PTA 86

திருமாலை நினைப்பவரின் வினைத்துயர் நீங்கும்

2670 கார்க்கலந்தமேனியான் கைகலந்தவாழியான் *
பார்க்கலந்தவல்வயிற்றான் பாம்பணையான் * - சீர்கலந்த
சொல் நினைந்துபோக்காரேல் சூழ்வினையினாழ்துயரை *
என்னினைந்துபோக்குவரிப்போது? (2)
2670 ## kār kalanta meṉiyāṉ * kai kalanta āzhiyāṉ *
pār kalanta val vayiṟṟāṉ pāmpu aṇaiyāṉ ** cīr kalanta
cŏl niṉaintu pokkārel * cūzhviṉaiyiṉ āzh tuyarai *
ĕṉ niṉaintu pokkuvar ippotu? -86

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2670. The lord with a body dark as a cloud with a discus in his hand swallowed the worlds and kept them in his stomach. If people do not think of him or praise him how can the the results of their karmā be removed?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் கலந்த மேகத்தை ஒத்த; மேனியான் நிறமுடையவனும்; கைகலந்த கையில் சேர்ந்த; ஆழியான் சக்கரத்தை உடையவனும்; பார் கலந்த பிரளயத்தில் உலகங்களை உண்ட; வல் வயிற்றான் வலிய வயிற்றையுடையவனும்; பாம்பு ஆதிசேஷன் மீது; அணையான் சயனித்திருப்பவனுமான; சீர் கலந்த அவனுடைய சிறந்த குணங்கள் நிறைந்த; சொல் நினைந்து பாசுரங்களை அநுஸந்தித்து; சூழ் வினையின் கொடிய பாபங்களால் உண்டாகும்; ஆழ் துயரை கடும் துயரங்களை போக்கிக் கொள்ளாமல்; என் நினைந்து போக்குவர் எதை நினைத்து போக்குவர்?; இப்போது இப்படி பொழுதை வீணே கழிக்கிறார்களே!
kār kalandha mĕniyān one who has the divine form congruent with cloud; kai kalandha āzhiyān one who has the divine disc fitting well with his divine hand; pār kalandha (during the time of deluge) keeping the earth fittingly; val vayiṝān having strong divine stomach; pāmbu aṇaiyān emperumān who is reclining on the mattress of ādhiṣĕshan, his; sīr kalandha being with superior qualities; sol ninaindhu meditating on divine names; sūzh vinaiyin due to the cruel sins which surround (us); āzh thuyarai deep sorrows; pŏkkārĕl if they do not get rid of; ippŏdhu during this time; en ninaindhu thinking of what (else); pŏkkuvar will they get rid of