PTA 73

கருநிறப்பூக்கள் கண்ணனை நினைவூட்டும்

2657 பூவையும் காயாவும் நீலமும், பூக்கின்ற *
காவிமலரென்றும் காண்தோறும் * - பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் * அவ்வவை
யெல்லாம்பிரானுருவேயென்று.
2657 pūvaiyum kāyāvum * nīlamum pūkkiṉṟa *
kāvi malar ĕṉṟum kāṇtoṟum ** pāviyeṉ
mĕl āvi * mĕy mikave pūrikkum * avvavai
ĕllām pirāṉ uruve ĕṉṟu -73

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2657. Whenever I see something with the color of the lord, a puvai bird, a kayām flower, a neelam flower or a kāvi blossom, my soft heart thinks that they are his forms and my heart and body feel happy.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூவையும் காயாவும் பூவைப்பூவையும் காயாம்பூவையும்; நீலமும் கருநெய்தல் பூவையும்; காவி மலர் செங்கழு நீர் பூவையும் ஆகிய; என்றும் பூக்கின்ற அனைத்தையும் பூக்கும் போது; அவ் அவை எல்லாம் அந்த மலர்களை எல்லாம்; காண்தோறும் பார்த்தால் அவைகள்; பிரான் உருவே என்று எம்பெருமானின் உருவமே என்று; பாவியேன் அடியேனுக்குத் தோன்றுகிறது; மெல் ஆவி மெய் உயிரும் உடலும்; மிகவே பூரிக்கும் மிகவும் பூரிக்கிறது
pūvaiyum the flower of pūvai tree (bilberry); kāyāvum the purple coloured flower of kāyā (a kind of shrub); neelamum blue lily; pūkkinṛa just then blossoming; kāvi malar blue lotus; enṛum at all times; kāṇ dhŏṛum whenever seen; avvavaiyellām all those flowers; pirān uruvĕ enṛu thinking that they are all only the form of emperumān (my lord); pāviyĕn one who has the sins (of not being able to enjoy emperumān directly), my; mel āvi soft mind; mey physical body; migavĕ pūrikkum will greatly puff up [due to pride]