PTA 70

ஆழியானே என் தந்தையும் தாயும்

2654 அடர்பொன்முடியானை ஆயிரம்பேரானை *
சுடர்கொள்சுடராழியானை * - இடர்கடியும்
மாதாபிதுவாக வைத்தேன் எனதுள்ளே *
யாதாகில்யாதேயினி?
2654 aṭar pŏṉ muṭiyāṉai * āyiram perāṉai *
cuṭar kŏl̤ cuṭar āzhiyāṉai ** iṭar kaṭiyum
mātā pituvāka * vaitteṉ ĕṉatu ul̤l̤e *
yātu ākil yāte iṉi? -70

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2654. He wears a precious golden crown, carries a shining discus in his hand and has a thousand divine names. He is my father and mother and I keep him in my heart he will remove all my troubles. Whatever happens to me, I am not worried because he will save me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடர் பொன் திரண்ட பொன்மயமானவனும்; முடியானை திருமுடியை உடையவனும்; ஆயிரம் பேரானை ஆயிரம் பெயர்களையுடையவனும்; சுடர் சந்திர சூரியர்களை; கொள் தோற்கடிக்கும் ஒளியுடைய; ஆழி யானை சக்கரத்தை உடையவனும்; இடர் கடியும் துயரங்களைப் போக்கவல்ல; மாதா பிதுவாக தாய் தந்தையாக; எனது உள்ளே என் மனத்தினுள்ளே; வைத்தேன் இருத்தினேன்; இனி யாது ஆகில் யாதே இனி எனக்கு ஒரு கவலையுமில்லை
adar pon mudiyānai having a divine crown which can destroy (enemies on merely sighting them); āyiram pĕrānai one who has thousands of divine names; sudar kol̤ sudar āzhiyānai sarvĕṣvara (lord of all) who has the divine chakra (disc) which has within it, all the objects which emit radiance; idar kadiyum removing (my) hurdles; māthā pithuvāga as mother and father; enadhu ul̤l̤ĕ vaiththĕn established in my mind; ini from now onwards; yādhu āgil yādhu what does it matter, whatever happens?