PTA 46

வெந்நரகில் சேராமல் காப்பவன் திருமாலே

2630 நான்கூறும் கூற்றாவதுஇத்தனையே * நாள்நாளும்
தேங்கோத நீருருவன்செங்கண்மால் * - நீங்காத
மாகதியாம்வெந்நரகில் சேராமல்காப்பதற்கு *
நீகதியாநெஞ்சேநினை.
2630 nāṉ kūṟum * kūṟṟāvatu ittaṉaiye * nāl̤nāl̤um
teṅku ota nīr uruvaṉ cĕṅkaṇ māl ** nīṅkāta
mā kati ām * vĕm narakil cerāmal kāppataṟku *
nī kati ām nĕñce niṉai -46

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2630. The ocean-colored Thirumāl with beautiful eyes is our refuge and will not leave us. He protects us so we will not fall into cruel hell. O heart, think always of him who is your only refuge— this is the the best advice I can give you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேங்கு தேங்கி இருக்கும்; ஓத நீர் கடலின் நிறம் போன்ற; உருவன் நிறமுடையவனும்; செங் கண் சிவந்த கண்களையுடையவனுமான; மால் பெருமான்; நீங்காத என்னைப் பிரியாதவனாயும்; மா எனக்கு ஒரு; கதி ஆம் உபாயமாகவும் இருக்கிறான்; வெம் கொடிய; நரகில் நரகமான சம்சார சாகரத்தில்; சேராமல் தள்ளாமல்; காப்பதற்கு காப்பதற்கு; கதி ஆம் அவனே உபாயம்; நீ நெஞ்சே! மனமே! நீ அவனை; நினை ஒரு நாளும் மறவாதே; நான் நாள் நாளும் நாள்தோறும் நான் உனக்கு; கூறும் கூற்றாவது சொல்லும் சொல்லானது; இத்தனையே இதுவே
thĕngu ŏdha nīr uruvan one who has the colour of the stagnant ocean; sem kaṇ māl sarvĕṣvaran (lord of all) who has reddish eyes; nīngādha māgadhiyām is the final goal who does not (make us) return; vem naragil in the cruel samsāram (materialistic realm); sĕrāmal so as not to fall; kāppadhaṛku to protect; gadhiyām he is also the means; nenjĕ ŏh heart!; you; ninai think (about this); nān ī (who knew this); nāl nāl̤um every day; kūṛum kūṝāvadhu the words which are said; iththanaiyĕ are only this much