PTA 80

மண்ணளந்தவனே! நின்னை ஏத்தாத நாள் வீணான நாள்

2664 பிறப்பிறப்பு மூப்புப் பிணிதுறந்து * பின்னும்
இறக்கவுமின்புடைத்தாமேலும் * - மறப்பெல்லாம்
ஏதமே என்றல்லால் எண்ணுவனே? * மண்ணளந்தான்
பாதமேயேத்தாப்பகல்.
2664 பிறப்பு இறப்பு மூப்புப் * பிணி துறந்து * பின்னும்
இறக்கவும் இன்பு உடைத்தாமேலும் ** மறப்பு எல்லாம்
ஏதமே * என்று அல்லால் எண்ணுவனே * மண் அளந்தான்
பாதமே ஏத்தாப் பகல்? 80
2664 piṟappu iṟappu mūppup * piṇi tuṟantu * piṉṉum
iṟakkavum iṉpu uṭaittāmelum ** maṟappu ĕllām
etame * ĕṉṟu allāl ĕṇṇuvaṉe * maṇ al̤antāṉ
pātame ettāp pakal? -80

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2664. Even if I have no births, no old age and sickness, even if I am happy on this earth, I will not want any of those things. I think the days that I have not praiseed and worshiped him who measured the world at Mahbali’s sacrifice are all days of sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பிறப்பு இறப்பு மூப்புப் பிணி பிறப்பு இறப்பு மூப்புப் பிணி என்னும் வியாதிகளையும்; துறந்து பின்னும் ஒழித்து மேலும்; இறக்கவும் இவற்றை போக்கிய பின்; இன்பு இன்பமயமான மோக்ஷம்; உடைத்தாமேலும் கிடைத்தாலும் வேண்டாம் என்பேன்; மண் அளந்தான் உலகமளந்த பெருமானின்; பாதமே ஏத்தா திருவடிகளை வாழ்த்தி வணங்காது; பகல் மறப்பு எல்லாம் மறந்த நாட்கள் எல்லாம்; ஏதமே என்று அல்லால் துன்பமென்றே எண்ணுவேனே தவிர; எண்ணுவனே? வேறுவகையாக எண்ணுவேனோ?
piṛappu iṛappu mūppu piṇi thuṛandhu getting rid of birth, death, old age and disease; pinnum beyond that; iṛakkavum inbu udaiththāmĕlum even if the immeasurable blissful kaivalya mŏksham (a state in which āthmā enjoys itself) occurs; maṇ al̤andhān sarvĕṣvara (lord of all) who measured the worlds; pādham divine feet; ĕththā not worshipped; pagal that which occurs during that time; maṛappu ellām being forgetful [of emperumān]; ĕdhamĕ enṛallāl eṇṇuvanĕ will ī think of it as anything other than being the embodiment of sorrow?