெருங் கிளையும் * தொல் குலமும் * சுற்றத்து
    இணை நாளும் இன்பு உடைத்தாமேலும் ** கணை நாணில்
    ஓவாத் தொழில் சார்ங்கன் * தொல் சீரை நல் நெஞ்சே *
    ஓவாத ஊணாக உண் 78
  • PTA 79
    2663 உள் நாட்டுத் தேசு அன்றே? * ஊழ்வினையை அஞ்சுமே? *
    விண் நாட்டை ஒன்று ஆக மெச்சுமே? ** மண் நாட்டில்
    ஆர் ஆகி * எவ் இழிவிற்று ஆனாலும் * ஆழி அங்கைப்
    பேர் ஆயற்கு ஆள் ஆம் பிறப்பு 79
  • PTA 80
    2664 பிறப்பு இறப்பு மூப்புப் * பிணி துறந்து * பின்னும்
    இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் ** மறப்பு எல்லாம்
    ஏதமே * என்று அல்லால் எண்ணுவனே * மண் அளந்தான்
    பாதமே ஏத்தாப் பகல்? 80
  • PTA 81
    2665 பகல் இரா என்பதுவும் * பாவியாது * எம்மை
    இகல் செய்து இரு பொழுதும் ஆள்வர் ** தகவாத்
    தொழும்பர் இவர் சீர்க்கும் * துணை இலர் என்று ஓரார் *
    செழும் பரவை மேயார் தெரிந்து 81
  • PTA 82
    2666 தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் * தீவினையேன் * வாளா
    இருந்தொழிந்தேன் * கீழ் நாள்கள் எல்லாம் ** கரந்துருவின்
    அம் மானை * அந்நான்று பின் தொடர்ந்த * ஆழி அங்கை
    அம்மானை ஏத்தாது அயர்த்து 82
  • PTA 83
    2667 அயர்ப்பாய் அயராப்பாய் * நெஞ்சமே சொன்னேன் *
    உயப்போம் நெறி இதுவே கண்டாய் ** செயற்பால
    அல்லவே செய்கிறுதி * நெஞ்சமே அஞ்சினேன் *
    மல்லர் நாள் வவ்வினனை வாழ்த்து 83
  • PTA 84
    2668 வாழ்த்தி அவன் அடியைப் * பூப் புனைந்து * நின் தலையைத்
    தாழ்த்து * இரு கை கூப்பு என்றால் கூப்பாத பாழ்த்த விதி **
    எங்கு உற்றாய் என்று அவனை * ஏத்தாது என் நெஞ்சமே *
    தங்கத்தான் ஆமேலும் தங்கு 84
  • PTA 85
    2669 தங்கா முயற்றிய ஆய்த் * தாழ் விசும்பின் மீது பாய்ந்து *
    எங்கே புக்கு எத் தவம் செய்திட்டனகொல் ** பொங்கு ஓதத்
    தண் அம் பால் * வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய
    கண்ணன்பால் நல் நிறம் கொள் கார்? 85
  • PTA 86
    2670 ## கார் கலந்த மேனியான் * கை கலந்த ஆழியான் *
    பார் கலந்த வல் வயிற்றான் பாம்பு அணையான் ** சீர் கலந்த
    சொல் நினைந்து போக்காரேல் * சூழ்வினையின் ஆழ் துயரை *
    என் நினைந்து போக்குவர் இப்போது? 86
  • PTA 87
    2671 ## இப்போதும் இன்னும் * இனிச் சிறிது நின்றாலும் *
    எப்போதும் ஈதே சொல் என் நெஞ்சே ** எப்போதும்
    கை கழலா நேமியான் * நம்மேல் வினை கடிவான் *
    மொய் கழலே ஏத்த முயல் 87