PTA 72

எல்லாம் பகவானிடம் அடக்கம்

2656 முதலாந்திருவுருவம் மூன்றென்பர் * ஒன்றே
முதலாகும் மூன்றுக்குமென்பர் * - முதல்வா!
நிகரிலகுகாருருவா! நின்னகத்ததன்றே? *
புகரிலகுதாமரையின்பூ.
2656 mutal ām tiru uruvam mūṉṟu ĕṉpar * ŏṉṟe
mutal ākum * mūṉṟukkum ĕṉpar ** mutalvā
nikar ilaku kār uruvā * niṉ akattatu aṉṟe *
pukar ilaku tāmaraiyiṉ pū? -72

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2656. Some say that you have three divine forms and some say all three are one. You have a matchless dark color, you are the first god of this world and you embrace Lakshmi on a shining lotus on your chest.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முதல்வா! முதல் காரணபூதனான பெருமானே!; மூன்று திரு உருவம் பிரமன் விஷ்ணு சிவன் என்கிற; முதல் ஆம் மூவரும் முதல்வர்; என்பர் என்று சிலர் கூறுவர்; மூன்றுக்கும் ஒன்றே மூவர்க்கும் மேலான ஒரு தத்துவம்; முதல் ஆகும் என்பர் முதலாகும் என்று வேறு சிலர் கூறுவர்; நிகர் இலகு கார் உருவா! மேகம் போன்ற உருவமுடையவனே!; புகர் இலகு ஒளிமயமாக விளங்கும்; தாமரையின் பூ நாபிக்கமலமே தாமரைப்பூவே; நின் ஆகத்து உன் பரத்வத்தை வெளிப்படுத்துகிறது; அன்றே? அன்றோ?
thiru uruvam mūnṛu the three entities (brahmā, vishṇu andn rudhra) who have beautiful forms; mudhalām enbar are the causative factors for the origin of earth, (some people) will say.; mūnṛukkum for these three entities; onṛĕ mudhalāgum enbar an entity (superior) is the primary entity, (some other people) will say; mudhalvā ŏh one who is the causative factor for the universe!; kār nigar ilagu uruvā ŏh one who has a divine form matching the dark clouds!; pugar ilagu shining brightly (being the cause for universe); thāmaraiyin pū lotus flower; nin agaththadhu anṛĕ is it not forming from your divine form?