PTA 64

திருமாலையே தேவர்கள் தொழுவர்

2648 பரனாமவனாதல் பாவிப்பராகில் *
உரனாலொருமூன்றுபோதும் * - மரமேழன்று
எய்தானைப் புள்ளின் வாய்கீண்டானையே * அமரர்
கைதான்தொழாவேகலந்து.
2648 paraṉ ām avaṉ ātal * pāvippar ākil *
uraṉāl ŏru mūṉṟu potum ** maram ezh aṉṟu
ĕytāṉai * pul̤l̤iṉ vāy kīṇṭāṉaiye * amarar
kaitāṉ tŏzhāve kalantu?-64

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2648. He shot arrows and destroyed the seven marā trees and he split open the mouth of Bāhasuran when he came as a bird. If the gods in the sky know that he is the highest god and know his heroic deeds, won’t they fold their hands and worship him?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று முன்பொரு சமயம் ஸுக்ரீவன் நம்புவதற்காக; மரம் ஏழ் ஏழு சால மரங்களை; எய்தானை துளைத்த ராமனையும்; புள்ளின் வாய் பகாஸுரனது வாயை; கீண்டானையே கிழித்தெறிந்த கண்ணனையும்; அவன் அவர்கள் இருவரும்; பரன் ஆம் ஆதல் பரம புருஷர்களானதால்; உரனால் இவர்களை உண்மையான உள்ளத்தால்; ஒரு மூன்று போதும் மூன்று வேளையும்; பாவிப்பர் ஆகில் வணங்குவார்களேயாகில்; அமரர் அப்படிப்பட்டவர்களை தேவர்களும்; கைதான் கலந்து கை கூப்பி; தொழாவே வணங்குவார்களன்றோ?
anṛu at an earlier point of time; ĕzh maram eydhānai one who shot a single arrow at and felled seven trees; pul̤l̤in vāy kīṇdānai one who tore the mouth of a demon who came in the form of a stork; avan that emperumān; paran ādhal is the supreme entity; amarargal̤ celestial entities; oru mūnṛu pŏdhum at all times (past, present and future); uranāl pāvipparāgil if they think, with their minds; kaidhān (their) hands; kalandhu thozhāvĕ will they not join together and worship him?