PTA 8

பாரளந்தவரே! நும்மை யடையும் வழி தெரியவில்லை

2592 அருகும்சுவடும் தெரிவுணரோம் * அன்பே
பெருகும்மிக இதுவென்? பேசீர் * - பருகலாம்
பண்புடையீர்! பாரளந்தீர்! பாவியேம்கண்காண்பரிய *
நுண்புடையீர்! நும்மைநுமக்கு.
2592 arukum cuvaṭum tĕrivu uṇarom * aṉpe
pĕrukum mika itu ĕṉ? pecīr ** parukalām
paṇpuṭaiyīr pār al̤antīr pāviyĕm kaṇ kāṇpu ariya
nuṇpu uṭaiyīr! nummai numakku-8

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2592. O good lord! We have not seen your feet that measured the world and we yearn to see you–tell us, why can we not see you? You are subtle, impossible for sinners like us to see, a match only for yourself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பார் அளந்தீர்! உலகமளந்த பெருமானே!; பருகலாம் வாயாரப் புகழ்ந்து பருகலாம்படி; பண்புடையீர்! குணங்களைப் பெற்றவரே!; பாவி யெம் கண் பாவிகளான எங்கள் கண்களாலே; காண்பு அரிய காணமுடியாத; நுண்பு உடையீர்! லக்க்ஷணம் உடையவரே!; நும்மை அருகும் உம்மை அடைவதையும்; சுவடும் அடையும் உபாயத்தையும்; தெரிவு நாங்கள் தெளிவாக; உணரோம் தெரிந்து கொள்ளவில்லை; நுமக்கு அன்பே ஆனால் உம் விஷயத்தில் அன்பு; பெருகும் மிக அளவுகடந்து பெருகுகிறது; இது என் இந்த விருப்பத்தின் காரணத்தை; பேசீர் நீரே தெரிவிக்க வேண்டும்
parugal̤ām paṇbu uadiyīr ŏh emperumān who has qualities which could be drunk (like a liquid)!; pār al̤andhīr ŏh one who measured the worlds!; pāviyĕn we, who have lot of cruel sins; kaṇ kāṇbu ariya not being able to see through eyes; nuṇbu udaiyīr ŏh one who has subtle form of quality !; nummai you; arugum suvadum approaching and the means (for approaching); therivu uṇarŏm we do not analyse and do not know; numakku in your matter; anbu affection (from us); miga perugum will grow hugely; idhu en what is the reason for this; pĕsīr please tell (yourself)