PTA 52

வாமனனைப் புகழ்வதே வாய்க்கு உணவாகும்

2636 மாண்பாவித்துஅந்நான்றுமண்ணிரந்தான் * மாயவள்நஞ்சு
ஊண்பாவித்துண்டானதோருருவம் * - காண்பான்நங்
கண்ணவா மற்றொன்றுகாணுறா * சீர்பரவாது
உண்ணவாய்தானுறுமோவொன்று?
2636 māṇ pāvittu aññāṉṟu * maṇ irantāṉ * māyaval̤ nañcu
ūṇ pāvittu uṇṭāṉatu * or uruvam ** kāṇpāṉ nam
kaṇ avā * maṟṟu ŏṉṟu kāṇ uṟā * cīr paravātu
uṇṇa vāy tāṉ uṟumo ŏṉṟu? -52

Ragam

Senjurutti / செஞ்சுருட்டி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

2636. He took the form of a bachelor dwarf, went to Mahābali, asked for three feet of land and measured the earth and the sky. He drank milk from the breasts of the devious Putanā and killed her. My eyes have only the desire to see him and my mouth does not wish to praise anything but his fame.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அஞ்ஞான்று முன்னொரு காலத்தில்; மாண் வாமனனாக தன்னை; பாவித்து பாவித்துக் கொண்டு; மண் மகாபலியிடம் பூமியை; இரந்தான் யாசித்தான்; மாயவள் வஞ்சப் பேயான பூதனையின்; நஞ்சு விஷம் பொருந்திய; ஊண் பாலைப் பருகுவது போல்; பாவித்து பாவனை செய்து; உண்டானது அவளது உயிரை முடித்த பெருமானின்; ஓர் உருவம் ஒப்பற்ற திருமேனியை; காண்பான் வணங்கவே; நம் கண் அவா நம் கண் ஆசைப்படும்; மற்று ஒன்று வேறொன்றையும்; காண் உறா காண விரும்பாது; வாய் தான் வாயானது; சீர் அவன் திருக்குணங்களை; பரவாது புகழ்வது தவிர; ஒன்று எதையாவது; உண்ண உண்ணவோ உரைக்கவோ; உறுமோ? விரும்புமோ?
agygyānṛu during that time; māṇ bāviththu in the guise of a bachelor; maṇ irandhān sought alms for three steps of land; māyaval̤ nanju poison (present in the bosom) of the deceitful pūthanā; ūṇ bāviththu acting as if he is drinking it (desirously); uṇdānadhu emperumān who drank (both her milk and her life); ŏr uruvam his unique divine form; kāṇbān only to worship; nam kaṇ avā desire for our eye; maṝū onṛu anything else; kāṇ uṛā (it) will not desire to see; vāy thān mouth; sīr paravādhu without praising (emperumān’s) auspicious qualities; onṛu uṇṇa uṛumŏ will it desire to eat anything?