PTA 19

மனமே! கண்ணனைக் காணலாம்

2603 சொல்லில்குறையில்லை சூதறியாநெஞ்சமே! *
எல்லிபகலென்னாதுஎப்போதும் * - தொல்லைக்கண்
மாத்தானைக்கெல்லாம் ஓரைவரையேமாறாக *
காத்தானைக்காண்டும்நீகாண்.
2603 cŏllil kuṟai illai * cūtu aṟiyā nĕñcame *
ĕlli pakal ĕṉṉātu ĕppotum ** tŏllaikkaṇ
māt tāṉaikku ĕllām * or aivaraiye māṟu āka *
kāttāṉaik kāṇṭum nī kāṇ -19

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2603. O heart, you do not know any wickedness and if you praise him, who protected the five Pāndavās night and day on the battlefield as they fought with the Kauravās nothing bad will come to you. If you want to see him, you can.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூது அறியா வழி வகை அறியாத; நெஞ்சமே! நெஞ்சமே!; சொல்லில் எம்பெருமானின் குணங்களைப் பேசினால்; குறை இல்லை ஒருகுறையும் வராது; தொல்லைக் கண் அநாதியான இப்பூமியில்; மா துரியோதநாதிகளின் பெரிய; தானைக்கு எல்லாம் சேனைகளுக்கெல்லாம்; மாறு ஆக எதிரிகளான; ஓர் ஐவரையே பாண்டவர்களை; எல்லி பகல் இரவு பகல்; என்னாது என்று பாராமல்; எப்போதும் எப்போதும்; காத்தானை காத்த எம்பெருமானை; நீ காண் நீ காண விரும்பினால்; காண்டும் காணலாம் உனக்கு அருள் புரிவான்
sūdhu aṛiyā nenjamĕ ŏh mind which does not know the distinction between good and bad; sollil if one attempts to speak about emperumān’s [auspicious] qualities; kuṛaiyillai there is no limit to such an activity; thollai kaṇ on the earth, which is there for a very long time; māththānaikku ellām for the huge armies (of dhuyŏdhana et al); ŏr aivaraiyĕ the five pāṇdavas who had none to support; māṛāga making them as enemies; elli pagal ennādhu eppŏdhum at all times, without thinking whether it is day or night; kāththānai one who protected; kāṇdum we will see; nī kāṇ you please see