PTA 58

மாலே! நினக்குக் குற்றேவல் புரியவே விரும்புகிறேன்

2642 மாலே! படிச்சோதிமாற்றேல் * இனியுனது
பாலேபோல் சீரிற்பழுத்தொழிந்தேன் * - மேலால்
பிறப்பின்மைபெற்று அடிக்கீழ்க்குற்றேவலன்று *
மறப்பின்மை யான்வேண்டும்மாடு.
2642 māle paṭic coti māṟṟel * iṉi uṉatu
pāle pol * cīril pazhuttŏzhinteṉ ** melāl
piṟappu iṉmai pĕṟṟu * aṭikkīzhk kuṟṟeval aṉṟu *
maṟappu iṉmai yāṉ veṇṭum māṭu -58

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2642. O Thirumāl with a shining form, I am plunged into your auspicious nature that is as pure and sweet as milk. Don’t change my life. I don’t want to be born again but come to you, stay beneath your divine feet and serve you. All I want is not to forget you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலே! எம்பெருமானே!; பாலே போல் பால் போன்ற; உனது சீரில் உன் குணங்களில்; பழுத்தொழிந்தேன் ஆழ்ந்து மூழ்கிவிட்டேன்; இனி படிச் சோதி! இனி உன் திருமேனியின் பேரொளியை; மாற்றேல் வேண்டும் மாற்றாமல் அருளவேண்டும்; மேலால் மேலுள்ள காலத்திலே; பிறப்பு இன்மை இனி பிறப்பில்லாத வீடு பேறு; பெற்று பெற்று; அடிக் கீழ் உன் திருவடிக் கீழ் இருந்து; குற்றேவல் உனக்கு கைங்கர்யம் செய்வதை; யான் வேண்டும் மாடு அன்று நான் விரும்பவில்லை; மறப்பு உன்னை மறவாதிருந்தால்; இன்மை அதுவே போதும்; யான் அடியேன்; வேண்டும் மாடு ஆசைப்படும் செல்வம் அதுவே
mālĕ ŏh, the lord of all!; padi sŏdhi one who has radiance of divine, auspicious, physical form; unadhu your; pāl pŏl sīril your auspicious qualities which are like sweet milk; pazhuththu ozhindhĕn ī have soaked myself in them fully; ini māṝĕl do not deny that experience of enjoying your auspicious qualities; mĕlāl in the times to come; yān vĕṇdum mādu the wealth which ī desire; piṛappu inmai peṝu attaining the status of not being born; un adikkīzh kuṝĕval anṛu not carrying out kainkaryam at your divine feet; maṛappu inmai not forgetting (your divine feet)(is the wealth that ī desire)