PTA 1

மனமே! நாரணன் புகழ் பாடுவோம்

2585 முயற்றிசுமந்தெழுந்து முந்துற்றநெஞ்சே! *
இயற்றுவாயெம்மொடுநீகூடி * - நயப்புடைய
நாவீன்தொடைக்கிளவியுள் பொதிவோம் * நற்பூவைப்
பூவீன்றவண்ணன்புகழ். (2)
2585 ## muyaṟṟi cumantu ĕzhuntu * muntuṟṟa nĕñce *
iyaṟṟuvāy ĕmmŏṭu nī kūṭi ** nayappu uṭaiya
nā īṉ tŏṭaik kil̤aviyul̤ * pŏtivom * nal pūvaip
pū īṉṟa vaṇṇaṉ pukazh-1

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2585. O heart! If you want to see him, get ready and come. Let us go together and praise with good words the divine nature and fame of the god colored like a kāyām flower.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முயற்றி எம்பெருமானைப் பற்றி பேசுவதில்; சுமந்து எழுந்து ஊக்கமும் உற்சாகமும்; முந்துற்ற நெஞ்சே! கொண்டுள்ள மனமே!; எம்மொடு நீ கூடி நீ என்னோடு சேர்ந்து; இயற்றுவாய் காரியத்தை செய்வாயாக; நல் பூவை அழகிய காயாம்பூ; பூ ஈன்ற நிறம் கொண்ட; வண்ணன் பெருமானின்; புகழ் கல்யாணகுணங்களை; நயப்பு உடைய அன்பு பொருந்திய; நா ஈன் நாவினால்; தொடை கிளவியுள் தொடுக்கப்பட்ட சொற்களால்; பொதிவோம் பொதிந்து புகழ்வோம்
muyaṝi sumandhu being involved enthusiastically (in carrying out service to emperumān); ezhundhu rising up intensely; mudhuṝa nenjĕ ŏh heart who has gone ahead (of me)!; nal superior; pūvaip pū īnṛa in the flower kāyāmbū (a type of flower which has indigo like colour); vaṇṇan sarvĕṣvaran, who has that colour, his; pugazh auspicious qualities; nayappudaiya having grace; nā īn being created by tongue; thodaikkil̤aviyul̤ words with beautiful sounds, strung beautifully; podhivŏm we will keep constantly; emmodu along with me; nī kūdi you too join; iyaṝuvāy praise