PTA 25

கண்ணனால் மனத்துன்பத்தை மாற்றினேன்

2609 ஆரானுமாதானும்செய்ய * அகலிடத்தை
ஆராய்ந்து அதுதிருத்தலாவதே? * - சீரார்
மனத்தலை வன்துன்பத்தைமாற்றினேன் * வானோ
ரினத்தலைவன்கண்ணனால்யான்.
2609 ārāṉum ātāṉum cĕyya * akaliṭattai
ārāyntu * atu tiruttal āvate? ** cīr ār
maṉattalai * vaṉ tuṉpattai māṟṟiṉeṉ * vāṉor
iṉat talaivaṉ kaṇṇaṉāl yāṉ-25

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2609. People may do whatever they wish. Who can change this wide earth? Kannan, the god of the gods in the sky gave his grace to me and all the sorrows in my heart went away.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அகலிடத்தை அகன்ற உலகிலுள்ளோர் காரியங்களை; ஆராய்ந்து அது ஆராய்ந்து அவற்றை நம்மால்; திருத்தல் ஆவதே? திருத்த முடியுமோ?; ஆரானும் யாராவது; ஆதானும் செய்ய எதையாவது செய்யட்டும்; சீர் ஆர் மனத்தலை என் சிந்தனையில் தோன்றும்; வன் துன்பத்தை பொறுக்கமுடியாத துன்பங்களை; வானோர் இன நித்யஸூரிகளின்; தலைவன் தலைவன்; கண்ணனால் கண்ணன் தான் அகற்றினான்; யான் அவனால் தான் நான்; மாற்றினேன் துன்பங்களை அகற்றினேன்
ārānum let it be anyone; ādhānum seyya let (him or her) do anything; agal idaththai in the expansive earth; ārāyndhu searching; adhu their activities; thiruththal āvadhĕ it is possible for us to rectify?; yān ī; vānŏr inam thalaivan being the swāmy (lord) for the assembly of nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); kaṇṇanāl with the assistance of emperumān who incarnated as krishṇa; sīr ār full of benefit (of being loving towards emperumān); manam thalai vanthunbam the terrible sorrow of samsāram which is uppermost on the mind; māṝinĕn removed