PTA 87

கண்ணன் கழலிணை எண்ணுக

2671 இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும் *
எப்போதும் ஈதேசொல் என்னெஞ்சே! - எப்போதும்
கைகழலாநேமியான் நம்மேல்வினை கடிவான் *
மெய்கழலேயேத்தமுயல். (2)
2671 ## ippotum iṉṉum * iṉic ciṟitu niṉṟālum *
ĕppotum īte cŏl ĕṉ nĕñce ** ĕppotum
kai kazhalā nemiyāṉ * nammel viṉai kaṭivāṉ *
mŏy kazhale etta muyal -87

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2671. O my heart, whether it is now or another time, if you always praise him who carries a discus he will remove our karmā. Always praise his ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் மனமே!; நம்மேல் வினை நம்மிடத்திலுள்ள பாவங்களை; கடிவான் போக்குவதற்காக; எப்போதும் எப்போதும்; கை கழலா கையை விட்டு நீங்காத; நேமியான் சக்கரத்தையுடை பெருமானின்; மொய் கழலே அழகிய திருவடிகளை; ஏத்த முயல் துதிக்க முயற்சிசெய்வாயாக; இப்போதும் இப்போதும்; இன்னும் இனிச் சிறிது வருங்காலத்திலும்; நின்றாலும் ஆக எந்த காலத்திலும்; எப்போதும் எப்போதும் இதுவே உனக்கு நான்; ஈதே சொல்! சொல்லும் ஹிதோபதேசமாகும்
en nenjĕ ŏh mind which is well disposed towards me!; nam mĕl vinai kadivān in order to remove sins from us; eppŏdhum at all times; kai kazhalā nĕmiyān emperumān from whose hands the divine disc will not separate, his; moy kazhalĕ beautiful divine feet; ĕththa muyal try and praise; ippŏdhum during this time; ini beyond this; innum siṛidhu ninṛālum even if some more time passes; eppŏdhum at all times; īdhĕ sol keep reciting these divine names