PTA 18

கண்ணா! நின் பழைய உருவை யாரறிவார்?

2602 தாம்பாலாப்புண்டாலும் அத்தழும்புதானிளக *
பாம்பாலாப்புண்டுபாடுற்றாலும் * - சோம்பாதுஇப்
பல்லுருவையெல்லாம் படர்வித்தவித்தா! * உன்
தொல்லுருவையாரறிவார்? சொல்லு.
2602 tāmpāl āppuṇṭālum * at tazhumpu tāṉ il̤aka *
pāmpāl āppuṇṭu pāṭu uṟṟālum ** compātu ip
pal uruvai ĕllām * paṭarvitta vittā * uṉ
tŏl uruvai yār aṟivār? cŏllu -18

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2602. O Un diminishing seed that unfolds into all these variegated forms! You were bound by a leash of rope that left a mark, then you fought with a snake that left a mark (Kaliya), and then you fought with a snake that left another mark erasing the previous one (Aghasura), And yet who realizes your original form? Tell me

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாம்பால் யசோதையால் தாம்புக் கயிறு கொண்டு; ஆப்புண்டாலும் கட்டப்பட்டாலும்; அத் தழும்பு தான் இளக அத்தழும்பு சிறியதாக இருக்க; பாம்பால் காளியனாகிய பாம்பினால்; ஆப்புண்டு பாடு கட்டுப்பட்டு; உற்றாலும் கஷ்டப்பட்டாலும்; சோம்பாது சோம்பல் இல்லாமல்; இப்பல் இந்த பரந்த; உருவை எல்லாம் உலக உயிரினங்களை; படர்வித்த வித்தா! படைத்த ஆதிமூலமே!; உன் தொல் உருவை உன் பழைய உருவை; யார் அறிவார்? யார் அறிவார்?; சொல்லு நீயே கூறுவாய்
thāmbāl with (yaṣŏdhāppirātti’s) rope; āppuṇdālum even if tied down; aththazhumbudhān il̤aga to make even that scar to appear small; pāmbāl āppuṇdu pāduṝālum even if he were to suffer due to being tied down by the snake (kāl̤iyan); sŏmbādhu not backing down (due to these troubles); ippal uruvum these chĕthanas (sentient entities) who have variegated forms such as dhĕva (celestial), manushya (human) et al; padarviththa creating them and spreading them out to many places; viththā ŏh, the causative factor for the world!; un thol uruvai your form which is very old; yār aṛivār who can know?; sollu please say it yourself, ….