PTA 57

நரசிம்மன் என் வினையை மாற்ற மாட்டானா?

2641 வழித்தங்குவல்வினையை மாற்றானோ? நெஞ்சே! *
தழீஇக்கொண்டு போரவுணன்தன்னை * - சுழித்தெங்கும்
தாழ்விடங்கள்பற்றிப் புலால்வெள்ளந்தானுகள *
வாழ்வடங்கமார்விடந்தமால்.
2641 vazhit taṅku valviṉaiyai * māṟṟāṉo? nĕñce! *
tazhīikkŏṇṭu por avuṇaṉ taṉṉai ** cuzhittu ĕṅkum
tāzhvu iṭaṅkal̤ paṟṟi * pulāl vĕl̤l̤am tāṉ ukal̤a *
vāzhvu aṭaṅka mārvu iṭanta māl -57

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2641. O heart, Thirumāl split open the heart of Hiranyan and blood flowed like a flood from the Asuran’s chest and he was destroyed. Won’t he take away the results of our karmā and give us his grace?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஒமனமே!; போர் போர்க்களத்தில்; அவுணன் தன்னை இரணியனை; தழீ இக்கொண்டு தழுவிக்கொண்டு; புலால் வெள்ளம் ரத்த வெள்ளம்; தாழ்வு இடங்கள் பற்றி பள்ள நிலங்களைப் பற்றி; எங்கும் சுழித்து உகள எங்கும் சுழித்து ஓடச்செய்து; வாழ்வு அந்த இரணியனின்; அடங்க வாழ்க்கை முடியும்படி; மார்வு இடந்த அவன் மார்பை; மால் தான் பிளந்த பெருமான்; வழி தங்கு என் உய்வுக்குத் தடையாக வழியில் நிற்கும்; வல் வினையை கொடிய பாபங்களை; மாற்றானோ? போக்கியருள மாட்டானோ?
nenjĕ ŏh mind!; pŏr in the battle; avuṇan thannai the demon hiraṇya kashyap; thazhīkkoṇdu hugging him tightly; thāzhvu idangal̤ engum paṝi pervading all the low lying places; pulāl vel̤l̤am thān the flood of blood; suzhiththu ugal̤a flowing with a swirl; vāzhvu adanga ensuring that the demon’s arrogance of wealth would be suppressed; mārvu idandha one who tore the chest; māl the supreme being; vazhi thangu residing by other means; val vanaiyai ignorance etc which have lot of strength; māṝānŏ will he not remove?